ஒரு நிமிஷம் பேசலாமா?

2
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 25, 2025
பார்வையிட்டோர்: 6,156 
 
 

மழை பெய்கிறது.

வெளியில் சில்லென்ற நீர்துளிகள்; உள்ளே குளிர்சாதனத்தின் செயற்கைக் காற்று — நகர வாழ்க்கையின் இரட்டைச் சுகம்.

அந்த shared workspace – இல், லேப்டாப்புகளைப் பதம் பார்த்து தட்டும் கைகள், உட்கார்ந்த இடத்திலேயே புல்லட் ரயிலின் வேகத்தில் ஓடி, ‘புதிய உலகம்’ என்ற Power-Point பக்கங்களை அள்ளி உற்பத்தி செய்து கொண்டிருந்தன.

ஒரு மூலையில், ரவி — ஒரு UX designer, வலை வடிவமைப்பில் “Creative Genius Award” சான்றிதழை, தன் லிங்க்ட்இன் ப்ரொஃபைலில் வைத்து, அதை தினமும் மூன்று முறை பார்த்து “இன்றும் உலகம் எனக்கே சொந்தம்” என்று உறுதி செய்யும் பக்குவம் கொண்டவன்.

மற்றொரு மூலையில், அஞ்சலி — உள்ளடக்கத்தை strategically எழுதும் content queen; ஒரு வாக்கியத்தில் மூன்று புதிய ஆங்கிலச் சொற்களைச் சேர்க்காவிட்டால், அந்த நாள் தன்னுடைய performance metrics குறையும் என்று நம்புபவள்.

இருவரும் ஒரே நிறுவனம் இல்லை. ஆனால் ஒரே Wi-Fi பாஸ்வேர்டு என்பதால், காஃபி மெஷின் அருகே அடிக்கடி சந்திப்பது தவிர்க்க முடியாதது.


ஒரு வாரம் முன்னர், அஞ்சலி ஒரு linkedin பதிவு போட்டாள்:

“How storytelling can change brand perception?” — வாசிக்க ஆரம்பித்தவுடன், சின்ன சின்ன ஆங்கிலச் சொற்கள் இடையில் brand perception என்ற பெரிய கல்லை வைத்து, அதைத் தூக்க முடியாதபடி செய்திருந்தாள்.

அதைப் பார்த்த ரவி, கீழே கமெண்ட்:

“This idea is overrated. Real strategy is deeper.”

அஞ்சலிக்கு, அந்தக் கருத்து மொத்தப் பதிவையும் underline செய்து “இது சிறுபிள்ளைத்தனம், மா!” என்று கூச்சலிட்ட மாதிரி இருந்தது. அந்த நாள் முழுவதும், அவள் எழுதிய ஒவ்வொரு வாக்கியமும் தன்னால் எழுதப்பட்டதா, என்று சந்தேகமாய் தோன்றியது. ரவி இவ்வளவு எளிதாகப் பதிலளித்ததைப் பார்த்து, அவள் மனதில் ஒரு சிறிய பதற்றம் தோன்றியது.


இன்று மதியம், மழைக்கால சாய் பிரேக்.

அஞ்சலி ரவியிடம் வந்து நின்றாள். .

“ஒரு நிமிஷம் பேசலாமா?” – அந்தக் குரலில், office politeness க்கான மரியாதையும், மழைத் துளி போல மென்மையும் ஒரு rhythm போல கலந்திருந்தது.

அஞ்சலி: “நீங்க அந்த comment போட்டீங்க இல்ல… நான் அதை கொஞ்சம் கடுமையா feel பண்ணேன்… நான் அதில் ரொம்ப மெனக்கெட்டு இருந்தேன்… உங்களுடைய அந்த ஒரு comment, என்னுடைய professional credibility-யையே கேள்விக்குள்ளாக்கியது போல இருந்தது.”

ரவி (டீ கப்பை சாய்த்து பார்த்துக்கொண்டே: “அப்படியா? நான் உண்மையாத்தானே சொன்னேன்.”

