வாழும் வழி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 8, 2025
பார்வையிட்டோர்: 58 
 
 

(1969ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

1938 இல் ஒரு நாள். 

விடிகிற வேளை. நிலாப்பாடு சாய்ந்து விட்டது. லேசான ருள் எங்கும் பரவி ஒரு மந்த நிலையை உண்டுபண்ணிக் கொண்டி ந்தது. மெல்லிய காற்றோட்டத்தால் மரங்களில் உள்ள இலை ள் சற்றே அசைந்தாடிச் சலசலத்துக் கொண்டிருந்தன. கைக் லி பெறும் ஊழியர்களைப் போலப் புள்ளினங்கள் இங்கு மங்கும் டி ஆடிப் பாடிக் கூவி உறக்கத்தில் ஆழ்ந்து கிடக்கும் உலகத்தை ழப்ப முயன்று கொண்டிருந்தன. 

குடிசையின் முன் கால் ஒடிந்த கயிற்றுக் கட்டிலில் படுத்து, லொக்’, ‘லொக்’ என்று இருமிக் கொண்டிருந்த கிழவன் ஞ்சநதம் மெல்ல எழுந்து உட்கார்ந்தான். இரவிலே அவன் ங்கின நேரம், விழித்திருந்த நேரம் என்று தனித் தனியாகப் ரித்துக் கூற வகையில்லாமல் கண்ணை மூடிக் கொண்டும், ருமிக் கொண்டும், புரண்டு கொண்டும், எழுந்து உட்கார்ந்து காண்டும் இப்படியே பொழுதைக் கழித்திருந்தான். பெரும் லும் எல்லா இரவுகளுமே அப்படித்தான் சென்று கொண்டி ந்தன அவனுக்கு; ஏக்கம்—-அதுதான் அவனது அந் நிலைக்குக் காரணம். 

அவனது எண்சாண் உடம்பிலே இருந்தது ஒரு சாண் துணி ன். மேலுக்கு ஒரு பீற்றல் சாக்கைப் போர்த்திருந்தான். -ந்த நாலைந்து ஆண்டுகளாக உடல் நலிந்து கிடந்த அவனுக்கு வனுடைய மகன் நடேசனும், மகள் மரகதமும் ஆதரவாக ருந்து வந்தனர். மனைவி அஞ்சலை போய் நெடுங்காலம் ஆகியிருந்தது. 

குடிசை முன்புறத் திண்ணையில் படுத்து உடல் வலியா குறட்டை விட்டுத் தூங்கிக் கொண்டிருந்தான் நடேச பாவம், பகல் முழுதும் வெயில், மழை, காற்று எதையும் பொரு படுத்தாமல் உழைக்கும் கட்டை! இரவிலே தன் வசமிழந் கிடக்கும் உறக்க நேரம் தான் அவனது அலுத்த உடலுக் ஆறுதல். 

“ஏலே !… தம்பி !…” என்று இருமிக் கொண்டே இரண் மூன்று முறை கூப்பிட்டான் பஞ்சநதம்; அவனது குரல் நடே னின் உறக்கத்தைக் கலைக்கும் வலு உடையதாக இல்லை. குரலெடுத்துக் கூப்பிட்ட சிரமத்தினால் மீண்டும் இருமலுக்கு அ அ உள்ளானது தான் மிச்சம். இருமி இருமிக் களைத்தா ‘பாவம், இந்த வயசிலேயே இந்த உழைப்புத் தாங்கல்லே என்று மனத்திற்குள் அங்கலாய்த்தான். 

அந்த நாளில் பஞ்சநதம் இதே பிராயத்தில் எதற்கு அயர்ந்து கொடுக்காத நிலையில் இருந்தான். அதைப் பற்ற சிறிது நேரம் அவன் சிந்தித்தான். 

