புதிய பொலிவு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 8, 2025
பார்வையிட்டோர்: 365 
 
 

(1980ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“அம்மாடியோ…! நான் மாட்டேன். யாராச்சும் பார்த்துட்டா?” 

சாமி சாட்சியாச் சொல்றேன்… 

பெத்தவங்க பெரியவங்களைக் கேட்டு முடிப்பயா, எங்கிட்டெ வந்து ‘கெக்சபிக்கே’ன்னு கொஞ்சிகிட்டு இருந்தா…? 

“நானென்ன, மாடப்புறாவா, நீ சீட்டி அடிச்சதும் ஓடி யாந்து, உன் தோளிலே தொத்திக்கிட…” 

சினிமா பார்த்துப் பார்த்து, நீ வேண விளையாட்டு கத்துகிட்டே.. இதோ பாரு! எனக்கு அதெல்லாம் பிடிக்காது. சொல்லிட்டேன். 

ஆமா, நீ இதுவரையில் என்னிடம் சொல்லவேயில் லையே! உனக்குப் பொரிவிளங்கா உருண்டைன்னா, ரொம்பப் பிரியமாமே…இந்தா, இரண்டுதான் மிச்சமாச்சி..

உன் கண்ணுக்கு நான் அழகுன்னா, ஊரார் அவ்வளவு பேருமா, என்னை அழகின்னு சொல்லுவாங்க? குப்பி பாட்டி என்னை என்ன சொல்லும் தெரியுமா? 

போடி, போடி; கோண வடுகுக்காரி! எப்பப் பார்த்தாலும் இளிச்சிகிட்டுக் கிடக்கறயே, பெண்களுக்கு இதுவா இலட்சணம்னு சொல்லும்… 

அப்பப்பா! போதும் போதும்னு ஆயிடுது, உன்னண்டெ சிக்கி விட்டா…இது என்ன கன்னமா, பச்சரிசி மாங்காயா? நகத்தைப் பாரு, சாமியாரு மாதிரி…!தா! ரொம்ப விளையாடாதே, வெக்கமா இருக்கு… சிரிப்பு பகீல்னு வருது.. அதோ, அந்தப் பக்கம் சோளக் கொல்லையிலே தான் சொக் கப்பன் இருக்கிறான்..அவன் காதிலே நான் சிரிக்கிறது விழுந் திச்சி, அவ்வளவுதான். வீட்டுக்கு வந்து கலகத்தை மூட்டி விட்டுத்தான் தூங்கப் போவான். 

உன்னை நம்பாமெ நான் வேறே யாரை நம்புவேன். என் மனசிலே அந்த நம்பிக்கை இல்லையானா, இப்படி உங்க கூடப் பழகுவனா, பேசுவனா…ஆனா, ‘எதுக்கும், ஆக வேண்டியகாரியத்தை காலாகாலத்திலேமுடிச்சிடவேணும்டி. ஆம்பிள்ளைக மனசு ஒரு வேளைபோல மறுவேளை இருக் காது..எந்தப் பாவி மகனாவது கதை கட்டி ஊரிலே உபத்திர வத்தை மூட்டாத முன்னமேயே, மூணுமுடி போட்டு கிடறது தான் நல்லது’ன்னு இஞ்சிக் கொல்லையார் மக இருக்கா பாரு, பருவதம், அவ சொல்றா… 

இப்படித்தான் பேசத் தெரிந்தது அந்த வஞ்சிக்கொடி யாளுக்கு. கிராமத்துக் கட்டழகி!எனவே அவளுக்கு, ‘அன்பே! ஆருயிரே! இன்பமே! இன்னமுதே! இதய ஜோதி!’ என்ற முறையில் பேசத்தெரியாது. ‘கண்ணாளா! தங்களைக் கண்ட தும் கதிரவனைக்கண்ட கமலம் மலருவதுபோல என் அகமும் முகமும் ஒருசேர மலருகிறது; வீணையின் நரம்புகளை இசை வல்லான் தொட்டுத் தடவி இனிய கானத்தைப் பிறந்திடச் செய்வதுபோல, என்னைத் தொட்டிழுத்து முத்தமிட்டதும், எனக்கு வாழ்வின் கீதம் வசீகரமாகக் கேட்கிறது’ என்றெல் லாம் ‘வசனம்’ பேசத் தெரியாது; அவள் அப்படிப்பட்ட வசனங்களைச் சினிமாவில் இரண்டோர்முறைகேட்டதுண்டு. அப்போதுகூட அவள், எப்படி வெட்கத்தைவிட்டு இப்படி யெல்லாம் பேசிக் கொள்கிறார்கள் என்று எண்ணிக் கொள் வாள். அவள் கல்லூரிப் பெண்ணல்ல; காதலுக்காகச் சாம் ராஜ்யங்களை இழக்கத் துணிந்தவர்கள், வாள் முனையை எதிர்த்தவர்கள், ஊர்ப்பகையை ஏற்றுக் கொண்டவர்கள், உருமாறிப் போனவர்கள், உன்மத்தரானவர்கள் ஆகியோர் பற்றிய கதைகளைப் படித்ததில்லை. அவள் கேட்ட இரண் டொரு கதைகளிலே துக்கப்படவும், கஷ்டப்படவும்தான் பெண் ஜென்மம் இருக்கிறது என்றுதான் தெரிந்து கொண்டி ருந்தாள். மல்லிகையின் மணம், ஆகா! மனதுக்கு அளிக்கும் இன்பத்துக்கு ஈடானது வேறேதுமில்லை என்று, காகித மலரினை முகர்ந்து கொண்டே, பேசிடும் நாடகக்காரர்போல அல்லாமலும், காதலைப் பெற்று இன்புற்று அனுபவம் பெறா மலேயே, வீட்டில் காட்டுக் கூச்சலின்றி வேறு கேளாத குடும்ப வாழ்க்கையில் இருந்துகொண்டே, கா தலின் மணம், மாண்பு, மதுரம் ஆகியவை பற்றிப் பேசிடுவோர் போல அல்லாமலும் செல்லி காதலைப் பற்றிய பேச்சோ, பாட்டோ தெரிந்து கொள்ளாமலேயே, உண்மைக் காதலைப் பெற்று மகிழ்ந் தாள்–அவளுக்கு அந்த இன்பத்தை அளித்த வேலப்பன், ‘வசனம்’ கேட்டிருக்கிறானே தவிர, மனப்பாடம் செய்து கொண்டு பேசுபவனல்ல; சிலசமயங்களிலே ஒருஅடி, இரண்டு அடி கா தல் பாட்டுப் பாடுவான்; தலைப்பு ஒன்று,முடிவு மணம் மற்றொன்றாக இருக்கும்!! கொடி அறியாமலே, மணம் கொண்ட மல்லிகை மலர்ந்திருப்பதுபோல், செல்வியின் உள்ளத்தில் காதல் பூத்து, மணம் பரப்பிற்று. கிராமம், எனவே யாரும் அறியார்கள் என்று இவர்கள் எண்ணிக் வேலப்பன் விஷயம் கொண்டிருந்தபோதே, செல்லாயி வெகுவாகவும், வேகமாகவும் பரவிக் கொண்டிருந்தது. வம்பு தும்புக்குப் போகாதவன், வருவாய் அறிந்து செலவு செய் பவன், பெரியவர்களிடம் மரியாதை காட்டுபவன், பொருளுக் காக அலையமாட்டான்; இல்லை என்று எவரிடமும் கை ஏந்தவும் மாட்டான்; உழைப்பான், நந்திப் பிழைக்கமாட் டான்-ஊருக்கு உபகாரம்செய்வான்; பெரியதனக்காரனாகி மிரட்டமாட்டான் என்று, வேலப்பன் குணம் கிராமத்தாரால் பாராட்டப்பட்டது. 

அம்மை நோய் கடுமையாக பரவி, ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு அந்தக் கிராமத்திலே பாதிப் பேர்களைப் பலி வாங்கி விட்டது – அந்தச் சமயத்தில்தான், வேலப்பனுடைய தாயும் தந்தையும் இறந்து போயினர்-ஒண்டிக் கட்டையானான் வேலப்பன். 

“இனி அவனுக்கு ஒரு கால்கட்டு ஏற்பட்டு, அதன் வயித் திலே ஒரு பூவோ பிஞ்சோ முளைத்து, பிறகுதான், வேலப் பனுக்கு ஒரு குடும்பம் அமைய வேண்டும்” என்று கிராமத் துக் கிழவர்கள் பேசிக் கொள்வார்கள். 

“அவனுக்கு மட்டும் தெரியாதா? தெரிஞ்சுதான் வேலப் பன், நம்ம சடையாண்டி மக இருக்காளே, செல்லி, அவளைச் சுத்திச் சுத்தி வட்டமிட்டுக்கிட்டு வாரான்…’ என்று குறும்புத்தனமானவர்கள் பேசுவார்கள். 

“அடச் சே! இவனைப் பாரு! வயசுக் காலத்திலே இதெல்லாம் நடைபெறத்தானே செய்யும். எல்லோருமேவா, இவனைப் போல சுடுமூஞ்சிச் சுப்பனாக இருப்பானுங்க.. ஒவ்வொருத்தரும், அந்தப் பருவத்திலே, ஓடி ஆடிப் பாடிக் கிட்டுத்தான் இருப்பாங்க…பய, தப்புதண்டா பேர்வழி இல்லை. செல்லி இருக்காளே, அவளும் சூதுவாதில்லாமே பேசிச் சிரிப்பாளே தவிர, பழி பாவத்துக்குப் பயந்த பொண்ணு; அடே அப்பா! சடையாண்டி என்ன இலேசுப் பட்டவனா? சீவிடுவான் தலையைச் சீவி!” என்று அனுபவ மிக்க பெரியவர் கூறுவார். 

செல்லி – வேலப்பன், காதலில் கடும்புயல் ஏதும் வீச வில்லை. மூன்றாவது ‘ஆசாமி’ யாரும் குறுக்கிட்டு அமளி மூட்டவில்லை. சடையாண்டியும் தடை கூறவில்லை. கலி யாணத்தைச் சுருக்காக முடித்துவிட வேண்டும் என்று, வேலப் பனிடம் சடையாண்டி ‘ஜாடைமாடையாகச் சொல்லியும் விட்டான். கிராமத்துக்கு ஒரு நல்ல விருந்து விசேஷம் நடத்து கிற அளவுக்குக் கொஞ்சம் ‘காசு’ சேரட்டும் என்று வேலப்பன் காத்துக் கொண்டிருந்தான். அதற்காக அவன் பல மாதிரி யோசனைகள் செய்வதுண்டு. செல்லாயிக்கு, வெள் ளைக் கல்லிலே கம்மலும், சிகப்புக் கல்லிலே மூக்குத்தியும், காலுக்கு வெள்ளியிலே கொலுசும், கழுத்துக்கு ஏதாச்சும் செய்து சோறு போட்டு, கிராமத்தாருக்கெல்லாம் ஒரு வேளை போட்டு, கலியாணத்தை சம்பிரமாகச் செய்ய வேண்டும் என்பது வேலப்பன் ஆசை. 

“வேலப்போய்! உன் கண்ணாலத்திலே ஊர்கோலம் உண்டா டோய்!” என்று கேலி செய்வார்கள், ஒத்த வயதி னர். “ஆமாம்டா! செய்தா என்னடா! ஆனை மேலே அம் பாரி, குதிரை மேல் மேளதாளம், பொய்க்கால் குதிரை கூத் தாட்டம், எல்லாம்தான் நடக்கப் போவுது. பவுன், பவு னாய் விளையுது, என் கொல்லையிலே. நீங்களெல்லாம்தான், பழைய மாதிரியாகவே, காரும், சிறுமணியும் விதைத்து விட்டு கிடக்கறிங்க, நான் ‘குச்சிக்கிழங்கு’ போட்டிருக்கறேன், தங்கமாட்டம் விலைபோகுது, குச்சிக் கிழங்கு தெரியுமா.. தூரத்துச் சீமைக்கெல்லாம் வண்டி வண்டியாப் போகுது.. அதிலே கிடைக்கப் போற காசைத்தான் நம்பிகிட்டு இருக்க றேன்…குச்சிக் கிழங்கு காசு ஆனதும் நாள் பார்க்க வேண்டி யதுதான்…” என்று வேலப்பன் உற்சாகத்துடன் கூறுவான். 

நகரத்திலே ஒரு வேலையாக வேலப்பன் போயிருந்த போது ‘குச்சிக் கிழங்கு’ பயிரிடுவதாலே கிடைக்கும் இலா பத்தைக் குறித்து கடைவீதியிலே பேசிக் கொண்டதைக் கேட்டு, பிறகு பல பேரிடம் அதைப் பற்றிய விவரம் கேட் டுத் தெரிந்து கொண்டான். பிறகு குச்சிக் கிழங்கு பயிர் வைத்தான்…யாரோ வியாபாரிகூட, பயிர் வளமாக வந்த போது பார்த்துவிட்டு மாசூல் முழுவதும் பணம் கொடுத்து வாங்கிக் கொள்ளுவதாக வாக்களித்தார். வேலப்பனுக்கு அதனாலே அதிக நம்பிக்கை ஏற்பட்டது. 

செல்லாயியை அவன் சந்திப்பதென்பது, மாலை வேளை களில் யாருமறியாமல் என்கிற விதத்தில் அல்ல. 

கழனிப்பக்கம் இருவருக்குமே வேலை இருக்கும்- தோப்புத்துரவுக்கு இருவருமே போக வேண்டிய அவசியம் நேரிடும்; அப்போதெல்லாம் சந்திப்புதான். 

”தா! செல்லாயி! வாயேன், அதோ அந்தாலே இருக்கிற திருக்குளத்தண்டே, பூ பறிச்சுத்தாரேன். தாமரைப்பூ. அழகா இருக்கும்…’ என்று அவன் சில வேளைகளில் அழைப் பான். அவன் கண்கள் வேறு ஏதேதோ பேசும். செல்லாயிக்கு சிரிப்பு வரும்; கோபமும் பயமும் வந்தவள் போலாகி “அம்மாடியோ…! நான் மாட்டேன்… யாராச்சும் பார்த்துட்டா…?” என்று கேட்டுவிட்டு ஓடிவிடுவாள். 

“பயங்காளிப் புள்ளே! சுத்த பயந்தாங்கொள்ளி…” என்று கேலியாகக் கூறுவான் வேலப்பன்; கூறிக்கொண்டே சுற்று முற்றும் பார்த்துக் கொள்வான், யார் கண்ணிலாவது பட்டுவிட்டோமோ என்ற பயத்தால்!! 

“சாமி சாட்சியாகச் சொல்றேன், அப்பாரு பேசிகிட்டு இருந்ததை நான் என் காதாலே கேட்டேன். உனக்குத்தான் என்னைக் கட்டி வைக்கப் போறாங்க…’ என்று செல்லாயி ஒரு நாள் அவனுக்குத் தைரியமளிப்பாள்; பிறகோர் நாள், அவளே பயந்த நிலையில், ‘மூணுமுடி’ போட்டாத்தான் நல் லது என்று யாராரோ சொல்கிறார்கள் என்று கவனமூட்டுவாள்! 

இதற்கிடையிலே, பொரிவிளங்காய் உருண்டைகள் அவ னுக்குக் கிடைக்கும்; நகக்குறி இவளுக்கு!! உரம் அதிகம் தேவைப் படாமலே, எல்லாப் பயிரும் செழிப்பாக வளரும் கிராமமல்லவா, காதல் மட்டும் என்ன விதிவிலக்கா! கவர்ச்சி கரமாக வளர்ந்து வந்தது. 


குச்சிக்கிழங்குதான் இனி ஆகவேண்டிய காரியத்தை ஆகும்படிச் செய்யவேண்டும். அது ஓங்கி வளர்ந்து, உருவம் பெறுவதற்கான உழைப்பினை, தட்டாமல், தயங்காமல், வேலப்பன் கொட்டினான்—பயிரும் அருமையாக வந்தது— கிழங்கும் தரம்தான் என்று தெரிந்தது–ஆனால் ‘பலன்’ எதிர்பார்த்தபடி கிடைக்கவில்லை. 

குச்சிக் கிழங்கு மூலம் தயாரான ‘சவ்வரிசி’ வங்காள நாட்டுக்கு ஏராளமாகச் சென்று கொண்டிருந்தது– அதனா லேயே நல்ல கிராக்கி இருந்தது-விலையும் சூடுபிடித்து இருந்தது – அதனால் குச்சிக் கிழங்கு பயிர் செய்தால் கணிச மான இலாபம் கிடைத்தது. 

குச்சிக்கிழங்கு கொண்டு செய்யப்படும் ‘சவ்வரிசி’ சத்தற்றது. உடலைக் கெடுக்கக்கூடியது; இனி வங்காளத்தில் அதனைக் கொண்டுவரக் கூடாது என்று, புதிதாக ஓர் உத்த ரவு கிளம்பி விட்டதாகச் சொல்லி, வியாபாரிகள், குச்சிக் கிழங்கு வாங்குவதைக் குறைத்துக் கொண்டார்கள்-பத்து மாதம் பாடுபல கொடுத்து, பிரசவத்தின்போது ஆபத்தையே உண்டாக்கி, கடைசியில், வைத்தியர் உதவிபெற்று, வெளியே வந்த குழந்தை ‘ஊமை’ என்று தெரிந்தால்,தாயின் மனம் என்ன பாடுபடும்!வேலப்பன் நிலைமை அப்படியாகிவிட்டது. கண் எதிரே குழந்தை இருக்கிறது. கருவில் உருவாகியது.மெத் தக் கஷ்டத்தைக் கொடுத்துவிட்டு வெளியே வந்தது, வாரி அணைத்து, உச்சி மோந்து முத்தமிட்டு, பட்ட கஷ்டம் அத் தனையும் பஞ்சாகப் பறந்ததடா பாலகனே என்று கொஞ் சிக் குலவிய தாய், தான் பெற்ற செல்வம், ‘ஊமை’ என்று அறிந்தால் துடிதுடிக்காதிருக்க முடியுமா? வேலப்பன், குச்சிக் கிழங்கு பாங்காக வளர வளர, அதை வெற்றியுடனும், ெ பெருமையுடனும் பார்த்துப் பார்த்துப் பூரித்துக் கிடந்தான். அவனைப் பார்த்து வேறு சிலரும் அந்தக் கிராமத்திலும் சுற்று வட்டாரத்திலும் அதே பயிர் வைத்தார்கள்–என்றா லும் வேலப்பன் கொல்லையிலே இருந்ததுதான் முதல் தர மானது என்று எல்லோருமே சொன்னார்கள். 

“விவரம் புரியாமலே, நாம எப்பவும் நெல்லுநெல்லுன்னு கட்டிகிட்டு அழறோம். ‘போட்டா நெல்லு; போடாட்டி புல்லு’ன்னு இருந்துவிடறோம். அண்ணேன்! நெல்லிலே கிடைக்கறதைவிட, வாழை, கரும்பிலே அதிகம். வெற்றிலைக் கொடிக்காலிலே நல்ல இலாபம் கிடைக்குதாம். அதுக்கெல் லாம் பாடு அதிகம்,பலனும் அதிகம்.குச்சுக் கிழங்குக்குப் பலன் அதிகம்,பாடு அதிகம் தேவையில்லை” என்று வேலப்பன் விவ ரித்தபோது, “இதெல்லாம் நமக்கு எதுக்குடா? இம்மாம் காலமா நெற்பயிர் பண்ணி பிழைச்சி வந்தமா கிழங்கு தோண்டிக்கிட்டுக் கிடந்தமா?” என்று முதியவர்கள் பேசினர். என்றாலும் அவர்கள்கூட வேலப்பனைப் புகழ்ந்தார்கள். ”பய, கெட்டிக்காரன்தான். பாரேன் பயிரை, மூக்கணாங் கயிறுபோடாத காளை முறைச்சிகிட்டு நிற்குமே, அதுபோல இருக்கு” என்று கூறினர். 

வேலப்பன், இந்தப் பேச்சை எல்லாம் கேட்டு, மேலும் மகிழ்ச்சியும், நம்பிக்கையும் கொண்டான். கொல்லையைச் சுற்றிப் பார்க்கும்போதெல்லாம், வேலப்பனுக்கு கலியாணப் பந்தலே தெரிந்தது. 

இவ்விதம் இன்பக் கனவு கண்டு கொண்டிருந்தவனுக் குப் பேரிடி விழுந்தது. ‘மார்க்கட் நிலவரம்’-குச்சிக் கிழங் குக்குக் ‘கிராக்கி’ இல்லை; வாங்குவார் இல்லை என்ற செய்தி அவனைச் செந்தேள் போல் கொட்டிற்று. முதலிலே, இது யாரோ வேண்டுமென்றே பொறாமையாலே கட்டி விட்டது என்று எண்ணினான்; விவரம் அறிந்துவர நகரம் சென்று திரும்பிய பிறகுதான், அவனுக்கு மனமே உடைந்து விட்டது. அங்கு தெளிவாகவே சொன்னார்கள்; பல கிராமங் களிலே இந்தச் செய்தி தெரிந்து, விவசாயிகள் தலைமேலே கை வைத்துக் கொண்டு கிடக்கிறார்கள் என்று கூறினர். குச்சிக் கிழங்கு, உள்நாட்டிலே செலவாகக்கூடிய பண்டம் என்ற எண்ணத்திலே, விவசாயிகள் அதைப் பயிர் செய்ய வில்லை; எனவே வெளிநாட்டுக்குக் கிழங்கு தேவையில்லை யாம் என்று கூறப்பட்டது கேட்டு மெத்தக் கலங்கிப் போயினர். 

“பைத்யக்காரப் பய! யாரோ பட்டணத்துக்காரனுக பேச்சைக் கேட்டு இவனும் கெட்டான்; மத்தவங்களையும் கெடுத்துப்பூட்டான். இவன் பேச்சை நம்பி, குச்சிக் கிழங்கு பயிர் வைத்தவனெல்லாம் ‘கோ’ன்னு கதறிக்கிட்டு கிடக்கி றானுங்க – இவனுக்கு என்ன ஒண்டிக் கட்டை – மற்றவங்க – பலபேரு சிறுசும் பெரிசுமா டஜன் கணக்கிலே வைத்துக் கொண்டு கஷ்டப்படறாங்க. இப்ப, இவனா, எல்லாரோட கிழங்கையும் வாங்கிக் கொள்ளப் போறான்” என்று சிலர் பேசினர். வேலப்பனுக்கு ஆத்திரம் வந்தது. ‘நானே மனம் வேதனைப்பட்டுக் கிடக்கிறேன்; இந்தப் பாவிகள் வேறு என்னை வாட்டி எடுக்கிறார்களே. செச்சே, என்ன ஜென் மங்களய்யா இதுகள்’ என்று முணுமுணுத்தான். 

செல்லாயி, நிலைமை அறிந்து, சிரித்துப் பேசினாள்! வேலப்பனுக்குக் கோபமாக இருக்கும் என்பதை எண்ணி, முகத்தைத் தொங்கவிட்டுக் கொண்டாள். சலிப்பும், சோக மும் கொண்டாள். ஒவ்வோர் நாளும் உச்சிப் போதுக்குள் மடுவில் இறங்கிக் குளித்து விடுவாள்; தலையைக் கோதிக் கட்டிக் கொள்வாள்; ‘கிழிசல்’ தெரியாமல், சேலையைப் பக்குவமாகக் கட்டிக் கொள்வாள். தலைக்கு காட்டுப் பூவா வது பறித்துச் சூட்டிக்கொள்வாள், கலகலவென்று சிரித்துப் பேசுவாள். 

“கால் பூமியிலே பாவுதா’ பார்டா அந்தக் குட்டிக்கு. நடக்கறப்போதே இவளை என்னமோ இந்தப் பூமி தூக்கித் தூக்கிக் குலுக்கிவிடறது போலல்லவா நடை போடறா.. நாட்டியக்காரியாட்டமா என்று கேலியாகப் பேசுவார் கள் செல்லாயியை; கிழங்குக்குக் கிராக்கி இல்லை என்பதாலே வேலப்பன் விசாரப்பட்டான்——அதைக் கண்ட செல்லாயி, நாலு குழந்தைக்குத் தாயாகி, நாத்தி மாமி கொடுமையாலே நசுக்குண்டு போனவள் போலானாள். 

“அது ஒண்ணுத்தான் குறைச்சல். ஆமாமாம்! எல்லா ரும் நல்லவங்கதான்..அவங்க அவங்க பாடு அவங்களோடே” என்று எதற்கும் எரிச்சலுடன் பதில் பேசுவாள். உடம்பு கசகச’ வென்றாகிவிட்டதே; கழுவித் தொலைப்போம் என்றுதான் மடுவில் இறங்குவாள்- முன்புபோல மகிழ்ச்சி யுடன் அல்ல. 

அவளுக்கு வேலப்பனைப் பார்க்கவே பயமாக இருந்தது! 

என்ன வேதனைப் படுகிறானோ, எவ்வளவு கோப மாக இருக்கிறானோ, இந்த நேரத்தில் போய்ப் பேசினால், அவனுக்கு மேலும் வேதனைதான் கிளம்பும்; மேலும், என்ன வென்றுதான் பேசுவது! போனா போவுது, கிழங்கு விலை போகாவிட்டா என்னா, கரும்பு இல்லையா, புகையிலை யிலே பணம் வராதா, என்றா தைரியம் பேச முடியும்? அதையே அல்லவா அவன் நம்பிக் கொண்டிருந்தான். வேறு வழி ஏது? அந்த வேதனையை மாற்ற முடியுமா? என்று எண்ணினாள்; இந்தச் சமயம் அடிக்கடி சென்று வேலப்பனைப் பார்ப்பதுகூடச் சரியல்லவென்று எண்ணிக் கொண்டாள். 

“நான் இருக்கிற இருப்புக்கு இப்ப கண்ணாலம் ஒண்ணு தான் குறைச்சல். எது எப்படிப் போனாலும் என்ன, என் பின்னோடு சுத்திகிட்டுத் திரி என்கிறாயா? தா! புள்ளே! என் எதிரே நின்னுகிட்டு இப்படி பல்லைக் காட்டாதே. நான் இருக்கிற ஆத்திரத்திலே எனக்கு அரிவா மேலேதான் கவனம் போவுது. அடி அம்மா! மவராசி! கொஞ்சம் உன் னோட அலுக்கு குலுக்கையெல்லாம் அடக்கி வைச்சிரு என்று ஏதாவது கோபத்திலே ஏசுவான் என்ற பயம் செல் லாயிக்கு. அதனாலே, அவனை அடிக்கடி சந்திப்பதைக் குறைத்துக் கொண்டாள்; பார்க்க நேரிடும்போதும், பழ காதவள் போல கேட்ட கேள்விகளுக்குப் பதில் கூறிவிட்டு வந்துவிடுவாள். 

“எல்லாம் இருக்கிறவரையிலேதான் மக்கமனுஷாள், சுற்றம் உறவு எல்லாம். பாரேன், இந்தச் செல்லாயியை; நாளைக்கு நாலு தடவையாவது ஓடியாந்து நச்சரிப்பா, இப்ப என்னடான்னா, பார்த்தும் பார்க்காத மாதிரியாப் போறா ; பழகா தவ மாதிரியா நடந்து கொள்றா! பவுன் நகை இனி கிடைக்காது என்கிறதாலே, வேண்டா வெறுப் பாப் பேசறா. இவ்வளவுதான் இதுகளோட சுபாவம். நம்ம போறாத வேளை; இதுவும் நடக்கும், இதுக்கு மேலேயும் கெ-ண்டான். நடக்கும்” என்று வேலப்பன் எண்ணிக் வேதனை மேலும் வளர்ந்தது. 

ஒருவருக்கொருவர் மனம்விட்டுப் பேசிக் கொள்ளாத தாலேயே சந்தேகமும், சஞ்சலமும் இருவருக்கும் வளர்ந்தது. அதிக நாட்கள் இதை நீடிக்கவிடக்கூடாது, ஒரு நாளைக்கு அவளை வெட்டு ஒண்ணு துண்டு இரண்டாகக் கேட்டுவிட வேண்டியதுதான் என்று வேலப்பன் முடிவு செய்து, நாளைக்கு அந்த வேலைதான் முதலில் என்று எண்ணினான். அவனை அந்த வேலையைச் செய்யாவிடாமல் தடுத்திட, வேறோர் அவசர வேலை குறுக்கிட்டது. 


“ஓட்டு” கேட்கறபோது, தினுசு தினுசான மோட்டாரிலே,  அங்கே வந்து, கெஞ்சிக் கூத்தாடினானுங்களே, பெரிய மனுஷனுக! இப்ப பார்த்தாயா, கழனி காஞ்சி போனாலும், குளம் வத்திப்போனாலும், எந்தக்கஷ்டம் வந்தாலும், என்ன டாப்பா, கஷ்டத்துக்குக் காரணம்? நான் என்னா செய்ய யணும் சொல்லு? அப்படின்னு கேட்க ஒருத்தன் வந்தானா பார்த்தாயா? எல்லாம் ‘ஓட்டு’ வரைக்கும்தான், இவனுங்க ளோட ஒட்டு உறவு’ என்று துவக்கினான் ஒருவன்-வேலப் பன் குடிசையில். 

“ஆமாம், அப்பொ, ஆயிரத்தெட்டு சிபாரிசு பேசி னானுங்க…கவுண்டரே கவனிச்சிக்கங்க…கோனாரே, கை போட்டுக் கொடுங்க, தேவரே, என்னை உங்களுக்கு இருவது வருஷமாத் தெரியுமே என்றெல்லாம் சொந்தம் பேசினானுங்க…” 

“ஆமாண்டா, விடுடா! நமக்குப் அப்ப, உச்சி குளுந் துப் போச்சு. இவ்வளவு பெரிய மனுஷனுங்க, நம்மைத் தேடிகிட்டு வரானுங்கன்னு, நாமும் அவனுங்களுக்காக ஓடி யாடி வேலை செய்தோம். ஓட்டுப்போட்டா ஊர் க்ஷேமமா இருக்கப் பாடுபடுவீங்களா, எப்படிச் செய்யப் போறீங் கன்னு ஒரு பேச்சு கேட்டமா? நம்ம ஜாதிக்காரன், நம்ம பக்கத்துக்காரன், என்று எதை எதையோ நம்பினமே தவிர, நாணயமானவனா, யோக்கியமானவனா, நல்லபடி உழைச்சி ஊருக்கு உபகாரம் செய்யப்போறவனா என்கிற எதைப் பற்றியும் யோசிக்கலே. மகாத்துமா தெரியுமேலேன்னு கேட் டான். ஆமா அவரு என்னங்க, கடவுளோட அவதாமுரன்னு கைகூப்பினோம்; மத்த எதையும் யோசிக்கலே…” 

“ஏன் யோசிக்கலை! நம்ம காளியாத்தா கோயில் கோபுரத்துக்குக் கலசம் வேணுமுன்னு கேட்டோமே…” 

“அட, அது ஒரு பிரமாதமா ஐம்பதோ நூறோ ஆகப் போவுது…அவனுக, என்னதான் வேணும்சொல்லுங்க இதிலே என்ன தப்புங்க, என்னாலானதை நான் செய்ய ணும்னு எனக்கு ஒரு ஆசை. வேறே ஒண்ணுமில்லே. அப்படி இப்படின்னு சொல்லவே, சரி, எதையோ ஒண்ணு கேட்டு வைப்பமேன்னு, ”கலசம்’ வேணும்னு கேட்டோம்… இது ஒரு பெரிய தப்பா?” 

“வீண் விவகாரத்தை விட்டுத் தொலைங்கப்பா! தும்பை விட்டுப்போட்டு, வாலை பிடிக்கறது நம்ம பழக்க மாப் போயிட்டுது. அவனுங்க சமயத்திலே காலைப் பிடி, தீர்ந்து போனதும் தலையைப் பிடி என்கிற வித்தையிலே கைதேர்ந்தவங்க; அது கிடக்கட்டும். இப்ப என்ன செய்யறது சொல்லுங்க. குச்சிக் கிழங்கு விலை போகலேன்னா, நம்ம பக்கத்திலே வேண்குடி பாழாயிடும்… இதை என்ன செய்ய றது? சொல்லுங்க.” 

“அழுகிற புள்ளெக்குத்தானே பால் கிடைக்கும்.” 

“அட, அதான் கேட்கறேன், எங்கே போயி அழுகறது, என்னா சொல்லி அழுகறதுன்னு…” 

“மந்திரிகிட்டப் போகலாம் என்கிறாங்க…” 

”யாரு? நாமா? மந்திரிகிட்டவா? மடைப்பய மகன்! அவனுங்க மந்திரியாவதற்கு முன்னே போனால் பார்த்திருக்க முடியும்-இப்பத்தான் மந்திரி ஆயிட்டாங்களே, இப்ப எப் படிப் பார்க்க முடியும்?” 

“அழைச்சிகிட்டுப் போறேன். ஊருக்கு ஒருத்தர் இரண்டு பேரா சேர்ந்து, ஒரு கமிட்டி போட்டா, போய்ப் பார்க்கலாம்னு…” 

“யாரு, நம்ம கொடிமரத்தான் சொல்றானா…?” 

“ஆமாம். அவன் அடிக்கடி போய்ப் பார்க்கறானே மந்திரியை.” 

“சரி. அதுக்கு என்ன செய்யணுமாம்?” 

அட, இதெப்போயி, கொடிமரத்தானையேதான் கேக்கறதா? நமக்குப் புரியலியா? நாம் என்ன அவனோட கஷ்டத்துக்கு, எதாச்சும் நம்மாலே ஆகிற சகாயத்தைச் செய்யவா மாட்டோம். 

“இப்ப, எல்லா மந்திரிகளும், கவர்னர்கூட, ஒரு பெரிய திருவிழாக்குக் கூடப் போறாங்களாம். அங்கேயே போய்ப் பார்த்துடலாம்னு, கொடிமரத்தான் யோசனை சொல்றான்…அவனும் நாம ஒரு நாலு பேருமாப் போய் வர செலவுக்கு, மகா நாட்டுக்கு டிக்கட்டு, சாப்பாட்டுச் செலவு, மாலை மரியாதைச் செலவு, எல்லாம் சேர்ந்து நூறு நூத்தி ஐம்பதுக்கு மேலே பிடிக்காது என்கிறான். இதல்லாமபடிக்கு நாமெல்லாம் ஆளுக்கு கீழுக்கு ஒண்ணு மேலுக்கு ஒண்ணு கதர் துணி வாங்கிக்கிடணுமாம் – மந்திரிகளோட மகா நாட்டிலே கதரோட போனாதான் நம்ம பேச்சை, காது கொடுத்துக் கேட்பாங்களாம். 

“கொடிமரத்தான் சொல்றானா?” 

“ஆமாம்.” 


கொடிமரத்தான், வேலப்பன் தலைமையிலே கிளம்பிய *கமிட்டி’யைக் கோவைக்கு அழைத்துச் சென்றான். எல்லா மந்திரிகளையும் காட்டினான்- நூறு கெஜ தூரத்தில் இவர் களை நிறுத்தி வைத்து. 

“என்னை நீராகாரம் இருந்தாக் கொடு கவுண்ட ரய்யா!” என்று கேட்டு வாங்கிச் சாப்பிட்டவர்தாம்பா, அதோ, மேசையை அடித்துப் பேசறாரே அந்த மந்திரி” என்று கமிட்டியில் ஒருவர் சொன்னார். 

“இம்மாந் தொலைவிலே இருந்து இவங்களை ‘தரி சனம்’ செய்தூட்டுப் போகவடி, கொள்ளைப் பணத்துக்கு வேட்டு வைச்சிருக்கான் கொடிமரத்தான்” என்று கமிட்டி யிலே இருந்த ஒரு கோபக்காரர் கேட்டார். 

மந்திரி பேசிக் கொண்டிருந்தார். -பேச்சு என்று கூறு வது பொருத்தமல்ல; மிரட்டிக் கொண்டிருந்தார். 

“நம்முடைய ஜனங்களுக்கே ஒரு கெட்ட சுபாவம்! எப்போதும் ஏதாவது ஒரு குறையை எடுத்துக்கூறிக்கொண்டு மூக்காலேயே அழுதுகொண்டு கிடப்பார்கள். அது இல்லை, இது இல்லை; இதைக் கொடு, அதைக் கொடு என்று கேட்டுக் கேட்டு, ஆட்சியிலே இருப்பவர்களைத் தொல்லைப்படுத்திய படி இருக்கிறார்கள். இது பாரதத்தின் பண்பு அல்ல… இதை நம்முடைய தலைவர்கள் பல தடவை எடுத்துச் சொல்லியும் வருகிறார்கள். வெற்றிலை கொடிக்காலிலே பூச்சி வந்து விட்டது, சாமி! எங்களைக் காப்பாற்ற வேணும் என்று போன வாரத்திலே ஒரு பத்து பேர் என்னை வந்து கேட்டார் கள். (சிரிப்பு ) சிரிக்காதீர்கள். நாடு எவ்வளவு கெட்டு வருகி றது, நம்முடைய ஜனங்களுடைய புத்தி எப்படி மட்டமாகிக் கொண்டு போகிறது என்பதை எண்ணிப் பாருங்கள். இப் படிப்பட்டவர்களைப் பற்றித்தான் நமது தேசீய மகா கவி சுப்ரமணிய பாரதியார், ‘நெஞ்சு பொறுக்குதில்லையே! இந்த நிலைகெட்ட மனிதரை நினைத்து விட்டால் நெஞ்சு பொறுக்குதில்லையே” என்று பாடினார். எனக்குப் பாடத் தெரியாது. மாலையிலே அருமையாகப் பாடப் போகிறார் கள் ஸ்ரீமதி பட்டம்மாள். கேளுங்கள். பூச்சி வந்துவிட்டது; காப்பாற்றுங்கள் என்று என்னிடம் வந்து அழுதால் நான் என்ன செய்வது? நீங்களே சொல்லுங்கள்? (மீண்டும் சிரிப்பு) பூச்சிகளை ஒன்று விடாமல் பிடித்து நசுக்கிப் போடவா! (பலத்த சிரிப்பு) மந்திரியின் வேலை இதுதானா?… கரும்பு காய்ந்து போகிறது, கடலைக் கொட்டை கெட்டுப்போகிறது, இரும்பு கிடைக்கவில்லை, நெசவு நடக்கவில்லை, வாழை சரிந்துவிட்டது,வரகரசி முளைக்கவில்லை என்று எதையாவது சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். இப்படி மூக்கால் அழுது கெண்டிருந்தால், நாட்டிலே சந்தோஷம் எப்படி ஏற்படும்? இப்படித் தொல்லை கொடுத்தால், நாங்கள் ஆட் சியை நடத்த நேரம் எப்படி கிடைக்கும். (ஒரு சீட்டு தரப் படுகிறது. அதைப் படித்து விட்டு) இதோ பார்த்தீர்களா, புதிதாக ஒரு அழுகுரல், குச்சிக் கிழங்குக்கு மார்க்கெட் இல் லையாம்!(சிரிப்பு)உடனே நிவாரணம் அளிக்கவும் என்று எழுதி இருக்கிறார், ஒரு அன்பர். என்ன நிவாரணம் அளிக்கச் சொல்கிறாரோ ஆண்டவனுக்குத்தான் தெரியும்! குச்சிக் கிழங்குக்கு மார்க்கெட் இல்லை என்றால், நான் என்ன செய்ய வேண்டும் என்கிறார்? கூடையில் வைத்துக் கொண்டு தெருத் தெருவாகச் சென்று குச்சிக்கிழங்கோ குச்சிக் கிழங்கு என்று விற்கச் சொல்கிறாரா?…” (பலத்த கை தட்டல், சிரிப்பு.) 

“அடச் சே! எழுந்திருங்கடா, போவோம். மகாப் பெரிய மனுஷனுங்க” என்று கோபமாகக் கூறிக்கொண்டே பெரியவர் எழுந்தார். ‘கமிட்டி’ அவ்வளவும் கொட்டகையை விட்டு வெளியேறிவிட்டது; கொடிமரத்தான் பின்னாலே ஓடிவந்தான். 

”ஏன்? ஏன்? எங்கே கிளம்பிவிட்டிங்க?’ 

“எங்கேயா? கூடை வாங்கிகிட்டு வந்து, உன்னோட தலைவன் தலையிலே கவிழ்க்க. வெட்கமில்லாமெ எங்க ளண்டை பேச வேறே வந்துட்டாயா…?” 

“என்னங்க இது, எதுக்கு இவ்வளவு கோபம்?” 

“கோவம் வரலாமா, பாவம்! அங்கே வாரி வாரிக் கொட்டறானே ஒரு புத்திசாலி, கருணையை; அதைப் பார்த் துமா கோவம் வரலாமான்னு கேட்கறே! ஆக வேண்டிய காரியம் ஆயிடுச்சி.இனி நாம அடிச்சவரையிலே இலாபம்னு எண்ணிகிட்டு, அந்த மனுஷன், ஆகாசத்துக்கும் பூமிக்குமா, குதிச்சுக் குதிச்சுப் பேசறானே- ஜனங்க மூக்காலே அழறாங் கன்னு… இவனுங்க நாட்டை நடத்தற நடப்புக்கு, ஜனங்க ஆடுவாங்க, அழாமெ, இவனுங்க எதிரே வந்து டான்சு டான்சு…என்னா எடுத்தேன்-கவிழ்த்தேன்னு பேசறான் அந்த மனுஷன். கஷ்டப்படறம். அதைச் சொல்லி, ஐயா! அப்பான்னு! வேண்டிக் கொள்றோம்.அதைக் கேக்கப் பொறுக்கலியாமே இவருக்கு. குச்சிக் கிழங்குக்கு மார்க்கட்டு இல்லையானா, நான் என்ன செய்ய, கூடையிலே வைச்சி கிட்டு விற்கவான்னு கேட்கறானே, இதுவாய்யா ஒரு மந்திரி பேசற மரியாதையான பேச்சு? குத்தல் பேச்சு இல்லியா அது? அவனவன் கும்பிகாயுதேன்னு கஷ்டப்பட்டுகிட்டு, இவனுங்க கிட்டத்தானே அதிகாரம் இருக்குது, போயி நம்மோட குறை யைச் சொல்லுவோம்னு வந்தா, கூடையிலே வைச்சிகிட்டு விற்கவான்னு கேலி பேசறாரு.பெரிய குபேரரு! வித்தா என்னவாம்-தலையிலே கூடையைத் தூக்கி வைச்சா, பூமி பொளந்துடுமா, இல்லை, இவரோட, மண்டை வெடிச் சுடுமா.. பேசறான் பார், மகாபெரிய மேதாவின்னு நினைச்சி கிட்டு. போன வருஷம் நான் என் கண்ணாலே பார்த்தனே நெசவுக்காரனுக கஷ்டப்படறாங்கன்னு சொல்லி, கைத்தறித் துணி மூட்டையைத் தூக்கித் தோளிலே போட்டுக்கிட்டு தெருத் தெருவாப்போய் வித்தானுகளே, இந்தக் கழகத் துக்காரனுங்க…. கெளரவமா போயிடுச்சி… மக்களோட கஷ் டத்தை உணர்ந்த மகாராஜனுகன்னு ஏழை எளியவங்க வரவேத்தானுக… இவர் என்னடான்னா. கிண்டல் பேசறாரு, கிண்டல்! கூடையைத் தூக்கினதே இல்லை பொறக்கறப்பவே ஓட்டுப் பொட்டியோட பொறந்தவரு….” 

“இதோ பாருங்க… இந்த மந்திரி இப்படித்தான் எப்ப வும் வம்பும் தும்பும் பேசறவரு.. இவர் போலவா மத்தவங்க? …போகாதீங்க… இருங்க… மத்த மந்திரிகள் பேசறதைக் கேளுங்க… 

”ஏன், இந்த ஒரு மந்திரி அபிஷேகம் பண்ணினது போதாது, மத்தவர்களோட அர்ச்சனையையும் கேட்டுட்டுப் கொடிமரம், போகலாம் என்கிறாயா? அடே அப்பா! போதும்டா எங்களுக்கு. வேணுங்கிறது கிடைச்சுப் போச்சு. உனக்கு வேணுங்கிறதையும் நாங்க கொடுத்தாச்சி; எங்களை இத்தோடு விட்டுடு..மானமாவது தக்கட்டும்.” 

கமிட்டியினர் கடுங்கோபத்துடன் செல்வது கண்டு கொடிமரத்தான் பயந்து போனான் – திரும்பி அதே கிராமத் திலே நடமாடவேண்டுமே! 


வேலப்பனுக்குத்தான் இதனால் அதிகச் செலவு; கிழங்கு ‘கால்வாசி’ விலைக்குக் கூடப் போகவில்லை. ‘முட்டு வழி’ கட்டி வரவில்லை. கிழங்குப் பிரச்னையைத் தீர்த்து வைக்க எடுத்துக் கொண்ட முயற்சியால் கடன் வேறு; வேலப் விரட்டி பன் கலியாணத்தைப் பற்றிய எண்ணத்தையே அடித்தான்; செல்லாயியால் கண்ணீர் சுரப்பதைத் தடுக்க முடியவில்லை. கன்னம் அந்த முத்துக்களை தாங்கிக்கொள்ள மனமின்றி, நெஞ்சிலிருந்து கிளம்பியவை அங்கேயே போய்ச் சேரட்டும் என்று அனுப்பிவிட்டது. 

“வேலப்பா! ஏண்டாப்பா! இதுக்கெல்லாமா மனசைத் தளர விட்டுவிடறது? இதுவரையிலே நான் இதுபோல எத் தனை கஷ்டத்தைத் தாங்கிகிட்டேன். காஞ்சிருக்கும், மழை யாப் பொழிஞ்சி அழிச்சி இருக்கும், மாடுகண்ணு ‘கோமாரி’யிலே செத்திருக்கும், மனஷாளுகளே மாண்டு போயிருக் காங்க பலா மாதிரி நோயாலே…அதுக்காக இப்படியா, மனசு ஓடிஞ்சி போயிட்டேன். பைத்யக்காரப்புள்ளே? போயி, காரி யத்தைப்பாரு. இந்தத் தடவை இல்லாவிட்டா, அடுத்த வரு ஷம் நல்லது ஏற்படுது, என்னா இப்ப? உனக்கு என்னடா குறைச்சல்! எனக்கு இந்தத் தடவை ‘சோளம்’ நல்லபடி இருக்குது– போதுமே நமக்கு’ -என்று சடையாண்டி பல முறை ஆறுதல் கூறியும் வேலப்பனுக்குத் திருப்தி ஏற்பட வில்லை. விசாரம் அவனை வாட்டியபடி இருந்தது.காரண மின்றிக் கோபம் வரும், கண்டவருடன் வம்புக்குப் போகத் தோன்றும், மாடு கன்றுகள்கூட அவன் கோபத்தைத் தாங் கிக் கொள்ள வேண்டி வந்தது. செல்லிக்கு அவனைட் டார்க் கும்போது நடுக்கமே ஏற்படும் – சுட்டுத் தள்ளிவிடுவது போலப் பார்க்கிறான்! 

“சுத்தமாகக் கழுவிடணும், தெரியுதா…துளி சேறு இருச்கப்படாது…’ என்று கூறி, மோட்டார் ஓட்டிக் கொண்டு வந்தவன் எட்டணாவைக் கொடுத்தான், பொடிப்பயலிடம். அவன் அந்த மோட்டாரை மிகச் சுத்த மாகக் கழுவித் துடைத்துக் கொண்டிருந்தான். அலுப்பி னாலே, மரத்தடியில் துண்டு விரித்துப் படுத்துத் தூங்கிவிட் டான், மோட்டார் ஓட்டிக்கொண்டு வந்தவன். அவன் விழித் தெழுந்ததும், சொல்லிவிட்டுப் போகலாம் என்று, பொடிப் பயல் அங்கேயே உட்கார்ந்து கொண்டிருந்தான். 

வேலப்பன் அந்தப் பக்கம் வந்தவன், காருக்குப் பக்கத் திலே சிறுவன் இருப்பதைக் கண்டு, “ஏண்டா? ராத்திரிக் கூடச் சாப்பிடலயே, காலையிலே எங்கே சுத்த வந்தூட்டே, கஞ்சி கொடுக்கத் தேடினேன், காணமே…ஆமா, இது என்ன மோட்டாரு… இவரு யாரு, துரை, சொகமாத் தூங்கறாரு?” என்று கேட்டான். 

“பார்த்தயாண்ணேன், எட்டணா . எருமைமாடு மூணு தேச்சிக் கழுவற மாதிரிதான், இருந்திச்சி – இந்த மோட்டா ரைக் கழுவி விட, எட்டணா கிடைச்சுது! மந்தை எருமையை மேய்ச்சி தேய்ச்சி குளிப்பாட்டி விட்டாக்கூட, கால்காசு கிடைக்காது. இங்கே பாரு, எட்டணா?” என்று சிறுவன் பெருமையாகச் சொன்னான். 

“ஆமாம்டா, இனி இப்படித்தான், மோட்டாரு கழுவி நீ புழைக்க வேண்டியதுதான். நானும் ஏதாவது ரயில் துடை கப் போக வேண்டியதுதான். வேறே புழைப்பு! அப்படியாப் பட்ட குச்சிக்கிழங்கு போட்டே கட்டிவராமே கஷ்டம் வந் துடுச்சின்னா, இனி இங்கே எதை நம்பிகிட்டுக் கிடக்கறது” என்றான் வேலப்பன். 

மரத்தடியில் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தவன் விழித்துக் கொண்டான். 

“டிரைவரு! உனக்கு என்னா சம்பளம் கொடுக்கறாங்க?” என்று கேட்டான் வேலப்பன். 

“மோட்டார் கார் ஓட்டுபவனுக்கு நாற்பது, ஐம்பது ரூபா சம்பளம் கிடைக்கும்.” என்றான், அவன். 

“பாரேண்டா, இவரு பேசற தினுசை? உனக்கு உங்க எஜமான் எம்மாஞ் சம்பளம் கொடுக்கறார் சொல்லய் யான்னா…’ 

“அதுவா? எனக்கு எஜமான் இல்லையே; நான் டிரைவர் இல்லே…என்னோட ‘கார்’ தான் இது…”என்றான் அவன். 

“என்னது? விளையாடறிங்களா…” 

“இல்லேப்பா! விளையாட்டு என்ன இதிலே? கார் என்னுடையதுதான்.” 

“அப்படியா….நானு.. நீங்க… மரத்தடியிலே படுத்துத் தூங்கிகிட்டு இருக்கவே, டிரைவருன்னு” 

“மரத்தடி! மாந்தோப்பு! மணம்! ஏர் உழவர் பாடல்! ஏத்தப்பாட்டு! நாத்து நடும் பெண்கள்! எங்கும் பசுமை! எங்கும் புதுமணம்!’ என்று உற்சாகத்துடன் கூறிக்கொண்டே அந்த ஆசாமி, சுற்றிலும இருந்த காட்சிகளைப் பார்த்துக் கொண்டிருந்தான். வேலப்பனுக்குச் சிரிப்பதா, அழுவதா என்று தெரியவில்லை. வாழ்க்கை குன்றுகிறது; இனிக் கிரா மத்திலே இருந்துகொண்டு காலந்தள்ளுவது முடியாது. கிராமத்தைப் பார்த்துப் பார்த்து வெறிச்சென்று கிடக்கிறது. உழைப்பது தவிர வேறொன்றும் காணோமே, பட்ட பாட்டுக்குப் பலன் கிடைக்கவில்லையே, இதை விட்டுத் தொலைந்தால் போதும் என்று எண்ணிக் கொண்டிருக்கிறான். இங்கே ஒருவர்-அவரும் இளைஞராகத்தான் இருக்கிறார்–வாழ்க்கையில் வசதி உள்ளவர் – மலரே! மணமே! மடுவே! மாடே! ஏரே! எழிலே! என்று ஏதேதோ கூறி மகிழ்கிறார்!! 

வேலப்பன் பெருமூச்செறித்தான்… 

“கிராமத்துக் கவர்ச்சி, புகை கப்பிக்கொண்டு சந்தடி அதிகமாகிக் கிடக்கும் நகரத்திலே ஏது!” 

“பணம் நிறைய இருக்கு அங்கே…” 

“பணமா? ஆமாம், அது இருக்கிறது; ஆனால் பண்பு இங்கேதானப்பா இருக்கிறது. “

“என்னமோ போங்க, வேடிக்கையாகப் பேசறிங்க! உங்களிடம் இருக்கிறது எங்களிடம் இல்லையேன்னு நாங்க கிராமத்துக்காரரு கஷ்டப்படறோம்; நீங்க வேறே எதுவோ ஒண்ணு எங்களண்டை இருக்குன்னு சொல்லிப் புகழ்ந்து பேசறிங்க…” 

”கண் இருக்க வேண்டியதுதானப்பா, ஆனா கண் ணாலே பார்க்க, நல்ல பொருள் இருக்க வேண்டுமல்லவா? பார்க்க பாம்பும் தேளும், படுகுழியும் நெருப்பு குண்டமும் தான் இருக்கிறது என்றால், கண் இருந்துதான் என்ன பயன்?” 

“அது சரிங்க, ஆனா, பவுன் பவுனா கொட்டி இருக்கு, தினுசு தினுசா பண்டமிருக்கு, வகை வகையா அருமையான சாமான் இருக்கு, ஆனா இதை எதையும் பார்க்கக் கண் இல்லேன்னா, என்னாங்க பிரயோஜனம்?” 

“ஆஹா.பாரேன், இதையே அங்கே படிப்பு இருக்கிறது புளியேப்பம் வருமளவுக்கு. ஆனால் இதோ இப்போது நீ பேசினியே, அந்தப் பக்குவம் அந்த நகைச்சுவை, அந்த அறிவு இருப்பதில்லையே…” 

“நீங்க யாருங்க…” 

“பைத்யக்காரன் இல்லப்பா. இப்படிப் பேசினதாலே உனக்கு இப்படி ஒரு சந்தேகம் ஏற்பட்டிருக்கும். நான் பைத் யம் பிடித்தவனல்ல! கிராமத்திடம் எனக்கு அவ்வளவு பாசம், மதிப்பு, மோகம் என்றுகூடச் சொல்லலாம். பத்து நாளைக்கு ஒரு தடவையாவது, ஏதாவது ஒரு கிராமம் சென்று, அங்கே உள்ள கட்சிகளைப் பார்த்தால்தான் என் மனதிலே, ஆயாசம், அலுப்பு எல்லாம் போகும். ஒரு புதுத் தெம்பு ஏற்படும்.” 

“அப்படி ஒரு பழக்கமா உங்களுக்கு… எங்களுக்கு ஒரு ஆறுமாசத்துக்கு ஒரு தடவையாவது, ‘டவுன்’ பக்கம் போயி, பளபளா விளக்கு, பலவர்ண ஜொலிப்பு, சினிமா, பஜாரு- இதை எல்லாம் பார்த்தாத்தான், ஒரு மாதிரி தெம்பு. ஆனா அதுக்குக் கொஞ்சம் காசு செலவாகும்… அதுதானே இங்கே கிடைக்கறதில்லை…ஆசையிலே மண் விழுந்துடுது அப்போதைக்கப்பே…” 


மோட்டார் புறப்பட்டுவிட்டது- வேலப்பனுடைய மனம் அந்த ‘மோட்டாருடன்’ சென்றுவிட்டது; உடல் மட் டும்தான் கிராமத்தில் உலவிக் கொண்டிருந்தது. 

அதுவும் கொஞ்சநாள்தான். வேலப்பன், டவுன்’ வாசியாகிவிட்டான் -நிலத்தை யாருக்கோ கொடுத்துவிட்டு கடனைக் கட்டிவிட்டு, கையில் கொஞ்சம் பணம் எடுத்துக் கொண்டு சென்றான். இதை வைத்து ஏதாவது தொழில் செய்யவேண்டும், வியாபாரம் நடத்தவேண்டும் என்று பல மாதிரி திட்டங்கள் மனதில். நிலம் கைமாற முடிந்தது. செல்லத்தின் மனம்? படாத பாடுபட்டது. 

மடியிலே நாலு நூறு ரூபாயுடன் டவுனில் நடமாடிய போது, வேலப்பனுக்கு எப்போதும் ஏற்படாத ஒரு தெம்பும் , தைரியமும் வந்தது. கடை வீதியிலே உலவும்போது அவன் கண்களிலே நம்பிக்கை ஒளிவிடும். சின்னக் கடையாக ஆரம்பித்து சாமர்த்தியமாக வியாபாரத்தை நடத்தித்தானே இவர்களிலே பலர், பெரிய கடைகள் வைத்துக் கொண்டு பணம் சேர்க்க முடிந்தது.நாம் ஏன் இப்படி செய்யக் கூடாது? 

