மகா கஞ்சன்
(1999ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஒரு ஊர்ல, புருச் பொண்டாட்டி இருந்தாங்க. புருச் இருக்கானே மகாக் கஞ்சன். அவ் அதுக்கு மேல சிக்கனகாரி. யாரயும் ஏமாத்தி பணஞ் சம்பாரிப்பர். ஏமாத்தி படுபாதாளத்லயும் தள்ளியும் விட்டுருவா. லேசுல, இவ் சம்பாரிக்கிறத செலவளிக்க மாட்டர். செலவளிக்காம மிச்சம் புடுச்சு வச்சிட்டு, கூழாக் காச்சி குடுச்சுக்கிட்டு காலத்தப் போக்கிக்கிட்டிருக்காங்க.
இருக்கயில, இவ் வீட்டுக்கு எதுத்த வீட்ல, ஒரு பணக்காரன் இருந்தர். வார ருமானத்த வச்சு, வசதியா சாப்பிட்டுக்கிட்டிருந்தா. இது இவனுக்குப் பொறுக்கல. ஆருக்கு? கஞ்சனுக்குத்தான். எதுத்த வீட்டுக்காரன, எப்டிண்டாலும் ஏழயாக்கிப்பி டணும்ண்டு பாக்குறா.
இப்டி இருக்கயில, கஞ்சனும் – கஞ்சன் பொண்டாட்டியும் அவங்க குடிக்கிற கூழுக்கு, பாலுண்டு பேரு வக்கிறாங்க. கூழுக்குப் போடுற உப்புக்கு, சக்கரண்டு பேரு வக்கிறாங்க. கடுச்சுக் குடிக்கிற பட்ட மொளகாய்க்கு, பழம்ண்டு பேரு வக்கிறாங்க.
ஒருநாள், சாப்பிடப் போகயில, பால, பழஞ் சக்கர கொண்டு வாடிண்டு, அடுத்த வீட்டுக்காரனுக்கு கேக்குற மாதிரி சத்தம் போட்டு, பொண்டாட்டிகிட்ட சொல்றா. சொல்லவும், பொண்டாட்டி, கூழு, பட்ட மொழகா, உப்பு கொண்டு வாரா. கொண்டு வந்து, கூழக் குடிச்சிட்டு, எண்ணயில கையத் தொட்டுட்டு வந்து வெளிய கை கழுவுறர். கூழக் குடிக்கிறது, எண்ணயில கைய முக்குறது, வாழ எலயில தடவுறது, வெளிய கொண்டு போயி போடுறது. இப்டியே தெனமும் நடக்குது. அடுத்த வீட்டுக்காரப் பணக்காரனுக்கு ஏகப்பட்ட சந்தேகம். அவனே கஞ்சனாச்சே. எப்டிறா இதெல்லாஞ் செய்யுறாண்டு, சந்தேகப்பட்டு இவனும் ஆரம்பிச்சுட்டா.
கஞ்சனே பால் பழந் திங்கிறபோது, நம்ம எப்டி சோற மட்டும் திண்டுகிட்டிருக்கிறதுண்ட்டு, இவனும் பாலுபழம் திங்க ஆரம்பிச்சிட்டா.
அவ கூழக் குடிச்சுப்பிட்டு வந்து, எண்ணயில கைய நனச்சு, எண்ணயோட வாழ எலயக் கொண்டு வந்து வெளிய போடுறர். பணக்காரன் என்னா செய்யிறர்ண்டா, உம்மயாவே பாலு, பழம் வேணுங்றதெல்லாம் வாங்கி சாப்ட்டு, ரூவாய வீணாச் செலவளிக்கிறர்.
அப்ப, கஞ்சனுக்குப் பணம் பெருகுது. பணக்காரன் பக்கத்ல பணங்கொறயுது. கஞ்சனுக்கு, இவன எப்டிண்டாலும் ஏழயாக்கணும்ண்டுதான; இதெல்லாஞ் செய்யுறா.
அவ செய்யுறது, பணக்காரனுக்குத் தெரியல. நாளுப் போகப் போக சூச்சியத்த தெரிஞ்சுக்கிட்டு, பழப்படி, எப்பயும்போல பொளப்ப நடத்துனானாம். இதுக்குத்தான், பக்கத்து வீட்டுக் காரனப்பாத்து எதயும் செய்யக் கூடாதுண்டு சொல்றது. பக்கத்து வீட்ல ஆயிரம் நடக்கும். நம்ம, நம்ம வீட்ட மட்டும்தான பாக்கணும்.
– மதுரை மாவட்ட நாட்டுப்புறக் கதைகள், சமூக வரலாற்றுக் கதைகள், முதற் பதிப்பு: 1999, மதுரை காமராசர் பல்கலைக் கழகம், மதுரை.