வெற்றிமீது வெற்றிவந்து என்னைச் சேரும்!





வெற்றியையே எப்போதும் எதிர்பார்க்கிறது மனம். ஆனால், என்ன அதிசயம்?! அறிவாளி தோற்றுப் போவதும் சாதாரணமானவன் அதில் வெற்றிபெறுவதும் அடிக்கடி நடப்பது ஆச்சரியமாக இருப்பதுதான். அன்றும் அப்படித்தான் நடந்தது.

சதீஷ் காசு ஆசையே இல்லாத ஒரு கார் மெக்கானிக். அவனை ஒரு முறையாவது வெற்றிபெற்றுவிட நினைத்திருந்தான் வீரக்குமார்.
அன்று அவன் காரின் ரியர்வியூ மிர்ரர் உடைந்து போக, மாற்ற அவனை அழைத்தான்.
என்ன மாடல் என்ன பிரச்சனை எல்லாம் பார்த்துவிட்டு கடைக்குப் போனான் சதீஷ்!. இவன் வீட்டுக்கு வந்தே ரிப்பேர் செய்து தருவதால் சிரமமில்லாமலிருந்தது வீரகுமாருக்கு.
வந்தவன் பில் கொடுத்தான். ஆயிரத்துத்தொண்ணூறு என்றிருந்தது. இம்முறை எப்படியும் அவனை வென்றுவிட வேண்டும். அவன் ரிப்பேரைச் சரி செய்து கொண்டிருந்தபோதே சர்வீஸ் ஜார்ஜாக ஒரு இராண்டாயிரம் ஜிபே செய்துவிட்டு, அமவுண்ட் அனுப்பிவிட்டேன் என்று மட்டும் சொல்ல, ’சரி!’என்று சொல்லித் திரும்பிப் போனான் சதீஷ்!
பார்ப்போம்.,இப்போது என்ன செய்கிறானென்று..?! அதிகம் கொடுத்திருக்கிறோம் என்று மட்டும் அடிமனம் சொன்னது.
அவன் போன் பண்ணினான். ‘சார் எதுக்கு ரெண்டாயிரம் போட்டீங்க? வேண்டாம்!’ என்று சொல்லி, ஒரு அறுநூறு ரூபாயைத் திருப்பி அனுப்பினான். சதீஷின் நடத்தை ஒன்றைப் புரிய வைத்தது வீர குமாருக்கு!. அறிவு அடிக்கடி தோற்றுவிடுகிறது!. ஆனால், நடத்தை என்றைக்குமே தோற்பதில்லை!. அறிவினால் பெறுகிற வெற்றியைவிட நடத்தையால் பெறுகிற வெற்றி நிலையானது என்பது புரிந்தது. நடத்தை நல்ல வெற்றியை மட்டுமல்ல, நிரந்தர நட்பையும் பெற்றுத் தந்து வெற்றி மீது வெற்றி குவிக்கிறது!