வழி பிறக்கும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 17, 2025
பார்வையிட்டோர்: 1,420 
 
 

கஜபதி தன் கடையில் வேலை செய்து கொண்டிருந்தான். ஒரு சிக்கலான வேலை. வாடிக்கையாளரும் பக்கத்திலேயே நின்று பார்த்துக் கொண்டிருந்ததால் அவனின் தாய் மாமன் ரவி வந்து நின்றதை கவனிக்க முடியவில்லை .

என்ன பழுது அடைந்துள்ளது என கணிக்க முடியாமல் சிந்தனையோடு நிமிர்ந்து பார்த்த போது தான், அவர் நின்று கொண்டிருப்பதை உணர்ந்து ஆச்சர்யம் அடையவில்லை.

வழக்கமாக அப்படித்தான் திடிரென்று வந்து நிற்பார், அவரின் தோற்றம் அப்படி. எப்போதும் வாடினாற் போன்ற முகம், எதையோ பறி கொடுத்துள்ளதை போலவே பரிதாபமாக தெரிவார். நல்ல உடைகள் இல்லை, சரியான வேலை இல்லை, மூன்று குழந்தைகள் வேறு படிப்பு செலவு ,மனைவியின் ஆடம்பர செலவுகளால் பார்த்தாலே பஞ்சத்தில் அடிப்பட்ட கோலத்தில் இருப்பார், நிறைய கடன்.

சிந்தனையை அறுத்து, என்ன மாமா. ஏதாவது செய்தியா என்றான்.

சற்றே பரிதாபமான பார்வை பார்த்தவாறு தயக்கத்தோடு, மாப்ள அப்பாவுக்கு ரெம்ப முடியல ஆஸ்பத்திரி கூட்டிட்டு போவனும், கொஞ்சம் பணம் வேணும்?

அதிர்ச்சியடைந்த பாவானையோடு, தாத்தாவுக்கு என்னாச்சி போன வாரம் தானே பார்த்தோம், சரி எங்கிட்டடையும் பணம் கொறச்சாலத்தான் இருக்கு .போன வாரம் எனக்கு ஏழாயிரம் செலவு மாமா, ம் என்னா பண்றது இருக்குறத தர்றேன்.

பர்சிலிருந்தது அறநூறு ரூபாய். அதை அப்படியே கொடுத்து விட்டான். மாமா இதான் இருக்கு.

தயக்கத்தோடு வாங்கியபடி, மாப்ள இது பத்தாது இன்னும் தேவைப்படும் என்றார்.

இல்ல மாமா, பேனாவாரம் ஐயாயிரம் கைமாத்தா வாங்கின பணமே இன்னும் நா தர முடியாம தெனரிகிட்டு இருக்கேன். மேல் கொண்டு எங்கிட்ட பணம் இல்ல, கேக்காதீங்க என்றான்.

அதற்கு மேல் ஒன்றும் சொல்லாமல் போய்விட்டார்.


வேலையில் மூழ்கி பிறகு இரு நாட்களும் கடந்து விட்டது.

காலை ஆறு மணி இருக்கும். அம்மா வந்து எழுப்பி விட்டார்.

கஜா எந்திரிடா சீக்கிரம் மாமா வீட்டுக்கு போவனும், தாத்தாவுக்கு ரெம்ப முடியலயாம் , மாமா வந்து சொல்லிட்டு போச்சு.

சரிம்மா இதோ கிளம்புறேன்.

கஜபதியின் சைக்கிளில் அரக்க பரக்க மாமா வீட்டிற்கு வந்தடைந்தனர்.

தாத்தாவின் வயிற்றுப் பகுதி கொஞ்சம் பெரிதாக வீங்கியது போல இருந்தது.

என்னாச்சி மாமா.

ரெண்டு நாளா மூத்திரம் போவல, ஆனா கறுப்பா வாந்தி எடுக்குறாரு, சாப்பிடவும் இல்ல, இப்ப மெடிக்கலு தான் போவனும். கையில பணம் காசு இல்ல.

சரி மாமா அங்கயே போவோம். அம்மாவும் அம்மாச்சியும் கண்களில் கலக்கத்தோடே சேலை தலைப்பை வாயில் வைத்தபடி சரி என்றபடி தலையாட்டினார்.

மாமா, நா சிவாவோட பைக்குல அங்க வந்துர்றேன், நீங்க தாத்தாவோட வந்துடுங்க என்றவாறே வீட்டை விட்டு வெளியே வந்தேன்.

80 ஆண்டு மிகப் பழைய பெரிய வீடு நாட்டு ஒடு போடப்பட்டு சிமெண்டால் மொழுகப்பட்டு இருந்தது அதுவும் அடகில் இருக்கிறது.

சிவாவும் நெருங்கிய உறவினன் தான், அந்த தெருவிலேயே இன் சுசுகி பைக் வைத்திருந்தவன் அவனே. இன்னொரு வகையில் மாமன் மகன்.

கஜபதியும், சிவாவும் பைக்கில் மெடிக்கல் காலேஜ் ஆஸ்பத்திரி வந்தனர். வீட்டிற்கும் மெடிக்கலுக்கும் பதினைந்து கிலோ மீட்டராவது இருக்கும். மாமா எப்படியோ தாத்தாவை அங்கு கொண்டு வந்து சேர்த்திருந்தார்.எந்த வார்டு என விசாரித்து கிட்னியில் ஏதோ அடைப்பு என அந்தப் பகுதியில் தாத்தாவை வைத்திருந்தனர். அங்கிருந்த செவிலியை விசாரித்த போது பெரிய டாக்டர் வந்து பார்த்த பிறகு தான் எதுவும் சொல்ல முடியும் என்றார்.

பதினொனரைக்கு மேல் ரவுண்ட்ஸ் வந்த பெரிய டாக்டர் சில விஷயங்களை கேட்டு விட்டு வயிற்றையும் பல இடங்களில் அமுக்கி பார்த்து ரிப்போர்ட்டில் ஏதோ எழுதினார். மாமா என்ன ஏது என கேட்ட போது,

சாயங்காலம் வரை பார்ப்போம் . கிட்னி முழுமையா செயலிழந்து போச்சி. சொல்லியிருக்கேன், செய்வாங்க பாக்கலாம் என்றார்.

அம்மாவும் அம்மாச்சியும் அழ ஆரம்பித்து விட்டனர்.

கஜபதியும் சிவாவும் மெடிக்கலுகுள்ளேயே இருந்த கேண்டீனில் டீ குடிக்கலாம் என விசாரித்து அங்கு போன போது,

மாமா தாத்தாவை கொண்டு வர ஏற்பாடு செய்திருந்த டாக்சி டினரவருடன் கை கூப்பியபடி மன்றாடிக் கொண்டிருந்தார்.

அண்ணே உங்க பணத்த கண்டிப்பா குடுத்துருவேன், கவலப்படாதீங்க. எப்படியாவது புரட்டி கொடுத்துர்றேன் கொஞ்சம் பொறுங்க.

கஜபதிக்கு கவலையாகவும் வருத்தமாகவும் இருந்தது. எங்கே தன்னிடம் மீண்டும் பணம் கேட்டு விடுவாரோ என பயந்தான். அவரை பார்காதது போல திரும்பி நின்றுகொண்டான்.

ஒரு வழியாக நேரம் கடந்து மதியமாகி மாலையாகி இரவானது. செவிலியர் தங்கள் பணி முடிந்து வேறு செவிலியர் மாறினர்

இரவு சிப்ட் செவிலியர்களிடம் பேசிய போது தாத்தா வீடு திரும்புவது சாத்தியம் இல்லை என தெரிவித்தனர். அம்மாவும் அம்மாச்சியும் வீடு திரும்புவது எப்போது என கேட்டபடி இருந்தனர். தாத்தாவின் உடலிலிருந்து சலைன் பாட்டிலின் டியூப்களை கூட எடுத்து விட்டிருந்தனார். வெகு நேரம் வரையில் செவிலியர் யாரும் அவரை வந்து பார்க்கவில்லை. அதுவே அவனுக்கு சந்தேகத்தை அதிகப்படுத்தி ஊர்ஜிதப்படுத்தியது.

கஜபதிக்கு மாமா அதற்கு பிறகு வரவேயில்லை என்பதும் ஒரு வித கலக்கத்தை தந்தது. சிவாதான் பணத்துக்காக அலைந்து கொண்டிருப்பார், வந்து விடுவார் என ஆறுதல் கூறிக்கொண்டிருந்தான்.

விடியற்காலை நான்கு மணிக்கு அம்மாச்சி அம்மாவின் அழுகை தாத்தாவின் மரணத்தை உறுதி செய்தது. அடுத்தது என்ன செய்வது என தெரியவில்லை.

செவிலியர் வந்து பார்த்துவிட்டு பயற்சி மருத்துவரை அழைத்து மரணத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

சரி தாத்தாவின் உடலை எப்படி கொண்டு போவது, மாமாவையும் காணோமே என பதறினான்.

சிவா வாடா போய் டாக்ஸி கேட்டு பாப்பாம் என்றான்.

டாக்ஸியை விசாரித்த போது தான் தெரிந்தது தன்னிடம் அவ்வளவு பணம் இல்ல என்று. நேற்றே அப்பாவிடம் கேட்ட போது அவர் கடுமையாக கோபம் கொண்டார். அவரும் கூலியாள். அவரிடம் பணமிருக்காது . டாக்ஸி டிரைவர் பதினைந்தாயிரம் கேட்டார், .அதற்கு குறையாது என சொல்லிவிட்டார்.

கஜபதி தளர்ந்து விட்டான், சிவா தலையில் கைவைத்தபடி சாய்ந்து உட்கார்ந்து விட்டான். மாமா வருவது போல தெரியவில்லை.

தீடிரென்று யோசனை தோன்றியது சிவாவிடம்.

நாம இப்படி செய்தாலன்ன,

என கேட்டான். அந்த யோசனையைத் தவிர வேறு நல்ல யோசனை கிட்டவில்லை. ஒத்துக் கொள்வதை தவிர வேறு வழியுமில்லை என்றான்

செவிலியிடம் போய் கேட்ட போது உடனே ஒத்துக் கொள்ளவில்லை. காலில் விழாக் குறையாக தன்னிலையை விளக்கி பேசிவிட்டு வந்த பின்னர் அம்மாவையும் அம்மாச்சியையும் வீட்டுக்கு பஸ்சேறி போகச் சொல்லிவிட்டான்.

தெருவில் இருசக்கர வாகனத்தில் நுழைந்த போது சட்டென்று யாருக்கும் புரியவில்லை தாத்தாவுக்கு சரியாய்ட்டுதா? பைக்குல நடுவுல உக்காந்து வாராரே என பார்த்தார்கள்.

உற்று பார்த்த போது தெரிந்தது தலையில் தலபா கட்டி பைக்கிலேயே தாத்தாவின் உடலை கொண்டு வந்தது.

வி.கலியபெருமாள் பெயர் - வி.கலியபெருமாள். வயது - 53 புனைப்பெயர் - கலித்தேவன். ஊர் - சொந்த ஊர் தஞ்சாவூர். இப்போதும் தஞ்சை வாசி Cell No- 6383481360 படிப்பு - ITI ELECTRICIAN , D.EEE ELECTRICIAL தொழில் - மோட்டார் ரீவைண்டிங், எலக்ட்ரிக்கல், பிளம்பிங் வேலைகள். பிறப்பு, திருமணம், குழந்தைகள். 1971 ம் ஆண்டு அக்டோபர் 6ம் தேதி பிறந்தேன்.. தந்தை விராசாமி தாய் அகிலாண்டேஸ்வரி மூன்றாம் வகுப்பு…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *