புது வீடு

ஒரு முன் குறிப்பு: முன்பு நான் ஒரு குறு நாவல், புதுவீடு என்றொரு பெயரில் எழுதினேன் அதுவும் இந்த தளத்தில் போகிறது ஆனால் தலைப்பு ஒன்றாக, இருந்தாலும் பொருள் வேறு ஒரு புதிய வேதத்தைச் சொல்லவே இக் கதையைப் படைத்திருக்கிறேன்- ஆனந்தி.
கண்ணுக்குள் களை கட்டி என்றும் சிரஞ்சீவியாக மாதுவின் மனதின் உள்ளிருப்பில் நிலைத்திருக்கும் ஏழாலை என்ற அந்த சின்னஞ்சிறுகிராமம் அவள் நினைப்பில் இப்போது வெறும் சூனியம் வெறும் போத்தலையும் கணக்கு வைத்து செய்காரியம் பழகி வாழத் தெரிந்த, அவ் வீட்டின் ஆளுமை மிக்க அந்த வீட்டின் தலைவி அதில் வாழ்ந்ததே, நம்பமுடியாத வெறும் பொய்க் கதையாய், போன பின் இனி வேடம் போட்டு ஆட என்னதான் இருக்கிறது ?அதை பெரிது படுத்தி வம்புக் கதை பேசிய அற்ப மனிதப் பிறவிகள் கூட இப்போது இல்லைஅவுஸ்திரேலியாவில் மேடை ஏறிப் பாடும் ஒர் இசைக் கலைஞனான துஷ்யந்தன் இரு தினங்களுகு முன் தன் குடும்பத்தோடு கொழும்பில் வந்தி நிற்பதாக அவளுக்கு மெசென்ஞரில் செய்து அனுப்பிருந்தான் அது மட்டுமல்ல அவளைப்பார்க்க வரப் போவதாகவும் அறிவித்திருந்தான்.
ஒரு சூனிய இருப்பைக் காணநேர்ந்த துர்ப்பாகிய விழுக்காடு ஒன்றையே சுமந்த வண்ணம் தன் கடைசி முடிவுக்காகக் காத்திருக்கும் அவளுக்கு வாழ்வின் விடியலைப் பற்றியும் அதன் தாத்பரியங்கள் பற்றியும் விளக்கிச் சொல்வத\ற்காகவும் கடவுளே அனுப்பி வைத்த ஓரு இறை தூதுவனாகவே அவனைக் கருத்தில் கொண்டு அனை வரவேற்க, , அவள் காத்திருக்கிறாள்.
இந்த மண்ணின் சுவாசம் விட்டுப் போய் வேற்று நாட்டில் பிறந்து வளர்ந்த, அவனுக்கு அவள் கூற இருக்கும் வேதம் பிடிபடுமா என்பதே, கேள்விக் குறியாகவே மனதில் தொக்கி நின்றது.
உண்மையில் பார்க்கப் போனால், இது துருவ இடைவெளி மட்டுமல்ல, ஒரு யுகத்தையே விழுங்கி விட்டு வந்திருக்கிறது.
வெளிநாட்டு வாழ்க்கையின் சுவாசமே பழகி விட்ட ஒன்றாய், காற்றில் மிதந்து வாழப்பழகி அவன் முன் தான் ஒரு நிதர்ஸன தேவதையாய் விழிப்பு நிலையில் இருப்பது எவ்வளவு தூரத்துக்கு சாத்தியப்படுமென்று அவளுக்குப் புரியவில்லை. இருந்தாலும் முயன்று பார்ப்போமேயென்று ஒரு நப்பாசை.
ஆம் வேதமென்பது .மெய்ய்யான ஆத்ம ஞானம் கைகூடி வரும் ஒருவர்க்கே எளிதில் பிடிபடும். பொய்யிலே வெறும் உடலாகவே வாழ்ந்து மறைந்து போகும் எளிய பாமரனுக்கு இது வெற்று சங்கதி தான். புற்று மண் மூடி புரையோடும் நிழலாய் வாழ்ந்தே மறைந்து போகிற மனிதர்கள் குறித்து அவளால் வெறுமனே கவலைப்படத் தான் முடிந்தது அவளால் அதுவும் போய் , இருட்டுக் குகைக்குள் இருந்தவாறே வானத்தை அண்ணாந்து பார்க்கிர நிலை தான் இப்போது அவளுக்கு.
எல்லாமே மறை பொருளாய், போன, பின் இனியென்ன வாதமும் வம்பு வழக்கும்? துரும்பு நிழலிலே கோர்க்கப்பட்டு விட்ட அறுந்து கறை பிடித்த சங்கிலி தான் அவளும் பொன் சங்கிலி வேறு . உடலை அலங்கரிக்கும் ஒரு வெற்று சங்கிலி அது அதை மறந்து ஒரு யுகமே தாண்டியாயிற்று.