‘…உம்; அந்தக் காலத்திலே ஆஞ்சனேயரு கடலைத் தாண் னாரு, சஞ்சீவி மலையை ஒரே கையிலே தூக்கிக்கிட்டு வந்தாருன் இப்போ என்ன ஆச்சு ? இந்தக் காலத்திலே அதே ஆஞ்சனே பரம்பரையிலே வந்த குரங்கு, கஞ்சாக் கடை முன்னாலே கால பட்டாணிக்குக் குட்டிக் கரணம் போடுது!…’ 

இப்படி ஓடிற்று அவன் சிந்தனை. நிம்மதியாகத் தூங் மகனை எழுப்ப அவனுக்கு மனமில்லை தான். தவிர்க்க முடிய நெருக்கடி அவனை உந்திற்று. எனவே, மீண்டும். தம்பி தம்பி !… ‘ என்று அழைத்தான். அப்போதும் விழித்து எழவில்லை. 

குடிசைக்குள்ளிருந்து பெண் குரல் ஒலித்தது. 

“அண்ணாத்தை தான் ரொம்பக் களைச்சுப் படுத்திருக்கு, அதை ஏன் எழுப்பணுமாம் ?” 

“களைப்பாறப் பொறக்கலையே தங்கச்சி நாம?” 

‘‘அது தான் தெரிஞ்சே இருக்கே. அதுக்காவ ?”

“இம்ம பொழுதிலேயே என்ன வந்திடுச்சாம்?” 

“பொழுது விடியப் போவுது தங்கச்சி. இல்லாட்டி எழுவேனா? 

“பொழுது…விடியப்… போவுதா?…” 

சில வினாடிகளில் கிழவன் எதிரே வந்தாள் மரகதம். 

அவள் கையில் ஓலைக் கூடை ஒன்றும் புல் அரிவாளும் இருந்தது. கிழவன் அவளைப் பார்த்துப் பெருமூச்செறிந்தான்; 

“நீ…இண்ணைக்குப் புல்லுக்குப் போக வேணாம் தங்கச்சி.” 

“ஏன்?”. 

“உன் அண்ணன் அவசரமா வெளியே போவணும்.”

“வாடிக்கையா வைக்கிற புல்லு வைக்காட்டி…”

“அட, இண்ணைக்கு ஒரு நாளைக்கு ஏதாச்சும் சால்சாப்பு சொல்லிகிட்டா போவுது. ஏன்னா, அண்ணன் போக வேண்டிய லுவல் ரொம்ப முக்கியமானது. கோவில் நிலத்தையெல்லாம் ளைக்குப் பங்கீடு செய்யப் போறாங்க. எரு, தழை அடிக்கிற லையெல்லாம் இண்ணைய ஒரே பொழுதோடே சரி. கூடுத ன எரு, தழை அடிச்சவங்க வரிசைப்படி, நிலத்தைப் பங்கிட்டு குபடிக்கிக் குடுக்கப் போறாங்களாம். இன்னி ஒரு பொழுது ாஞ்சம் மொனைஞ்சி வேலை செய்துட்டா, வார பசலியிலே ம கயிட்டம் கொஞ்சம் கொறையும். அட, ஓகோகோன்னு லேன்னாலும் அரை வயித்துக் கஞ்சியும், அரை ஒடம்பு துணியுவது கிடைக்குமில்லே?” 

மரகதம் விரக்தி தோன்ற நகைத்தாள். போன வருசம் யக்கரு நிலத்தெ குத்தகை எடுக்கற அப்பவும் இப்படித்தான் ததோ மனக்கோட்டை கட்டினோம். கடைசியிலே வண்டி டு முதல் அல்லாமே போயிடுச்சி. கடன்தான் மிச்சம்!” 

“என்ன செய்யறது? ஆண்டவன் கட்டளை அப்படி இருந் ச்சு. ஆனா, இந்த வருசம் அப்படி இல்லே. அது குத்தகை; நு வாரம். 

“சரி, அப்போ அண்ணனை எழுப்பவா?”

“எழுப்பு, எழுப்பு.” 

