கண்ணில் தெரிகிற வானம் கைகளில் வராதோ?!





‘இன்னும் எத்தனை நாளைக்குத்தான் பேப்பரிலேயே கவிதை கதை எழுதி பத்திரிக்கைகளுக்கு ஸ்டாம் ஒட்டி அனுப்பீட்டிருப்பே?!’
மகள் கேட்டது மனதுக்கு இதமாய்த்தான் இருந்தது. வயசாச்சு. கண்ணும் வேற சரியாத் தெரியமாட்டேங்குது. அவள் சொல்வது கரெக்ட்தான் நினைத்தார் நிர்மல் குமார்,
‘என்ன செய்யச் சொல்றே?! எழுத வேண்டாங்கறயா? எழுதறதை விட்டுடச் சொல்றயா?’ மகளிடம் கேட்டார்.

‘யார் உன்னை நிறுத்தச் சொன்னா? பேசாம ஒரு லேப்டாப் வாங்க்கீக்கோ,, ஒரு அறுபதாயிரம் எழுபதாயிரம்தான் வரும்! பேசாம எழுதினதை மெயில்ல அனுப்பிச்சுடு! எழுத்துக்கு ரெக்கார்டும் காலத்துக்கும் இருக்கும்.’
‘யோசனை நல்லாத்தான் இருக்கு. அறுதாயிரத்துக்கு எங்கே போறது? இருக்கற காசை அதுல கொண்டு மொடக்கணூமா?’ கேட்டார்.
‘பென்சன் வருதில்லே… காசை சேர்த்துவச்சு என்ன பண்ணப்போறே? போகையில கொண்டா போகப் போறே?!’
‘ஏண்டி அப்பா காசைக் கரியாக்கச் சொல்றே? அதுவே கஞ்சப் பிசினாறி!’ என்றாள் மனைவி.
‘அம்மா… ஒனக்கு புரியலையா?! அப்பாவுக்கோ வயசாச்சு! இன்னும் எத்தனை நாளைக்கோ?! எனக்கு லேப்டாப் வாங்கிக் கொடுன்னா கொடுக்கவா போகுது?! கொடுக்காது! அந்தக் கஞ்சப்பிசினாறி..! மண்டையைப் போட்டதுக்கு அப்புறம் அதை நான் எடுத்துக்கறதுக்குத்தான் இந்தத் திட்டம்!’ என்றாள் மகள்.
கண்ணில் தெரிகிற வானத்தைக் கைகளில் வளைக்கத் திட்டம் கம்ப்யூட்டர் வழியே கனிவாய்க் கனிந்தது!
அப்பப்பா… இந்தக் காலத்து ஜெனரேசன் எத்தனை இண்டலிஜெண்ட்.?!
வானத்தை வில்லாய் வளைக்க எத்தனை எத்தனை யுத்திகள்?
![]() |
இயற்பெயர்: வே.ராதாகிருஷ்ணன் புனைபெயர்: வளர்கவி கோவை பிறந்த ஊர்: ஸ்ரீவில்லிபுத்தூர். வாழ்விடம்: கோவை. கல்வித்தகுதி: எம்.ஏ (வரலாறு)எம்ஏ (தமிழ்) எம்ஃபில் தமிழ்(ஈரோடு தமிழன்பன் கவிதைகளில்). குருநாதர்: தடாகம் இளமுருகு தமிழாசிரியர். பணி: பட்டதாரி ஆசிரியர் மணி மே.நி.ப கோவை - 23 ஆண்டுகள். பகுதிநேர அறிவிப்பாளர்: ஆல் இண்டியா ரேடியோ கோவை - 18 ஆண்டுகள் ஞானவாணி கோவை - 4 ஆண்டுகள். வெளியிட்ட நால்கள் - 3 1.…மேலும் படிக்க... |