இப்போது பளிங்கு உலகம் அவள் கண் முன் துஷ்யந்தனின் வருகை அவ்வாறு தான் தோன்றியது. வெளிநாட்டில் காலூன்றும் மனிதர்கலுக்கு வாழ்க்கையே சொர்க்கம் தான் தாள் தாளாய் காசு புரண்டால், எல்லாமே திசை மாறிப் போகலாம் . தெய்வீகமான இருப்பு நிலை வெறும் கனவாகவே போய் விடும் துஷ்யந்தன் இதில் எந்த நிலை ?நேரில் வரும் போது அறிய வேண்டிய சத்தியம் இது.
துஷ்யந்தன் எப்படியிருப்பான்? அவன் புதுவீட்டில், ஒருகாலத்தில் கொடி கட்டிப் பறக்க நேர்ந்த ஆகாய மனிதர்களின் வம்ச வாரிசு ஆம் அவர்கள் வாழ்க்கை வாழும் விதம் அப்படித் தான் இருந்தது அந்தக் காலத்திலேயே ஓவர்சியர் வேலை பார்த்து பணம் குவித்த பெரும் புள்ளி அவர் பெயர் நாகராஜா நல்ல சிவப்பு நிறம் ஆள் பிள்ளைகளும் அதேகலரில் கிட்ட நெருங்க முடியாது, அளவுக்கு அவர்களின் அழகு தேஜஸ் மின்னலெனத் தாக்கி கண்ணைப் பறிக்கும் மின்னல் எப்படி யோ அப்படி. மின்னல் ஒரு நிடம் கூட நிலைத்து நின்றதாக சரித்திரமில்லை.
அவர்களும் அப்ப்டித்தான் மூன்று ஆணும் பெண்ணுமாக, ஆறு பிள்ளைகள் தங்களை சுற்றி, ஒரு சமூகமென்ன உலகமே இருப்பதையே, மறந்து போய்த் தான் அவர்களின் நடத்தைகள் ஊரில் யாரையும் அவர்கள் , கண்டு கொள்வதில்லை மாது அவர்களின் நெருங்கிய உறவென்றாலும் இதில் அவள் இன்னும் புறம் போக்கு. நாகராஜாவின் மனைவி நாகம்மா அதிலும் படு மோசம் எப்ப பார்த்தாலும் முகத்தில் மூதேவிக் களை வடியும் சிரிக்கவே மாட்டாள் என்ன குறை அவளுக்கு ?
புருஷன் ஓவர்சியர் வேலை பார்த்து, ரோட்டு போடுவதாக அரசை ஏமாற்றி அவர் பணம் குவித்த வரலாறு , இங்கு எடுபடவில்லை அவர்களின் வெள்ளை அழகுக்கு முன்னால் நீதித் தேவதையே தோற்றுப் போய் ,தலை குனிந்து நிற்கிற மாதிரி ஒரு நிலைமை எனினும் உயிர் ஒளி மங்கி கறுப்பு நிழலுக்குள் முகம் மறைந்து வாழும் அவள் கூ ட சமூக தராசில் கனம் கொண்டு நிற்கிற, ஒரு காட்சி தேவதையாகவே மாறிப் போன கொடுமையை என்னவென்று உரைப்பது? அவளூக்கு விருது வழங்காத, குறை தான் அப்படி எதை பெரிதாக அவள் சாதித்து விட்டாள் அவள்?
செய் காரிய சிறப்புகளில் சமூக தனி மனித நெஞ்சங்களில் எடுபட்ட ஒரு காட்சி தேவதையாய் அவள் உலா வந்தாளே. மாதுவிற்க்த் தெரியும் கல்லெறிகள் யாருக்கென்று ? அது அம்மாவாகவே இருந்து விட்டுப் போகட்டும் தர்ம தேவதைஅவள் அம்மா பராசக்தியே என்று கூறினால் நெஞ்சம் நெகிழும். ஆனால் குடும்ப வாழ்வு சிறப்புகளில் அவள் உதவாக்கரையாம் ஆனால் முகம் அழுது வடியும் நாகம்மாவோ உச்சத்தில் சிம்மாசனம் போட்டு வீற்றிரு[[ந்தாக, தாக உலகம் கதை சொல்கிறதே. அவளுக்கு அப்படி என்ன பெருமை ?அவள் செய்காரியத்தில் புலி. பருக்கை சோறு சிந்தாமல், சமைக்கத் தெரிந்த கெட்டித்தனம் அது மட்டுமல்ல காலியான வெறும் போத்தலையும் கணக்கில் வைக்கத் தெரிந்த ஆளுமை அவளிடம் இருப்பதாக ஊர் கதை சொல்லி மாதுகேட்ட ஞாபகம்.
