லவ் சீனியர்

காலேஜில் முதல் நாள் அது சீனியர் அனைவரும் புதிதாக சேர்ந்தவர்களை கிண்டல் செய்து கொண்டிருந்தனர். அதை பார்த்த படியே கவி சென்று கொண்டிருந்தாள். அவளின் மீது வந்து விழுந்தாள் ஜானவி சாரி என சொல்லிவிட்டு ஓடினாள். பின்னாலயே ரெண்டு பேர் அவளை துரத்திக்.கொண்டு சென்றனர். அவள் விழுந்த பொழுதே அவள்மீது ஒரு வித காதலில் விழுந்துவிட்டாள். அவளது டிபார்ட்மென்ட்க்குச் சென்றாள், ராகுல் ப்ரீத்தி என இரு நண்பர்கள் கிடைத்தார்கள். கிளாஸ் முடிந்து வண்டியை எடுப்பதற்கு ஸ்டாண்ட்க்கு சென்றாள். அங்கு ஜானவி வண்டியை ஸ்டார்ட் செய்து செய்து பார்த்தால் அது ஸ்டார்ட்டானா பாடில்லை. அருகில் சென்று என்ன ஆச்சுன்னு கேட்டாள் கவி வண்டி ஸ்டார்ட் ஆகலன்னு சொன்னா, நா வேணா உங்கள ட்ராப் பண்ணவா என கேட்டாள். மேலும் கீழும் பார்த்தால் நான் உங்க டிபார்ட்மென்ட்தான் சீனியர் நம்பி வாங்க என அழைத்தாள் கவி.
அவளும் வந்தாள் தோள் மீது கை வைத்திருந்தாள் அதுவரை அவள் பார்த்த விஷயங்கள் அனைத்தும் ஜானவியுடன் செல்லும்போது புதிதாக தெரிந்தது. இது எந்த மாதிரியான உணர்வு என விளங்கவில்லை
அவளுக்கு, பஸ் ஸ்டாண்டில் விட்டுவிடு என்றாள். உங்க வீட்டுக்கு நான் வர கூடாத என்றாள் வழியை சொல்ல வீட்டின் அருகில் வந்ததும் நிறுத்து என்றாள். இதான் உங்க வீடா, ஏன் பார்த்த கோவில் மாறி தெரியுதா என கேட்டாள், சீனியர் உங்க பேரு என்ன, உனக்கு வேணும்னா நீ கெஸ் பண்ணு நா சொல்லமாட்டேன் என்றாள். வீட்டை நோக்கி சென்றவளை ஜானவி என அழைக்க திரும்பி உனக்கு எப்படி தெரியும் என்றாள். வண்டியை விட்டு இறங்கி அவள் அருகில் சென்று அவளின் கண்ணாடியை கழட்டினாள். அவள் என்னை பார்த்தால் இன்னைக்கு மார்னிங் உன்மேல தான விழுந்தேன். ஞாபகம் வந்துருச்சா, உங்க பிரண்ட்ஸ் நில்லு ஜானவின்னு கத்திட்டே பின்னாடி வந்தாங்க. சரி நான் கிளம்புறேன் லேட் ஆயிடுச்சு என்றாள் கவி. பத்திரமா போ ரீச் ஆனதும் எனக்கு மெசேஜ் பண்ணு, என்கிட்ட உங்க நம்பர் இல்லையே, உன் போன் நம்பர் சொல்லு நான் கால் பண்றேன் நீ சேவ் பண்ணிக்கோ உன் பேரு என்ன கவிதா ஸ்ரீ என்றாள்.
சரி என்று உள்ளே சென்று விட்டாள் கவியும் கிளம்பி விட்டாள். ஜானவி போனையே பார்த்து கொண்டிருந்தாள் ரெண்டு மணி நேரம் ஆகியும் மெசேஜ் வரவில்லை. இவளே வீட்டுக்கு போய்டியா? என மெசேஜ் அனுப்பினாள் ஒரு மணி நேரம் ஆச்சு அதுக்கும் பதில் வரல சரின்னு
போன வச்சுட்டு போய்ட்டா. மறுநாள் டிபார்ட்மென்ட்க்கு வெளியே ஜானவி நின்று பேசிக்கொண்டு இருந்தாள் கவி வந்தாள் சீனியர் என அழைக்க அவள் உள்ளே சென்று விட்டாள். இன்டெர்வல் டைம்ல ரெண்டு பேரும் வெளிய வந்தார்கள் நேத்துல இருந்து சாப்பிடாம இருக்க வா கவி சாப்பிட போலாம் என ராகுல் அழைக்கிறான். ஏன் நேத்துல இருந்து சாப்பிடாம இருக்க என ஜானவி கேட்க அப்பாக்கு காலுல கல்லு விழுந்து எட்டு தையல் போட்டுருக்காங்க. நேத்து வீட்டுக்கு போனப்ப பக்கத்து வீட்டு அக்கா சொன்னாங்க சுபா ஹாஸ்பிட்டல இருக்காங்கன்னு நைட் அங்க தான் இருந்தேன் அதான் மெசேஜ் பண்ண முடியல சாரி சீனியர் என்கிறாள்.
திரும்பியவளை கைபிடித்து நிறுத்தி உன் நிலைமை என்னனு தெரியாம கோவப்பட்டதுக்கு நா தான் சாரி கேக்கணும் சாரி கவி என்கிறாள். பரவால்ல சீனியர், வா நான் கூட்டிட்டு போறேன் என கேன்டீண்க்கு அழைத்துச் செல்கிறாள். அங்கு சாப்பாட்டை நோண்டிக் கொண்டே இருந்தாள் கவி என்ன பண்ற நீ சாப்பிடமா என அவள் ஊட்டி விட்டாள். கவி நிமிர்ந்து அவளை பார்க்க சாப்பிடு என முழுவதையும் சாப்பிட வைத்து விட்டு நீ கிளாஸ்க்கு போ எனக்கு ஆபீஸ் ரூம்ல வேல இருக்கு நான் ஈவினிங் உன்ன பாக்குறேன் என கூறிவிட்டு சென்றுவிட்டாள்.
ராகுலும் ப்ரீத்தியும் என்ன கவி சீனியர் உனக்கு சாப்பாடுலாம் ஊட்டி விடுறாங்க அந்த அளவுக்கு ஆயிருச்சா என கிண்டல் செய்ய பேசாம இருங்க என சிரித்து விட்டு சென்றுவிட்டனர். மதியம் கேன்டீண் போலாம் என வெளியே வந்தாள் கவி இந்தா இப்பயாவது ஒழுங்கா சாப்பிடு என பார்சலை குடுத்து விட்டு போனாள் ஜானவி. ஈவினிங் வண்டி எடுக்க போனாள் கவி அங்கு ஜானவி நின்று கொண்டிருந்தாள். சீனியர் வீட்டுக்கு போலையா, போணும் உன்ன பாக்கணும்ன்னு தான் வெயிட் பண்ணேன்.
வெளியே காட்டிக்கொள்ள விட்டாலும் உள்ளுக்குள் அளவற்ற மகிழ்ச்சி கவிக்கு சொல்லுங்க சீனியர் என்றாள். உனக்கு தொந்தரவு இல்லனா என்னய எங்க வீட்டுல விட முடியுமா? என கேட்டாள் அதவிட எனக்கு என்ன பெரிய வேல வாங்க சீனியர் என அழைத்துச் சென்றாள். இவ்வாறாக இருவரும் ஒன்றாக நேரம் செலவிட ஆரம்பித்தர்கள். ஒருநாள் ஜானவி ஹாக்கி விளையாடி கொண்டிருந்தாள் கவி அந்த வழியா வருவதை பார்த்த ஜானவி பந்து வருவதை கவனிக்கவில்லை சீனியர் என கத்துவதற்குள் பந்து அவளின் நெற்றியில் பட்டுவிட்டது அப்படியே மயங்கி விழுந்து விட்டாள். கண் முழித்ததும் முதலில் பார்த்தது கவியை தான், ஜானவி கையை நீட்ட கையை பிடித்தாள் கவி கவனமா இருக்க மாட்டிங்களா சீனியர் என்றாள். நான் நல்லா தான் இருக்கேன் கவி நீ கவலைப்படாத என்கிறாள்.
ஹாஸ்பிட்டலில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு போனாள். அந்த பொண்ணு யாரு பாப்பா நைட் நான் கொஞ்சம் அசந்து தூங்கிட்டாலும் கூட அவ கண்ணு முழுச்சு உன்ன பாத்துக்கிட்டா உன் பெட் கிட்ட தான் படுத்திருந்தா என ஜானவியின் அம்மா கேட்டாள். அவ என் ஜூனியர் மா நல்ல பொண்ணு, சரிம்மா எதாவது சாப்பிடுறியா எதுவும் வேணாம்மா நான் கொஞ்ச நேரம் தூங்குறேன் என்கிறாள். மறுநாள் பெஞ்சில் அமர்ந்து படித்துக் கொண்டிருந்தாள் கவி ஜானவி அவள் அருகில் சென்று எங்க அம்மா உன்ன ரொம்ப பாராட்டுனாங்க, நீ தான் என்ன நைட்லாம் பாத்துகிட்டியாமே. ஆமாம் சீனியர், உங்கள எனக்கு என அவள் சொல்ல ஆரம்பிக்க ஜானவி எவ்ளோ நாலு ஆச்சு உன்ன பாத்து என அவளின் பிரண்ட்ஸ் அவளை சூழ்ந்து கொள்ள கவி அங்கிருந்து சென்றுவிட்டாள். ஆமா அவ நாம ஜூனியர் பொண்ணு தான ஹாஸ்பிடல அவளை பார்த்தேன் என ஒருத்தி கேட்க ஆமா என ஜானவி தலையசைக்க உன் பின்னாடியே சுத்திட்டு இருக்கா என்ன விஷயம் என்கிறாள். அதெல்லாம் ஒன்னும் இல்ல நீங்க வாங்க என அழைத்துக் கொண்டு சென்றுவிட்டாள். கிளாஸ் நடந்து கொண்டிருக்கும் போது கூர்க் அண்ட் மைசூர்க்கு டூர் கூட்டிட்டு போக போறோம் யாரு யாரு வரீங்களோ டிபார்ட்மென்ட் சீனியர் ஜானவி கிட்ட நேம் குடுங்க என ஒரு மேம் வந்து சொல்லிவிட்டு போனார்கள். ராகுல் ப்ரீத்தி இருவரும் கவி நாமளும் டூர் போலாம் என கூற பாக்கலாம் என்கிறாள். உன் ஆளு வராங்க நீ வரமா இருப்பியா என கேட்கிறான் ராகுல். அப்படியா அப்போ போலாம் என்கிறாள் பேரை குடுத்துவிட்டு இந்தாங்க சீனியர் என ஜூஸை அவளுக்கு நீட்ட ஜானவி வாங்கி கொள்கிறாள்.
ஜூஸ் அந்த சீனியர்க்கு மட்டும்தானா எங்களுக்கெல்லாம் இல்லையா என கேட்க ஜானவி அவளை முறைக்க அமைதியாகி விட்டாள், நீ போ என்றதும் கவியும் அங்கிருந்து சென்று விட்டாள். அவள ரொம்ப கேர் பண்ற ஏன்? ஏன்னா அவளை எனக்கு புடிக்கும் என்கிறாள். இந்தமாரி பேசுற ஆளு இல்லையே நீ, புடிக்கும்ன்னு தான சொன்னே இதுல என்ன தப்பு உங்க வேலைய பாருங்க என கூறவும் அவரவர் வேலையை பார்க்கின்றனர். டூர் செல்லும் நாளும் வந்தது, பஸ்சில் ஜன்னலோரமாக அமர்ந்து காதில் ஹெட்செட் போட்டு பாட்டு கேட்டுக் கொண்டிருந்தாள் கவி. ஜானவி அருகில் சென்று ஒரு பக்கத்தை எடுத்து அவள் காதில் வைத்து கொண்டாள், நீ டான்ஸ் ஆடலையா? என கேட்க ஆடுற மைண்ட்ல இல்ல சீனியர் ஏன் என்ன ஆச்சு? ஒன்னும் இல்ல சீனியர், என்கிட்ட சொல்லமாட்டியா? அதுவந்து ஹே ஜானவி இங்க என்ன பண்ற வா டான்ஸ் ஆடலாம் என கூட இருந்தவள் இழுத்துக் கொண்டு சென்றுவிட்டாள், கடுப்பாகி போன கவி மீண்டும் பாட்டு கேட்கத் தொடங்கினாள்.
கூர்க் வந்துருச்சு ரொம்ப குளிரா இருக்கும் எல்லாரும் ஜெர்கின் போட்டுக்கோங்க நைட் இங்க தங்கிட்டு மார்னிங் சுத்தி பாக்க போலாம் எல்லாரும் இறங்குங்க என மேம் சொல்ல அனைவரும் இறங்கி விட்டனர். ஜானவி பேக்கை திறந்து திறந்து பார்க்கிறாள், பேக் ஜிப் ஸ்டக் ஆகிருச்சு அதை பார்த்த கவி தனது ஜெர்கினை அவளின் மீது போட்டுவிட்டு கடந்து சென்றுவிட்டாள். அனைவரும் சாப்பிட்டுவிட்டு தூங்க சென்றுவிட்டனர், ஜானவி பாத்ரூம் போக வெளிய வந்தாள். கவி பால்கனியில் உள்ள ஷேரில் அமர்ந்திருந்தாள், கவி இங்க என்ன பண்ற சும்மா தான் சீனியர் நிலாவ ரசிச்சுட்டு இருக்கேன். அப்படியா என அவள் தோளின்மீது சாய்ந்து கொண்டாள், உன்கூட இருக்கும் போது நான் ரொம்ப சந்தோசமா பீல் பண்றேன் சிரித்தாள் கவி. அப்படியே பேசிக்கிட்டே இருந்தனர் அவள் மனதில் தோன்றியதை சொல்ல ஆரம்பித்தாள் எனக்கும் தான் சீனியர் உங்ககூட இருக்கும் போது ஒரு மாறி நல்லா இருக்கு இது எந்த மாதிரியான உணர்வுன்னு எனக்கு தெரியல. நீங்க சாப்டு போட்ட சாக்லேட் பேப்பர் நீங்க அன்னைக்கு வெல்கம் பார்ட்டில கேக் குடுத்த பேப்பர் பிளேட் இந்தமாரி ஒவ்வொரு பொருளையும் நா சேத்து வச்சுருக்கேன்.
இதுக்கு முன்னாடி யார்ட்டயும் நா இந்த மாறி பீல் பண்ணதில்ல இது சரியா தப்பா இதுக்கு என்ன அர்த்தம் எதுமே எனக்கு தெரியல. உங்ககூட இருக்கனும்ன்னு தோணுது உங்கள லைப்ல இழந்துரகூடாதுன்னு தோணுது. ஆனா உங்க கூட நேர்ல கொஞ்ச நேரம் கூட பேசமுடியல யாராவது வந்து கூட்டிட்டு போயிடுறாங்க. என்ன சீனியர் அமைதியாவே இருக்கீங்க அவளை பார்த்தாள் ஜானவி தூங்கிவிட்டாள், அவளும் தூங்கிவிட்டாள். காலையில் சீனியர் போய் ரெடி ஆகுங்க உங்க பிரண்ட்ஸ் தேடிட்டு வந்துருவாங்க என எழுப்பினாள். என்ன பேசிட்டு இருந்த நைட் தூங்கிட்டேன் சாரி. அதெல்லாம் ஒன்னும் இல்ல சீனியர் சும்மாதான் பேசிட்டு இருந்தேன் நீங்க போய் ரெடி ஆகுங்க என சொல்லிவிட்டு சென்றுவிட்டாள். டூர் முடிந்து காலேஜ் வந்து பல மாதங்கள் கடந்து விட்டது.
இப்போ கவி ஹெட் சீனியர் ஜானவி அவளை பார்க்க வந்தாள். ஹலோ சீனியர் என்றாள் கவி என்ன இந்த பக்கம் உன்ன பாக்கதான் வந்தேன். சொல்லுங்க சீனியர் ஒரு ஹாப்பி நியூஸ் என்னன்னு சொல்லுங்க சீனியர் இந்தா என
இன்விடேஷனை நீட்டினால் ஜானவி. யாருக்கு சீனியர் கல்யாணம் எனக்குதான் மொத இன்விடேஷன் உனக்கு தான் குடுக்கணும்ன்னு வந்தேன். நான் மட்டும் பையன பொறந்துருந்தா உங்களதான் கல்யாணம் பண்ணிருப்பேன். உனக்கு எப்பயுமே விளையாட்டு தான் கல்யாணத்துக்கு ஒரு வாரத்துக்கு முன்னாடியே வந்துரு உன்ன எதிர்பாத்துட்டு இருப்பேன். ஈவினிங் வீட்டுக்கு வா ஒன்னா ஷாப்பிங் போலாம்.
கன்னத்தை தடவி விட்டு செல்பவளிடம் எப்படி புரியவைப்பாள் அவள் மன உணர்வுகளை….