எட்டு போடு – ஒரு பக்கக் கதை

0
கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: September 16, 2023
பார்வையிட்டோர்: 12,751 
வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்

“சார்.. எங்கிட்ட ஒரிஜினில லைசென்ஸ் இருக்கு.. வண்டி ரெஜிஸ்ட்ரேசன் இருக்கு.. இன்சூரன்ஸும் இருக்கு.. அப்பறம் எதுக்காக என்ன விடமாட்டேங்கறீங்க..?”

“எல்லாமே எப்படி ஒருத்தர் கிட்ட சரியா இருக்க முடியும்? அதான் சந்தேகமா இருக்கு”

“இப்படி சொன்னா எப்படி சார்?”

“நான் அப்படித்தான் சொல்லுவேன்..”

“சார்.. ஒரு அவசர வேலையா போய்கிட்டு இருக்கேன்.. கொஞ்சம் விடுங்களேன்”

“சரி ஏதோ.. அவசர வேலைங்கற.. அப்ப நான் சொல்ற ஒன்ன மட்டும் செஞ்சுட்டு போய்க்கிட்டே இரு..”

“ஓகே சார்..”

“எங்க எட்டு போடு பார்க்கலாம்..”

“சார்..”

“என்னையா சார் பூர்னுட்டு.. எட்டு போட்டுட்டு போயிக்கிட்டே இருக்க வேண்டியது தானே?”

“அது எப்படி சார் முடியும்? லாரில எட்டு போடச் சொல்றதெல்லாம் ரொம்ப ஓவர் சார்..”

– அனிச்சம் மின்னிதழ் – ஜீன் 2023

அ.வேளாங்கண்ணி அ.வேளாங்கண்ணி என்பவர் நவீன தமிழ் இலக்கியத்தில் சிறுகதைகள், கவிதைகள் மற்றும் நாவல்களை எழுதி வரும் ஒரு குறிப்பிடத்தக்க தமிழ் எழுத்தாளர் ஆவார். இவர் புதுக்கோட்டையில் பிறந்து, கரூரில் வளர்ந்தவர். அவரைப் பற்றிய சில முக்கிய தகவல்கள்: இலக்கியப் பங்களிப்பு: 'துளித்துளியாய் கொட்டும் மழைத்துளியாய்' மற்றும் 'நீங்காத எண்ணம் ஒன்று' போன்ற நூல்களை எழுதியுள்ளார். சிறுவர் கதைகள் முதல் சமூகம் சார்ந்த புனைவுகள் வரை பல படைப்புகளைப் படைத்துள்ளார். [1, 2,…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *