கதையாசிரியர்:
தின/வார இதழ்: மங்கையர் மலர்
கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: February 13, 2025
பார்வையிட்டோர்: 8,413 
 
 

(1981ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கோவிந்த பந்தும் நிருபாயும் தம்பதிகள்! ஏழைகள்! ஒழுக்க சீலர்கள், கடவுள் பக்தி நிரம்பியவர்கள்.

அவர்களுக்குப் பிறந்தவர்தான் வித்தல் பந்த், பெற்றோர்களுக்கு அவன் சளைத்தவனல்ல. ஒழுக்கத்தில் சிறந்து விளங்கினான். கடவுள் மீது அன்பு பூண்டான். கதா காலட் சேபங்களுக்குச் சென்றான். கடவுள் நாமத்தை கேட்டுத் தன்னை அறியாமல் கண்ணீர் உருத்தான்,

உரிய வயது வந்தபோது பெற்றோர்கள் அவனுக்குத் திருமணம் செய்து வைக்க நினைத்தார்கள்.

திருமணம் என்பது வெறும் பந்தம் என்று கூறி வித்தல் பந்த் அதை வெறுத்தான். சீக்கிரத்தில் பெற்றோரிடமிருந்து அனுமதி பெற்று தீர்த்த யாத்திரை புறப்பட்டான்.

பல புண்ணிய க்ஷேத்திரங்களைத் தரிசித்து விட்டு ஆலந்திக்கு வந்தான். (பூனா அருகில் உள்ளது) அங்குள்ள இந்திராயினி நதியில் நீராடிவிட்டு, கரையில் உள்ள அத்தி மரத்தின் அடியில் அமர்ந்து கொண்டான்.

ஆலந்தியில் சித்தோபந்த் குல்கர்னி என்று ஒருவர் இருந்தார். அவர் அந்த அத்தி மரத்தைப் பிரதட்சிணம் செய்யக் காலையில் வந்தார். மரத்தடியில் பந்த் தியானத்தில் மூழ்கியிருப்பதைப் பார்த்ததும் ஆச்சரியப்பட்டார். வித்தலின் முகத்தில் தேஜஸ் ஜொலித்தது.

மரத்தடியில் காத்திருந்து வித்தல் கண்ணை விழித்ததும் அவனைத் தமது வீட்டுக்கு எழுந்தருள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

வித்தலும் இசைந்து குல்கர்னி வீட்டுக்குச் சென்றார். அங்கே இருவரும் கடவுளைப் பற்றிய கீர்த்தனைகள் பாடுவதில் ஈடுபட்டு, பின்னர் உணவு அருந்தத் தொடங்கினார்கள்.

சாப்பிட்டுவிட்டு இளைப்பாறும்போது குல்கர்னியின் பெண் குறுக்கே சென்றாள்.

“இவள்தான் என் மகள்” என்று அறிமுகப்படுத்தினர் குல்கர்னி.

அதி அற்புதமான அழகோடு அந்தப்பெண் மறு அறைக்குள் மறைந்து விட்டாள்.

இரவில் குல்கர்னிக்கு ஒரு கனவு ஏற்பட்டது.

பாண்டுரங்கர் தோன்றி, “உன் பெண்ணை வித்தலுக்குத் திருமணம் செய்து கொடு, அவர்களுக்குத் தெய்வாம்சமாக நான்கு குழந்தைகள் பிறக்கும்” என்று கூறினார்.

விடிந்து எழுந்ததும் குல்கர்னி இதை வித்தலிடம் விண்ணப்பிக்க, வித்தவர், ‘என் மனம் இல்லறத்தை நாடவில்லை’ என்று கூறினார்.

ஆனால் அன்று இரவு அவர் கனவிலும் பாண்டுரங்கள் தோன்றி ‘அந்தப் பெண்ணை ஏற்றுக்கோள்’ என்று கட்டளை இட,

மறுநாள் எழுந்த வித்தல் பந்த் என்ன செய்வது என்று தெரியாமல் விழித்தார்.

அங்கு கூடியிருந்தவர்கள் வற்புறுத்தவே வித்தல் அந்த குல்கர்னியின் மகளான ரகுமா பாயைத் திருமணம் செய்து கொண்டார்.

வித்தல் தம்பதிகள் உடனே பண்டரிபுரம் போய்விட்டு ஊருக்குத் திரும்பினார்கள்.

வருஷங்கள் சென்றன.

வித்தலருக்குக் குழந்தைகளே பிறக்கவில்லை.

‘பாண்டுரங்கன் எனக்குத் தெய்வ அம்சங்களாக நான்கு குழந்தைகள் பிறக்கும் என்றாரே. யாரும் பிறக்கவில்லையே!’ என்று சோகத்தோடு எண்ணினார்.

இல்லற வாழ்க்கையில் மேலும் இருக்கப் பிடிக்காமல், வித்தல் தமது இல்லறத்தைத் துறக்க விரும்பினார்.

ஒரு நாள் வீட்டை விட்டு நேராக காசிக்குச் சென்றார்.

