விடாமுயற்சி

2
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: October 9, 2013
பார்வையிட்டோர்: 53,953 
 
 

ஒரு நாள் எறும்பும் பறவையும் தங்களுக்குள் ஒரு பந்தயம் வைத்துக் கொண்டன. யார் முதலில் சென்று அந்த வான்உயர்ந்த மலையை தொடுவது என்பது தான் இருவரின் பந்தயம்.

பறவை எறும்பை பார்த்து ஏளனமாக சிரித்துவிட்டு மலையை நோக்கி பறந்தது. வெகு சீக்கிரத்திலேயே பறவை மலையின் உச்சியை தொட்டது.

மலை உச்சிக்கு சென்ற பறவை மேலிருந்து கீழே இருக்கும் எறும்பை தேடியது. அப்போது எறும்பு மலை அடிவாரத்தில் இருந்து பாதி தூரத்தை கூட தொடவில்லை.

எறும்பை பார்த்து பறவை கூறியது எனக்கு முதலிலேயே தெரியும் வெற்றி எனக்குதான் என்று.

பறவையிடம் ஒரு சிறு எறும்பு போட்டியிடலாமா? எறும்பை பார்த்து கேலி செய்து பறவை நகைத்தது.

வெகு நாட்கள் கழித்து எறும்பின் விடாமுற்ச்சியால் ஒரு நாள் எறும்பு அந்த மலையின் உச்சியை சென்றடைந்தது. அப்போது அந்த பக்கமாக மலையை கடந்து சென்ற பறவை மலை உச்சியில் இருக்கும் எறும்பை ஆச்சரியமாக பார்த்தது.

அப்போது பறவையை பார்த்து எறும்பு கூறியது, “வெற்றி என்பது எல்லோருக்கும் பொதுவானது. சிலருக்கு வெற்றி சீக்கிரமாகவே கிடைத்துவடும் சிலருக்கோ தாமதமாகவும் கிடைக்கும். விடாமுயற்சியும் தன்னம்பிக்கையும் இருந்தாலே போதும், வெற்றி ஒரு நாள் எல்லோருக்கும் நிச்சயம்”, என்றது எறும்பு.

2 thoughts on “விடாமுயற்சி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *