யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்…?!





அப்பா விட்டுட்டுப் போன ஆயிரங்கோடி சொத்துக்கு அதிபதியானாள் அபர்ணா. தன் நிர்வாகத்தில் எல்லாரையும் புதிதாய் நியமிக்க முடிவு செய்தாள். அப்பா காலத்து ஆட்களுக்கெல்லாம் வயசாகிவிட்டது. நவீன யுகத்தில் மாற்றங்களை ஏற்கவும், மாறவும் முடியாத சிக்கலில் அவர்கள்!. என்ன செய்யலாம்??!!

யோசித்தவளுக்கு செல்போனில் வழிகாட்டியது ஒரு மெசேஜ். இண்டர்வியூவுக்காக வருபவர்களைப் பரிசோதிக்க அவர்கள் லிப்ட் ஏறி மாடி போகையில் மறைந்திருந்து லிப் வாசலில் ஒரு பண்டில் பணத்தைப் போட்டு ,அங்கே காவலுக்கு நின்றவன் மூலம் ‘இது உங்க பணமா?’ எனக் கேட்டு ‘செக்’ செய்து நல்லவனை இனங்காணும் காட்சியைத் தானும் செய்து பார்க்க விரும்பினாள்.
லிப்ட் வாசலில் ஒளிந்து நின்று பணக்கட்டைப் போட, எல்லாரும் தன்னுடையது என்று வாங்கிக் கொண்டார்களே ஒழிய ஒருவரும் திருப்பித் தரவில்லை. யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்?!
கடைசியாக வந்த அந்தப் பெண் உடையில் ஏழ்மை தென்பட, அவள் கண்டிப்பாய் நல்லவளாய் இருப்பாள். மற்ற பகட்டுக் காரர்கள்போல் பணத்தை எடுக்காமல் திருப்பித் தருவாள் என்று நம்பி பணத்தைப் போட்டுக் காத்திருந்தாள்!
இண்டர்வியூவில் பணம் எடுத்ததைக் கேட்டு மிரட்ட, எடுத்த எல்லாரும் ஒப்புக் கொண்டார்கள். வேலை இல்லை வெளியே போ! அனுப்பி வைத்தாள்.
கடைசியாக வந்த ஏழ்மைப் பெண்ணையும் கேட்க, அவள் சாதித்தாள் ‘தான் எடுக்கவில்லை!’ என்று! அப்படியானல் வாசலில் போட்ட பணம் எங்கே போனது?!
சிசிடிவியை ஓட விட்டுப் பார்க்க வாசலில் போடச் சொல்லிக் கொடுத்த பணம் அவள் முறை வரும்போது வாசலில் போடப்படவில்லை!
மாறாக வாட்ச்மேன் தானே அதை லபக்கிக் கொண்டது சிசிடி பதிவுல் பதிவாகியிருக்க, வாட்ச் மேனைக்கூப்பிட்டு ‘வேலை இல்லை! வெளியே போ!’ விரட்டினாள் அபர்ணா!.
வாட்ஸ்மேன் திருடியதால் அந்த ஏழ்மையிலிருந்த அபலைக்கு வேலை கிடைத்தது!