அங்கே ராமானந்த சுவாமி என்பாரின் காலில் விழுந்து, ”சுவாமி! அடியேனுக்கு சந்நியாசம் தந்தருள வேண்டும்” என்று வேண்டினார்.

அவர் வெகுவாக வேண்ட, ராமானந்தர் அவரைப் பார்த்து, ”முறையாகத் திருமணம் செய்து கொண்டு குழந்தைகள் பெற்றாயா? அப்போதுநாள் சந்நியாசம் தர முடியும்” என்றார்.

வித்தல் பந்துக்குத் திருமணம் ஆகிவிட்டதே தவிர குழந்தைகள் பிறக்கவில்லை.

ஆனால் ‘குழந்தைகள் பிறக்கவில்லை’ என்று சொன்னால் எங்கே ராமானந்தர் சத்நியாசம் தராமல் போய்விடுவாரோ என்று பயத்து. “சுவாமி. திருமணம் ஆகி எனக்குக் குழந்தைகளும் பிறந்து விட்டன,” என்று பொய் சொன்னார்.

“ஆகில் ஈ.மக்கு சந்நியாசம் தருவோம்” என்று அவரைச் சந்நியாசியாக்கினார் ராமானந்தர். அவருக்கு ‘சைதன்யாச்ரம் சுவாமி’ என்று தீட்சை நாமத்தையும் கொடுத்தார்.

சிறிது காலம் சென்றவாறே. சுவாமி ராமானந்தர் தமது ஆசரமப் பொறுப்பை சைதன்யாச்ரம் சுவாமியிடம் ஓப்படைத்து விட்டுத் தீர்த்தயாத்திரை புறப்பட்டார்.

பல புண்ணியத் தலங்களைத் தரிசித்து விட்டு ஆலந்திக்கு வந்து சேர்த்தார்.

அங்கே அந்த இந்திரயானி ஆற்றின் கரையில் உள்ள அத்தி மரத்தடியில் அவர் உட்கார்ந்திருக்கும்போது, வித்தல் பந்தின் மனைவி ரகுமாபாய் அந்த மரத்தைப் பிரதட்சிணம் செய்வதற்கு வந்தாள்.

ஏதோ ஒரு சுவாமி அமர்ந்திருப்பதைப் பார்த்த ரகுமா பாய் அவர் பாதங்களில் வீழ்ந்து வணங்கினர்.

சுவாமியும் அவளை ஆசீர்வதித்து “உனக்கு நான்கு குழந்தைகள் பிறக்கும். எல்லோரும் கீர்த்தி பெறுவார்கள்” என்று அனுக்கிரகம் செய்தார்.

அதைக் கேட்ட ரருமா பாய் நகைத்து, ”சுவாமி! எனக்குச் சந்தானப் பேறு இந்த ஜன்மத்தில் கிடையாது” என்றாள்.

“ஏனம்மா?” என்று ஆச்சரியத்துடன் கேட்டார் ராமானந்த சுவாமி.

“என் கணவர் வடக்கே காசிக்குப் போய் சந்நியாச ஆசிரமம் வாங்கி விட்டார்” என்று கூறிய அவள் மேலும் கோபம் கொண்டு,

”சுவாமி, இல்லறம் நடத்திக் குழந்தை பெறாதவர்கள் சந்தியாசியாகக் கூடாது என்று விதி அல்லவோ? அது தெரியாமல் எந்த மகானுபவார் அவருக்கு சந்நியாசம் கொடுத்தாரோ தெரியவில்லை” என்று கூறினாள்.

“அப்படியா?” என்று கேட்ட சுவாமி, “உன் கணவர் பேர் என்னம்மா?” என்று ஆவலுடன் வினவினார்.

“வித்தல் பந்த்” என்றாள் ரகுமா பாய்.

அவள் அப்படிச் சொன்னவுடன் சுவாமிக்குந் தாம் செய்த தவறு தெரிந்துவிட்டது.

“நல்வது. நன்மையே நடக்கும்” என்று சொல்லிவிட்டு, ராமானந்த சுவாமி சீக்கிரம் காசிக்குத் திரும்பினார்.

ஆசிரமம் போனவுடன் சைதன்யாசிரம் சுவாமியை வரவழைத்து, “நீ செய்தது இப்படித்தானா?” என்று கேட்க,

அவரும் தலை குனிந்து அவர் பாதங்களில் வீழ்ந்து தமது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

“அப்படியானால் நீ உடனே இல்லறம் பூண்டு உன் வீட்டுக்கு உடனே போக வேண்டும். குழந்தைகள் பிறந்த பிறகுதான் நீ சந்நியாசி ஆகலாம்” என்று அவரை வீட்டை நோக்கி அனுப்பி வைத்தார் ராமானந்தர் .

சைதன்யாச்ரம சுவாமி பழைய வித்தல் பந்தாகத் தமது ஊர் திரும்பினார்.

மனைவி ரகுமா பாய் அவரை மிக மகிழ்ச்சியுடன் வரவேற்றாள்.

ஆனால் ஊர் ஜனங்கள் ஒரு சந்நியாசி மீண்டும் இல்லறத்தானாக மாறியதை ஏற்றுக்கொள்ளவில்லை. அது பாபம் என்று கருதினார்கள்.

