வெறகு வெட்டி
(1999ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஒரு ஊர்ல – ஒரு தகப்பனுக்கு, அண்ணந்தம்பி நாலு பேரு இருந்தாங்க. மூத்தவனுக்குக் கல்யாண வயசு வந்திருச்சு. கல்யாணம் முடிக்கணும்ண்டு தகப்பன் நெனச்சர். ரூவாய்க்கு, மொதலாளிகிட்டக் கேக்கச் சொல்லி, தகப்பனப் போகச் சொல்றா. ரூவா குடுத்தா, நெலத்ல வேல – கீல செஞ்சு, கடனக் கழிச்சிருவோமண்டு, மொதலாளிகிட்டச் சொல்லி, ரூவா வாங்கிட்டு வரச் சொல்றா.
கடன ஓடன வாங்கி, கல்யாணத்த முடுச்சுட்டாங்க. கல்யாணம் முடிஞ்ச மறுநாளே, வேற ஒல வைக்கணும்ண்டு, தகப்பங்கிட்டக் கேட்டர். கல்யாணத்துக்கு வாங்குன கடன அடைக்கல. அத, அடைக்கிறது ஆருண்டு தகப்பன் கேக்குறர். அதுனால, தகப்பன் சம்மதிக்கல. சம்மதிக்காம இருக்கவும், தகப்பன் சொல்றதக் கேக்காம தனியாப் போயிட்டர். கையில இருந்தத வச்சு நாலஞ்சு நா சாப்பிட்டாங்க. பெறகு கையில மெல்யில இல்லாமப் போகவும், அடுத்த வீ ட்டுப் பொம்பளகிட்ட, ரெண்டு படி சோளம் வாங்கிட்டு வரச்சொன்னர். சொல்லவும், போயிக் கேட்டர். கேக்கவும், அவளும் மறுப்புச் சொல்லாம் குடுத்திட்டா. அந்தச் சோளத்த வாங்கி இடுச்சுக்கிடுச்சு, களியாக் கிண்டி, ஒரு ஆப்ப சோத்தத் திண்டுட்டு, ஒரு ஆப்ப சோத்தக் கட்டுச் சோறாக் கட்டிக்கிட்டு, மலைக்கு, வெறகு வெட்டப் போறா.
மத்தியானதல, கட்டுச் சோற எடுத்துக்கிட்டு, ஒரு தெப்பத்துக்குப் போறா. தெப்பத்ல, பாத்தா மீனுக நெறயா இருக்கு. கட்டுச் சோத்தத் திண்டுட்டு, அஞ்சாறு மீனப்புடுச்சு, அதுல வச்சுக் கட்டிக்கிட்டு மசங்க மசங்க வீட்டுக்கு வாரா.
வீ ட்டுக்கு வந்ததும், அருவாமணய எடுத்திட்டு வாடிண்டு சொல்றர். பொண்டாட்டி அந்த இருட்ல தேடி அருவாமணய எடுத்திட்டு வந்து குடுத்தா. கொண்டு வந்த மீன அறுத்துச் சுத்தஞ் செய்யுறர். பொண்டாட்டி மஞ்ச மொளகா அரைக்கிறா. ஒரு மீன அறுக்கவும், அதுல இருந்து, முத்து முத்தாக் கொட்டிருச்சு. பொண்டாட்டிக்குத் தெரியாம அள்ளித் தவுடு இருக்கிற அடுக்குப் பானக்குள்ள வச்சிட்டா.
வச்சிட்டு, விடியவும் எந்திருச்சு, பெறகும் மலக்கிப் போறர். போயிறவும், அண்ணக்கிப் பகல்ல ஒருத்தி, தவுடு இருக்கா தவுண்டு சத்தம் போட்டுக்கிட்டுத் தெரு வழியா வந்தர். நம்ம வீட்லதான் ரெண்டு சேர் தவுடு இருக்கே. அதப் போட்டு காசு வாங்குவோம்ண்ட்டு, குத்து மதிப்பாக் குடுத்திட்டுக் காச வாங்கிட்டா.
மலக்கிப் போயிட்டு, மசங்கற நேரத்ல வந்தர். இவ கருவாட்டுச் சாறு வச்சு, சோளக்களிக் கிண்டி வச்சிருக்கா. வந்தர். நல்லாத் திண்டா, திண்ட்டு, வெத்தல வாங்கக் காசு கேக்குறர். கேக்கயில, தவுடு வித்த காசு இருக்கு மச்சாண்டு சொன்னா. அடி கண்டாரோளி! அதுக்குள்ள இருந்து ஒண்ணு கூட எடுக்கலயாண்டு கேக்குறர். இல்லேண்டு சொன்னா. கடவுள் குடுத்தது கூட நமக்கு ரவிக்கலேயேண்டு வருத்தப்பட்டுப் படுத்துக் கெடந்துட்டு, விடியவும் மலைக்கிப் போறா.
