ஆண்டவன் மொகத்தைப் பார்க்கணும்…!

0
கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 11, 2024
பார்வையிட்டோர்: 3,680 
 
 

நீலகிரி எக்ஸ்பிரஸ்ஸில் பெர்த் கிடைப்பது என்பதும், அதிலும் லோயர் பர்த் கிடைப்பது என்பதும் ராஜயோகம் கிடைத்தா மாதிரியான ஒரு ராசி!. பெர்த் நம்பரைத் தேடிப் போய் அந்த ஏசி கோச்சில் பெட் ஸ்ப்ரெட் விரித்து கம்பளி போர்த்தி லோயர் பெர்த்தில் படுத்திருப்பான் லோகு. கால்களை யாரோ சுரண்டினா மாதிரி இருக்க, வந்த தூக்கத்தை ஒத்தி வைத்துவிட்டுப் பார்த்தான். டிடியர் டிக்கெட் செக் பண்ணிக் கொண்டிருந்தார். அவர் போகவும், வண்டி ஓட்டத்தில் வேகம் பிடித்தது.

திடீரென்று தனக்கு எதிர் வரிசை லோயர் பர்த் காரனும் தன்வரிசை நேர் மேலே படுத்திருந்த மனுஷனும்(??) குறட்டைவிட ஆரம்பித்தனர்.

    ஒருவர் குறட்டைக் கேள்வி கேட்க, மற்றவர் குறட்டை பதில் சொல்வது போல் ராக ஆலாபனை நடந்தது. அனிருத்தோ இளைய ராஜாவோ இருந்திருந்தால் அப்படி மகிழ்ந்திருப்பார்கள். மீட்டர் மாறாமல் குறட்டையில் ராக ஆலாபனை லோயர் பர்த் லோகுவுக்கு மட்டும் இடையூறு செய்ய ரொம்பவே நொந்து போனான்.

    கம்ப்பார்ட்மெண்டே அதிர்ந்து கொண்டிருந்தது அவர்கள் குறட்டையில். ஆழந்த உறக்கத்தில் இருந்தவர்கள் உள்ளுக்குள் நொந்து கொள்வது ‘உஸ்…உஸ்’ எனும் அவர்கள் முணகலில் பிரதிபலித்தாலும் எழுந்து எவரும் எதுவும் கேட்கவில்லை.

    எந்த ஸ்டெஷன் என்று தெரியவில்லை…! வண்டி நின்றிருந்தது. எதிர்வரிசை லோயர் பர்த் மனுஷன் எழுந்து விறுவிறுவென கீழே போனார். அப்பாட இறங்கிவிட்டாரென்று நினைக்கும்முன் அவர் மீண்டும் கோச்சுக்குள் வந்தார் கையில் காஃப்பி டம்ளர்.!? சரி சரி குடித்தால்.. தூக்கம் கெடும் ஒரு குறட்டை யிலிருந்து விமோசனம் கிட்டும் என்ற எண்ணத்தில் மண் விழுந்தது…!

    படிக்கிற மாணவர்னுக்கு அவன் அம்மா அக்கறையாய் எழுந்து டீ போட்டுக் கொடுத்தால்,, படிப்பவன் அதைக் குடித்துவிட்டுத் தூங்கிவிடுவதுபோல் இருந்தது…! வந்தவர் குறட்டையில் நீலாம்பரி ராக அடிப்படையில் ஆலாபனை.

    மனசுக்குள் நொந்து கடவுளை எண்ணி மைண்ட் வாய்ஸில் பாடினான் லோகு ‘நான் ஆண்டவன் மொகத்தைப் பார்க்கணும்., அவனிடம் ஒண்ணே ஒண்ணு கேட்கணும்..! ஏண்டா சாமி, என்னைப் படைச்சே?! என்னை படைக்கையில் என்ன நெனைச்சேன்னு?!’

    பின்ன என்ன? நீலகிரியில் டிக்கெட்டும் கிடைக்கப் பண்ணி, லோயர் பர்த்தும் வழங்கி, எதிரில் இரண்டு கிங்க்கரர்களையும் படுக்கக் கிடத்தி தூக்கம் கெடுத்தால்…? எதுக்கு இந்த வரம்னு கேட்கத் தோன்றாதா என்ன?!

    ஆனால், கடவுள் மனசாட்சியாய் பதில் தந்தார். சுய நலமாய் உன்னைப் பற்றியே நெனைக்கிறயே?! அந்த் ரெண்டு பேர் மனைவிகளின் நெலையை நினைத்துப் பார்த்தாயா? அவர்கள் வீட்டில் ஹவுஸ் ஒய்ப்பாக இருந்தாலும் வேலைக்குச் செல்பவர்களாக இருந்தாலும் அவர்கள் பாடு எப்படி? யோசி!? ஒருநாள் ராத்திரி உறக்கம் கெட்டதற்கே இப்படி என்றால்.. உடன் வாழும் அவர்கள் நிலை…?

    நீலகிரி கோவை நெருங்குவது அதன் நளின ஓட்டத்தில் புரிபட்டது.. அவசர அவசரமாக எல்லாரும் எழுந்து பெட்டி படுக்களை ஒழுந்குபடுத்த, கீழ்பர்த் மனுஷன் எழுந்து கொஞ்சம்கூட லோகு எதிர்பார்க்காதபடி..

    ‘சாரி…! எனக்குகொஞ்சம் குறட்டை விடும் பழக்கம் உண்டு..! தூக்கம் கெட்டதுக்கு வருந்துகிறேன்!’ என்றார் லோகுவிடம் உண்மையான வருத்தம் கண்களில் தொணிக்க.!

    நல்ல மனுஷன்! தப்பாய் நெனைச்சுட்டோமே?! இவனைக் கணவனாகப் பெற்றவள் கடவுளால் ஆசீர்வதிக்கப் பட்டவள் என்று கரங்குவித்து ‘இஸ்ட் ஓகே! நோ பிராப்ளம்!’ என்றான் நிஜமாய், மறந்து மன்னித்த நிதானத்தில்!

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *