கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 13, 2025
பார்வையிட்டோர்: 200 
 
 

(1999ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஒரு ஊர்ல, அண்ணந் தம்பி இருந்தாங்க. அவங்களுக்கு ஒரு தங்கச்சி இருந்தா. தங்கச்சி கொள்ள அழகு. அவள, ஒரு பக்கத்து ஊரு பணக்காரன், கலியாணம் முடுச்சுக்கிட்டுப் போயிட்டா. 

அதுக்குப் பெறகு, அண்ணனும் கலியாணம் பண்ணிக்கிட்டா. தம்பிக்கும் ஒரு நல்ல பொண்ணா பாத்து கலி யாணம் செஞ்சு வச்சா. 

இந்த சமயத்ல, அண்ணனுக்கு நல்ல நேரம். நல்லாப் பொளக்கிறர். தம்பிக்குக் கெட்ட நேரம். சொத்தெல்லாம் போயி, ஏழயாப் போயிட்டர். தங்கச்சி பணக்காரியா பொளக்கிறா. 

ஒருநா அண்ணனும் தம்பியும் தங்கச்சி வீட்டுக்குப் போறாங்க. அப்ப, தங்கச்சி, சின்ன அண்ணனுக்குக் கேப்பக் களியும், பெரியண்ணனுக்கு அரிசிச் சோறும் போட்டு வச்சா. சின்னணணன் ஏழயில்ல. அதனால – அவனுக்கு கேப்பக் களி. 

வீட்டுக்கு வந்தாங்க. அண்ணன், தம்பிக்குக் கொஞ்ச நெலமும், ஒரு சோடிக் காளமாடுங் குடுத்தா. அத வச்சு, வெவசாயம் பண்ணி, மாடி வீடு கட்டி, பெரிய பணக்காரனாயிட்டா. ஆரு? தம்பி. 

அண்ணந் தம்பிக, ரெண்டுபேரும் வீடும். எதுக்க எதுக்க இருக்குது. தங்கச்சி, பெரிய அண்ணன் வீட்டுக்குப் பெண் கேட்டு வர்ரா. வந்தவ, சின்ன அண்ணன் வீட்டப் பாக்குறா. பாக்கயில, வீடு பெரிசா இருக்கு. சின்ன அண்ணன் வீட்லயும் பெண் இருக்கு. பெரிய அண்ணன் விட்டுக்குப் போகாம, தாங் கொண்டு வந்த ஏழு தட்டுப் பொன்னயும் சின்ன அண்ணன் வீட்ல எரக்கிட்டா. 

கொண்டு வந்ததெல்லாத்தயும் சின்ன அண்ண வீட்ல வச்சுட்டு, மகனுக்குப் பொண்ணு குடுக்கணும்ண்டு கேக்குறா. 

அண்ணமாரு ரெண்டு பேருஞ் சேந்து, அவ கொண்டு வந்ததெல்லாத்தயும் புடுங்கிக்கிட்டு, வீட்டுக்குள்ள விடாம வெரட்டியடுச்சுட்டாங்க. 

பேராச புடுச்சவளுக்கு எப்டி மருவாதி கெடைக்கும் அழுதுகிட்டு ஊருக்குப் போனாளாம். வீட்டப் பாத்து, பொண்ணு கேக்குறா பாரு. இந்தக் காலத்ல ஆள ஆரு பாக்குறா.

– மதுரை மாவட்ட நாட்டுப்புறக் கதைகள், சமூக வரலாற்றுக் கதைகள், முதற் பதிப்பு: 1999, மதுரை காமராசர் பல்கலைக் கழகம், மதுரை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *