இடி முழக்கத்துடன் கனமழை





அது ஒரு ஞாயிற்றுக்கிழமை காலை. முரளி படுக்கையை விட்டு எழுந்த போது வெளியே கனமழையின் சத்தம் கேட்டது. முந்தைய இரவு பெய்து கொண்டிருந்த மழை இன்னும் நிற்கவில்லை போலிருக்கிறது. அவன் ஜன்னலைத் திறந்த போது, வெளியில் பிரகாசமாகவும் வெயிலாகவும் இருப்பதைக் கண்டு குழப்பமடைந்தான். ஒரு சொட்டு தண்ணீர் கூட விழவில்லை. எங்கிருந்து வருகிறது மழையின் சத்தம்?

முரளி கீழே இறங்கி வந்து போது, அவன் மனைவி தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் தலையை உயர்த்தி “மழை சத்தம் கேட்கிறதா?” என்று கேட்டதிற்கு அவன் பதில் சொல்லவில்லை. அவன் கவனமெல்லாம் கிழக்கு சென்னையின் மர்மமான மழை ஒலி பற்றி சன் டிவியில் வந்து கொண்டிருந்த முக்கிய செய்தியில் இருந்தது.
அப்போது ஒரு இடி முழக்கம் கேட்டது. மிக மிக சத்தமான பயமுறுத்தும் இடி முழக்கம்.
திங்கட்கிழமை காலை சீக்கிரமே அலுவலகம் சென்று விட்டான் டேவிட். Heavens Sound Engineering என்று எழுதியிருந்த கதவைத் தள்ளி உள்ளே நுழைந்தான். சோவென்ற மழையின் ஒலி கேட்டது. பல விதமான ஒலி விளைவுகளை உருவாக்கும் இயந்திரத்தில் ஒளிரும் LED களை குழப்பத்துடன் பார்த்தான். ஒலி விளைவுகள் எப்போது வர வேண்டும் என்பதைச் சொன்ன கால அட்டவணையை சரி பார்த்தான். அவன் சந்தேகித்தது சரிதான். கிழக்கு சென்னையில் சனி அன்று மழை ஒலி, ஆனால் ஞாயிறு மற்றும் திங்கள் எந்த ஒலியும் ஒலிக்கக் கூடாது. “முட்டாள் இயந்திரம்” என்று முணுமுணுத்தபடி கையை நீட்டி இயந்திரத்தின் STOP பட்டனை அழுத்தினான்.
இந்த தவற்றை பிற்பாடு கடவுளுக்கு எப்படி விளக்கப் போகிறேன் என்று கவலைப் பட ஆரம்பித்தான் டேவிட்.
![]() |
பொள்ளாச்சியில் பிறந்து இன்ஜினீரிங் பட்டம் பெற்று தற்போது அமெரிக்காவில் வடக்கு கரோலினாவில் ஒரு வங்கியில் வேலை செய்து வருகிறார். எழுத ஆரம்பித்தது கோவிட் சமயத்தில் ஒரு வாரம் வீட்டில் முடங்கிக் கிடந்த போது. முதலில் எழுதியது ஆங்கிலத்தில் தான். அமெரிக்காவில் குடியேறி இருபத்தைந்து வருடங்கள் எந்த தமிழ் வாசனையும் இல்லாத ஒருவரால் தமிழில் எப்படி எழுத முடியம்? சிறுகதைகள்.காம் தளத்தைப் பற்றி அறிந்த போது இவருக்கும் தமிழில் எழுத வேண்டும் என்ற ஆசை வந்தது. அப்போது இவருக்கு கை…மேலும் படிக்க... |