புத்திஜீவிகள்




(1999ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அப்பு, அன்று காலையே அடுத்த நாள் கூட்டத்திற்கு தயாராகிவிடுவதற்காக, தனது வேட்டி, சால்வையை நீலம் போட்டு வெள்ளையாகத் தோய்த்துவைத்தார். அடுத்தநாள் விடிய கூட்டத்திற்குப் போவதற்கு முன்பு முகச்சவரம் செய்வதற்காக ஒரு பிளேட்டையும் வாங்கி வந்து வைத்தார்.

“வெங்காய உற்பத்தியும், உற்பத்தி செய்த வெங்காயத்தைக் கொழும்புக்கு அனுப்புதலும்”
இதுதானாம் நாளைய கூட்டத்திலை அரசாங்க அதிபர் அவர்களும் கொழும்பிலை இருந்து வந்த பெரிய அதிகாரியும் பேசப்போற் விடயமென்று அப்பு சொன்னார்.
அடுத்த நாள் காலை செக்க லோடு எழும்பிய அப்பு, முகச்சவ ரம் செய்து கொண்டு, குளித்த பின் அடுத்த தோட்டத்துச் சொந்தக் காரனாகிய சின்னத்துரையையும் ஒன்பதுமணிபோல் கூட்டத்திற்குப் போக வரச் சொல்லிவிட்டு, வந்து கோப்பியைக் குடித்தார்.
சரியாக ஒன்பது மணி போல அப்பு தனது தோய்த்து நீலம் போட்ட வேட்டியை கட்டி தோளில் சால்வையையும் போட்டுக் கொண்டு சின்னத்துரையையும் கூட்டிக் கொண்டு மகாவித்தியாலய வளவிற்குப் போனார்.
கூட்டம் சரியாக பத்து மணிக்கு ஆரம்பமானது.
வெங்காயச் செய்கை பற்றி கொழும்பிலிருந்து வந்த அதிகாரி என்ன சொல்லப் போறார் என்று அறிய அப்பு மிகவும் ஆவலாக இருந்தார்.
முதலில் அரசாங்க அதிபர்தான் எழுந்து நின்று தனது கண்ணாடியை துடைத்துக் கொண்டு பேச ஆரம்பித்தார். மாலை அணிவிக்கப்பட்டது. கைதட்டல்கள் மண்டபத்தை அதிரவைத்தன.
“விவசாயிகளாகிய நீங்கள் படும் கஷ்டம் நான் அறியாததல்ல. நீங்கள் சேற்றில் கால் பதித்தால் தான் நாங்கள் சோற்றுக்குள் கை வைக்க முடியும். உங்களின் பெறுமதியை இந்த நாடும் நாமும் அறிவோம்…
இங்கிருந்து உங்கள் உற்பத்திப் பொருளான வெங்காயத்தைக் கப்பலில் அனுப்பி வைக்க நானும் கொழும்பிலிருந்து வந்திருக்கும் அதிகாரி அவர்களும் கட்டாயம் நடவடிக்கை எடுப்போம்.
உங்களது நீண்ட நாள் கனவு வெகு விரைவில் நனவாகும் என்று உறுதி கூறிக் கொண்டு கொழும்பிலிருந்து வந்த அதிகாரி அவர்களையும் இங்கு பேசும்படி கேட்டுக்கொள்கிறேன்…
அரசியல்வாதிகள் புத்திஜீவிகள் தமிழில் ஒரு “வணக்கம்” சொல்லி விட்டு அந்த அதிகாரி சிங்களத்தில் பேசினார். அவருக்குப் பல தோட்டக்காரர்கள் மாலை போட்டு அவரின் கைகளையும் பிடித்துக் கொஞ்சினார்கள்.
“நீங்கள் நினைத்துக் கொண்டிருப்பது போல் நாம் உங்களுக்கு எதிரானவர்கள் அல்ல. அரச அதிபர் அவர்கள் சொன்னது போல இம் மாகாணத்து விவசாயிகளின் கடும் உழைப்பையும் பெறுமதியையும் நாம் நன்கு அறிவோம்.
இம்முறை நீங்கள் வேண்டிய அளவு வெங்காயத்தைப் பயிரிடுங்கள். அவ்வளவு வெங்காய த்தையும் கொழும்பிற்குக் கப்பல் மூலம் அனுப்பி வைக்க நாம் கட்டாயம் நடவடிக்கை எடுப் போமென்று இம்மேடையில் நான் உறுதி அளிக்கின்றேன்….” என்று அந்த அதிகாரி சொன்னபோது கரகோஷம் அடங்க சில நிமிடம் எடுத்தது.
“எமக்கெல்லாம் விடிவு காலம் வரத்தான் போகுது” என்றாற் போல அங்கிருந்த தோட்டக்காரர்களுக்கெல்லாம் மனம் குளிர்ந்தது. “…ச்சா… இவரல்லவோ அதிகாரி” என்பது போல ஆட்களை ஆட்கள் பார்த்துக் கொண்டார்கள். அவர்களின் முகமும் அகமும் மலர்ந்திருந்தன.
“உங்களுக்குள்ள பிரச்சினைகளைச்சொல்லவேண்டுமென்றால் இந்த மேடையில் மனம் திறந்து சொல்லலாம்” என்று அந்த அதிகாரி சொல்லிவிட்டு அரசாங்க அதிபரை ஒரு தடவை பார்த்துக் கொண்டார். ஆமோதிப்பது போல் அரசாங்க அதிபரும் தலையை ஆட்டினார்.
“எங்களுக்கு உரம் வேண்டும்”
“எங்களுக்கு குறைந்த வட்டியிலும் நீண்ட தவணை முறையிலும் கடன் வேணும்”
இன்னும் எத்தனை எத்தனையோ எல்லாம் தோட்டக்காரர்கள் விழுந்தடித்துக் கொண்டு மேடை ஏறிச் சொன்னார்கள்.
அப்பு கூட்டம் முடிந்து வரும் பொழுது இரண்டு மணிக்கு மேலாகி விட்டது. அம்மா அப்பு வரும்வரை சாப்பிடாமல் காத்துக்கொண்டிருந்தாள்.
அப்பு அன்று முழுவதும் சந்தோஷமாக இருந்தார். கொழும்பு அதிகாரியும் அரசாங்க அதிபரும் சொன்னதை எல்லாம் மீண்டும் மீண்டும் அம்மாவுக்குச் சொல்லி சந்தோசப்பட்டார். இந்தமுறை எப்படியும் நூறு அந்தர் வெங்காயமாவது கப்பலில் கொழும்பிற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று சொன்னார்.
அம்மாவின் தாலிக் கொடியை அடகு வைத்துத்தான் இந்த முறை வெங்காயச் செய்கையில் இறங்கினார் அப்பு.
அப்பு நினைத்ததைப் போல வெங்காயமும் இந்த முறை நல்ல விளைச்சல்தான். எல்லோருக்குமே நல்ல சந்தோஷம்.
எப்படியும் இந்த முறை வெங்காயத்திலை நல்ல இலாபம் வரும் என்று எல்லோரும் நம்பி இருந் தோம். நாம் எல்லோருமே அப்புவிற்கு உதவி செய்தோம். வீடு நிரம்பிய வெங்காயத்தைப் பார்க்க சந்தோஷமாக இருந்தது.
அப்பு சொன்னது போல், கொழும்பிலிருந்து வந்த அதிகாரியும் அரச அதிபரும் கூட்டத்தில் பேசியது, தோட்டக்காரர் ஒருவர் அந்த இருவருக்கும் மாலை போட்டதும் அடுத்த நாட் பேப்பரில் வந்தது. அப்பு அந்தப் பேப்பரை வாங்கி வாசித்து, சின்னத்துரைக்கும் வாசித்துக் காட்டிவிட்டு வெகு பக்குவமாகவும் பாதுகாப்பாகவும் பேப்பரை தனது ரங்குப் பெட் டியில் வைத்துக் கொண்டார்.
வெங்காயம் பிடி பிடியாய் கட்டி வீட்டுக்குள் பக்குவமாகக் கட்டித் தூக்கிவிடப்பட்டிருந்தது.
அப்பு இப்போது அடிக்கடி மணியகாரன் கந்தோருக்கும், அரசாங்க அதிபர் கந்தோருக்கும் விதானை யாரிடமும் போய் வந்தார்.
அப்புவின் முகத்தில் முந்திய சந்தோசம் இல்லை. இருப்பினும், உற்சாகமாகத்தான் காணப்பட்டார்.
அப்பு ஒவ்வொரு தடவையும் கச்சேரிக்குப் போய் வந்துவிட்டு,
“எப்படியும் அடுத்த கப்பலுக்கு அனுப்பி வைப்பதாக அரசாங்க அதிபர் உறுதி கூறுகிறார்” என்று சொல்லுவார்.
வீடு வேய்ச்சல் முறையும் வந்தது. அப்புவின் கையில் கிடுகு வாங்கக் கூட காசு இருக்கவில்லை. வீட்டை அண்ணாந்து பார்த்து விட்டு பெருமூச்சு விடுவார் அப்பு.