மரகதம் நடேசனின் அருகில் சென்றாள். குரல் கொடுத் b, ஓலைக் கூடையால் தட்டி உசுப்பியும் அவனை எழுப்பினாள். லு தடவை இப்படியும் அப்படியும் புரண்டு விட்டு எழுந்து ‘கார்ந்த அவன் செவிகளில் பஞ்சநதத்தின் கரகரத்த குரல் ய்ந்து உணர்ச்சியை உண்டு பண்ணிற்று. 

தெருவில் வந்து நின்று வானத்தைப் பார்த்துக் கொட்டாவி ட்ட நடேசன், அடாடா!…பொழுது விடியற நேரமா ச்சே!…இன்னங் கொஞ்சம் முந்தியே எழுப்பக் கூடாதா பா ?” என்று கேட்டான். அவன் உடலில் ஒரு பரபரப்பு ஏற்பட்டது. சடக்கென்று திண்ணையிலே பாய்ந்து, தான் ப திருந்த கோரைப்பாய், சாக்கு முதலியவற்றைச் சுருட்டி முடிலே செருகியிருந்த கழியிலே இடுக்கிவிட்டு, “தங்கச்சி !” என்றழைத்தான். 

“அதோ….வாசப்படியிலே கிடக்கு பாரு, எடுத்துக்க” என்றாள் மரகதம், உள்ளிருந்தபடியே. 

நடேசன் வாயிற்படியண்டையில் வந்து பார்த்தா அங்கே ஒரு துணி கிடந்தது. அதை எடுத்து இடையி சுற்றிக் கொண்டான். நாள்தோறும் பழகிப் போன செய யானாலும் அவன் உள்ளம் வேதனையால் கசிந்தது. 

“நான் போயிட்டு வரேன்” என்று நடையைக் கட்டி@ நடேசன். அவன் சென்றதும் நீண்ட தோர் பெருமூச்சுட மறுபடி கட்டிலில் படுத்தான் பஞ்சநதம். அவன் உள் துக்கத்தால் நிரம்பியிருந்தது பழைய நிகழ்ச்சிகள் நினைவு களாக எழுந்து மோதின. 


இன்று ஆய்ந்து ஓய்ந்து செயலற்றுக் கிடக்கும் பஞ்சநத அன்று எப்படி இருந்தான் ! பத்துக் காணி நிலத்திற்கும் பெ ஒட்டு வில்லை வீட்டிற்கும் உரியவனாக ‘ஹோதா’வோடு வா தான். பங்காளிப் போர் தலை நீட்டிற்று. அயலாருட தகராறு முளைவிட்டது. ஊர்ப் பொது விஷயங்களில் ஏற்பட் பிளவு பேருரு எடுத்தது. பஞ்சநதம் மீசையை முறுக்கினகை எடுப்பதே இல்லை. இச்சகம் பேசும் நண்பர்களின் தூண்டுகோ அவனைத் தலைசுற்றி ஆடவைத்தது. வம்பு, வழக்கு, நீதிமன்றப் இடையிடையே அவ்வப்போது வீரகர்ஜனை, அடிதடி-இப் என்ன என்னவோ நிகழ்ந்த வண்ணம் இருந்தன. மனக்க திலே ஓயாமல் வீசிக்கொண்டிருந்த புயலுக்கு மாற்று எங் எங்கே என்று ஒரு பரபரப்பு. 

நடேசன் தலையெடுக்கிற வேளையில் பஞ்சநதத்ை கொடிய காசநோய் பற்றிக் கொண்டது: படுக்கையைச் சரண்டைந்தான். 

நடேசனுக்கு ஒரு பண்ணையில் ‘அரை ஆள்’ கிடைத்தது. மரகதமும் அதே பண்ணையில் வீட்டு வேலை செய்ய லானாள். பண்ணையார் மகன் அவளைச் சுற்றிச் சுற்றி வ இளித்தாள். அதைக் கண்ட நடேசன் அவளைப் பண்ணை வேலை செய்ய வேண்டாமென்று தடுத்து நிறுத்தினான். இதை புரிந்து கொண்ட பண்ணையார் மகன், நடேசன் மீது திருட்டு  குற்றம் சுமத்தினான். ‘சே! பட்டினி கிடந்து செத்தாலும் இனி அடிமை வேலை செய்வதில்லை !’ என நடேசன் உறுதி ாண்டான். அன்றாடக் கூலி வேலைக்குப் போய் அகப்பட்ட நச் சம்பாதித்து வந்தான். சில நாள் வேலை கிடைக்கும் ; நாள் கிடைக்காது. சில சமயம் வேலை கிடைத்தாலும் கூலி வரக் கிடைக்காது. குடும்பத்தில் பல நாள் பட்டினி. 