அதனால் அவரை ஜாதியை விட்டுத் தள்ளி வைத்தார்கள்.

இதற்கிடையில் ரகுமா பாயின் தந்தை சித்தோாபந்த குல்கர்னி இறக்க,

குடும்பம் மிகவும் கஷ்ட தசையை நோக்கிச் செல்லலாயிற்று.

அன்றாட உணவுக்குப் பஞ்சம் ஏற்பட்டது.

ஊரில் வாழ வழியில்லை என்று அறிந்த வித்தல் தமது மனைவியுடன் பக்கத்திலிருந்த காட்டுக்குள் சென்று குடிசை போட்டு வாழ ஆரம்பித்தார். ஊசில் பிச்சை எடுத்து வாழத் தொடங்கினார்.

சோதனையாக அதே நேரத்தில் அவருக்கு அடுத்தடுத்து நான்கு குழைந்தைகள் பிறந்தன. மூன்று ஆண்கள் ஒரு பெண்.

முறையே அவர்களுக்கு நிவிருத்தி, ஞானேச்வர், சோபான, முக்தா பாய் என்று பெயர்கள் வைத்தார்.

குடும்பத்தின் கஷ்டங்கள் இதனால் மேலும் அதிகமாயின, போதுமான உணவு கிடைக்கவில்யே, ஊர் ஜனங்கள் அந்த ஒன்றுமறியாக் குழந்தைகளைத் துன்புறுத்தினர்கள். ‘சத்தியாசிப் பிள்ளைகள்’ என்று ‘கேலி செய்தார்கள்.

இதையெல்லாம் அறிந்த வித்தல் பந்த் மௌனமாகப் பொறுமையைக் கடைப்பிடித்தார்.

ஒரு நாள் த்ரயம்பரேசுவரர் ஆலயத்தில் தேர்த் திருவிழாவுக்குப் போய்விட்டு வித்தல் பந்த் தம் குடும்பத்துடன் திரும்பிக்கொண்டிருந்தார்.

காட்டில் வரும்போது புலி ஒன்றின் உறுமல் கேட்கவே பெற்றோர்களும் குழந்தை களும் சிதறிப் போனார்கள்.

வெகு நேரம் கழித்த பிறகு அபாயம் நீங்கி ஒவ்வொருவராக ஒன்று சேர, நிவிருத்தி என்ற மூத்த மகன் மட்டும் காணாமல் போய் விட்டான்.

அவனுக்காக மிகவும் விசனப்பட்டு வித்தல் பந்த் தமது மற்றைய குழந்தைகளோடு தமது இருப்பிடத்துக்குத் திரும்பினார்.

அங்கே சிறிது காலம் சென்றுவிட, ஒரு நாள் நிவிருத்தி துறவுக் கோலத்துடன் வீடு வந்து சேர்ந்தான்.

ஆச்சரியப்பட்ட வித்தல் அவனை விசாரிக்க,

நிவிருத்தி காட்டில் புலி வந்த அன்று பயந்துபோய் ஒரு குகைக்குள் ஓடி ஒளிந்ததாகவும்,

அங்கே தவம் செய்து கொண்டிருந்த கஹிதாத் என்ற சுவாமிகளிடம் சரண் அடைந்ததாகவும்,

அவர் அவனைத் துறவில் ஈடுபட வைத்ததாகவும் கூறினார்,

நிவிருத்தி, என்று ‘நாத்’ என்று துறவிக் குழுவில் சேர்ந்த அந்த மூத்த மகன், பின்னர் தன் தம்பி ஞானேச்வருக்குத் துறவிக் கோலம் கொடுத்தான்.

ஞானேச்வர் தமது தம்பி சோபனாவையும் சகோதரி முக்தா பாயையும் துறவில் ஈடுபடுத்தினர்.

இந்த நால்வரும் பின்னர் தமது தீங்குரல் பாடல்களால் மராட்டிய தேசம் முழுவதையும் உன்மத்தம் ஆக்கினார்கள்.

பண்டிதர்கள் அவர்களை ‘சந்தியாசி பெற்ற பிள்ளைகள்’ என்று கேலி செய்தாலும் அவர்கள் தங்கள் பக்திப் பெருக்கான பாடல்களால் நிறைய ஜனங்களைத் தங்கள்பால் ஈர்த்துக் கொண்டார்கள்.

ஆனால் தம் குழந்தைகள் கீர்த்தி அடைவதைப் பார்ப்பதற்கு வித்தல் பந்தும், ரகுமா பாயும் உயிரோடு இல்லை.

தங்கள் குடும்பத்தின் மீது ஏற்பட்ட அபகீர்த்தியில் அவர்கள் மிகவும் சோகப்பட்டு ஒரு நதியில் பாய்ந்து மூழ்கித் தங்களை மாய்த்துக் கொண்டார்கள்.

அவர்கள் வாழ்ந்த காலம் 13ஆம் நூற்றாண்டு.

– மங்கையர் மலர், ஜூன் 1981.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *