வங்கணகாரன்
(1999ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஒரு கெராமத்ல, வெவசாயி ஒருத்தன் இருந்தா. வயலுக்கு உழுகப் போவர். அவ் பொண்டாட்டி, கஞ்சி கொண்டுட்டு போவா. இது வழக்கமா நடந்துகிட்டு வருது. புருச் வேலக்கிப் போகயில, பொண்டாட்டி, கஞ்சி கொண்டுகிட்டுப் போவா. இப்டி இருக்கயில, இவளுக்கு ஒரு வங்கணகாரன் இருக்கா. வங்கணகாரன வச்சுக்கிட்டு, புருசன, ஏதாவது ஒரு வேலயச் செய்யச் சொல்லிக்கிட்டே இருப்பாளாம், பாதகத்தி.
ஒருநா, கஞ்சி கொண்டு போகயில, வழியில ஒரு ஐயனாரு கோயிலு இருக்குது. அந்தக் கோயிலுகிட்ட, கஞ்சிய எரக்கி வச்சிட்டு, தெனமும் சாமி கும்புடுவாளாம். என்னா சொல்லி சாமி கும்புடுவாண்டா, எம் புருசனுக்கு, கண்ணு தெரியாமப் போகணும், நானும் – வங்கணகாரனும் நல்லாயிருக்கணும்ண்டு சாமி கும்புடுவாளாம்.
இப்டியே சாமி கும்புடுறது, புருசனுக்குச் சந்தேகம் வந்திருச்சு. எப்டி? சாமி கும்புடுறாண்டு கேக்கணும்ண்ட்டு, கோயிலுக்குள்ள வந்து, ஒளிஞ்சு ஒக்காந்துகிட்டா.
இவ, கஞ்சிய எரக்கி வச்சிட்டு, வேகமா கோயிலுக்குள்ள போறா. போனதும் சாமி – ஐயனாரப்பா!! எம் புருசனுக்கு, கண்ணு தெரியாமப் போயிறணும். எங்கள்ளப் புருச், எப்பவும் எங்கூடயே இருக்கணும்ண்டு சாமி கும்பிட்டா. புருச் நல்லா கேட்டுக்கிட்டா. இப்டியாடி கும்புடுறே, இரு! இருண்ட்டு, வேற வழியா வயலுக்குப் போயிட்டா. இவ வயலுக்கு, கஞ்சி கொண்டுட்டு வரும் போது. அவ், அங்க,தாறுமாறா உழுகுறர். என்னா மனுசா? இப்டி உழுகுறண்டு கேட்டா. கண்ணு தெரியலடிண்டு சொல்றா. சொல்லவும், நாளக்கி உழுகலாம், வாண்டு வீட்டுக்குக் கூட்டிக்கிட்டு வந்துட்டா. அவளுக்குப் பொறுக்க முடியாத சந்தோசம். ஏ….ண்டா கேட்டது கெடச்சுப் போச்சு. அந்தச் சந்தோசத்ல அங்கிட்டுப் போறா. இங்கிட்டுப் போறா. போயி, வங்கணகாரனக் கூட்டிக்கிட்டு வந்துட்டா. அவனுஞ் சந்தோசமா வாரா. பூராத்தயும் பாத்துக்கிட்டு போசம ஒக்காந்திருக்கா.
வங்கணகாரனக் கூட்டிக்கிட்டு வந்து, குறுணி நெல்ல எடுத்து அவிச்சுப் போட்டுட்டு, புருசனக் காவலுக்கு வச்சுட்டு, வங்கணக்காரனக் குளிப்பாட்ட தண்ணி காய வச்சுட்டு, தண்ணியெடுக்க, கெணத்தடிக்குப் போறா. இவ், ஒரு கம்பையும் கையில வச்சு, நெல்லக் காவ காத்துக் கிட்டு வீட்ல ஒக்காந்திருக்கா வங்கணகாரன், சந்தோசமா வீட்டுக்குள்ள ஒக்காந்துக் கிட்டிருக்கா. தண்ணி கொண்டுவரும் போதும், போகும், போதும், காலுல. ஒரு அடி அடிக்கிறது, என்னா மச்சான்? என்னய அடிக்கிறண்டு கேக்கயில, கண்ணு தெரியலடிண்டு சொல்லிப்பிடுறது.
இவ, இங்க தடபுடலா வேல செஞ்சுகிட்டிருக்கயில, என்னமோ அவசரமா பக்கத்து வீட்டுப் பொம்பள, அவளக் கூப்பிடவும் வங்கணகாரன, குலுமைக்குள்ள எரக்கி ஒக்கார வச்சிட்டு, அடுத்த வீட்டுக்குப் போயிட்டா. சுடுதண்ணி நல்லா காஞ்சுகிட்டிருக்கு. இதாந் சமயம்ண்டு, சுடுதண்ணியத் தூக்கி குலுமைக்குள்ள ஊத்திட்டா. ஊத்தவும், மேலுகாவெல்லாம் வெந்து, அப்டியே பல்லத் தொறந்த வாக்குல செத்துக் கெடக்குறா.
வந்து பாத்தா, அவந்தான், அங்க பல்லத் தொறந்த வாக்குல கெடக்கானே! ஏ…ராசா! எப்டிச் சிரிக்கிறாருண்டு சொல்லிக்கிட்டு வீ சயப் (மீசை) புடுச்சு லேசா இழுத்தா. இழுக்கவும், விச கையோட வந்திருச்சு. தொட்டுப் பாத்தா. உசுரில்ல. அவந்தான், பொணமா கெடக்கானே. தெரிஞ்சுகிட்டு ஐயய்யோ… குலுமைக்குள்ள யாரோ செத்துக் கெடக்காங்கண்டு, சத்தம் போடுறா. என்னாடி சொல்றேண்டு? புருச் எந்திருச்சு வாரா. வந்து தொட்டுப் பாத்திட்டு, எனக்குக் கண்ணு தெரியாது. நிய்யி தூக்கிட்டுப் போயி, எங்கயாவது போட்டுட்டு வந்திருண்டு சொல்லிட்டு, பழய (பழைய) எடத்ல போயி ஒக்காந்துகிட்டு, அடியே தூக்கிட்டுப் போறது போற, யாராவது ஆளு அரவங் கேட்டா, கொண்டுகிட்டு வந்திருண்டு சொல்லிப் பயமுறுத்றா.
சாக்ல போட்டுக் கட்டி, வடக்க தூக்கிட்டுப் போனா. போகயில, இவளுக்கு முன்னால போயி, வழியில நிண்டுகிட்டுச் செறுமினர். செறுமவும், அவக்கு தொவக்ண்டு தூக்கி செமந்துகிட்டு வீட்டுக்கு ஒடியாந்திட்டா. தெக்க (தெற்கு) தூக்கிட்டுப் போயிப் போட்டுட்டு வாண்டு சொல்றா. தெக்க தூக்கிட்டுப் போனா. இவளுக்கு முன்னால போயி இருந்துகிட்டு சத்தம் குடுக்றா. பயந்து போயி, தூக்கிக்கிட்டு ஓடியாந்திட்டா. இவளுக்கு முன்னால ஓடியாந்து, வீட்ல ஒக்காந்துகிட்டர். ஒக்காந்துகிட்டு, மேற்க தூக்கிட்டுப் போடிண்டு சொல்றர். தூக்கிட்டுப் போகவும், அவளுக்கு முன்னால போயி இருந்துகிட்டு, லேசா செறுமுறர். செறுமவும், கொண்டுகிட்டு ஓடியாந்திட்டா. ஓடியாரவும், என்னாவிள்ளா? ஓடியாந்துட்டவண்டு கேட்டர் கேக்கவும், ஆளு இருக்காங்க மனுசாண்டு, சொன்னா.
சரி: கெழக்க தூக்கிட்டுப் போண்டு சொன்னா. சரிண்டு தூக்கிட்டுப் போறா. அங்கயும் போயி அரவங் காட்டுறா. வீட்டுக்குத் தூக்கிட்டு வந்திட்டா. நாலு பக்கமும் ஆளூ முழுச்சுக்கிட்டு இருக்காங்க. இப்பத் தூக்கிட்டுப் போக முடியாது, கொஞ்ச நேரங் கழிக்கட்டும்ண்டு செத்த (சிறிது) நேரம் படுத்தா. படுத்தவ, அப்டியே ஒரங்கிட்டா. விடுஞ்சு போச்சு. பொணம். சாக்குல கட்டுனவாக்ல இருக்குது.
காலைல, சக்கிலியன், அந்த வீட்டுக்கு எளவு (சாவு) சொல்லிவந்தா. வரவும் நல்லா சாப்பாடு போடுறா. போடவும் சாப்பிட்டர். எளவு சொல்லி வந்ததுக்கு, ஒரு மூட கானத்தத் தூக்கிட்டுப் போண்டு சொல்றா. கஞ்சி சாப்பிட்ட முறுக்குல, சாக்கத் தூக்கிட்டுச் சக்கிலியன் போறா.
வழில ஒருத்தன், பன மரத்தல ஏறி, கள்ளு வடுச்சுக்கிட்டிருக்கா. செமைய, அங்ஙன எரக்கி வச்சுட்டு, நாழிக் (படி) கள்ளு குடிப்போம்ண்ட்டு எரக்கி வச்சர். வச்சிட்டு, அண்ணே!! ஒரு படி கள்ளு குடு. ஒரு படி கானந்தரேண்டு மரத்துல இருக்கறவங்கிட்ட சொல்றீர். சரிண்டு சொல்லிட்டு, ஏலே… அந்த மொந்தையில இருக்கிற கள்ளக் குடுச்சுட்டு, கானத்த, அந்த மொந்தையில போட்டு வச்சிருண்டு சொல்லிட்டு, அவ, மரத்து மேலயே இருக்கா.
கள்ளக் (கள்) குடிச்சிட்டு, சாக்க அவுத்துப் பாத்தர். பொணம், பல்ல இளிச்ச வாக்ல இருக்கு. அப்டியே சாக்கப் போட்டுட்டு, திரும்பிப் பாக்காம ஓடிப் போயிட்டர். பனையேறி, பனமரத்ல இருந்து பாக்குறா. பாக்கயில, கள்ளக்குடிச்ச மயக்கத்ல, சிரிக்கிறது போல இருக்கு. இன்னுங் கள்ளு வேணும்ண்டு கேக்குறானாக்கும்ண்ட்டு, ஓ.. இளிச்சவாய மூடப்பா ஏழு கம்பங் (கலயம்) கள்ளு தாரேண்டு சொல்றீர். பெறகும் சிரிச்ச வாக்குல இருக்கவும், பயந்து சாக்கப் பாத்தர் சாக்குக்குள்ள பொணம், பயந்து, பனமரத்ல இருந்து விழுந்து செத்துப் போயிட்டர். பொணமுங் கெடக்கு, பனயேறியுங் கெடக்கா.
எளவுக்கு அந்த வழியா ஆளுக வாராங்க. இவளும் வாரா. வார வழில, பன மரத்தடில சாக்கு இருக்றதப் பாத்தா. ஏ…ராசா…ண்டு போயி முத்தங் குடுத்தா. பின்னாலயே வந்த புருச், தலமயித்த இழுத்துப் புடுச்சு, கழுத்த வெட்டிக்கிட்டு, தலையோட, மச்சினன், வீட்டுக்குப் போறர். போகவும் மச்சினன் பாத்தர், பாத்து, மச்சினஞ் செஞ்சது சரிதாண்ட்டு, இன்னொரு தங்கச்சிய அவனுக்குக் கட்டிக்குடுத்து, நல்லா வாழ்ந்தாங்களாம். பொட்ட முண்டைக்கு, எந்தந்தண்டி மப்பு.
– மதுரை மாவட்ட நாட்டுப்புறக் கதைகள், சமூக வரலாற்றுக் கதைகள், முதற் பதிப்பு: 1999, மதுரை காமராசர் பல்கலைக் கழகம், மதுரை.