கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 19, 2025
பார்வையிட்டோர்: 271 
 
 

பால சுப்ரமணி அவனை அருகில் அழைத்தார்.’என்னடா நீ கூட்டம்போட்டு பேசீடிருந்தே?! எதைப்பற்றி?’ கேட்டார் முத்தையனை.

முத்தையன் சொன்னான், ‘அது வேற ஒண்ணுமில்லே… சிவராமனால எனக்குக் கொஞ்ச நாளாவே பிரச்சனை. அதான், அவனை தீர்த்துக் கட்டிடலாம்னு முடிவு பண்ணீட்டேன். நார்த்துல இருந்து ஆளுங்களை ஏற்பாடு செய்யச் சொல்லீருக்கேன். பிரச்சனைக்குத் தீர்வு காண இதைத் தவிர வேறு வைழ் தெரியலை!’ என்றான் பாலசுப்ரமணியிடம்.

பாலசுப்ரமணி அவனுக்குக் குருமாதிரி. அவன் சொன்னதைக் கேட்டு அதிர்ந்து போனவ அவர், அவனை அழைத்துக் காதுகளில் மெதுவாக அவனுக்கு மட்டும் கேட்கும்படி சொன்னார்.

‘முத்தையா… நீ நல்ல அறிவாளி…! பிரச்சனைத் தீர்க்கணும்னா ஒருத்தனை தீர்க்கறதல்ல வழி!. அது மேலும் பிரச்சனையை அதிகரிக்குமே ஒழிய குறைக்காது’.

‘அப்ப என்ன செய்யறதாம்?’

‘பேச்சுதான் பிரச்சனைக்குத் தீர்வு! பேசிப்பாரேன்!’

‘பேசினா அவன் கேட்க மாட்டான்!’

‘இல்ல, முத்தையா நீ பேசு…! பேச்சுதான் தீர்வுக்கு வழி!. நாம் பேசறோம்.. ஆனா, ஒருத்தருக்கு ஒருத்தரல்ல…! ஒருத்தரைப் பற்றி ஒருத்தர். அதான் நாம பண்றா பெரிய தப்பு!

பிரச்சனை தீரணும்னா…. ஒருத்தருக்கொருத்தர் பேசணுமே ஒழிய… ஒருத்தரைப் பற்றி ஒருத்தர், வேறு ஒருத்தரோடு பேசக்கூடாது! நேரடியா அவரோடேயே பேசித் தீர்! பேசு மனமே பேசு! மனம் விட்டுப் பேசு!

பேச்சுக்குதவும் நாக்கை பல் பெட்டகத்துக்குள் பாதுகாப்பாக இயற்கை வைத்திருப்பதற்குக் காரணமே, ‘நாக்கு நெருப்பு மாதிரி இல்லேனா செருப்பு மாதிரி!. நீ எப்படி எடுத்துட்டாலும் சரி. சிக்கிமுகிகிக் கல்லா உராய்ந்து அது, நெருப்பை உண்டாக்கும்!

நெருப்பும் அதுதான். மகாபலியை அடியளந்த பாதுகையும் அதுதான்.

பரதன் பாதுகாபிசேகம் செய்து, பாதுகையை அரசாள வைத்தது போல நாம் நாவால் அரசாளணுமே ஒழிய, பாதுகையாக்கி ஒருத்தனை மண்ணுக்குள் புதைத்து விடக்கூடாது!’ என்று பாலசுப்ரமணி சொன்னதும் மெளனமானான் முத்தையன்.

வளர்கவி இயற்பெயர்: வே.ராதாகிருஷ்ணன் புனைபெயர்: வளர்கவி கோவை பிறந்த ஊர்: ஸ்ரீவில்லிபுத்தூர். வாழ்விடம்: கோவை. கல்வித்தகுதி: எம்.ஏ (வரலாறு)எம்ஏ (தமிழ்) எம்ஃபில் தமிழ்(ஈரோடு தமிழன்பன் கவிதைகளில்). குருநாதர்: தடாகம் இளமுருகு தமிழாசிரியர். பணி: பட்டதாரி ஆசிரியர் மணி மே.நி.ப கோவை - 23 ஆண்டுகள். பகுதிநேர அறிவிப்பாளர்: ஆல் இண்டியா ரேடியோ கோவை - 18 ஆண்டுகள் ஞானவாணி கோவை - 4 ஆண்டுகள். வெளியிட்ட நால்கள் - 3 1.…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *