புதுமுகம் – ஒரு பக்கக் கதை
கதையாசிரியர்: சுபமி
கதை வகை: ஒரு பக்கக் கதை
தின/வார இதழ்: குங்குமம்
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 7,650
என்ன சொத்துக்களை எல்லாம் விக்கப் போறீங்களா? நான் விடவே மாட்டேன்! –
பேயாட்டம் ஆடிய மனைவி பார்வதியை அடியோ அடி என்று அடித்து, வீட்டை விட்டு வெளியேற்றினான் பரமசிவன்
அடுத்த இரண்டாம் நாளில் கோடிகளோடு அவன் கோடம்பாக்கத்தில்!
”தம்பி, உதவி இயக்குநராகவே எவ்வளவு காலம்தான் குப்பை கொட்டுவே? நான் உன்னை இயக்கநர் ஆக்குறேன். ‘நச்’ னு ஒரு காதல் படம் எடுத்துக் கொடு…!” என்றதும் உதவி இயக்குநருக்குத் தலைகால் புரியவில்லை
”கேட்டுக்கு தம்பி…படத்துக்கு பணம் போடறதால நான்தான் ஹீரோ எனக்கு என்ன குறைச்சல்? அழகோ அழகா,இளசோ இளசா ஒரு புதுமுகத்தைக் கண்டுபிடிச்சி எனக்கு ஜோடியாக்குறதுதான் உன்னோட முதல் வேலை!”
”அந்த வேலை முடிஞ்சிருச்சுன்னு வச்சுக்கங்க சார்.
ஒரு புத்தம் புதுமுகம் நேத்துத்தான் கோலிவுட்டுக்குள நொழைஞ்சுது. ‘ஜில்’னு அப்பிடி ஒருஃபிகர்!. ‘பாஜல்’னு பேர் வச்சோம்…பாருங்க இந்த போட்டாவை!’
டூ பீஸ் ஸ்விம் சூட்டில் சுண்டி இழுப்பது போல் கண் சிமிட்டிக் கொண்டிருந்த பாஜலைப் பார்த்தும் பரமசிவம் பேயடித்தவனை போல ஆனான்.
பின்னே? அவன் மனைவி பார்வதிதான் இந்த பாஜல் என்றால் அவன் அரண்டு போக மாட்டானா?
– ஏப்ரல் 2014
தொடர்புள்ள சிறுகதைகள்
குர்பானி
ஜே.எம்.சாலி
July 26, 2026
பூசைக்குள் வரும் பூக்கள்
காரை ஆடலரசன்
July 26, 2026
உயிர் உனதானதே!
லாவண்யா ஸ்ரீராம்
July 26, 2026