தாரமங்கலம் வளவன்

 

தாரமங்கலம் வளவன்தாரமங்கலம் வளவனின் முப்பது சிறுகதைளை கொண்ட முதல் சிறுகதை தொகுப்பு, ‘ ஐயனார் கோயில் குதிரை வீரன்’ என்ற தலைப்பில் காவியா வெளியீடாக 2016 இல் வெளி வந்தது. பிறகு இவர் எழுதிய சிறுகதைகளையும், குறுநாவல்களையும் தொகுத்து ‘தோற்றப் பிழை’ என்ற தலைப்பில் காவியா பதிப்பகம் 2019 இல் வெளியிட்டு உள்ளார்கள். இந்த இரு தொகுப்பிப்பிலும் இடம் பெற்ற பல படைப்புகள் சிறுகதைகள்.காமில் பதிவிடப் பட்டு இருக்கிறது.

இவ்விரண்டு தொகுப்புகளும், அமேசான் கிண்டிலில் கிடைக்கிறது. மேலும் புத்தக வடிவில் டயல் பார் புக்ஸ், மெரினா புக்ஸ், நூலுலகம், பனுவல், ஒடிசி போன்ற இடங்களில் கிடைக்கிறது.
இவரது படைப்புகள் கணையாழி, கல்கி, தினமணி கதிர், பாக்யா, அக்னி மலர்கள், காவியா தமிழ் போன்ற அச்சு இதழ்களில் வெளி வந்து இருக்கிறது.

சமீபத்தில், இவரது ஒரு சிறுகதை ஒரு தனியார் தொலைக்காட்சியில் விவாதிக்கப்பட்டு பாராட்டைப் பெற்றது.

இவரது அம்னி என்ற நாவலும், தாதர் எக்ஸ்பிரஸ் என்ற நாவலும் அமேசான் கிண்டிலில் பதிப்பிக்கப் பட்டு உள்ளது.

பொறியாளரான இவர், தனது பணியின் பொருட்டு, இந்தியாவின் பல பகுதிகளில் பணியாற்றியவர். முதலில் தமிழ்நாட்டில் பணி புரிந்த இவர், பிறகு பெங்களூரு, தில்லி, ஹைதராபாத், திருவனந்தபுரம், மும்பை என்று பணி புரிந்து விட்டு, தற்போது பணி ஓய்வு பெற்று உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *