முன்னேற்றம்!




“என்னங்க!…….இந்த அநியாயத்தைக் கேட்டீங்களா?….எங்களோட தினசரி ‘வாக்கிங்’ வரற சுந்தரிக்கு இன்று என்ன நடந்தது தெரியுமா?”
“ சொன்னாத் தானே தெரியும்?….”
“ சுந்தரியின் கழுத்து செயினை இன்னைக்கு அறுத்திட்டுப் போயிட்டாங்க!…..”
“இதில் என்னடி அதிசயம் இருக்கு?….நம்ம கோயமுத்தூரிலே இது தினசரி நடக்கிறது தானே?…”
“ என்னங்க அநியாயமா இருக்கு!…எட்டுப் பவுன்….கெட்டிச் செயினுங்க… செயினை அறுக்க ஒரு கத்தியைப் பயன் படுத்தியிருக்காங்க…அது ஆபரேஷன் தியேட்டர் கத்தி மாதிரி இருந்ததாம்!…..இரண்டு பேருமே ஹெல்மெட் போட்டிருந்தாங்களாம்! ….வண்டி ஒரு நொடி தான் நின்னுதாம்… பின்னாலே இருந்தவங்க தான் செயினுக்குள் கத்தியை விட்டு ஒரு நொடியிலே அறுத்திட்டாங்களாம்! கழுத்துக்கிட்ட கத்தி வந்ததும் காயம் பட்டு விடுமென்று சுந்தரி மூச்சு விடலையாம்!….”
“ சரியடி!…..நீ தினமும் பேப்பர் பாக்கறே இல்லே……செயின் பறிப்பு பற்றி தினசரி இரண்டு நியூஸாவது போடறான்!….இதை அதிசயமென்று சொல்ல வந்திட்டே!…..நான் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன் நீங்க எங்க போனாலும் நாலு பேரு சேர்ந்து போங்கனு…”
“நான் முழுசா சொல்லறதுக்குள்ளே இப்படி பறக்கிறீங்களே!…..சுந்தரி செயினை அறுத்திட்டுப் போனது யாருனு நினைக்கிறீங்க?…”
“ஏன்….உனக்குத் தெரிஞ்சவங்களா?….”
“ இந்த கிண்டல் தானே வேண்டாங்கறது……ஸ்கூட்டியிலே வந்து செயினை அறுத்திட்டு போன இரண்டு பேருமே இளம் பெண்ணுங்க!…”
“அடேயப்பா!…. பெண்கள் ரொம்ப முன்னேறிட்டாங்க போலிருக்கு!…..”
– பொதிகைச் சாரல் 2014
![]() |
கடந்த 60 ஆண்டுகளில் கதை, கட்டுரை, நாவல்கள், தொடர்கதைகள் என 600-க்கும் மேற்பட்ட படைப்புகளை எழுதியிருக்கும் துடுப்பதி ரகுநாதன், 80 வயதைக் கடந்த நிலையில் இன்னும் சுறுசுறுப்பாய் எழுதிக்கொண்டிருக்கிறார். தற்போது கோவை நஞ்சுண்டாபுரம் சாலை நேதாஜி நகரில் வசித்து வரும் துடுப்பதி ரகுநாதனை சந்தித்தோம். “பூர்வீகம் ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகேயுள்ள துடுப்பதி. பெற்றோர் செல்லப்பன்-செல்லம்மாள். ஜவுளி வியாபாரம். பெருந்துறை உயர்நிலைப் பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி முடித்துவிட்டு, கோவையில் தங்கி கூட்டுறவில்…மேலும் படிக்க... |