மறை





(1975ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
‘….ஆனால், பக்தி என்ற தீயும் சேரும் பொழுதுதான் விளக்கினால் ஒளிபரப்ப முடியும்….’

அறையின் இருளைப் பிளந்து பேச்சுக் குரல் கேட்டது.
அவிந்து கிடந்த விளக்கின் திரியும், எண்ணெயுமே உரையாடலில் ஈடுபட்டிருந்தன.
‘நான் ஞானத்திற்குச் சமமானவன்! நானில்லாவிட்டால், இந்த விளக்கிலே ஒளி பிறக்கமாட்டாது. எனவே, ஒளியின் ஆதாரமே நான்தான்’ என்றது.
‘நான் அற்பமாகத் தோன்றலாம். ஆனால், உன்னையும் தீயையும் இணைக்கும் கர்மத்தை இயற்றுபவன் நான். கர்மம் ஞானத்தின் நிமித்தமாக இருப்பதினால், ‘கர்மம் ஞானத்தின் திரியாகும்’ என அறிந்தோர் என்புகழ் சாற்றுவர்’ எனத் திரி தன் கட்சியைப் பேசியது.
எண்ணெய்யும் திரியும் தாம் தத்தமது பெருமைகளை இருளிலிருந்து பேசுவதை மறந்துவிட்டன.
ஈசன் தீயை எடுத்துத் திரியின் முனையிலே சுடரை ஏற்றினான்!
அறையிலே ஒளி பரவியது. அத்துடன் ஈசனின் சிரிப்பு அலைகளும் விரிந்தன.
‘எண்ணெய்யுந் தேவைதான்; திரியுந் தேவைதான்! ஆனால், பக்தி என்ற தீயும் சேரும்பொழுதுதான் விளக்கினால் ஒளிபரப்ப முடியும். இது விளக்கிற்கும் பொருந்தும், மக்களின் பாவனைக்கும் பொருந்தும்’ என்றான் ஈசன்.
‘நான்!’ எனக் கேட்டது விளக்கு.
‘நீ உடல்!’ என்றான் ஈசன்.
அறையிலே சுடரின் தவக்கோவலம் அழகு சிந்தக் தொடங்கிற்று.
– கீதை நிழலில், முதற் பதிப்பு: அக்டோபர் 1975, கலைஞன் பதிப்பகம், சென்னை.