மழை வருவது போல மேகம் கருக் கூட்டினால் அப்புவின் முகமும் அம்மாவின் முகமும் கூடக் கறுத்துச் சோர்ந்து போய்விடும்.
வெங்காயத்தைக் கப்பலில் ஏற்றும் வரை மழை வரக்கூடாது என்று அம்மா எல்லாக் கோயில்களுக்கும் நேர்த்திக் கடன் வைத்தாள். அருகிலுள்ள வைரவருக்கு வடை மாலை சார்த்துவதாகவும் வாக்களித்தாள்.
அம்மாவின் கையில் ஒரு சோடி காப்பு மட்டும் மிகுதியாக இருந்தது. அதில் ஒரு காப்பை விற்றுப் போட்டு வீடு வேயலாம் என்று அம்மா சொன்னபொழுது அப்புவுக்கு மனமில்லாமல் இருந்தது. பார்த்துச் செய்யலாமென அப்பு சொன்னார். ஆனால் அன்று இரவே மழை இடி முழக்கத்தோடு வந்தது.
அப்பு பழங் கிடுகுகளை எடுத்து கூரையில் கிடுகுகள் உக்கிப்போன இடங்களுக்கு எறிந்து ஒழுக்கை ஓரளவாவது கட்டுப்படுத்த முயன்றார். அம்மாவும் நானும் ஓடி ஓடி கிடுகுகளை எடுத்து வந்து அப்புவிடம் கொடுத்தோம். மழைத் துமியில் நனைந்ததால் எனக்கு தலையிடி காய்ச்சலும் வந்தது.
எங்களின் பிரார்த்தனைகள் அத்தனையும் வீணாகிப் போயின. “கண் கெட்ட கடவுள் எங்களுக்குத்தான் இந்தச் சோதனையை விடுகுது” அம்மாமனம் நொந்து கொண்டாள்.
காற்றோடு மழை மிக வேகமாய் பெய்ததால் வெங்காயப் பிடிகள் எல்லாமே நனைந்துவிட்டன. இரண்டொரு தினங்களில் எல்லா வெங்காயப் பிடிகளுமே அழுகி மணக்கத் தொடங்கின.
இனி வெங்காயத்தை கொழும்பிற்கு அனுப்பவே முடியாது. அப்பு விதானையாரைக் கூட்டி வந்து வெங்காயத்தைக் காட்டினார்.
நிலைமைகளை விளக்கி தனக் கூடாக அரச அதிபருக்கு ஒரு கடிதம் எழுதித் தரும்படியும் தான் நஷ்ட ஈட்டுக்குச் சிபாரிசு செய்வதாகவும் அவர் சொன்னார்.
நட்ட ஈட்டுக்கான மனுவை எழுதிக்கொண்டு விதானையாரிடம் இரண்டு மூன்று நாள் திரிந்து கையெழுத்து வாங்கிக் கொண்டு அரச அதிபரைச் சந்திக்கச் சென்றார் அப்பு. முக்கிய வேலையாக தான் கொழும்பிற்குப் போவதாகவும் பத்து நாள் கழித்து வரும் படியும் சொல்லி அனுப்பினாராம் அரச அதிபர்.
அப்புவிற்கு இப்பொழுது மனம் நன்றாகத் தளர்ந்து விட்டது.
பத்து நாள் கழித்து அப்பு கச்சேரிக்குப் போனார். அப்பு கச்சேரிக்கு அரச அதிபரைக் காணச் சென்ற பொழுது யாரோ பாராளுமன்ற உறுப்பினரும் அரச அதிபரோடு கதைத்துக் கொண்டிருந்தாராம்.
அடுத்த முறை அரச அதிபர் கொழும்பிற்கு போகும் பொழுது, அப்புவும் கொழும்பிற்கு வந்தால், சம்பந்தப்பட்ட அதிகாரிகளோடு கதைத்து உழவு யந்திரமொன்று வட்டி குறைந்த கடன் அடிப்படையில் வாங்குவதற்கு உதவி செய்யலாமென்று இருவரும் சொன்னார்களாம்.
படித்தவர்கள் ஏமாற்ற மாட்டார்கள் என்று இன்னமும் நம்பிய அப்பு, அம்மாவிடம் மிகுதியாக இருந்த காப்பு இரண்டையும் விற்று, வீடு வேயாமலே அந்தக் காசைக் கொண்டு கொழும்பிற்குப் புறப்பட்டுப் போனார்.
தனது விடயத்தைப் பற்றிக் கதைத்த பொழுது இருவரும் நன்றாக வாய்விட்டுச் சிரித்தார்களாம். அப்பு சொன்னார்.
புண்ணின் வலியும் கொதிப்பும் அப்புவுக்குத்தானே தெரியும். அவரால் வாய்விட்டுச் சிரிக்க முடியுமா? நட்டம் அப்புவிற்குத் தானே. அதிகாரிகளின் “பட்டா” விற்கு நட்டம் வரப்போவதில்லையே.
அப்பு கொழும்பிற்குப் போய் இரண்டு கிழமைகளாக கடிதம் ஒன்றும் வரவில்லை. அம்மாவும் நானும் காகிதக்காரனை கடிதத் தைப் பற்றி நெடுகக் கேட்டுக் கொண்டிருந்தோம்.
ஒரு மாதத்திற்குப் பின் ஒரு கடிதம் போட்டிருந்தார். லொட்ஜ் அடுத்த முறை அரச அதிபர் ஒன்றில் பாயில்தான் படுப்பதாக கொழும்பிற்கு போகும் பொழுது, வும் கையில் உள்ள பணத்தை அப்புவும் கொழும்பிற்கு வந்தால், மிகவும் கவனமாகத்தான் செலவு சம்பந்தப்பட்ட அதிகாரிகளோடு செய்வதாகவும் எழுதியிருந்தார்.
மேலும் அரசாங்க அதிபர், தான் எல்லா விசயங்களையும் எம்.பி. யிடம் கூறியுள்ளதாகவும் அவர் வங் கியில கடன் பெற உதவி செய் வாரென்றும் கடனைப் பெற்றுவிட்டால் உழவு யந்திரத்தை வாங்கி கப்பலில் போட்டுவிட்டு தான் உடனடியாக வந்துவிடுவதாகவும் எழுதியிருந்தார்.
கடிதத்தை வாசிக்க எனக்கு நல்ல சந்தோசமாக இருந்தது.
“எங்களுக்கு உழவு யந்திரம் கப்பலில் வரும்” என்று எனது சிநேகிதர்களுக்கெல்லாம் சொன்னேன். அவங்களும் அடிக்கடி “கப்பல எப்ப வரும்? உழவு யந்திரம் எப்ப வரும்?” என்று கேட்டுக் கொண்டிருந்தார்கள். நான் அப்பு வரும்வரை பள்ளிக்கூடத்துக்குப் போவதையும் அவர்களோடு கதைப்பதையும் இயன்றவரை தவிர்த்துக் கொண்டேன்.
அப்பு திடீரென்று ஒரு நாள் சாயந்திரம் வந்து இறங்கினார்.
அம்மாவையும் என்னையும் கண்டதும் அப்புவிற்கு சொண்டுகள் துடித்து விம்மலோடு அழுகை வந்தது. அப்பு அழுததைப் பார்க்க எங்களுக்கும் அழுகை வந்தது.
“ஏமாற்றிப் போட்டாங்கள்…. புத்தியாய் நழுவிப் போட்டாங்கள்…” என்று விம்மல் அழுகைக்கிடையே சொன்னார். கடன் தாறதெண்டால் பொறுப்பு வேணுமாம்….
கிடக்கிற ஐந்து பரப்புக் காணியும் வீடும் பலாலியில்தான் இருக் கெண்டும் அதை வேணுமெண்டால் எழுதித் தரலாம் என்றும் தான் சொன்ன பொழுது அதை ஏற்றுக் கொள்ள முடியாதென்று சொன்னாங்களாம்.
அடுத்த நாட் காலை அப்பு ஆத்திரமும் ஆவேசமும் கொண்டவராகக் காணப்பட்டார். “நான் நட்ட ஈடு பெற்றே தீருவேன். இவங்களை கோட்டிலே ஏத்தியே தீருவேன்” என்று அப்பு, தான் றங்குப் பெட்டி யில் பத்திரமாக வைத்திருந்த அந்தப் பேப்பரையும் கொண்டு புறப்பட்டார்.
அப்பு நேராக அப்புக்காத்து கந்தசாமியார் வீட்டுக்குத்தான் போய்க் கொண்டிருந்தார். தாக்கப்பட்ட ஆவேசங்கொண்ட வேங்கையின் சாயல் அவரில் இருந்ததைக் கண்டேன். அப்பு கட்டாயம் வெல்லுவார் எண்டு எனக்குத் தெரியும்.
– அமுது, நவம்பர் 1999.