ஏன் நம்மாலே முடியாது? என்று எண்ணிக் கொள்வான். அவன் உள்ளத்தில் ஓராயிரம் யோசனைகள் தோன்றித் தோன்றி ஒன்றோடொன்று மோதுவதாலே சில நொறுங்கிப் போயின ; யோசனைகள் குழம்பிவிட்டன. யாராவது தக்கபடி யோசனை சொன்னால் மட்டுமே நல்லது என்று எண்ணிக் கொண்டான். 

‘டவுன்’ இதற்காக ஆளை வைத்துக் கொண்டில்லை? இதையே பெரிய தொழிலாகக் கொண்டவர்களை, அவன் தெரிந்து கொண்டதில்லை—-அவனாலே கண்டுபிடிக்க முடிய வில்லை-இவனைக் கண்டு கொள்ளவா அவர்களால் முடி யாது. முதலில் மோப்பம் பிடித்தவன், முத்தையன்–மூலக் கடை முத்தையன் என்பது அவனுக்குப் பட்டப் பெயர். ஆனால், அவனுக்குக் கிடையாது. மூலக்கடை, மூசா ராவுத்தருடையது. அங்கு எப்போதும் வட்டமிட்டபடி இருப்பான். அதனால் அந்த வட்டாரத்தினர், அவனுக்கு மூலக்கடை முத்தையன் என்று பெயரிட்டனர். 

முத்தையன் வழக்கப்படி நாலு நட்சத்திர பீடியைப் பற்ற வைத்துக் கொண்டு, புது வியாபாரத் திட்டமொன்றை மூசா ராவுத்தருக்கு விளக்கிக் கொண்டிருந்தான். 

“பத்து இருக்குமேல்லோ ராவுத்தரே வருஷம், நீ இங்கே வந்து? என்ன செய்திருக்கே இதுவரையிலே? பத்துப்பவுனிலே நகை செய்தாயே, அதுதானே…” 

“அதுமட்டும் இப்ப இருக்குதா? பள்ளிக்கூடம் படிக்குது…”  

“ஆமாம் மறந்துட்டேன்… இந்த ஆனைமார்க் அல் வாப் பொட்டலம் வாங்கி, எல்லாம் நாத்தமடிச்சு போயி, சாக்கடையிலே வாரிக்கொட்டிவிட்டாயே! அதிலே வந்த நஷ் டத்துக்குப் போய்விட்டதில்லை, மறந்துட்டேன். உனக்கு எங்கேய்யா, நம்ம பேச்சு ஏறுது? எந்தெந்தப் பயலோ புழைக் கிறான்; நான் சொல்ற ஏற்பாட்டைக் கச்சிதமாச் செய்து, உன்கிட்டே நமக்கு வேண்டிய மனுஷராச்சேன்னு நான் ஒவ்வொரு பிளானையும் சொல்லிக்கிட்டுத்தான் வர்றேன். கேட்டாத்தானே.”

“ஏம்பா, நீ சொல்கிறபோது ‘ஜோரா’த்தான் இருக்கு திட்டம். பிற்பாடு யோசிக்கறப்போ, பயம் ஏற்படுதே.புது வெள்ளம் வந்து பழைய வெள்ளத்தை அடிச்சிக்கிட்டுப் போவுது என்பார்களே, அதுபோல. புதுசா ஏதாச்சும் செய்ய ஆரம்பிச்சி உள்ளதும் போயிட்டா என்னா செய்யறது என்கிற திகில்தான்.”

“உனக்குக் கொடுத்து வைக்கலேன்னு சொல்லு. கோழி அடைகாக்கற மாதிரியா, உனக்கு இந்தப் பெஞ்சிலே உட்கார்ந்து பழக்கமாயிட்டுது…வேறே யோசனை உதிக்கிற தில்லே..” 

வேலப்பன், தன் வேட்டியும் சட்டையும் அழுக்காகி விட்டதால் வெளுக்க, சோப் வாங்குவதற்காக வந்தான். அவன் இலவசமாகத் தங்கியிருந்த இருளப்பன், மில்லில் தொழிலாளி; ஆறுகுடித்தனத்துக்கு நடுவில் இருந்துவநதான். குளிக்க, துணி துவைக்க பொதுக் குழாய்தான் லேலப்ப னுக்கு. 

“சோப்புக் கட்டி ஒண்ணு.” 

“யாரடா, தம்பி! புதுசா இருக்கே? நீ ஒரு சோப்புக் கட்டி கேட்கிறபோதே எனக்குப் புரிஞ்சிப் போச்சு, நீ டவு னுக்குப் புதுசு என்பது. எந்த ஊரு?” என்று மூசா அல்ல, முத்தையன் கேட்டான்-கேட்டுவிட்டு, மூணுகட்டி கொண்ட பாக்கெட்டு நாலணா விலை-ஒரு கட்டியா வாங்கினா ஒண் ணரை அணா ஆகுது;பாக்கெட்ட, வாங்கினா இலாபமாச்சே! அதுகூடத் தெரியாதவனா இருப்பதைப் பார்த்துத்தான் நீ டவுனுக்குப் புதுசுன்னு தெரிஞ்சிக்கிட்டேன்” என்று முத்தை யன் விளக்கம் கொடுத்தான் மூசா ஒரு பாக்கெட் கொடுத் தார்- பணம் கொடுத்தான் வேலப்பன் புத்தியை முத்தைய. னிடம் பறி கொடுத்தான். 

மாதம் மூன்று ஆவதற்குள் ஆறு வகையான தொழில்செய்தாகிவிட்டது—அத்தர் வியாபாரத்தில் தொடங்கி வத்தல் வியாபாரம் வரையிலே நடந்தது-பணம் மிச்சம் பத்துப் பதினைந்து என்ற அளவு வந்த பிறகுதான், மறுபடி மூசா ராவுத்தருக்கு யோசனை கூறிக்கொண்டு நாலு நட் சத்திர பீடி பிடிக்க மீண்டும் சென்றான் முத்தையன். 

அதிர்ஷ்டம்னு ஒண்ணு இருந்தா இப்படி ஏன் அலைந்து திரிய வேண்டி இருக்குது. இதோ பார் வேலப்பா! நானும் டவுனுக்கு வந்த புதுசிலே, மில்லுக்குப் போக மனம் வர வில்லை – பல்பொடி வியாபாரம், பால் வியாபாரம் எல் லாம் ஒரு மூச்சுப் பார்த்துவிட்டு பிறகுதான், வயித்துக்கு கிடைச்சாப் போதும்னு மில்லுக்குப் போனேன். நீ இன்ன மும், ‘கனா’ கண்டுகிட்டே இருக்கறே. எப்படி மாறிப் போயி ருக்கறே தெரியுமா? துரும்பா இளைச்சிப் போயிருக்கறே. எங்கே சாப்பிடறயோ, எப்போ சாப்பிடறயோ இப்படி இளைச்சுப் போயிட்டே…” 

“அதெல்லாம் ஒண்ணுமில்லே. நமக்கு எதைச் செய்தா பணம் கிடைக்கும்னு கண்டறிய புத்தி இல்லே.. பணம் சம் பாதிக்கிறாங்கன்னா, அவங்களுக்கு சூட்சம புத்தி இருக்கு; சுறுசுறுப்பு இருக்கு. நம்ம புத்தியைச் சொல்லு! ஒரே மந்தம்” 

“போடா, போ: எங்க மில்லுக்கு ஒருத்தன் வர்றான், முதலாளிகிட்டப் பேசறதுக்கு, எப்பவாவது! பெரிய பொதியன் — முகத்தைப் பார்த்தாலே முழு மூடம்னு தெரியும் – அவன் எவ்வளவு இலட்சம் சம்பாரிச்சு இருக்கான் தெரி யுமா? ஐஞ்சாறு இலட்சம் இருக்கும்னு சொல்றாங்க…எல் லாம் பிராந்தி, விஸ்கி வித்துத்தான்… இதிலே புத்திசாலித் தனம் என்ன தேவைப்படுதாம்! குடிக்கிறவனுங்க, கண்ணு மண்ணு தெரியாமே விலை கொடுக்கறானுங்க; போதை, வெறி. இதனாலே, இலாபம் மத்த வியாபாரத்தைக் காட்டி லும் அதிகமா வருது; குவியுது! மத்தவனோட முட்டாள்தனத் தாலே இலாபம் வந்ததே தவிர, இவனோட புத்திசாலித் தனத்தாலே என்ன இருக்குதாம். இவனைப் பள்ளிக்கூடத் திலே, சுத்த பக்குன்னு சொல்லியே துரத்திவிட்டாராம், வாத்தியாரு…இப்ப இவனோட வாடகைக் கணக்கு எழுதிப் பிழைக்கறாரு – பெரிய அறிவாளின்னு சொல்றாங்க, அந்த ஆசாமியை …” 

“அதுசரி, இப்பத்தான் மதுவிலக்கு இருக்கே…” 

“ஆமாம்; மதுவிலக்கு இருக்குது, கடை வச்சி விற்கக் கூடாது –அவ்வளவுதான்.” 

“அப்படின்னா…..?” 

“இப்ப ‘கடை’க்கு மனுஷாள் போறதில்லே. ‘கடை மனுஷாளைத் தேடிக்கிட்டுப் போகுது:திருட்டு வியாபாரம் நடக்குது. முன்னாலே பகிரங்கமா வியாபாரம் செய்தான்; இப்ப, அதுவே, இரகசியமா நடக்குது. இப்பத்தான் முன்னை யப்போல மூணு மடங்கு இலாபம். எங்க மில்காரன்கிட்டே அவன் வாரானே, எதுக்கு? எல்லாம் இதுதான்!” 

“அப்படியா சமாசாரம்-ஆனா, அதெல்லாம் பெரிய இடத்திலே தலைகாஞ்சதுக எங்கேயிருந்து வாங்கப் போகு துங்க …அவங்களைப் பொறுத்தவரையிலே மதுவிலக்கு நிஜ மத்தான் இருக்கு…” 

“அதுவும் தப்புதான்! அவங்க மட்டும் என்னவாம்! பொதியன் பாட்டில் சரக்கு விற்கிறான்; மத்தவன், மட்டம் விற்கிறான்…” 

“மட்டமா…?” 

“காச்சினதுடா: இப்ப அந்த வியாபாரம்தான் கன ஜோர்… நானே மாசத்திலே ஒரு அஞ்சு பத்து அதுக்குத் தொலைக்கறேன்.” 

“அடப்பாவி!..” 

“என்ன நய்னா கவனிக்காமலே போறே? என்னதான் வாழ்வு ஒசந்துட்டாலும் இப்படி நட்டுப் பொட்டிட்டுக்கக் கூடாது…” என்று ஆரம்பித்த மூலைக்கடை முத்தையன், “அதுக்கென்ன அண்ணேன்!” என்றான். 

”ஆசாமி! ‘டாப்’ திறந்துடறேன்… நம்மைச் சரியாவே கவனிக்கிறதில்லே…என்னடா எஜமானுக்குத்தான் உன்மேலே உசிராமேன்னு நம்ம ஜதைக்காரனுங்க பேச ரானுங்க. இங்கே சரிவர நம்மைக் கவனிக்க ஆள் கிடையாது. எவ்வளவு சண்ணுங் கருத்துமா நான் கவனிக்கிறேன், ஒரு காக்கா குருவிக்குத் தெரியுமா? ரகசியம். அப்படி எல்லாம் பாடுபடறேன்; ஏழை மேலே இரக்கம் காட்டாம இருந்தா நல்லதா சொல்லுங்க” என்று கெஞ்சிக் கூத்தாடிப் பேசி, தாக சாந்திக்கு உதவி கேட்டுப் பெரும் அளவுக்கு வேலப்பனு டைய நிலைமை ஒரு ஆறே மாதத்தில் உயர்ந்து விட்டது. ஆசாமியின் நடை உடை பாவனையே மாறிவிட்டது. தொழில் அவனைப் புது ஆளாக்கி விட்டது. சுருள் மீசை சந்தனப் பொட்டு- விரலிலே சிகரெட் டின்- இப்படி, கோலமே மாறிவிட்டது. வேலப்பன், கள்ளச்சாராய விற் மட்டும் பனையில் கைதேர்ந்தவனாகிவிட்டான். அவன் ‘காச்சினது’ சாப்பிட மாட்டான். நாற்பதோ, ஐம்பதோ, வீசி எறிந்தால், ‘அசல்’ கிடைக்கும். விஸ்கியோ, பிராந் தியோ, அதைத்தான் சாப்பிடுவான். மட்டம், இந்தப் பசங் களுக்கு; அதைச்சாப்பிட்டுவிட்டு குடல் வெந்து சிலது சாகும்; குளறிக் கூத்தாடி சிலது போலீசிலே சிக்கிக் கொள்ளும்- வேலப்பனுக்குப் புதிய அந்தஸ்தே ஏற்பட்டுவிட்டது, அந்த உலகத்தில். 

முதல் ‘சில்க்’ சட்டை தைத்துப் போட்டுக் கொண்ட போது, அவனுக்கு செல்லி மீது நினைவு சென்றது. அவள் கன்னமும் இந்தச் சட்டையும் உராய்ந்தால் எப்படியிருக்கும் ஆனந்தம் என்று எண்ணிப் பார்த்தான்.விதவிதமான பட்டுச் சேலைகள், புது தினுசு ஜாக்கெட்டுகள், பவுன் நகைகள்- இவைகளை எல்லாம் வாங்கிக் கொடுத்து, செல்லி இவைகளால் தன்னை அலங்கரித்துக் கொண்டு, எதிரே நின்று கொண்டு சிரித்துப் பேசுவாள்–கனவில்! 

அவனுக்கு பணம் சேரச்சேர, செல்லி என்ன நினைப் பாள்? இது ஒரு பொழைப்பா என்று கேவலமாகப் பேசு வாளோ! எந்தச் சமயத்திலே போலீசில் சிக்கிக்கொண்டு கம்பி எண்ணவேண்டி வருமோ, அடிமடியிலே நெருப்பைக் என்று வெறுப் கட்டிக் கொண்டு வாழ்வது ஒரு வாழ்வா போடு கேட்பாளோ என்றெல்லாம் எண்ணம் சென்றது. மொத்தமாக ஒரு ஆயிரம் சேர்ந்ததும், போதும் இத்தோடு கிராமம் போய்விடுவோம்; கலியாணம் செய்து கொண்டு செல்லியுடன் ஆனந்தமாக வாழலாம் என்று தோன்றிற்று. மறுபடியும், சே! விற்றுவிட்டு வந்த நிலத்தைத் திருப்பி வாங் காமலா அந்தக் கிராமத்திலே காலடி எடுத்து வைப்பது: என்று தோன்றிற்று. இன்னும் கொஞ்ச காலம் என்று தனக் குத்தானே கூறிக் கொண்டான். மூன்று நாலு ஏக்கர் அசல் நஞ்சை வாங்கக்கூடிய அந்தஸ்து வந்தது. போய்விடலாம் என்று எண்ணம் வந்தது; அங்கே போய், ஏரும் எருதும் துணையென்று, மறுபடியும் முழங்காலுக்கு மேலே துணி யைக் கட்டிக்கொண்டு, முண்டாசு கட்டிக் கொண்டு, உழுது கொண்டு கிடக்கவேண்டியதுதானா? இனி ஏன் அந்தப் பிழைப்பு? இன்னும் கொஞ்சம் பணம் சேர்த்துக் கொண்டு, வேறு ஒரு ‘டவுன்’ போகலாம். அங்கு நல்ல வியாபாரம் ஆரம்பித்து, நாலுபேர் மதிக்கத்தக்க மனிதனாகலாம் என்று ஆசை பிறந்தது. இப்படி ஒவ்வோர் தடவை ஆசை பிறக்கும் போதும், வேலப்பன், தன்னுடன்தான் அழைத்துக்கொண்டு சென்றான் செல்லியை – கற்பனை இரதத்தில். செல்லியை அவன், தாராசசாங்கம், தமயந்தியின் நேசம் ஏற்படுகிற வரை யில் மறக்கவில்லை. தாராசங்கம் தமயந்தியுடன் ‘தொழில்’ முறையிலேதான் அவனுக்கு முதல் தொடர்பு ஏற்பட்டது. வாடிக்கையாக ‘சரக்கு’ வாங்கி வந்ததில் இருநூறு ரூபாய் அளவுக்குப் பாக்கி ஏறிவிட்டது -பணம் வருவதாகக் காணோம். மூலைக்கடை முத்தையன் இதற்குள் வேலப் பனை, ‘எஜமான்’ ஆக்கிக் கொண்டிருந்தான். 

“எஜமான் சும்மாவிடக் கூடாதுங்கோ அவளை! ஆமா, பணத்தை எப்படியும் வாங்கியாகணும். நாங்க இவ்வளவு பேரு எதுக்கு இருக்கிறோம்? உங்க உப்பை தின்னுவிட்டு இந்த வேலைகூடச் செய்யாவிட்டா மனுஷ ஜென்மமா நாங்க. ஒரு உத்தரவு கொடுங்க, அவ வீட்டிலே பூந்து கலாட்டா செய்து டணத்தைக் கறந்துகிட்டு வந்து கொடுக்கிறோம்.” 

:முத்தையா! அவளை நீ கண்டதுண்டமா வெட்டிப் டோட்டாக்கூட, பணம் கிடைக்காது. போவுது போ; விட்டுத் தொலை.இனி ‘சரக்கு’ கொடுக்காதே. அவ்வளவு தான்.” 

”எஜமான்! இது எனக்குப் பிடிக்கலே. நீங்களா பார்த்து எத்தனையோ தான தர்மம் செய்யறிங்க. அதுசரி, சிவ ராத்ரி உற்சவம் சிறப்பாகச் செய்திங்க. ஊர் ஜனங்களெல் லாம் ‘ஐயாவோட, தரும குணத்தைப் பாராட்டினாங்க, அது நமக்குச் சந்தோஷம் கொடுக்குது. ஆனா, பணத்தை வாங்க முடியாமே ஏமாந்துவிட்டுப் போட்டாங்கன்னு ஒரு சின்ன சொல்லு கேட்கப்படாதுங்க – அது நமக்குப் பிடிக் கல்லே. சரி, அவளை நாயேன்ன வேணாம்; பேயேன்ன வாணாம், மிரட்டிக் கேட்கவேணாம், வேறு வகையிலே அந்தப் பணம் வந்து சேர வழி செய்யலாமெல்லோ.'” 

“வேறே வழி என்ன கண்டுபிடிச்சிருக்கே…” 

”சரின்னு சொல்லுங்க எஜமான்! அவளை உதைச்சி பணம் சம்பாரிக்க வைச்சிக் கடனைத் திருப்பிக் கட்டுடின்னு கேட்கறேன்…” 

“அப்படீன்னா.?” 

“அவளை ‘டிராமா ஆடச் சொல்றது; அதிலே பணம் வருதில்லே, நம்ம கடனை எடுத்துக் கொள்றது.” 

“அவ ‘டிராமா’ நடந்தாத்தானே.” 

“நாம் நடத்தறது.” 

வேலப்பன், ‘டிராமா’ கண்ட்ராக்டரானான்—கடனை வசூலிக்கத்தான். முதல் நாடகத்திலே ஏற்பட்ட நஷ்டத் துக்கு ஈடுகட்ட மூன்று நாடகம் தேவைப்பட்டது. நாலா வது நாடகத்தின்போது, தமயந்தி “ஏதோ உங்களோட தயவு…’ என்று கொஞ்சிப் பேசி, தாராசசங்ாக நாடகத்திலே அவன் கண்ட அருவருப்பை ஆனந்தமாக்கி விட்டாள். செல்லி விடைபெற்றுக் கொண்டாள். தமயந்தி முத்தையனுக்கு ‘அண்ணி’ ஆகிவிட்டாள். வியாபார ஸ்தலமே தமயந்தியின் வீடு என்றாகி விட்டது. வேலப்பன் ஒருகாலத்தில் கிராமத் தில் இருந்தவனென்ற அறிகுறியே மறைந்துவிட்டது.எப் போதும் கண்சிவந்து கிடக்கும் நிலை ஏற்பட்டுவிட்டது. தமயந்தி “அவர் வேண்டாமென்று கண்டிப்பாகக் கூறிவிட் டார்,” என்று டிராமா கண்ட்ராக்டர்களுக்குக் கூறி, புதிய அந்தஸ்துக்குச் சென்றுவிட்டாள். ஊர் மக்களிடம் தான் அவள் முன்புபோல், தாராசசாங்கம், சாரங்கதாரா, அல்லி அர்ஜுனா, சந்திரமதி ஆகியவைகளை நடித்துக் காட்டவில் லையே தவிர வீட்டில் எல்லாம்தான். 

“ஆறு பவுனாம்” என்று கூறி அலட்சியமாகச் செயி வேலப்பன். ஆறோ, னைத் தமயந்தியிடம் தருவான், நூறோ! உங்கள் அன்புதான் எனக்குப் பெரிது. இந்த நகை யாருக்கு வேண்டும்’ என்று நாடகமாடாக் குறையை ஓரள வுக்கு நீக்கிக் கொள்ளும்முறையில் பேசுவாள். ‘அட, அட! அதென்ன அப்படிப் பார்க்கறே’ என்று வேலப்பன் கேட்க வேண்டிய கட்டம் நடக்கும்–உஹும் என்பாள் -அடி அம்மா – என்பாள், இப்படி நவசர நாடகம் நடைபெற்ற படி இருக்கும். 

தமயந்தி, நாடக வாய்ப்புக் கிடைக்காமல், நல்ல ஒரு சம்பந்தமும் கிடைக்காமல் திண்டாடியபோது அவளை ஏறெடுத்துப் பாராமல் இருந்தவர்களும், ஏளனம் பேசியவர் களும், வேலப்பனுடன் அவளுக்குத் தொடர்பு ஏற்பட்ட பிறகு, அவளிடம் ‘ஆசை’ கொள்ள ஆரம்பித்தார்கள். 

நல்லாத்தான் இருக்காடா! நாற்பது வயசுன்னு நாம நையாண்டி செய்தா போதுமா? நேத்து சாயரட்சை அவ, நவக்கிரகம் சுத்தறதுக்கு வந்தா கோயிலுக்கு! எப்படி இருக் கிறா தெரியுமா? இருவது இருவத்தைஞ்சிதான் மதிப்புப் போடுவாங்க வயசு-ஐம்பது அறுபதுன்னு கேட்டாலும் ஆகட்டும்னு சொல்லிப் போடுவாங்க, அப்படி இருந்தா என்று கூறி ரசிக்க ஆரம்பித்தார்கள். 

