வத்ஸலி
(2004ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

வத்ஸலி உள்ளே வராமல் நின்றாள்! லேசாகச் சிரித்தான். சாரங்கன். உள்ளே வராமல் நிற்பதற்கு என்ன இருக்கிறது? வத்ஸலியின் கண்கள் கலங்கி சிவந்து கசக்கித் துடைக்கப்பட்டு ஈரம் காயாமல் இருந்தது வத்ஸலி தயங்கியது ஏன் என்று புரிந்தது போல் சிரித்தான் சாரு
”வாயேன்! மாசமாசம் வர்றதுதாளே? என்றான். வயிற்று வலியும். இடுப்புவலியும் சகஜம்! அறைக்குள் எட்டிப் பார்த்து. கண்களைத் துடைத்துக் கொண்ட வத்ஸலியின் மாறுதல். லேசாகப் புரிய ஆரம்பித்திருந்தது சாருவுக்கு. கூர்ந்து அவளைப் பார்த்த இம்முறை ஓவியத்தின் சிதிலம் தெரிய வந்தது. முகத்தில் ஐந்து விரல்களின் அறை விழுந்த சிவப்பு! தலை முடிபற்றி இழுத்து அடித்திருப்பானோ. தலைமுடியும் அதிகமான சுருள் நீண்டிருந்தது. வத்ஸசவாவை என்ன செயதான்? சாருவுக்கு கைத்தது..
அடிக்கடி அடிக்கிறவன்தான் வத்ஸலியின் கணவன். அடிப்பதில் ஒரு ஸ்வாரச்யமே உண்டு புராதன காலத்து புருஷன் அவள் கணவன் தேவராஜ்! அடி வாங்க அஞ்சியவளும் இல்லை வத்ஸலா,
“உள்ற வா வத்ஸவி! உக்கார்!” என்றபோது அவள் கழுத்தில் சிவப்பு கரையும் கீறல் ரத்தம்! மஞ்சள் தாலியின் கயிற்றில் ரத்தச் சொட்டு உறைந்திருந்தது. என்ன ஆச்சு!
மெல்ல உள்ளே வந்து நாற்காலியில் அமர்ந்தாள் வத்ஸலி. சற்றே சதைப்பிடிப்பான அவள் எடுப்பும் தொடுப்பும் யாரையும் உடனே அயர வைக்கும். ஏதோ கொடியில் தொங்கும் குலைப் பழங்களின் கனம் போல எப்போதும் மாயாத வடிவம் வத்ஸலாவின் அழகு.
“என்ன ஆச்சு!” “ஒண்ணுமில்லெங்கிறெ?”
மௌனமாய் கண்ணீர் முத்துகள் வீணாக உதிர்ந்தன. கனவு போலிருக்கிறது இவள் கல்யாணம். ஆறு வருடங்களுக்குப் பின்னரும் அடி உதை! துரத்தல் தெருவில் சிரிக்க கூச்சலும் அவமானமும் தேவராஜ் ஏன் இப்படி இருக்கிறான்?. பேத்ஸலி மாதிரி ஒரு பெண் ஆ! என்ன அருமையாக சமைப்பாள். சுத்தமாக வீட்டை நறுவிசாக நாகரிகமாக வைத்துக் கொள்வாள் பொறாமைப் படுகிற மாதிரி அலங்காரம் செய்ய மாட்டாள். அடக்கமே அலங்காரமாய் எடுப்பே அவளது அழகாய் மௌனமே யாரையும் அசத்துகிற அபூர்வமான இந்தப்பெண்ணை அடித்து துவைத்து புரட்டி எடுக்கிறாள் தேவராஜன். கேட்சு யாரும் இல்லையா…? இல்லை இல்லைதான்… இல்லையே! காலை நேரம்
இரவு முழுவதும் உதைத்திருப்பாள். உடம்பெல்லாம் கன்றிப் போயிருக்கும். வத்ஸலிக்கு அம்மா அப்பா ரண்டு பேரும் பம்பாய்க்கு அந்த பக்கம் கண்ட்லாவில் ஆயிரம் மைல்களுக்குப்பால் தங்கள் ஆண் குழந்தைகளுடன் இருக்கத்தான் இருக்கிறார்கள். வத்ஸலி கொங்கணிபெண்! அவள் அப்பா லாள்ண்ட் சர்வே டிபாட்மென்டில் தமிழ்நாடு வந்து பத்து வருடம் தங்கியபோது பிறந்த பெண்! ஏறத்தாழ இந்த நாட்டு பிறவி! தமிழச்சியின் கோணல்கள் அப்படியே வார்ப்பாக வந்த பெண் அவர்கள் வீட்டு கொல்லையில் காவிரியின் வாய்க்கால் ஜம்புகாவிரி கால்வாயின் கரையில் இருந்த சின்னஞ்சிறு ஓட்டுக் குச்சிவில் வாடகைக்கு இருந்தவன் சாரங்கள்!
ஜம்புகாவிரி வாய்க்கால் ரொம்ப அழகு. இருபுறமும் மூங்கில் காடுகள் மனுஷ்ய வாடையே இராத அமைதி. தமிழ்நாட்டுக்கு வந்ததும் இந்த வீட்டையும் ஓட்டுக் குச்சிலையும் சல்லிசான விலைக்கு வாங்கி மூங்கில் குத்துகளுக்கு நடுவில் கால்வாய் ஓரத்தில் தஞ்சாவூரில் வாழ்ந்த காலம் ஆச்சர்யமான கனவாகவே போய்விட்டது. ஜம்புகாவிரி குறுக்களவு ஆறடிதான். இருக்கும்! கரையில் சாரங்கள் வீடு சற்றே உள்தள்ளி மூங்கில் பசுமைக்கிடையில் பெரிய வீடு. அங்கே வத்சலி! கொங்கணி பேசும் அவர்களுக்கு இருந்த ஒரே உறவு சாரங்கனின் சிரிப்பும் பேச்சும். ஜம்புகாவிரி கரையில் மூங்கில் காட்டில் ஒரு சிறிய செங்கல் லிங்கம் கோவில் கொண்டு நின்றது. அங்குதான் எட்டு வயதில் வத்சலியைச் சந்தித்த….
பதினெட்டு வயதாகும் வரை அங்குதான் இருப்போம் என்று தெரியாது. வாழ்க்கை துரத்தியபோது – ஏழெட்டு ஆண் குழந்தைகள் நாலைந்து பெண் குழந்தைகளுமாய் வத்சலியின் அப்பா கோட்வால்கர் திடீரென்று கொங்கணத்துக்குப் புறப்பட்டபோதுதான் வத்சலிக்குப் புரிந்ததுதான் இந்த இடத்து நாற்று அல்ல என்று, அவசர கோலமாய் ஒரு கல்யாணம் யாரையும் எதிர்பாராமலேயே நிகழ – தஞ்சாவூர் மராட்டியனாகிய தேவராஜன் மாப்பிள்ளையாய் வந்தபோதுதான் சாரங்கனுக்குப் புரிந்தது… இதுதான் இப்படித்தான் வாழ்க்கை இருக்கும் என்று!
ஓயாத சிரிப்பும் கும்மாளமுமாய் இருக்கும் வத்ஸலியின் குரல் உள்ளாழ்ந்து போயிற்று. சாரங்கன் தேவராஜனைப் பார்த்தபோது சந்தோஷமாய் இருந்தது. நல்ல சிவப்பாக கருகருவென்ற சுருள் முடியுடன் அவை அலையாக வெண்மை வேட்டி பளீரிட வத்சலிக்கு ஏற்ற அழகும் அற்புதமும் கொண்ட கணவன்தான். மனசு நிறைந்து போயிற்று! அந்த கொங்கணிக் குடும்பம் சென்னைக்குப் போய் அப்படியே கொங்கணத்துக்குப் போகிறார்கள்! வத்ஸலி போகப் போவதில்லை. தேவராஜனுடன் தஞ்சையிலேயே வாழப் போகிறாள்! சந்தோஷமாய் இருந்தது.
எட்டு வயதிலிருந்து அவன் விரல்களைப் பிடித்துக் கொண்டு விகல்பமில்லாமல் பதினெட்டு வயதிலும் அந்த தமிழ் கூச்சத்தை கேலிசெய்த கொங்கணத்து தைர்யம். இப்போதும் அப்படியேதானே இருக்கிறது?? எங்கே கோளாறு?
சாரங்கன் அம்மா சொல்வாள் “ஏய் சாரங்கா! அவகிட்ட ரொம்ப தேயாதடா!” இது சிறு பெண்ணா இருந்தபோது, பதினைந்து வயதில் பெரிசாகி முட்டி வளர்ந்த மூங்கில் கொத்தாக வளர்ந்தபோதும், “டேய் பாத்துடா அவ சின்ன புள்ள இல்ல. அவள் இழுத்துகிட்டு ஊர் காடு சுத்தாதெ நாலு பேரு பாக்க தேஞ்சு ஒளிகிகிட்டு நிக்காதடார் அவளுக்கு தெரியாது! மிராட்டிய நாமதாம் பொத்தாம் பொதுவா ஒதுங்கணும்!” -இப்போது அம்மாவும் இல்லை. போயாச்சு அப்பாவும் இல்லை மிச்சம் இந்த ஓட்டுக் குச்சுவீடும் பின்னால் உள்ள மூங்கில தோப்பும்தான். பெரிய குடும்பம் வத்ஸலா மட்டும் தனிப்பிறவி! எப்போதும் மூங்கில் குத்துகள் இடையே ஜம்புகேச்வரர் சந்நிதியில் உட்கார்ந்து அல்லது மூங்கில் மரத்தடியில் படுத்தும் புரண்டு கிடப்பதும் உண்டுதான்!
ரொம்ப நேரம் கழிந்ததும் தேடிக் கொண்டு போய் அழைத்து வரவேண்டும் அவள் தங்கைகள்! என்ன பேசுகிறார்கள்! ஒன்றும் புரியாது. சாரங்கனுடன் எல்வாம் ஒட்டி உறவாடும்! கூச்சம் நாணம் எதுவும் இல்லாத பெண்கள், தேவையில்லாமல் கூச்சம் என்னத்துக்கு? கைகளைக் கோர்த்துக் கொண்டு சாரங்கனுடன் ஜம்புகாவிரியோடு கரை வழியே நடந்து வெருதூரம் போவார்கள் ரெண்டு பேருமாய்! இந்த பூமியில் இருப்பதாகவே தெரியாது. நீரில் உலாவி வரும் சில்லென்ற பச்சிலை மணம் வீசும் அபார காற்றோசை! ஆங்காங்கே வளர்ந்து நிற்கும் செந்நிற பாம்புப் புற்றுகள் – பாம்புகள் இப்போது இருக்குமோ இல்லையோ அவற்றின் மீது மாலை வீசிக்கிடக்கும் பிரண்டைக் கொடிகள் கொத்துக் கொத்தாக படர்ந்து கிடக்கும் அழகு குத்து மூங்கில்களோடு போட்டியிட்டு வளரும் கள்ளிச் செடிகள்.
வத்சலியின் உதடுகள் அற்புதமானவை. தடித்து உருண்டு செதுக்கியது போன்ற மிக அழகான உதடுகள். கொங்கணிப்பெண்களின் ரோஜாக் கருஞ்சிவப்பு கொஞ்சம் அந்நியமான நிறம். நீண்ட உடல் அதிக வளர்ச்சி என்று யாருக்குமே தோன்றும். வளரவளர எல்லாமே அதிகம் என்று புரிந்தபோது சாரங்கனுக்கு பயமும் வந்தது. அதிக நேரம் மூங்கில் காட்டில் இருக்க விடாமல் இழுத்து வருவான் வேறு வழியில்லை. வத்ஸலியின் உடல் குடு சாரங்கனுக்கு தெரியும் – தொடாமல் பேசுவதேயில்லை அவள். அதில் விகல்பம் இல்லை. வத்சலியின் அம்மாவும் கூட தொட்டு கட்டிப் பிடித்துத்தான் பேசுவது அது அவர்கள் பழக்கம் – தப்பு ஒன்றுமில்லை.
சாரங்கள் புழக்கம் வேறு ஒரே பள்ளியில் படித்து வீட்டில் தினமும் வீட்டுப் பாடம் எழுதி மனக்கணக்குப் போட்டு சேர்ந்து விளையாடி சேர்ந்து கைகோர்த்து பள்ளிக்கூடம் போய் பின்னர் எல்லாம் சேர்ந்தும் பிரிந்தும் முறிந்தும் போக எல்லாமே சகஜமாய் இருந்தது. சாரங்கன் மட்டும் அதை கூச்சமாகவே வெட்கத்துடன்தான் செய்து கொண்டும் மறைத்துக் கொண்டும் இருந்தான்.
ஜம்புகாவிரியில் குளிக்கும்போது அவளைப் பூரணமாக பார்க்காமல் இருக்க முடியாது. அவர்கள் வீட்டு படித்துறை யாரும் அங்கே வரமுடியாத
தனிமையிலும் நாலு சன்யாசி பிச்சைக்காரர்கள் அவளை உற்றுப் பார்த்தபடி முழுக்கு போடும் போதுதான் சாரங்கனும் வத்ஸலியின் வடிவத்தை உலகம் எத்தனை தாகத்துடன் பார்த்தும் நன்னால் அதைப்போல் கிட்டேயிருந்தும் பார்க்க முடிவதில்லையே என்று பார்த்து அசந்து போவதுண்டு.
வத்ஸலா பாவம் ஒன்றும் தெரியாத பெண் என்று அம்மாவிடம் சொல்வான் சாரு. ஆனால் அது பொய் என்று அவனுக்கும் அவன் அம்மாவுக்கும் மௌனமாய் புரியும்! அவ குளிச்சிட்டு வரட்டும் அப்பறம் நீ போய் குளிக்கலாம்! என்பாள் அந்த அம்மாள். ஆனால் வெகுநேரம் தூங்குகிற வத்ஸலி எப்ப குளிக்க வரா என்று யாருக்கும் தெரியாது!
ஜம்புகேச்வரர் முன்னால் ஒரு நாள் யாரும் இல்லாதபோது எப்போதுமே யாரும் இல்லாத காடுதான் அந்த மூங்கில் கரை. சாரங்களிடம் கேட்டாள் வத்ஸல…
“இஞ்ச எனக்கு ஒரு மச்சம் இருக்கான்னு பாரு சாரு. எம்மார்ல இருந்த மச்சம் எனக்கு கண்ணாடில கூட தெரியமாட்டேங்கிá”
பயமாய் இருந்தது. பெரிய பெண்ணாகிவிட்ட அவளுக்குள் அடங்காத சௌந்தர்யம் பெரிய விழிகளில் குழந்தை போன்ற மிரட்சி வியர்வை நனைந்த வெண்ணிற அக்குள்கள். கழுத்து மடிப்பின் பிரிவில் பெரிய மிக அழகிய வண்டு போன்ற மச்சம் – ஒரு கோடுபோல் மார்பின் செம்மைப் பிளவில் இன்னொரு மச்சம் இல்லை மறு – உற்றுபார்த்த சாரங்கள்…
“நாம்போறென் நீ வா! அப்புறமா” என்று தோற்றோடினான். குப்புறப் படுத்துக் கொண்ட மகனைப் பார்த்து படபடத்தாள் அம்மா.
“வயகப் பயக குப்புறப் படுத்துக் கெடக்கப்புடாதுடா! எங்க அவளெக் காணும்?”
”எனக்கென்ன தெரியும் அந்தண்டை போம்மா” – கத்தினாள் சாரங்கன். “இனுமே கண்டமானிக்கி மூங்கி ருத்துக்குன்ற அவளெ இழுத்துகிட்டுப் போயி சுத்திகிட்டு நிக்யாதடா! அவளுக்கு கண்ணாலம் நிச்சயமாகியிருக்கு இனிமே தனிய வெளிய தெருல அவகூட போப்டாது! தெரியுதா?” – என்ற போதுதான் உலகம் எத்தனை வேகமாய் சுழல்கிறது என்று சாரங்கனுக்கும் தெரியவந்தது. நாவேநாளில் கல்யாணம் தேவராஜனைப் பார்த்தபோது அடேயப்பா ஏற்ற ஜோடிதான் என்றும் சுகமாய் இருந்தது. குறையும் எட்டியது போலிருந்தது.
ஞாயிற்றுக் கிழமைகளில் அந்த ஜம்புகேச்வரர் சந்நிதியில் சாரங்கனுடன் ஒட்டி உட்கார்ந்திருப்பாள் வத்ஸலி. இந்த ஞாயிறில் அவள் இல்லை. தனியே மூங்கில் மரத்தடியில் துண்டை விரித்துக் கிடந்தபோது வளைந்த மூங்கில் கீற்றுகள் வானத்தைக் கீறி ரெத்தம் வடித்து மாலையாக்கின.
பத்து நாட்களில் வத்ஸலியின் குடும்பம் வீட்டை காலி செய்துவிட்டுப் புறப்பட்டபோது ஆச்சர்யம்! மீண்டும் யாரையுமே காண முடியாது என்றொரு தோணல். வத்ஸலி மட்டும் வந்திருந்தாள். பெட்டி சட்டி தட்டு முட்டுச் சாமான்கள், மூட்டைகள் வண்டி ஏற தேவராஜ் வரவில்லை. வழியனுப்பக்கூட வராத விசித்திர குடும்பம். அதனால் என்ன என்று வத்ஸலியின் அப்பா போய் வலிய பார்த்து தேவராஜன் வீட்டுக்குப் போய் சொல்லி விட்டு வந்தார். குடும்பம் கொங்கணத்துக்கு வத்சலி தஞ்சையில் மூங்கில் தோப்பு கிர்கிர்ரென்ற பேச்சுடன் மௌனம் கண்டது. வத்சலி அன்றைக்குப் போனவள்தான்!
– சௌந்தரசுகன், ஜூலை 2004.
– தஞ்சை பிரகாஷ் கதைகள், முதல் பதிப்பு: ஜூலை 2004, காவ்யா வெளியீடு, சென்னை.