இயேசுவே! நீரே அதிசயம் தான்…
கதையாசிரியர்: இரஜகை நிலவன்
கதைத்தொகுப்பு:
ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: November 18, 2025
பார்வையிட்டோர்: 37
(ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

வாழ்வளிக்க வந்த
உலகின் மீட்பின்
உன்னத நாயகன்
அன்பின் இயேசுவே!
கானாவூர் கல்யாணத்தில்
தண்ணீரை இரசமாக்கி
அதிசயம் செய்தீர்…
கண்ணில்லாத குருடருக்கு
பார்வை தந்தீர்…
காலில்லா முடவருக்கு
நடை பயணம் தந்தீர்…
இறந்த லாசரை
திரும்பவும் உயிர்ப்பித்தீர்…
எத்தனை அதிசயங்கள்
எத்தனை உன்னத
காரியங்கள்
என் தேவன் உம்மை
இவ்வுலகம் உணர்ந்திடச் செய்தீர்…
மலைப் பிரசங்கத்தில்
முடிவில்லா வாழ்விற்கு
மக்கள் சென்றிட
மனமுவந்து வழியைச்
சொன்னீர்…
அலைந்தாலும்
காற்றில்
தவழ்ந்தாலும்
தென்றல்
சுகந்தத்திலும்
சூரியனின்
சுட்டெரிப்பிலும்
எவ்வேளையும்
என் மன்னவர்
அன்பு தேவனாம்
தேவகுமாரன்
யேசுவின் இயல்பாடு…
அவரைப் புகழ்ந்தே
எப்போதும்
எழுதிட நீயும்
பழகிடு…
அன்பனவர்
அவனிக்கே
பாவங்களிலிருந்து
மீட்பு தந்த
பகலனவர்…
வானகத்தில்
பாண்பு மிகு
தந்தையோடும்
புனித ஆவியோடும்
வாசம் செய்யும்
அருட் புதல்வனின்
புகழ்ப் பாக்கள் ஏற்றுடு…
![]() |
பெயர்: பிலிப் ஜார்ஜ் சந்திரன்.M.A., M.H.M., புனைப்பெயர்: இரஜகை நிலவன் ஊர்: இரஜகிறிஸ்ணாபுரம் (திருநெல்வேலி) எழுதும் பெயர்: இரஜகிறிஸ்ணாபுரம் ”இரஜகை”யாக சுருங்கி உதயம் சந்திரன் "நிலவனா'க மாறிட புனைப்பெயர் உதயமானது விருதுகள்: சிறுகதைச்செல்வர், சிறுகதைச்செம்மல், கவித்திலகம், கவிமாமணி, கவிக்கதிர், கவிச்சிகரம்,சேவை சிற்பி,தமிழ் முகில். பணி: தனியார் அலுவலில் இயக்குனராக. வாழுமிடம்: டோம்பிவிலி (மும்பை) துணைவி: மேரி ராஜேஸ்வரி அடுத்த தலைமுறைகள்: பிலிப் வினிங்ஸ்டன், பிலிப் விஜய்ங்ஸ்டன். பிடித்தவை: தேடல்கள்…, வாசிப்புகள்…,…மேலும் படிக்க... |