நடேசனுக்கு மனம் சமாதானமாக இல்லை: தகப்பனுடன் ந்து யோசனை செய்தான். முடிவில் நாயக்கர் நிலத்தைக் ந்தகை எடுத்தான். அது, மேலும் விபரீத நிலையை உண்டு ன்ணிற்று. கண்டிஷன் குத்தகை’, உழைத்தவனுக்கு றுமே கிடைக்க வில்லை. 

தரித்திரம் வந்தால் சாமானியமாக வருவதில்லையே ! அதிலும் து மானிகளைத்தான் அதிகம் சோதிக்கும். உணவுப் பஞ்சத் தயும் மீறியது அச்சிறு குடும்பத்தில் உடைப் பஞ்சம். அது ச நிலையை அடைந்த போது, அந்தக் குடிசையில் உருப்படி ஒரே ஒரு சாயத்துணிதான் எஞ்சி நின்றது. ஏனைய தல்களில் தையல் போட இடம் இல்லை. அவை நார் ராகப் போயிருந்தன. 

கிழவன் தான் படுக்கையிலே கிடக்கிறான். வெளியிலே மாடக் கூடியவர்கள் நடேசனும் மரகதமும் தான். இருப்பது ர துணி. சில வீடுகளுக்குப் புல் வைக்க ஒப்புக் கொண்டி தாள் மரகதம். விடிவதற்குள் அவள் போய்க் கூடையையும் ப்பி இரண்டு கட்டுக்களும் கட்டிக் கொண்டு வாடிக்கை வீடு ல் அவற்றை வைத்து விட்டு வருவாள். அவள் வந்தபின் பலைக்குப் போவான் நடேசன். மரகதம் கந்தல்களை இணைத்து டம்பிலே சுற்றிக் கொண்டு குடிசைக்குள் அடைந்து கிடப் ள். நடேசன் வீடு திரும்பின பிறகுதான் அவள் குடிசையிலி து வெளிவர முடியும். இப்படியும் உண்டா என்றால் இருக்கத் ன் இருந்தது. பிடிசோறு கிடைக்காமல் உயிர் நீத்தவர்கள் ல்லையா ? 

கோயில் நிலத்தையெல்லாம், பண்ணையைக் கலைத்து வார குபடிக்குப் பிரித்து விடப் போவதாகக் கேள்விப்பட்ட ஞ்சநதம் ஆவல் மீதூர, மகனின் கைத்தாங்கலில் தள்ளாடி ந்து தர்ம கர்த்தாவிடம் சென்றான். பணிவுடன் பேசித் ன் குடும்பநிலையை விளக்கினான். இரக்கம் கொண்ட தர்ம த்தா நடேசனின் உழைப்பை நம்பிக் கிழவனின் வேண்டு காளை ஏற்றுக் கொண்டார் ; சாகுபடிக்கு நிலம் தருகிறேன் ன்றார். ஆனால் ஒரே நிபந்தனை ; மறு நாள் பொழுதுக்குள் லங்களில் யார் மிகுதியாக எரு அடிக்கிறார்களோ அவர்களின் வரிசைப்படி நிலத்தைப் பிரித்துக் கொடுக்கும் சலுகை விதிக்கப் பட்டிருந்தது. வண்டி, மாடு, எரு எல்லாமே தேவஸ்தானத் தில் இருந்தன. உழைப்பும் ஊக்கமுமே போட்டியின் எடுத்துக் காட்டுகள். இதை மனத்திலே கொண்டு தான் மகனை அவசர மாக எழுப்பினான் பஞ்சநதம். மரகதமும் தான் புல் அறுக்கச் செல்வதை நிறுத்திக் கொண்டு அண்ணனை அனுப்பி வைத்தாள். பழகிப் போன செயலேயாயினும் நடேசன் வேதனை கொண்டது போல் கிழவனும் வேதனைப்பட்டான். ‘வயசுப்பொண்ணு ; தன்னோடொத்த பொண்ணுவளோட, புள்ளிமானைப் போல துள்ளி விளையாட வேண்டிய நா ளிலே… கந்தலை உடுத்து குடிசைக் குள்ளாற அடைபட்டுக் கிடக்க… நானல்லவா காரணம் !… என்று எண்ணி எண்ணி மனம் புண்ணானான்: 


கதிரவனின் இளங்கிரணங்கள் பட்டதனால் கிழவனின் சிந்தனை கலைந்தது. போர்வையை விலக்கிக் கொண்டு மெல்ல எழுந்து உட்கார்ந்தான். 

தொலைவில் வயல் வெளியில் ஏதோ பெருத்த கூக்குரல் கேட்டது. தன் மகனுக்கு ஏதாவது…என்று கலங்கி விட்டான் கிழவன். எதுவானால் என்ன செய்ய முடியும்? எழுந்து செல்லத் திராணி இல்லை. தெய்வமே கதி என்று மீண்டும் படுக்கையில் வீழ்ந்தான். 

சிறிது நேரத்திற்குப் பின் குடிசை வாயிலில் பேச்சுக் குரல் கேட்டது. கிழவன் தலை தூக்கிப் பார்த்தான். இரண்டு போ. கூடி ஓர் ஆளைச் சுமந்து வந்திருந்தனர். பஞ்சநதம் பதறி போனான். அடிபட்டு மயக்க முற்றிருக்கும் ஆள் நடேசன் இல்லை என்பதை அறிந்ததும் பதற்றம் சிறிது குறைந்தது. 

வந்தவர்களில் வயது முதிர்ந்த குடியானவன், கொண் வந்த ஆளைக் குடிசைத் திண்ணையிலே கிடத்தினதும், ‘சாப நீங்க இவனைக் கவனிச்சுக்குங்க; நான் அங்கே போயி அந்த படுபாவிப் பயலுவளைக் கவனிக்கிறேன் என்று கூறி வே மாகச் சென்றான். கதர் உடை அணிந்திருந்த வாலிபன் கை கூப்பி அவனுக்கு விடையளித்தான். பிறகு பஞ்சநதத்தி பக்கம் திரும்பி, “ஐயா…” என்று மெல்ல அழைத்தா ‘கொஞ்சம் தண்ணீர் வேண்டும்” என்றான். 

“நீங்க யாரு ?… இந்த ஆளுக்கு என்ன?” – இரும ளிடையே திணறிக் கொண்டு கேட்டான் பஞ்சநதம். 

“நான் வெளியூர்க்காரன். காந்தியடிகளின் அடியார்கள் தோற்றுவித்த சமத்துவ சமதர்ம சேவா சங்கத்தின் ஊழியர்களில் ஒருவன். இவ்வூர்ப் பிரமுகர் வேதாசலத்திடம் நன்கொடை பெற வந்தேன். வழியில் சிறு கலகம். கோயில் நிலங்களில் எரு அடிப்பதிலே தகராறு முற்றி அடிதடி. இந்த ஆளின் தலையில் சரியான அடி விழுந்ததால் இவர் நினைவிழந்துவிட்டார்”- 

உள்ளே இருந்த மரகதத்தால் இதைக் கேட்டப் பின்னும் உள்ளே இருக்க முடியவில்லை ; வெளியே வரவும் முடியவில்லை ஒலைத் தட்டிக் கதவின் அருகே வந்து நின்று மெல்ல எட்டிப் பார்த்தாள்; அங்கலாய்த்தாள். ஊழியன் அவள் பக்கம் திரும் பியதும் சட்டென்று பின் வாங்கி மறைந்தாள். 

பஞ்சநதம் தர்மசங்கடத்தில் தவித்தான். பின்னர் நெஞ்சை அழுத்திக்கொண்டு துயரத்துடன் சொன்னான்: 

“..ஐயா, நான் நடக்க மாட்டாதவன். வீட்டிலும் யாரும் இல்லை…” என்று தழுதழுத்தான். மரகதம் தட்டி மறைவில் வந்து நின்று எட்டிப் பார்த்ததையோ, ஊழியன் அவள் பார்த்த தைக் கவனித்ததையோ அறியவில்லை. 

“எ…ன்…ன…!… வீட்டிலே… யாருமே… இல்லையா ?… “

ஊழியன் இவ்வாறு கேட்டதும் பஞ்சநதத்தை இன்னொரு கவலை பீடித்தது. ஆமானுங்க. நீங்களே உள்ளாறபோயி தண்ணி எடுத்துக்கிடலாமின்னா… அதுக்குங்கூட வகை இல்லே. உள்ளே தண்ணியே இல்லே. வெளியே போயிருக்கிற என் மவன் வந்தாத்தான் தண்ணி ” என்றான். 

ஊழியனின் உள்ளத்திலே ஆத்திரம் பிறந்தது. ஆனாலும் அதைச் சிரிப்பாக மாற்றிக்கொண்டு சொள்னான்; 

“அடிகளாரின், ‘அஹிம்சா : பரமோதர்ம ;’, ‘சத்தியமேவு யதே’ முதலிய பொன்மொழிகளை ஏற்று அதன்படி ஒழுகி மக்க க்குத் தொண்டாற்ற வேண்டும் என்பது எங்கள் சங்கத்தின் காள்கை, சாந்தம் வேண்டும், பொறுமை வேண்டும். உங்க ப் போன்றவர்களின் செயல்கள் எங்களைப் பொன்றவர்களின் ாறுமையைச் சோதிப்பனவாக இருக்கின்றனவே! ஏனையா, பிர் போகும் தறுவாயில் உள்ளவர்களுக்குத் தண்ணீர் கொடுக் கூட மனமில்லாத நீரும் ஒரு மனிதரா ? வீட்டில் யாருமே ல்லை என்று நெஞ்சாரப் பொய் சொல்லுகிறீரே, உண்மையில் ள்ளே யாருமே இல்லையா ?” 

“இ…ல்..லை… இ…ரு க்…கா…ங்… க… ஆனா…வெளியே… மாட்டாங்க……” 

“எ…ன்…ன…! வெளியே வரமாட்டாங்களா ? இம்மாதிரி ஆபத்துக் காலத்தில் கூட உதவாமல் அப்படி ஒரு கோஷாவா? இதே இடத்தில் உம்முடைய மகனோ, மருமகனோ அடிபட்டுக் கிடந்தால் நீர் இப்படிப் பேசுவீரா?” 

‘சுரீர்’ என்றது கிழவனுக்கு. அவன் கண்களில் நீர் துளும்பிற்று.  

“கோசாவுமில்லை,  மண்ணாங்கட்டியுமில்லீங்க. அப்பறமா வெவரஞ் சொல்றேனுங்க. நீங்க கொஞ்சம் தெருப்பக்கமா திரும்பி கண்ணெ மூடிக்குங்க’- 

அந்த யுவன் அவ்வாறே செய்தான். உடனே கிழவன் சற்று உரத்த குரலில், ” ஒரு குவளையிலே தண்ணிகொண்டா தங்கச்சி ” என்றான். 

மரகதம் தண்ணீக் குவளையை உள்ளிருந்தபடியே வாயிற்படி யோரத்தில் வைத்து விட்டு மறைந்தாள். கிழவன், “ஐயா தண்ணி வச்சிருக்கு பாருங்க” என்றான். 

வியப்பில் மூழ்கியிருந்த யுவன் கண்ணைத் திறந்தான். மறு புறம் திரும்பினான். தண்ணீரை எடுத்தான். அடிபட்டவன் முகத்தில் தெளித்தான். அவன் நினைவு பெற்றான். தண்ணீரைப் பருகிக் களை தெளிந்தான். எழுந்து நின்று நாற்புறமும் நோக்கி னான். நிலையை ஊகித்தான். 

“ஐயா, நான் சண்டை போட்டது என் சித்தப்பாரோடே என்னை அடிச்சது அவரோட மவன். என்னை என் ஊட்லே கவை யோட தேடுவாங்க. நான் வர்ரேன் சாமி ” என்று அவன் கிள பினான். 

“எங்கே போகிறாய் ? சண்டை நடந்த இடத்துக்கா?” 

“சாமி சத்தியமா நான் அங்கே போவலீங்க!” என்றவ திண்ணையினின்றும் இறங்கி வேகமாக நடையைக் கட்டினான். 

“ஐயா…” பஞ்சநதம் அழைத்தான்; யுவன் திரும்பு பார்த்தான். இப்படி வந்து குந்துங்க. என்னாலே பேச மு யல்லே. ஆனாலும், நான் ஈவிரக்கமத்த பாவின்னு உங்க மனசி பட்ட கெட்ட நினைவைப் போக்கணுமே; இப்படி வாங்க என்றான் கிழவன். 

யுவன் அவன் அருகில் சென்று அமர்ந்தான். பஞ்சநதம் கதையை அடியிலிருந்து சொன்னான். அனைத்தையும் ஒளிக்கா சொன்னான். அன்றை நிலைவரையில் சொன்னான். 

அனைத்தையும் கேட்கக் கேட்கச் சிலைவடிவாய் மாறிவிட்ட வாலிபன் கதை முடிந்ததும் உடம்பைச் சிலிர்த்துக்கொண்டான். உணர்ச்சி அவன் வாயைக் கட்டி விட்டது. திடீரென்று எழுந் தான். “நான் போய் விட்டு மாலையில் வருகிறேன்” என்று நடந்தான். 

நெட்டுயிர்த்த பஞ்சநதம் தட்டுத்தடுமாறி எழுந்து உள்ளே போனான். பல் விளக்கிக் கூழ் குடித்தான். தந்தையும் மகளும் அன்றை நிகழ்ச்சி பற்றி பேசிக்கொள்ளலானார்கள். பொழுது சென்றுகொண்டிருந்தது. 

 மாலை வந்தது. குடிசைவாயிலில் சைகிள் மணி கிணுகிணுத்தது. காலையில் வந்து சென்ற வாலிபன்தான் வந்தான். அவன் கையில் ஒரு பொட்டணம்; அதில் கதர் ஆடைகள், சைகிளின் பின்னே கட்டியிருந்த சர்க்காவையும் பஞ்சுப் பொட்டணத்தை யும் இறக்கித் திண்ணையிலே வைத்தவன் நூல் நூற்கத் தொடங்கினான். “உங்கள் மரகதம் இதைச் செய்யட்டும்; உடைப் பஞ்சம் மட்டுமன்று; உணவுப்பஞ்சமும் பறந்தே போய் விடும்” என் றான். அவன் கொணர்ந்த ஆடையை உடுத்த மரகதம் அவனை வணங்கிச் சர்க்காவைப் பக்தியுடன் பெற்றுக்கொண்டாள். காந்தி மகான் ராட்டை சுற்றும் படத்தைக் குடிசையிலே மாட்டிவிட்டு விடைபெற்றுச் சென்றான் வாலிபன். 

– காந்தி வழிக் கதைகள் (சிறந்த தமிழ் எழுத்தாளர்கள் புனைந்த காந்தி வழி காட்டும் ஐம்பது சிறு கதைகளின் தொகுப்பு), தொகுப்பாசிரியர்: கே.ஆர்.கல்யாணராமன் “மகரம்”, முதற் பதிப்பு: மார்ச் 1969, தமிழ் நாடு காந்தி நினைவு நிதி, மதுரை-13.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *