அன்னச் சேவலே கேள்!
கதையாசிரியர்: முல்லை பி.எல்.முத்தையா
கதைத்தொகுப்பு:
சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: March 15, 2020
பார்வையிட்டோர்: 3,051
அன்னச் சேவலே! அன்னச் சேவலே! ஒன்று கேள்! நீ , நின் மனைவியோடு, அதிகாலைப் பொழுதில் இருபுறமும் சுடர் தோன்றும் குமரியில் விருந்தருந்தி, வடதிசைக் கண்ணுள்ள இமய மலைக்குச் சென்றால், வழியிலே சோழ நாடு தெரியும். அதனைக் கண்டதும், அங்கே இறங்கிக் களைப்பாறு ! நேரே உறையூருக்குப் பறந்து போ! வானோங்கும் கிள்ளியின் மாளிகை உன்னைத் தடுத்து நிறுத்தும். வாயில் காப்போர்க்கு அஞ்சாமல் உள்ளே செல். அங்கே, பெருங் கோக்கிள்ளியின் காதிற் கேட்கும்படி, யான் ஆந்தைப் புலவன் “அடிமை” என்று கூறு!
அப்புறம் நடக்கும் சிறப்பை நீயே தெரிந்து கொள்!
பட்டும் பீதாம்பரமும் பாலும் பழமும் அளித்துக் கொட்டு மேளத்துடன் உனக்கும் உன் மனைவிக்கும் திருமணம் நடத்தி வைப்பான்!
– மாணவர்களுக்குப் புறநானூற்றுச் சிறுகதைகள் – முதற்பதிப்பு : ஆகஸ்ட் 2002 – முல்லை பதிப்பகம்
தொடர்புள்ள சிறுகதைகள்
A for ஆப்பிள் – O for JOY
எஸ்.பவிஷ்
June 23, 2026
நல்ல மனம் வாழ்க!
வளர்கவி
June 20, 2026
கருங்கல்லும் கூழாங்கல்லும்!
வளர்கவி
June 17, 2026