அம்மா பராசக்தி அப்படி இல்லாவிட்டாலும் பார்ப்பதற்கு. முகத்தில் லட்சுமிக் களை வடிய கொடுத்துக் கொடுத்தே பழகிய அவள் ஓர் ஆதர்ஸ் தேவதை மட்டுமல்ல அழகு ராணியும் கூட வெரும் உடல் அழகு மாயையின் வெளிப்பாடு அது இருக்காட்டும் அவள் உல்ளம் பெரு வெளி அன்பு ஆராதனையும் அற வழி, மட்டுமே அவளுக்கு இயல்பான, இர்தத்தை ஊறிய, உண்மை இருப்பு பொய்மை கலவாத, உயிர் வாழ்வு அவளுக்குரியதாகிறது நாகம்மா போல காற்றில் பறக்கும் துரும்பு சங்கதியல்ல அவள் அவளின் உயிர் ராகம் எப்படியிருந்தாலும் உண்மை தோற்று விட்டது. துஷ்யந்தன் வரும் போது, அவள் நினைவு கூர்ந்து பேச வேண்டிய முக்கியமான சங்கதிகள் அவை. அவனல்ல அவனின் தந்தை சுகுமார் வாழ்ந்து விளையாடிக் களித்த மண், இப்போது காடு பத்திக் கிடக்கிறது காடு என்ன அந்த மகா பெரிய புது வீடு இருந்த சுவடே தெரியாமல், சூனிய இருப்பில் , தொலைந்து போன விடயம் துஷ்யந்தனுக்கு தெரிய வந்தால், என்ன சொல்வானோ, தெரியவில்லை. முகத்தை மூடிக் கொண்டு அழவானெயாகில் உண்மையில் அவன் பெரிய மனிதன் தான் மாறாக இருந்தால், ஆத்மா தோற்று விட மனவருத்தம் தான் மிஞ்சும். அதுவும் யாருக்கு ?தர்மதேவதையாய் ஒரு சாட்சி புருஷனாய் வாழ்க்கையை, மீளாய்வு செய்யக் காத்திருக்கும் அவளுக்குத் தான் எல்லாம் அந்தத் தலைவிதி.
இதே துஷ்யந்தன் வந்து விட்டான் ஒரு மாபெரும் இசைக் கலைஞன். ஒருநாள் மாலைப் பொழுதில் கேட்டருகில் அவன் வரவு கட்டியம் கூறியது ரீங்காமிட்டு ஒலித்த கார் ஹார்ன் சத்தம் கேட்டு, அவள் திடுக்கிட்டு விழித்தாள் கேட்டைத் திறந்து பார்த்த போது ஒரு பிரமாண்ட விசுவரூப தரிசனமாய் அவன் வடகைக் கார் எடுத்து வந்திருக்கிறான் அவுஸ்திரேலியாவில் சவாரி செய்த, சுகம் இங்கும் அவனை விட்டுப் போகவில்லை தனியாகத் தான் வந்திருக்கிறான் முகநூல் வழி யாகவே அவனுடனான இந்த நெருக்கம் கலையுலக நட்பு உறவு நிலைக்கு மேலான ஓர் இணைப்பில் இணைவதாய், அவனை உச்சி குளிர வைத்தது அந்தப் பரவசத்தோடு உள்ளே வந்த அவன் ஒரு கலைத் தேவதையையே, நேரில் கண்டு விட்ட மகிழ்ச்சியோடு அவளைக் கை குலுக்கிய போது அவளூம் அதை ஏற்றுக் கொண்ட பாவனையில் மெளனமாக தலையசைத்து இருங்கோ என்று சோபாவைக் காட்டி விட்டு தானும் அமர்ந்தாள்.
அவளின் கலை வழிபாட்டினை அவள் எழுதும் தெய்வீகக் கவிதைகளின் இருப்பில் சுயம் தெளிந்து வருவதாய், அவன் உணார்ந்திருக்கிறான். அது போல் தான் அவளும் . முகநூலில் பரிச்சயமான அவனின் பாடல்கள் கேட்டு மகிழ்ந்ததோடு, மட்டுமல்ல மெசென்ஞர் வழியாக பாராட்டியும் எழுதியிருக்கிறாள் அதன் பின் கலம் விழுங்கிய நாட்கள் மிக அதிகம்.
அவன் கண்களுக்கு அவள் முகநூலில் பார்த்த தேவதையாய் தெரியவில்லை கலம் அவளை விழுங்கி விட்டதாய் தோன்றியது. மனவருத்தம் மேலிடக் கேட்டான்
என்ன இந்தக் கோலத்திலை? நான் இதை எதிர்பார்க்கேலை.