அஞ்சலி: “உண்மையை சொல்றது நல்லதுதான். ஆனா சொல்லும் முறை, tone, அதுவும் முக்கியமில்லையா? உண்மையை சொல்லும் முறை உறவுக்கு பாலமா இருக்கணும்… அது உடைக்கிற மாதிரி இருக்கக்கூடாது.”

ரவி சற்றுத் திணறினான். அவனுக்குப் பழக்கம் — “நான் சொல்வது சரி; அதை கேட்கும் மனசு இல்லாதவர்தான் பிரச்சனை.” இது அவனுடைய சர்வதேச உண்மைச் சான்றிதழ் – கடவுச்சீட்டில் புகைப்படம் போல, அவன் சிந்தனையின் முதல் பக்கத்தில் அச்சிடப்பட்டிருந்தது.

ஆனால் இந்தச் சொற்றொடர் – “சொல்லும் முறையும் ஒரு பாலம்” – அவனைப் பிடித்து ஆட்டத் தொடங்கியது.

அவனுக்குத் தந்தை-தாயின் marital wrestling matches நினைவுக்கு வந்தது.

வீட்டுக்குள் நடந்த ஒவ்வொரு சண்டையும் – “நான் சொல்வது தான் வேதவாக்கு” என்ற போட்டி. அது முடிவில், பாத்திரம் உடைந்ததும், மனசு உடைந்ததும் தான். பாத்திரத்தை ஒட்ட fevikwik இருந்தது; மனதை ஒட்ட யாருமில்லை.

அஞ்சலி: “வேலையிலோ, நட்பிலோ, feedback கூட ஒரு உறவுதான். அதில் பொறுமை இல்லாம போனால்… அது சிதறும்.”

ரவி சற்று நேரம் அஞ்சலியைப் பார்த்தான். அவள் கண்களில் வருத்தமும், அதே சமயம் ஒரு தெளிவும் தெரிந்தது.

ரவி, சிரிப்போடு பவ்யமான பாசாங்கில் குனிந்து: “ஓகே மேடம்… அடுத்த தடவை, உங்களுக்கு tone friendly version வரும்.” என்றான்.


அதன்பிறகு — இருவருக்குமிடையே ஒரு சிறிய project chemistry. அஞ்சலி ஒரு freelance வேலைக்காக user flow எடுத்துக் காட்டினாள்.

பழைய ரவியாக இருந்திருந்தால், “இது தவறு” என்று CSS border: solid red 5px; போல அடித்திருப்பான். ஆனால் இப்போது — சின்ன சின்ன morgin adjustments மாதிரி மெதுவாக மேம்பாட்டு யோசனைகள் சொன்னான்.

அஞ்சலி: “ரொம்ப நன்றி ரவி. நிறைய குறைகள் இருந்தாலும், நீங்க என் வேலையை மதிச்சு பேசினீங்கன்னு புரிகிறது..”

ரவிக்குள் ஒரு சின்ன victory dance. ஏனென்றால், உண்மைச் சொல்வது ஒரு பழக்கமாக இருந்தாலும், இப்போது அவன் கற்றுக்கொண்டான் – “உண்மைக்கு cushion போட்டால்தான், அது உடையாமல் சேரும்.”


மாதம் முடிவில் — அஞ்சலி ரவிக்கு ஒரு coffee mug கொடுத்தாள். அதில் எழுதியிருந்தது:

“Some collaborations go beyond projects.”

ரவி சிரித்தான். அந்தச் சிரிப்பில், கம்பெனி தரும் “Employee of the year” சான்றிதழில் கூட இல்லாத ஒரு வெப்பம் இருந்தது.

இது – ஒரு உறவை சரியாக கையாண்டதற்கான, திட்டமிடப்படாத அங்கீகாரம்.

2 thoughts on “ஒரு நிமிஷம் பேசலாமா?

  1. A wonderful narration which touched me deeply. I have read many works, but I have never come across something that speaks so honestly about the human heart. The way the narrator brings out those hidden feelings and unspoken truths is rare and precious. In daily life we hardly find such conversations, yet so many of us silently long for them. Reading this story felt like a mirror to the truth of human nature.
    I would also like to explore the other works of this narrator. Could you please guide me on where I may access them.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *