முதலை வாய் யானை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: March 15, 2020
பார்வையிட்டோர்: 3,010 
 
 

“பாட்டி, பாட்டி” என்றார்கள் விரைக்க விரைக்க ஓடி வந்த சிறுவர்கள்.

“தம்பிமாரே ஏன் இப்படி ஓடி வருகிறீர்கள்?’ என்றாள் ஓளவை. ஆற்றுக்குக் குளிக்கப் போனோம் அதிக ஆழம் இல்லை பாட்டி”

“என்ன, யாராவது மூழ்கி விட்டார்களா?”

“ஆள் ஆல்ல. யானை. பெரிய யானை!” ”யானையா?”

“முதலை இழுத்துக் கொண்டு போய் விட்டது.”

”சிறிய அளவு நீர் என்றால் என்ன? நீருள் இருக்கும் போது யாரே முதலையை வெல்ல முடியும். இது போன்ற நம் மன்னன் அதியமான் ஆற்றலை உணராமல் இளையன் என்று இகழ்கிறார்கள் பகைவர்கள். அவர்கள் எண்ணம் ஒருநாளும் ஈடாது. முதலைவாய்ப்பட்ட யானை போல் மாள்வர்.”

– மாணவர்களுக்குப் புறநானூற்றுச் சிறுகதைகள் – முதற்பதிப்பு : ஆகஸ்ட் 2002 – முல்லை பதிப்பகம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *