இரந்தும் உயிர் வாழ்வதோ?
கதையாசிரியர்: முல்லை பி.எல்.முத்தையா
கதைத்தொகுப்பு:
சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: March 15, 2020
பார்வையிட்டோர்: 3,445
இறந்துப் பிறந்தது குழந்தை இல்லை, இல்லை. தசைப் பிண்டமாய்ப் பிறந்து விட்டது. வீரமன்னர் அதை என் செய்வர்? வாளால் அரிந்து புதைப்பர். ஏன்? மறக்குடியிற் பிறக்கும் எவ்வுயிரும் விழுப்புண் பட்டு மடிதல் வேண்டும். உயிர் வாழ விரும்பி உடல் கொண்டு திரிந்தால் மட்டும் போதாது. உண்டு கொழுத்த உடலை தமிழ்க் குடி விரும்பாது. மனிதனாய் இருக்க வேண்டும். மறவனாய் வாழ வேண்டும்.
அத்தகைய மறக்குடியில் பிறந்தேன் நான். நாய் போல் இழுத்தனர். பகைவர் – சிறைப் படுத்தினர். கட்டி வைத்தனர், அவர்களுக்கு அடங்கி, நடந்தேன். தண்ணீர் கொடும்’ என்று தாழ்ந்து கேட்டேன். இப்படி வாங்கிக் குடித்து வாழும் கோழையைப் பெறுமோ மறக்குடி பெறாது!
– மாணவர்களுக்குப் புறநானூற்றுச் சிறுகதைகள் – முதற்பதிப்பு : ஆகஸ்ட் 2002 – முல்லை பதிப்பகம்
தொடர்புள்ள சிறுகதைகள்
பாட்டி சொல்லைத் தட்டாதே!
வளர்கவி
September 24, 2026
தீயவை தீய பயத்தலால்…
வளர்கவி
September 9, 2026
பிறர் பொருளுக்கு ஆசைப்படாதே….
கே.என்.சுவாமிநாதன்
September 3, 2026