அஞ்சாறு வெறகெடுத்துக்கிட்டு, அந்தத் தெப்பத்ல போயி, ரெண்டு மீனப் புடுச்சுக்கிட்டு வீட்டுக்கு வாரா. வந்து, மீன அருவாமணயில வச்சு அறுக்கவும் உள்ள இருந்து முத்து கொட்டுச்சு. அள்ளிக் கொண்டு போயி, கொட்டமுத்து இருக்கிற பானக்குள்ள வச்சுட்டு, படுத்துக்கிட்டர் விடியவும் எந்திருச்சு வெறகு வெட்ட மலக்கிப் போயிட்டா.
காலைல கொட்டமுத்து இருக்கா? கொட்டமுத்துண்டு கேட்டுக்கிட்டுத் தெரு வழியா ஒருத்தீ வந்தர். அதயெடுத்து வெலக்கிப் போட்டுட்டா. புருசன் வரவும், கொட்டமுத்த வெலக்கிப் போட்டுட்டேண்டு சொன்னா. கண்டாரோளி முண்ட! கெடுத்தாள குடியண்டு, அவள், அடி அடிண்டு அடுச்சு அவங்ஙப்பன் வீட்டுக்கு வெரட்டி விட்டுட்டா.
பொண்டாட்டிய வெரட்டி விட்டுட்டு, ரொம்ப வருத்தத்தோட, காலையில எந்திருச்சு, வெறகு வெட்ட மலக்கிப் போறர். போனவ், வெறக வெட்டாம, நே..ரா… தெப்பத்துக்கே போறர். போயி, மீனப் புடுச்சுக்கிட்டு, ரெண்டு வெறகையும் வெட்டிக் கெட்டிக்கிட்டு, வீட்டுக்கு வர்றீர். வந்து, எத அறுத்துப் பாத்தாலும் வெறும் முத்துக்களா இருக்கு. இந்தத் தடவ வீட்டுக்குள்ள வைக்காம நேரா ஆசாரிகிட்ட அள்ளிட்டுப் போயி, பூராத்தயும் வித்துப் பணமாக்கிடணும்ண்டு நெனச்சு, ஆசாரிகிட்டப் போறர். போயி கேக்கயில, ஆசாரி அத வாங்கிக்கிட்டு நெறயா பணம் குடுத்தர். அந்தப் பணத்த வச்சு. மொதல்ல வீடு கட்டணும்ண்டு நெனச்சு, வீட்டுக்கான எடத்தத் தேடிப் போயி, ஒரு எடத்த வெலைக்கிக் கேக்குறா.
அப்ப: அவஞ் சொன்னா ஆரு? வீடு விக்கிறவ். ஏண்டா! வெறகு வெட்டி!! இந்த எடத்துக்கு ஒன்னால பணங் குடுக்க முடியுமாண்டு கேட்டா. ஆயிரம் ரூவாய அவங்கிட்டத் தூக்கிப்போட்டுட்டு, எடத்த வாங்கிட்டா. வாங்கி, ஊரு ஆளுக, ஆச்சரியப் படுற மாதிரி வீட்டக் கட்டுறா.
வீட்டு வேல நடந்துக்கிட்டிருக்கப்ப, பொண்டாட்டி முக்காடு போட்டுக்கிட்டு வந்தா. வரவும், கம்பெடுத்து கெணாசுரர். கெணாசிப்பிட்டுப் போயி, வேலயப் பாரு விள்ளண்டு சொல்றா. மூச்சுவிடாமப் போயி, வேலயப் பாக்குறா. வீடு முடிஞ்சிருச்சு, கிரகப் (பிரவேசம்) பிரசனம் நடத்துறதுக்கு, நிய்யி போயி, ஙொய்யங் கொப்பனக் கூட்டிட்டு வா. நாம் போயி, ஞாயிங் ஙப்பனக் கூட்டிட்டு வாரேண்ட்டு, பொண்டாட்டியப் போகச் சொல்லிட்டு, இவனும் போயிட்டா. பெறகு, எல்லாரும் வந்தாங்க. கெரகப்பிரவேசம் நடந்திச்சு. பெறகு நல்லா வாந்தாங்களாம். அவனுக்கு நல்ல நேரம் வந்திருச்சு. நம்மளுக்கு இன்னும் வரலியே.
– மதுரை மாவட்ட நாட்டுப்புறக் கதைகள், சமூக வரலாற்றுக் கதைகள், முதற் பதிப்பு: 1999, மதுரை காமராசர் பல்கலைக் கழகம், மதுரை.