அதைக் கேட்டு அவள் மறு முனையில் அவனை நிமிர்ந்து பார்த்த போது அவனைச் சுற்றி ஒரு சிவப்பு வட்டம் சூழ்ந்திருப்பதாய் உணர்ந்தாள் நாகராஜனின் தோல் சிவப்பு அவனிலும் தெரிந்தது அதில் மயங்கிப் போகிற உணர்வு வராமல் ஜட உலகில் தன் தனித்துவம் மாறாதநிலையில் இருந்தவாறே, சிரித்துக் கொண்டு அவள் கேட்டாள் காய் முற்றி பழுக்கத் தான் செய்யும் எனக்கு எண்பது வயதாகிறது வேறு எப்படி இருக்க வேண்டுமென்று நினைக்கிறியள்> அழிகிற உடலிலை சத்தியத்தையே, நான் பார்க்கிறேலை.
அதைக் கேட்டு விட்டு குரலை உயர்த்தி அவன் சொன்னான் .
நான் சும்மா விளையாட்டுக் கொன்னனான் உங்கள் ஆளுமை இருப்புக்கு முன்னால், நான் தூசு மாதிரி.
அதை விடுங்கோ.பெரிசு சிறிசு எல்லாம் ஒன்று தான்காலம் வந்து விழுங்கினால், இந்தக் காட்சி உலகம் கனவிலும் வராது நனவில் விழுத்திருக்கேக்கை தான் சில கசப்பான உண்மைகள் உங்களூக்கு ஒன்று சொல்ல விரும்புறன் யாழ்ப்பாணம் போனால் எங்கடை ஊருக்குப் போய் அந்தக் காட்சியைப் பார்த்தால் நீங்கள் இடிந்து போவியள் கோட்டை மாதிரி இருந்த உங்கடை புது வீடூ,………….
அவன் இடை மறித்துக் கேட்டான் எங்கடை புது வீடா அப்படி ஒன்று இருக்கே.
இருந்தது, ஒருகாலத்திலை இது ஒரு இழப்பு சங்கதி. உங்கடை அப்பப்பா கட்டி வைச்ச புது வீட்டின் கதையைச் சொல்ல வாறன் பெரிய மாளிகை மாதிரி. ஏழெட்டு அறைகள் கொண்ட பெரிய பங்களா உங்கடை அப்பா வாழ்ந்த வீடு. அதுவும் புது வீடு என்று சொல்லுவம் இப்ப பொய்ப் பர்த்தால் வயிறு எரியும் இருந்த இடமே தெரியாமல், எல்லாம் மண் மூடிக் கிடக்கு அதைக் கிண்டிப் பார்த்தால், அதன் சரித்திரம் தெரியும்.
இதைக் கேட்டு அவன் வெறிச்சோடிய இருளில் மூழ்கிப் போனான் இருள் தன்னைத் துரத்துகிறா மாதிரி உணர்வு வர அழுகை குமுறி வெடிக்க கண்கள் கலங்கி அவளை நிமிர்ந்து பார்த்து அவன் சொன்னன்.
அப்பா இதைப் பற்றி நிறையக் கூறியிருக்கிறார் தாங்கள் வாழ்ந்த வீடாம் அந்தப் புது வீடு. மாமி எவளூக்கோ சீதனம் கொடுத்து இப்படியாகி விட்டதாம் இனி என்ன செய்ய என்பார்.
அவள் ஒரு பரிவு மிக்க தேவதையாய், மாறாத அன்போடு இதயம் உயிர் வேள்வியில் பூத்துக் குலுங்க அவனைத் தேற்றுகிற மாதிரி, அவள் வாயிலிருந்து வேதமே வந்தது
ஒன்றும் செய்ய வேண்டாம் வாழ்க்கையில் மூழ்கிப் போகாமல், வரட்டு வேதாந்தம் பேசாமல், உண்மை இருப்பு அறிந்து உயிப்புடன் இருந்தால் எல்லா சங்கதிகளூம் தானே பிடிபடும் சத்தியம் நிலைக்க இதுவே வழி. இதைக் கேட்டு ஒன்றும் பிடிபடாமல் இப்போது அவன் கண்களை திரை வந்து மறைக்கும் ஒரு மறை பொருள் காவியமாய் ஒளிப் பிழம்பாகிப் போன அவளின் நிரந்தர இருப்புக்கு முன்னால் தான் எம் மாத்திரம் எந்த மூலையில் என்ற மயக்கம் மனதைக் கவ்வ இருளோடிய வெறும் சிலையாக இப்போது அவன், அவள் கண்கலிருந்து, தொலைந்து போனான் இப்படித்தான் மனித சரித்திரம் என்று மிகவும் கவலையுடன் அதை அவள் நினைவு கூர்ந்தாள்.