அச்சம் தவிர்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: April 21, 2026
பார்வையிட்டோர்: 72 

ஒருநாள், ஒரு குட்டிச் சடை நாயொன்று ஒரு மலைப் பகுதிக்குள் வழி தெரியாமல் சென்று மாட்டிக் கொண்டது. அதற்கு அந்தக் காட்டுப் பாதை புதியது. அதற்கு முன்பு அப்படியொரு காட்டுப் பகுதிக்குள் அது சென்றதே இல்லை. அதற்கு உள்ளுக்குள் கொஞ்சம் பயம் இருந்தாலும், அது தன் பயத்தை வெளியில் காட்டிக் கொள்ளவில்லை!

வழியில் திடீரென்று எதோ ஒரு பயங்கர சபதம். கர்ஜனை மாதிரி இருந்தது. நிமிர்ந்து பார்த்தது அந்தச் சடை நாய்க் குட்டி.

எதிரில் பிடரி கனத்த, ஒரு பெரிய சிங்கம் நின்றிருந்தது. அந்த சிங்கத்திற்குக் கடுமையான பசி.

“ஏய் யார் நீ? நில்லங்கே!” என்றது சிங்கம்.

நாய்க்குட்டி உள்ளுக்குள் பயமிருந்தாலும் தைரியமாக, “என்ன வேண்டும் உங்களுக்கு?!” என்று கேட்டது நாய்!.

“நான் காட்டின் அரசன்…சிங்கம்! உன்னைப் பார்த்தால், எனக்குச் சிரிப்புத்தான் அருகிறது. இப்படி புசு புசுன்னு… இருக்கயே..? குட்டியூண்டு!” என்று பரிகாசம் செய்தது நாயை அந்தச் சிங்கம்.

யாராவது நம்மை இழிவாகப் பரிகசித்துப் பேசினால், அதற்கெல்லாம் பயந்தோ மனசுடைந்தோ போய்விடாமல் தைரியமாகப் பேசணும்னு அதன் தாய்நாய், குட்டி நாயிடம் சொல்லியிருந்ததால், அது தைரியமாக சிங்கத்தைப் பார்த்து, “ சிங்க ராஜாவே, நீங்க வேணா பார்க்கப் பயங்கரமாக இருக்கலாம். ஆனால், என்னைப் பொறுத்தவரை நீங்க.. நீங்கன்னு..” சொல்லீட்டு வாய்விட்டுச் சிரித்தது அந்த குட்டி சடைநாய்.

அதைப் பார்த்த சிங்கம் கோபம் வந்தாலும் தன்னிடம் தைரியமாகப் பேசும் நாயைப் பெருமையாய்ப் பார்த்து..

“என்ன மேலே.. சொல்!” என்று கடுமையாகக் கேட்டது

நாய் சொன்னது, “என்னைப் பொறுத்தவரை நீங்க சிங்க ராஜாவெல்லாம் இல்லை…! என் பார்வைக்கு, நீங்க.. நீங்க… ஒரு பெரிய பூனை! அவ்வளவுதான்” என்றதும், சிங்கம் வாய் பேசாமல் மவுனமாக நாயின் தைரியத்தை நினைத்தப்டி தலை கவிழ்ந்து அங்கிருந்து ஓடிச் சென்றுவிட்டது!

வளர்கவி இயற்பெயர்: வே.ராதாகிருஷ்ணன் புனைபெயர்: வளர்கவி கோவை பிறந்த ஊர்: ஸ்ரீவில்லிபுத்தூர். வாழ்விடம்: கோவை. கல்வித்தகுதி: எம்.ஏ (வரலாறு)எம்ஏ (தமிழ்) எம்ஃபில் தமிழ்(ஈரோடு தமிழன்பன் கவிதைகளில்). குருநாதர்: தடாகம் இளமுருகு தமிழாசிரியர். பணி: பட்டதாரி ஆசிரியர் மணி மே.நி.ப கோவை - 23 ஆண்டுகள். பகுதிநேர அறிவிப்பாளர்: ஆல் இண்டியா ரேடியோ கோவை - 18 ஆண்டுகள் ஞானவாணி கோவை - 4 ஆண்டுகள். வெளியிட்ட நால்கள் - 3 1.…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *