இப்படியெல்லாமா திருடுவீர்கள்!

0
கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: அறிவியல் கிரைம் புனைவு
கதைப்பதிவு: March 16, 2024
பார்வையிட்டோர்: 8,722 
 
 

நான் ஆபீஸிலிருந்து வீடு வந்த போது மணி எட்டரை. பசி வயிற்றைக் கிள்ளியது. பிரிட்ஜுக்குள் இருந்தது வாடி வதங்கிய அரை வெள்ளரிக்காய் மட்டுமே. சரி என்று போனில் சிக்கன் டிக்கா பீட்சா ஒன்றை ஆர்டர் செய்தேன்.

எட்டு நிமிடங்களில், என் போன் சிணுங்கியது:

உங்கள் பீட்சா முகவரி 32GET49956HDPக்கு டெலிபோர்ட் (Teleport) செய்யப்பட்டுள்ளது. இத்துடன் உங்கள் ஆர்டர் முடிந்தது. பீட்சாவை அனுபவித்து விட்டு, எங்கள் பேஸ் புக் பக்கத்தில் லைக் பண்ணுங்கள்.

சமயலறைக்கு சென்று அங்கிருந்த டெலிபோர்ட்டேஷன் இயந்திரத்திலிருந்து சூடான பீட்சா பெட்டியை எடுத்தேன். ஆவலுடன் பெட்டியை திறந்தவன் அதிர்ச்சியடைந்தேன். அதில் ஒரே ஒரு பீட்சா துண்டு மட்டுமே இருந்தது, மீதப் பெட்டி காலி!

எரிச்சலுடன், வாடிக்கையாளர் சேவையை அழைத்தேன். அங்கிருந்த பணியாளர் என் பிரச்சனையை பொறுமையுடன் கேட்டு விட்டு என்னைக் காத்திருக்க சொன்னார். ஐந்து நிமிடங்கள் கழித்து வந்து அவர் சொன்ன சேதி என்னைத் தூக்கி வாரிப் போட்டது. என்னுடைய டெலிபோர்ட்டேஷன் நெட்வொர்க் சரியான பாதுகாப்பில்லாமல் இருக்கிறதாம். யாரோ ஒரு ஹேக்கர் (Hacker) எனது நெட்வொர்க்கை ஹேக் செய்து பீட்சாவை திருடிக் கொண்டு போய் விட்டானாம்.

அடப்பாவிகளா! இப்படியெல்லாமா திருடுவீர்கள்!

நஞ்சப்பன் ஈரோடு பொள்ளாச்சியில் பிறந்து இன்ஜினீரிங் பட்டம் பெற்று தற்போது அமெரிக்காவில் வடக்கு கரோலினாவில் ஒரு வங்கியில் வேலை செய்து வருகிறார். எழுத ஆரம்பித்தது கோவிட் சமயத்தில் ஒரு வாரம் வீட்டில் முடங்கிக் கிடந்த போது. முதலில் எழுதியது ஆங்கிலத்தில் தான்.  அமெரிக்காவில் குடியேறி இருபத்தைந்து வருடங்கள் எந்த தமிழ் வாசனையும் இல்லாத ஒருவரால் தமிழில் எப்படி எழுத முடியம்? சிறுகதைகள்.காம் தளத்தைப் பற்றி அறிந்த போது இவருக்கும் தமிழில் எழுத வேண்டும் என்ற ஆசை வந்தது. அப்போது இவருக்கு கை…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *