விடைபெற நில்
![](https://www.sirukathaigal.com/wp-content/uploads/2023/03/author.png)
![](https://www.sirukathaigal.com/wp-content/uploads/2023/03/category.png)
![](https://www.sirukathaigal.com/wp-content/uploads/2023/03/date.png)
![](https://www.sirukathaigal.com/wp-content/uploads/2023/03/eye.png)
(1992ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
குருக்கள் திடுதிப்பென ஆரம்பித்தார்: ‘அதோ அந்த வீட்டைப் பார்த்தியா?’
பார்த்தேன். அவர் சுட்டிக் காண்பித்த பக்கம் ஒரே வயற்காடு. ஒட்டி ஏரிக்கரை கரைமேட்டில் காவல் காக்கும் பனைகள் பனங்குலைகளுக்குக் காவல் யார்? வான விளிம்பில் சாயும் வெய்யிலில் அதற்குமப்பால், ஆற்று மணல் மின்னிற்று. ஒன்றிரண்டு பம்பு செட்டுகள் ‘ஜக் ஜக் ஜக்’ ஒட்டுக் கேட்டால் சத்தம் எட்டும். ஆனால் வீடு? ஏதும் காணோம்.
![](https://www.sirukathaigal.com/wp-content/uploads/2024/12/உத்தராயணம்.jpg)
“அதாண்டா! அதோ அந்த மூணு மெத்தை வீடு! மெத்தை வீடு தெரியல்லே? என்னடா கண் அது? கண்ணுக்கு வேறே கண்! மெத்தை வீடு தெரியாமல் நேற்றுப் பையன் முளிக்கறியே!”
இருந்தாலல்லோ தெரியும்? ஆனால் நான் மறுத்துப் பேச வில்லை, தெரிந்ததைப்போல் தலையைப் பலமாக ஆட்டினேன். ‘நேற்றைப் பையனுக்கு’ நடப்பது அறுபத்தி நாலு. ஆனால் நாலு வருடங்களாக குருக்களுக்கு அவர் வாயா லேயே தொண்ணூறு. அவரை மறுக்க எனக்குக் கட்டுபடி ஆகாது. கண்ணாடிக் குருக்கள் கதைச் சுரங்கம். ஒரு பக்கம் கயிறு கட்டி காதில் சுற்றிச் சரிந்த கண்ணாடியில் ஒரு ஃப்ரேம் ஓட்டை, எனக்குத் தெரிந்து பதினைந்து வருடங்களாக வீம்பாக இதே அலங்காரம்தான். ஒருமுறை கண்ணாடியை மாற்றித் தர ஜாடையாக முன் வந்து வாங்கிக் கட்டிக் கொண்டேன். அப்புறம் அந்த வழிக்குப் போவதில்லை. ஆனால் இல்லாததைப் பார்ப்பவருக்குக் கண்ணாடி எதற்கு? ஆனால் கண்ணாடியை மாட்டிக்கொள்ளா விட்டால் திண்டாடுவார்.
“என்ன ஒப்புக்குத் தலையாட்டறே?” அட போடா மண்டு! உடனே பதறிப்போய், “ராமாமிருதம், ராமா மிருதம். என்னை மன்னிச்சுடு! பழைய நினைப்பில் ஏதோ உளறிட்டேன். மன்னிச்சிடப்பா. வயஸாச்சு. மனசு ஒரு நினைப்பில் இல்லே!”
“மாமா, நான் பழைய ராமாமிருதம்தான்!”’
“அதெப்படி? நல்ல உத்தியோகம் பார்த்திருக்கே! எவ்வளவு படிச்சிருப்பே? உலகத்தை எத்தனை சுத்திப் பாத்திருப்பே! பழைய ஞாபகத்தை வெச்சிண்டு எங்களைப் பாக்க வரதே பெரிசு! கதை கிதை வேறே எழுதறியாம்! எங்களுக்கு எவ்வளவு பெருமை தெரியுமா? எனக்குக் கண் போச்சு. எனக்குப் பகல் ராத்திரி ரெண்டும் ராத்திரிதான். சங்கரன் படிச்சுக் காண்பிச்சால் உண்டு. உன்னைவிட அவன் நாலு வயது கூடுதல் இல்லே? நீ நளா அவன் -” விரல்கணுக் களில் எண்ணி ஏதோ ஒரு பேர் சொன்னார். எனக்கு மறந்துபோச்சு.
“நீ அவன்கிட்ட சொல்லாதே!”
“என்னத்தை மாமா?”
“உன்னை ஏகவசனமா பேசினதை எனக்கு வார்த்தை பிரண்டு – போனதை. எழுந்து சாஷ்டாங்கமாக மாமா காலில் விழுந்தேன்.
‘தீர்க்காயுஷ்மான்பவா!’ குருக்கள் உச்சந்தலையைத் தடவிக் கொடுத்தார். அவர் விரல் நுனிகளில் அன்பு சொட்டிற்று. குருக்களுக்கு உள்ளூர சந்தோஷம்.
குருக்கள், மடியிலிருந்து காயிதப் பெ ட்டலத்தை எடுத்துப் பிரித்து, தாம்பூலத்தை உரலில் போட்டு இடிக்க ஆரம்பித்தார். அவருக்கு இடித்துத் தருவதற்காக, இரண் டையும் அவர் கைகளிலிருந்து கழற்ற முயன்றேன்.
வேணாம்; வேணாம்! உனக்கு இந்தப் பக்குவம் தெரிய நியாயமில்லே. நீங்கள்ளாம் உத்தியோக ரீதியிலேயே அக்னி ஹோத்ரம் பண்ணறவாள்!”
நான் மருந்துக்குக்கூடப் புகை பிடிப்பதில்லை, அது எப்படி யிருக்குமென்று கூட எனக்குத் தெரியாது. அது அவருக்கும் தெரியும் என்று எனக்குத் தெரியும். ஆனால் இப்படியெல்லாம் இடிப்பது குற்றமாக குருக்களுக்குப் பட வில்லை. ஆனால் நானும் மறுக்கவில்லை. பெரியவர்களின் அற்ப சந்தோஷத்தைக் கெடுப்பானேன்! என் பிள்ளைகளை யும், நானும் இதேபோல், என் கொடுமையை அனுபவிப்ப தற்காக கொட்டிக் கொட்டி, அந்தக் கற்கண்டு குயில்களைக் கடுவாம் பூனைகளாக்கி, பிறகு பதிலுக்கு ஒரு முறையேனும், அவர்கள் திருப்பிக் கடித்தால், வலி பொறுக்காமல் சகட் டுக்கு இளைய தலைமுறையையே சபிக்கிறேனோ என்னவோ?
“யாரு, கூனப்ப முதலியாரா? வாங்க!” வந்த ஆள் ஆறடி இரண்டங்குலம். ஆஜானுபாகு. அப்பளக்குடுமி. குருக்கள் வழங்கிய விபூதியைப் பக்தியாய் வாங்கி நெற்றி யில் உடம்பில் பூசிக்கொண்டான். அப்படியே நான் யார், அவ்விடத்தில் எனக்கென்ன ஜோலி என்று கண்ணால் வினாவினான்.
“இவர் யாரு தெரியுதா? தெரியல்லே? எட்மாஸ்டர் பிள்ளை! சப்தரிஷி ஐயர் குமாரன். அப்போ பள்ளிக் கூடத்தில் ஆறாவது வரைதான்! இப்போத்தான் பத்துக்கும் மேலே போவுதே! இப்போ எட்மாஸ்டர், இவர் நினைப் பிருக்கணும். எனக்கிருந்து என்ன பிரயோசனம்?
”ஐயரே, நாளைக்கு சஷ்டி!” மூணு ஒற்றை ரூபாய் நோட்டுக்களை அவர் கையில் திணித்தான். ”ஊசி போட் டுக்க ஆஸ்பத்திரிக்கு நாளை காஞ்சிபுரம் போவணும். விடி காலையிலேயே அபிஷேகத்தை முடிச்சுக் கொடுத்துடுங்க!
“அப்படியே செய்துட்டாப் போவுது!”
அவன் என்னைக் கண்டு கொண்டதாவே காட்டிக் கொள்ளவில்லை. போய்விட்டான். கண்ணாடியின் பின்னா லிருந்து, குருக்களின் திரைபூத்த கண்கள் பின்னுக்கு வாங்கிக்கொண்டே போகும் அவன் முதுகின்மேல் விஷம் கக்கின.
“தந்து!தந்து” பல்லைக் கடித்தார். மூணு தலை முறையா இதே மூணு ரூவாதான்! அன்னிக்கு வெள்ளி விக்டோரியா ! இன்னிக்குக் காயிதச் சிங்கம் – ஒண்ணுக்கு மூணு. அதில் குறைச்சலில்லை. அந்தப் பொம்ம்னாட்டி தலைக்கு இவன் கேட்டது, ஏன் அதுக்குமேலேயே மூணு ரூபாய்க்குக் கிடைச்சுண்டிருந்தது!
இன்னிக்கு இவள்மேல் அடுக்கக் கால்வரைக்கும் வரட்டி மூணுரூபாய்க்குக் கிடைக்குமா? மூணு ரூபாய் கொடுக் கறான். பொங்கலில் முந்திரிப்பருப்பு இல்லை என்கிறான்! முருகப்பெருமான் வேணுமானால் இவனை ஆசீர்வதிக் கட்டும். முதலியாரே, கையைப் பிடிங்க”ன்னு அர்ச்சனைக்குத் தத்தம் குத்தறப்போ எனக்குச் சபிக்கத் தான் வரது! ஆனால் நான் எங்கே இப்போ பூஜை, அர்ச்சனையெல்லாம் பண்ணறேன்? சங்கரன் பென்சின் கொடுத்துட்டானே! சம்பளமில்லாத பென்சின். “ராமா மிருதம் உனக்குப் பென்ஷனா? மொத்தமா வாங்கிட்டியா?
குருக்கள் இஷ்டப்பட்டால் ஒழுங்காய் உச்சரிப்பார் என்று தெரிகிறது. பென்ஷனுக்கும் பி.எஃப் -க்கும் வித்தி யாசம் தெரியும் என்று தெரிகிறது.
“இந்தக் கோயிலுக்குக் காலையில் ஒரு கால பூஜை அந்தத் தண்ணியை அவன் கொட்டிடறான். சாயங்காலம் ஏதோ கொஞ்சம் காத்தாட இங்கே ஒக்காந்துட்டு விளக்கைப் போட்டுட்டுப் போறேனே அத்தோடு சரி அதுவுமில்லாட்டி உக்காந்து உக்காந்து மரத்துப்போன கால் விழுந்துடுமோனு பயமாயிருக்கு. விழுந்துட்டா கொள்ளுப் பேரன்மாருக்கு வந்திருக்கறவா வென்னீரடுப்புக்கு வெச்சிடுவா! அவாளைச் சொல்லிக் குத்தமில்லே! குழந்தைகள்தானே; வெளியிடம் வேறு! சதையா, ரத்தமா தானாட”
இடித்ததை உரலிலிருந்து எடுத்து, இடது உள்ளங் கையில் வைத்து, வலது கையால் பிள்ளையார் பிடித்து,பிறகு பிள்ளையாரை உருண்டையாக்கினார், அந்தச் சடங்கு. நேரம் பிடித்தது. அதுவரை மெளனம். உருண்டையை உள்வாயுள் வைத்துக்கொண்டார்.
“ஏன் ஊரிலிருக்கிற வியாதியெல்லாம் பிடுங்கித் தின்னாது?” குருக்கள் தொடர்ந்து பொரிந்தார்.”உடம்பில் சர்க்கரை, ரத்தக் கொதிப்பு, வயிற்றுவலி! பார்க்கத்தான் பகட்டு மாத்திரையை பக்ஷணமா தின்னுண்டிருக்கான். ஊசி போட்டு போட்டு ரெண்டு தோளும் கையும் சல்லடைக் கண். எங்கெங்கோ வெளிநாட்டிலிருந்து வரவழைக்கிறான். ஏழை வயித்தை அடிச்சு மிச்சம் பிடிச்சால்? இப்பிடித்தான் போகும். ஆனால் இவனுக்குப் போமாட்டேன்கறதே! விழுந்து விழுந்து தவங்கிடக்கோம். அந்தச் சண்டாளியும். நம்மைக் கண்ணெடுத்துப் பாக்கறாளா? இவன் மாட்டுக் கொட்டிலைப் பெருக்கிண்டேனும் இவன்கிட்டத்தான் இருப் பேங்கறா!”
மறுபடியும் சற்று நேரம் மெளனம். சிவபுரி நெடி சுகம் உள்ளே வேலை செய்யத் தொடங்கியிருக்கிறது.
“அம்பி!- (இது யார்?)- போட்டுக்கற மாதிரி பிடிக் கிறது இருக்குமோ?’
“நான் போட்டுண்டதில்லியே!’
”Never mind” அட! குருக்கள் இஷ்டப்பட்டால் பல்லவி யில்… என்னென்ன அடங்குமோ? கோவில் குளத்தின் மேல் (குட்டை! அந்த நாளிலேயே வருடத்துக்கு ஆறு மாதம் வறட்சி. மழுங்க பெருக்கி நெல் உலர்த்தி என் பையன் பருவத்தில் நானே பார்த்திருக்கிறேன்.) ஒரு மீன் கொத்தி அந்தரத்தில் அதே நிலையில் பாதம் மாற்றி மாற்றி நர்த்தன மாடிற்று அதற்குமேல் ஒரு பருந்து நீந்திற்று. பின்னணி யில் மேகப் பொதிகள் கம்பீரமாகச் சாய்ந்தன.
“இந்த தந்து யார் தெரியறதா? தெரியல்லே? ஒர்ஜினல் கூனப்ப முதலியின் கொள்ளுப் பேரன்!”
“ஒரிஜினல் கூனப்பன் யார்?”
“இப்பத்தானே காட்டினேன். அதுக்குள்ளே மறந் துட்டியே. இப்போ காட்டின திசை வேறு. ஆனால் அதுவும் மேற்படிதான். அதோ! அதோ!-”
மூன்றாவது அடுக்கு மொட்டை மாடியில் மூலைக்கு மூலை கட்டியிருந்த சிவப்புப் பட்டுப் புடவை காற்றில் பட படத்தது. அப்படிப் பார்த்தால்தான் குருக்களுக்கு திருப்தி பெரியவாள் மனசைப் புண்படுத்தப்படாது.
“ஆனால் அப்போ மனைதான் உண்டு. மனையில் இவன் குடிசை,கிணறுகூடக் கிடையாது. அவன் பெண் டாட்டி வாசலுக்கு சாணி தெளிக்கக்கூட கோவில் கிணற்றில்தான் மொண்டு வரணும் என்று போவாள். அப் போல்லாம் வேலையை வேலையாப் பாவிக்கிறதில்லே. நாம் விடற மூச்சைக் கவனிச்சா விடறோம். கவனிச்சால் மூச்சு தடைபடும். திணறும். அதுபாட்டுக்கு செய்துண்டேயிருக்க வேண்டியதுதான். இப்போத்தான் தொட்டதெல்லாம் வேலை. வேலைக்காரி தேச்சுப் போட்ட பாத்திரத்தை கவிழ்க்கிறது ஒரு வேலை. தோச்சிப் போட்ட காஞ்ச துணியை எடுத்து மடிக்கிறது ஒரு வேலை.படுத்த படுக்கை யைச் சுருட்டறது ஒரு வேலை. எத்தனை அக்ரமங்களுக்கு கண்ணை மூடிண்டு போக வேண்டியிருக்கு தெரியுமா? அதே சமயத்தில் இன்னிக்கு டி.வி யில் மனோகரான்னு சொல்லு. குடல் தெறிக்க ஓடுங்கள். லுங்கியிலிருந்து கொசாம் வரைக்கும் நாய் தோத்தது. நாளடைவில் பல் தேய்க்கறது ஒரு வேலை, அநாகரிகம் விட்டுத் தள்ளு. மிருகங்கள் பல் தேய்க்கறதுகளா? அதுகளுக்குப் பல் வெளுப்பு கெட்டுப் போச்சா? அப்யஞ்ஞன ஸ்னானம் அவசியமான்னு ஒரு சர்ச்சையாமே!”
பேஷ்! குருக்கள் ஃபார்முக்கு வந்திருக்கார்.
”எனக்குக் கூட என் அம்மா வயிற்றில் இருக்கறப்போ கனாக் கண்டமாதிரியிருக்கு. ஏதோ ஏதோ ஊமக்கோடுகள் மட்டும் லேசாய் … அப்பவே வயசானவன்தான். ஆட்டுக்குத் தாடி வளர்ந்தாப்ல மோவாய்க்கட்டையில் மயிர் பிசிர் பிசிராத் தொங்கும். பெரிய கூன். ஆமாம். அந்த நாள் தறியில் கை நாடா அப்படியும் இப்படியுமா குறுக்கே நாடாவைக் கையாலயே தள்ளிப் பாய்ச்சி ஒவ்வொரு நூலா முடைஞ்சாகணும். தறிமேல் குனிஞ்சு குனிஞ்சு ஆளுக்கு இடுப்பே வளைஞ்சுபோச்சு. குமரப்ப முதலி கூனப்ப முதலி ஆயிட்டான். கொள்ளுப்பேரனும் கூனப்ப முதலி. இவன் வெட்கப்படறான். என்ன பண்றது? பேர்ராசி விட்டுப் போகப் பயப்படறான்.”
குடிசை. நாலு சுவர் மேல் ஓலைக் கூரை. அடுக்களை யைப் பிரிக்க குறுக்கே இடுப்பளவுக்குக் குறுக்குச் சுவர். அடுக்களையில் ஒரு மூலையில் நெல் குதிர். காலி அடுப்பு குளிருக்கு அடக்கமா. ஆளே அதன்மேல் படுக்கலாம். அடுக்காய்ப் பானைகள் இத்தியாதி! இந்தப் பக்கம் தறியும் தறிக் குழியும் பாதிக்கு மேல் அடைத்தது. இதற்கிடையில் டத்தில்தான் படுத்து பெத்து பெருகி – ஈயத்தைப் பார்த்துப் பித்தளை சிரிச்சதாம்! நான் என்ன வாழ்ந்தேன்? இந்தத் தொண்ணூறு வயதுக்குள் மூணுதாரம். அதற்கேற்ற படி புத்ரசந்தானம். அது அது பிழைக்க எங்கெங்கேயோ நாலா திக்கும் சிதறியாச்சு.
குருக்கள் இஷ்டப்பட்டால் பதஸா – பதஸாரிகஸா ஆலமரமும் கிள்ளுக் கீரை.
“ஏழைக்குப் பொழுதுபோக்கு ப்ரஜா விர்த்தி!”
ஒண்ணு இரவு எந்நேரமானாலும் ஒருநாள்கூட தவறாது, கூனப்ப முதலி கோட்டம் வந்து திருநீறு வாங்கிப் போவான். பேசமாட்டான். வாய்விட்டு வேண்டமாட் டான். நாடக பாணியில் கருடாழ்வான் போல் சாமிக் கெதிரே இரண்டு கைகளையும் ஏந்தி எதுவும் தோத்தரிக்க மாட்டான். அவனுக்காகவே கதவைத் திறந்து வைத்துக் கொண்டு காத்திருப்பதும் உண்டாம். அது காலம் வேறப்பா. பூஜை ஆபீஸ் வேலையா மாறல்லே. ஓ.டி. கிடையாது! நேரத்தைப் பற்றி அக்கறையா யாருக்கும் யாராலும் ஆக வேண்டியதில்லே. ஒரு நியதி தானாகவே ஏற்பட்டு விட்டாலும்கூட அதைக் காப்பாற்றியாகணும். அதுதான் பிரதானம். வேலையும் நேரமும் வேள்வி. கடிகார முள் அல்ல. ஸர்வே ஜனா சுகினோ பவந்து:
குருக்களுக்கு ஸம்ஸ்க்ருதம் என்றால் ரொம்பப் பிரியம்.
அத்தனைகளுக்கும் அவன் ஒருவன் சம்பாதனையில் எப்படிப் பண்ணிப் பண்ணிப் போட்டாளோ மஹராஜி ஆனால் இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை சொல்லி வைத் தாற்போல் அந்த அம்மாவுக்கு வயிறு சாய்ந்துவிடும்.
கூனப்ப முதலி முதுகோடு வயிறு ஒட்டி தறிமேல் கவிழ்ந்து நாடாவைத் தள்ளுவான்.
ஒரு வெள்ளிக்கிழமை காலை பத்து, பத்தரை இருக் கும். வீட்டில் அவனைத் தவிர யாருமில்லை. சாதாரண மாக அப்படி நேராது.ஒரு
ஒரு வாண்டேனும் அழுதுகொண் டிருக்கும். ஆனால் அன்றைக்கில்லை. அழகம்மை அடுப்பில் உலையைப் போட்டுவிட்டு, தண்ணி மொள்ளப் போயிட் டாள். பேறுகளில் ஒண்ணு ரெண்டு கொடுக்காப்புளிக்காய் அடிக்கப் போயிருக்கும். ரெண்டு மூணு எங்கேனும் எருமை பள்ளிக் மாடு சவாரிக்குப் போயிருக்கும். மூணு, நாலு கூடமே போயிருக்கும். நாலு அஞ்சு எனக்குத் தலை சுத்தறது. இது என்ன கணக்கோ விடப்பா!”
‘வாசற்பக்கம் நிழல் தட்டிற்று. தறியிலிருந்து நிமிர்ந்து பார்த்தால் ஒரு பொம்மனாட்டி, முப்பத்தி அஞ்சிலிருந்து அறுபதுக்குள் இருக்கும்.’
வெடுக்கென எனக்கு முதுகு நிமிர்ந்தது. இந்த மனுஷன் என்ன குத்து மதிப்புப் போடறான்? எதிராளியைச் சதாய்க் கிறானா? யார் கேட்கிறது?
செக்கச் செவேல்ன்னு நிறம். சிவப்புப் புடவை டுத் திண்டு. சிரிச்ச முகம்.
‘ரொம்ப நாக்கை வரட்டுது.’ குரலில் சற்று ஆண் கலப்பு – இரட்டைத் தந்தி. சௌடய்யா பிடில்.
கூனப்பன் அடுக்களைப் பக்கமாகத் தலை சாய்த்தான். தறியிலிருந்து எழுந்து வருவதற்கில்லை. இக்கட்டான கட்டம் இழை யறுந்து நுனியைத் தேடித் தவிச்சிண் டிருக்கான். கேட்டவளுக்கு அவனே தண்ணி யெடுத்து தரல்லியேன்னு யாரும் குற்றம் சொல்லமாட்டார்கள். நெசவுத் தொழில் அப்படி, பிராணாவஸ்தை. மூச்சு இழை யோடிண்டிருந்ததுன்னு வசனமே பின் எப்படி வந்தது?
ஆனால் அவள் அடுக்களைக்குள் நடந்து சென்ற விதம் வேடிக்கையாக இருந்தது. பிறகு வியப்பு. அவனுக்கு முதுகைக்காட்டாமல், அவனுக்கு நேர்முகமாக, பக்க வாட்டில் நகர்ந்துகொண்டே போய், அவன் மேல் வைத்த கண் மாறாமல், பானையிலிருந்து யொண்டு குடித்தாள். பார்வைக்கு இவ்வளவு நல்லா இருக்கா, பாவம் வலிப்பா, வாதமா?
இல்லை. தாகம் தணிந்தபின் அவனை நோக்கி வந்தாள். ஆண் பிள்ளை நடை. வாட்டசாட்டமான தேகவாகு. “அந்த… அந்த”
குருக்கள் தடுமாறித் தவித்தார்.
“ஹும் ஹும் வேண்டாம் சிறுபிள்ளைத்தனமா நான் உன்னிடம் பேசப்படாது. ஆனால் இந்தக் காலத்தில் உள்ளது அந்தக் காலத்திலும் உண்டு. எந்தக் காலத்துக்கும் இருக்கும், இருக்கணும். ஆனால் அப்போ, பேச்சு நடை முறை எல்லாவற்றிலும் ஒளிவு மறைவு. நிழல் காட்டிய கோடு எதிலும், அதிலும் ஆத்மார்த்தமான தேடல்.கிட்டும் ஆனால் தெரிவதில்லை. கண்டு கொண்டதோடு சரி. பார்த்துவிட்டேனே! இல்லை. நான் சொல்றதை, சொல்ல வரதை நீ புரிஞ்சிண்டால் சரி. புரிஞ்சுக்காட்டாப் போ”
குருக்களுக்குத் திடீரென்று ஏன் கோபம்?
தறியண்டை நின்றாள்.
“வந்திருக்கேன்!”
விழித்தான்.
‘உன்னோடு இருக்கப்போறேன்.’
விழித்தான்.
சிரித்தாள்,
“நல்லாயிருக்கா. உயர்ந்த ஜாதியாத் தோணுது, என்ன பினாத்தறா ? மரை லூஸா? அடைச்ச இடத்தி லிருந்து தப்பிச்சு ஓடியாந்துட்டுதா? தொப்புளைக் கொடி சுற்றி, சுருள் கலைந்தது.
திட்டியவண்ணம் அழகம்மை குரல் குடிசையை நெருங்கிக் கொண்டிருக்கிறது. முருகா! அவனுக்கு வயிற்றில் புளியைக் கரைத்தது. வந்தவளுக்கும் கேட்டுவிட்டது.
அழகம்மைக்கென்ன சின்னக் குரலா? வேலைப்பாடு போகவர அவளுக்குக் கத்திண்டே இருக்கணும். அவள் வந்த வளம், வாழ்க்கைப்பட்ட வழி; குடும்பத்தின் அவலம், இதற் லாம் காரணம் யார்?
குருக்கள் எழுந்து எட்டப் போய் புகையிலைச் சாற்றைத் துப்பிவிட்டு வந்தார்.
“பெண்களுக்குக் கலியாணமான புதுசில் ஆம்படை யான் மேல் ஆசை. நாள் ஆக ஆக வெறுப்பு இருவருக்கும் வயசு முற்ற முற்ற அவன் ஒரு வஸ்து இப்போத்தான் திண்ணையில் உட்கார்ந்திண்டிருந்தது. எப்பவோ குளத்தங் கரைக்குப் போச்சு – ‘செத்துப்போன பிறகு பேசுவதற்கு ஒரு விஷயம். அதிலும் அவள்தான் ஹீரோயின். அப்புறம் அதுவும் இல்லை. ஆண்டவனே! இன்னும் எத்தனை நாள் இங்கே பிடிச்சுப் போட்டிருக்கையோ?” தன்னை மறந்து கன்னத்தில் போட்டுக்கொண்டாள். கண் கலங்கிற்று. இடுப்புத் தவலை யில் ஜலம் தளும்ப, வைதுகொண்டே நுழைந்தாள். “உலை சுண்டுதே தெரியல்லே? நான்தான் இல்லியே. களைஞ்சு போட்டால் உன் மீசைக்குப் பங்கம் வந்துடுமோ? – ” அடுப் பண்டை வந்ததும் அழகம்மை அலறினாள். குரல் VIBGYOR ஆக உடைந்தது.
“ஐயோ வாயேன்! இங்கே வந்து பாரேன்!”
கூனப்பன் சிரமத்துடன் அவசரமாக தறியினின்று தன்னைக் கழற்றிக்கொண்டு வந்தான். சோற்றுப்பானையில் விளிம்பு கட்டி பால் பொங்கிக் கொண்டிருந்தது. ஆனால் ஒரு சொட்டுக்கூட வழியவில்லை.
வீடு பூரா, பால் மணத்துடன், சந்தனம், புஷ்பம் கம் குழறிக்கொண்டே அழகம்மை வெளியே ஓடினாள்.
கூனப்பன், நெற்றிக் கொப்புளிப்பை வழித்தபடி, தற் செயலாகத் தறிப்பக்கம் திரும்பினான். தறியில் 20 நெ மோட்டா நூலில் வளர்ந்துகொண்டிருக்கும் துணியில் கட்டான்களில் திடீரென்று பளிச்சென்று முகம் துடைத்த ஒரு மினுக்கல். அத்தனையும் பட்டு.
அதென்னவோ கூனப்பனுக்கு இப்போ அதிசயமாயில்லே, சினிமாக் கொட்டாயில் உருவங்கள் ஆடிக்கொண்டிருக்கும் திரை சட்டென வெறும் திரையாகி இடை வேளைக்கு லைட் வந்த மாதிரியிருந்ததோ என்னவோ?
வந்தவள் நெல் குதிரிலிருந்து இறங்கி, பக்கத்தில் வந்து நின்றாள்.
“வந்திருக்கேன்.”
தலையசைத்தான்.
“அவளை வெளியில் அனுப்புவதற்காக என்னைக் காட்டிக் கொள்ளும்படி ஆயிட்டுது.”
“அவள் இருந்தால் என்ன?”
அவள் பதில் பேசவில்லை.புன்னகை புரிந்தாள். என்ன அர்த்தமோ?
“இதோ வந்திடுவா, கும்பலைக் கூட்டிண்டு.”
“அவள் வருவதற்குச் சற்று நேரமாகும். அந்த பாட்டில்தான் அவளை அனுப்பியிருக்கிறேன்.”
கூனப்ப முதலி தலையை ஆட்டினான்.
“நான் உன்னோடு இருக்கப் போறேன்.”
“இரு. இரு. எப்பவுமே நீ இங்கே இருக்கணும். கையடிச்சுக் கொடு.” கையை நீட்டினான்
“அதெப்படி? நான் உன்னைத் தொட முடியாது. எனக்குப் புருஷன் இருக்கான். என் வாசம் என்னவோ வேளைக்கு வேளை வீட்டுக்கு வீடு மாறிக்கொண்டிருந் தாலும், இங்கேயே நிலைச்சிருப்பது நடவாத காரியம்க இடம் மாறிக்கிட்டேயிருப்பதுதான் என் வாழ்வே.”
“சரி ஒண்ணு செய். போறப்போ என்கிட்ட சொல்லிக் கிட்டுப் போவணும்.”
“ம் – ம் – ம்” – சற்று யோசித்து சரி அதில் உனக்கென்ன லாபம்? கேக்கப்போனால் முன்கூட்டித் தெரிஞ்சால் கஷ்டமாயிருக்குமே!
“அதைவிடு. போறப்போ சொல்லிட்டுப் போற மரியாதை கிடையாதா?”
“அதுவும் சரி, அப்படியே ஆகட்டும். உன் பெண்டாட்டி குரல் கேக்குது. முதுகு காட்டாமல் பின்பக்கமாகவே ஓடி அரிசிப் பானைக்குள் புகுந்துகொண்டாள்.
“அவ்வளவு தாம்பா. கூனப்ப முதலிக்கு திடீர்னு செல்வம் அப்படி எப்படிக் கொழிச்சுது. என்னைக் கேட் காதே. யாரைக் கேட்டாலும் சொல்லமுடியாது. வீட்டில் ஈசானிய மூலையில் புதையல் கிடைச்சுதா? அலாவுதீன் பூதம் கொண்டுவந்து கொடுத்ததா? யாரேனும் உறவு ஆஸ்தியை எளுதி வெச்சுட்டு மண்டையைப் போட்டானா? அவன் நய்த துணிக்குத் திடீர்னு மவுசு வந்துடுத்தா?
“அத்தனையும் கேள்விகள்தான். அத்தனைக்கும் பதில்கள் உண்டு. ஆனால் நமக்குத் தெரியாது. நமக்குப் புரியாது. அது கூனப்ப முதலிக்கே தெரியாது புரியாது. எல்லாவற்றையும் மீறி எல்லாக் கேள்விகளுக்கும் ஒரே பதில் ஒண்ணு உண்டு. ‘கொடுக்கிற தெய்வம்’ –
“கூரையைப் பிய்ச்சுண்டு கொடுக்கும்” என்று நான் முடித்தேன்.
“ஆ! அதுதான் அது இரண்டே வருஷத்தில் குடிசை மறைஞ்சு கட்டடம் எழும்பிடுத்து.”
கூனப்பன் இரண்டு பிள்ளையார் கோவில் கோபுரத்தைப் புதுப்பிச்சுக் கும்பாபிஷேகம் நடத்தி இந்தக் கட்டளையை ஏற்படுத்தினான். மூணு ரூபாயில் அப்போ வாண வேடிக்கை கூட நடத்தியிருப்பார்கள். இப்போ பொங்கலுக்கு வெல்லமே தகறார். வெல்லம் இல்லாமல் பொங்கல் செய்வது எப்படி? இப்போ பெட்ரோலுக்கு மாத்து தேடறாங்களாமே, அத்தோடு இதையும் ஒரு விஞ்ஞான பிரச்னையாகச் சேர்த்துக்கொள்ள வேண்டியதுதான். பாரத நாடு ஆஸ்திக நாடு. பொங்கல் போட்டே ஆகணும்.
கூனப்ப முதலியின் பிள்ளைகள், பேரன்மார்கள் எல் லோரும் உட்கார்ந்து தின்று தின்று, தொந்தியும் தொப்பையு மாய், குண்டப்ப முதலிகளாகி விட்டார்கள்.
ஆனால் கூனப்பன் மட்டும் சுக்கங்காயாய் வற்றி வயிறோடு முதுகு ஒட்டி.
ஒருநாள் கூடத்தில் ஊஞ்சலில் படுத்திருந்தான். பிற் பகல் மணி மூன்றிருக்கும். வீட்டில் ஒருவருமில்லை. ஆனால் அது இப்போதெல்லாம் புதுசில்லை. வீட்டிலிருப்பவருக்கு பெண்கள் உள்பட) வீட்டுக்கு வெளியேதான் ஜோலி, காலம் மாறிண்டே வரதோன்னோ?
தூக்கமல்ல; ஒரு தினுசான மயக்க சுகம். அரைக் கண் செருகல். ஒரு பொம்மனாட்டி- சிவப்புப் புடவை, சிரிச்ச முகம், வயது அறுபத்தி அஞ்சிலிருந்து முப்பதுக்குள் ஓஹோ, இதுதான் Left Hand ஆக்கும்) எதிரே நிற்கிறாள்.
“நான் போற வேளை வந்தாச்சு. சொன்னபடி உன்னிடம் சொல்லிக்கொள்ள வந்திருக்கேன்.”
கூனப்பனுக்கு வெடுக்கென விழிப்பு வந்துவிட்டது. அவசரமாக எழுந்து இடுப்பில் நெகிழ்ந்திருந்த வேட்டியைச் சரியாகச் சொருகிக் கொண்டான்.
“இரு. இதோ வந்துட்டேன். அவசரம் வாத்தியா ரிடம் பையன் மாதிரி, ஒற்றை விரலைக் காட்டிவிட்டு வேக மாக வாசலுக்கு வந்து தெருவைக் கடந்து, எதிர் வீட்டுக்குள் நுழைந்து அந்தப் புழக்கடை வழி அடுத்த தெரு, மறுபடியும் இன்னொரு புழக்கடை, இன்னொரு தெரு அப்படி, இப்படி அங்கே திரும்பி இங்கே திரும்பி, குமரன் கோவிலுக்கு வந்து கதவா, மண்ணா – மண்டபத்தில் உட்கார்ந்துவிட்டான். மூச்சு வாங்க யோசிக்கக் கொஞ்ச நேரம் வேண்டாமா?
கூனப்ப முதலி வீட்டில், அவன் திரும்புவதற்காகக் காத் திருப்பவள் சற்று நேரம் சுவரில் காலண்டர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள். அப்பவே காலண்டர்களில் ஸ்டார்கள், சுவாமிகள் இடத்தைப் பிடிக்க ஆரம்பிச்சாச்சு.
வாசலில் பெண்கள் குரல் கேட்கவும் உக்கிராண உள்ளில் ஓடி, பழைய ப்ரகாரம் அரிசிப் பானைக்குள் புகுந்து கொண்டாள்.
மறுநாள் விடிகாலை யாரோ குமரன் கோவில் கிணற்றில் ஜலம் மொள்ள வந்தபோது கூனப்ப முதலி வெற்றியுடன் இளித்தபடி கிணற்றில் மிதந்து கொண்டிருந்தான்.
இரவில் யாரும் தேடவில்லையா என்று கேட்கிறாயா? தெல்லாம் அந்தக் காலம்.
“கிழம் எங்கானும் இன்னொரு கிழத்தோடு பேசப் போய் அப்படியே திண்ணையிலே முடங்கியிருக்கும்.”
அரைகுறை அவனைத் தேடியிருக்கக் கூடியவளைத். தான் – வையறத்துக்கானும் அவளுக்கு ஆள் வேணும். எப்பவோ கட்டின தாலியும் மஞ்சளுமாய் உச்சிவேளைக்குக் கொண்டுபோய் பாலாற்றங்கரை மணலில் வெச்சாச்சே!”
கவனம் சற்று ஏமாந்திருந்தால், ‘உயிரோடவா?’ என்று கேட்கும்படியிருந்தது குருக்கள் சொன்ன விதம்.
“அட, இருட்டிப் போச்சே. சித்தே வீட்டில் கொண்டு போய் விட்டுடிறியா? சாயங்காலம் வந்தால் பார்வை சுத்த சூன்யம்.”
“ஒரு சந்தேகம்”
“என்ன?”
“தந்து தந்து என்றால் என்ன?”
“பேஷ்! நான் கதை சொன்ன லக்ஷணம், நீ கண்ட மிச்சம் இதுதானா? முன்னாலே ‘வி’ சேர்த்துக்கோ. சரி, போவோமா?”
– உத்தராயணம் (சிறுகதைத் தொகுப்பு), முதற் பதிப்பு: ஜூலை 1992, வானதி பதிப்பகம், சென்னை.