நாடகக் காண்ட்ராக்டுகள் எடுத்து எடுத்து நொடித்துப் போனவர், பாலு வாத்தியார். பல ஆயிரக்கணக்கிலே பணத்தை நாடகக் காண்ட்ராக்ட்டிலே பாழாக்கி விட்ட பிறகு அவருக்குக் கிடைத்த பட்டம் அந்த வாத்தியார் என்பது. 

நாட்டிலே கீர்த்தியுடன் உள்ள நடிகர்கள் ஒவ்வொரு வரும், பாலு வாத்தியாரால்தான் முதலில் கைதூக்கி விடப் பட்டவர்கள் என்று பெயர் உண்டு. அவர் அந்தப் பழைய சம்பவங்களைக் கதை கதையாகச் சொல்லுவார். தன்னாலே முன்னுக்கு வந்தவன்; பிறகு தன்னை மதிக்காமல் நடந்து கொண்டால், உடனே வேறு ஒரு ஆளைத் தயார் செய்து, அவனுக்கு நிறைய விளம்பரம் கொடுத்து, மெடல் கொடுத்து, மாலை கொடுத்து, போட்டிக்குக் கிளம்புவதிலிருந்து, மற்றும் கொட்டகை கிடைக்காமலிருக்கும்போது, எப்படித் தந்தி ரம் செய்து கொட்டகையைப் பெறுவது என்பது வரையிலே அவர் சுவைபட எடுத்துக் கூறுவார். இடையிடையே இருமல் வரும். அதைமட்டும் பொறுத்துக் கொள்ள வேண்டும். தமயந்திக்கும் வாத்திரியாரிடம் மதிப்பு உண்டு. 

தமயந்திக்கு, வேலப்பனிடம் தொடர்பு ஏற்பட்ட தாலே ஒரு புது ‘மவுசு’ வந்திருப்பது தெரிந்து, தனக்காக ஒரே ஒரு ஸ்பெஷல் டிராமாவுக்கு மட்டும் தமயந்தி ஒத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். 

“வாத்தியாரே! அதென்ன எனக்கு நீங்க இவ்வளவு சொல்லணுமா? முதல் முதலிலே நான் மாதவி வேஷம் போட் டேனே, அன்னக்கி, என் காலுக்கு உங்க கையாலே தானே ‘சதங்கை’ கட்டி ஆசீர்வாதம் செய்திங்க. அதை எல்லாம் நான் எப்படி மறந்துடுவேன்.” 

“செய்த நன்றியை மறக்கா தவர்களைத்தான் மன ஷாள்னே சொல்லியிருக்கு தமயந்தி. உனக்கும் தெரியுமே. ஓரடி வீராசாமி பாடுவானே ஒரு பாட்டு, கவனமில்லே, தோடியிலே, 

“நன்றி செய்தாரை என்றும் 
மறவாதே 
நாயினும் கேடுகெட்டு 
நாசமாகாதேன்னு..” 

“ஆமாம். ரொம்ப நல்லாப் பாடுமே வீராசாமி, இப்ப எங்கே, பேரே காணோம்?” 

“எப்படிப் பேர் நிலைக்கும்? பாட்டுத்தான், செய்த நன்றியை மறக்காதேன்னு; செய்கை அப்படி இல்லையே! அதனாலே ஆசாமி ரொம்ப ‘டல்’லாயிட்டான்.இப்பத்தான் மறுபடியும் புத்தி வந்து, காலிலே வந்து விழுந்தான்; செய் ததை மறந்துடுங்கன்னான். இப்ப நான் உன்னை ஒரு ஸ்பெஷ லுக்கு வற்புறுத்திக் கூப்பிடுவதுக்கு இதுவும் ஒரு காரணம். அந்தப் பயதான் ராஜபார்ட் தெரியுதா!அவனை ஒரு மடக்கு மடக்கோணும்–ஆசாமி, அசந்து நிற்கணும்…அப்படி கன ஜோரா இருக்கணும்.” 

“உங்க ஆசீர்வாதம்! ஆனா அவன் ‘தோடி’ பாடி ஜனங்களை ஏமாத்திப் போடுவான்.” 

“அட, நீ மோகனத்திலே பிடி…பய, சுருண்டு கீழே விழறான் பாரு…உனக்கு இந்த இரகசியம் தெரிஞ்சு இருக் கட்டும் – பயலுக்கு இப்ப குளறுவாயாயிட்டுது-ள வெல் லாம் ல தான்… ழாவே நுழையாது.” 

“எனக்கு எப்பவுமே பயம் கிடையாதே. அப்பேர்ப் பட்ட ஆர்ப்பாட்ட ராஜபார்ட் அய்யா குட்டியோட தூக்குத் தூக்கிபோட்டு யாராலும் சமாளிக்கவே முடியா துன்னு சொன் னாங்களே, கவனமிருக்கா வாத்தியாரே? ‘காட்பாடியிலே சுருளி மலை மேலே உருளும் இருளனவன்…’ என்கிற பாட்டு பாடி, ‘கள்ளபார்ட்’ செய்தேனே.” 

“பய,மூஞ்சி செத்துப் போச்சே.” 

“அதனாலே, எனக்கு இந்த ஓரடி, ஒன்பதடி எல்லாம் பத்திக் கவலையில்லே… இது இருக்கே, என்னோட வீட்டுக் காரு, உசிரு என் மேலே. அது வந்ததிலிருந்து நான் அய்ய னார் சாட்சியா, மனசாலேகூடத் தப்பா நடந்ததில்லே. அது டிராமாவுக்குக்கூடப் போகப்படாது – தலை இறக்கமா இருக்குன்னு, ஒரே பிடிவாதம் பிடிக்குது. அதை மட்டும் சரிப்படுத்திவிட்டாப் போதும்! ஒரு நாலு நாளைக்குச் சாத கம்; மூணு நாள் ஒத்திகை இருந்தாப் போதும்…” 

‘கொளுத்திப்பிடலாம் போ.” 

சரிப்படுத்த முடியவில்லை! ஸ்பெஷல் நடக்கவில்லை. வாத்தியார் விரோதியானார்; போலீஸ் ‘துப்பு’ கிடைக்கப் பெற்று சுறுசுறுப்பாயிற்று. வேலப்பனுக்கு ஒரு வருஷம்; தமயந்திக்கு ஆயிரம் ரூபாய் அபராதம்!! வாத்தியார் பழி தீர்த்துக் கொண்டார். 

“தீர்ந்தது வாணவேடிக்கை” என்று கேலி பேசினர் ஜதைகள். திக்கிலொருவராக ஓடினர் எடுபிடிகள். அவனவ னிடம் அசப்பட்டதை அவனவன் சுருட்டிக் கொண்டான். கிராமத்திலே செய்தி பரவி, சொல்லாளைச் செந்தேளாய்க் கொட்டிற்று -மற்றவர்களும் வருந்தினார்கள். 

சிறையிலே வேலப்பன், வெளியே சென்ற பிறகு, மீண் டும் எப்படி வாழ்க்கையைத் துவக்குவது என்பது பற்றியே எண்ண மனம் இடம் தரவில்லை என்றால், அவன், செல்லி எண்ணத்தான் யைத் திருமணம் செய்து கொள்வதுபற்றி முடியுமா? 

செல்லியின் உலகத்திலிருந்து வேறு உலகம் வந்தாகி விட்டது– சேற்றிலே விழுந்து விட்டாலும் பரவாயில்லை; மணியை எடுத்துக் சழுவிச் சுத்தமாக்கிவிடலாம். மலக்குழி யில் வீழ்ந்துவிட்டால்?வேலப்பன் மலக்குழியில் வீழ்ந்துவிட்ட வனாக மட்டும் தன்னை எண்ணிக் கொள்ளவில்லை; தானே மலமாகிவிட்டதாகக் கூறிக் கொண்டான். எல்லா நல்லவை களையும் பெற்றிருந்தேன். இப்போது எல்லாக் குப்பை கூள மும் சேறு சகதியும் நிரம்பிய நாற்றப் பாண்டமாகிவிட்டேன். செல்லியின் உலகம் வேறு என்ற தீர்மான முடிவுக்கு, ‘ஒரு வருஷம் கடுங்காவல் தண்டனை’என்ற தீர்ப்பு கிடைத்த அன்றே வந்துவிட்டான். 

செல்லிக்குப் பைத்யம் பிடிக்கவில்லை–அதுதான் ஆச்சரியம். அவளுடைய மனதுக்கு இந்தச் சேதி எவ்வளவு பெரிய பேரிடி என்பதை அந்தக் கிராமம் அறியும். வேலப் பன் வேகமாகக் கெட்டு வருகிறான் என்ற செய்தி கிடைத்த ஒவ்வோர் தடவையும் செல்லி, செத்து செத்துப் பிழைத்து வந்தாள்– ஒரு வருஷம் கடுங்காவல் என்று கேள்விப்பட்ட போது, அவளால் எதையும் சாகடிக்க முடியவில்லை–ஏற் கனவே எல்லாம் செத்துக் கிடந்த நிலை. 

சடையாண்டியும், செல்லியின் திருமணம் என்பது, இனிச் செய்து தீரவேண்டிய ஒரு கடமை, சடங்கு, ஊர் உலகத்துக்காகச் செய்தாக வேண்டிய ஏற்பாடு என்றுதான் கருத முடிந்தது. காய்ச்சல் வந்தவனுக்குத் தெரியும், வாய்க் கசப்பு இருப்பதும், எதைச் சாப்பிட்டாலும் பிடிக்காது என்பதும். என்றாலும்,கஞ்சி குடித்துத் தீரவேண்டி இருக்கிற தல்லவா! செல்லிக்கும் ஒரு கலியாணம் செய்துதானே ஆக வேண்டும் என்று சடையாண்டி எண்ணியது, அதே முறை யிலேதான். 

‘அவனுக்கா? எனக்கு இஷ்டமில்லை. 

எனக்கு அவன் ஏற்றவனல்ல; அவனோடு என்னாலே குடித்தனம் செய்ய முடியாது’ என்று கூறி, பெற்றோரை எதிர்த்துப் போராடியாவது, தன் மனதுக்கு இசைந்தவனை, தன்னை உண்மையாகக் காதலிப்பவனைத் திருமணம் செய்து கொண்டாக வேண்டும் என்று கூறும் நிலையில் செல்லி இல்லை. 

‘எனக்கு அவள்தான் வேண்டும்’ என்று வேலப்பன் இருந்தால்தானே போரிட! வேலப்பன் எங்கே இருக்கிறான்? சிறையிலிருந்தாலும் பரவாயில்லை. ஏதோ காலக் கோளாறு கயவர் சூது——ஆத்திரத்தால் அறிவு இழந்த நிலை – இப்படி ஏதேனும் ஒரு சமாதானம் செய்துகொள்ள முடியும்-அவன் தான் வேண்டும் என்று வாதாட முடியும். வேலப்பன் சிறை யில் இருப்பவன் மட்டுமல்ல-எல்லா நற்குணங்களும் சிதைத்து போய் உள்ள நிலையில் அல்லவா இருக்கிறான்! சாரு போய் விட்டது; சக்கைதானே மிச்சம்? 

தன்னை மணந்துகொண்டு, ‘வாழ்வு’ நடத்த முடியாத அளவுக்கு, நற்குணங்கள் யாவற்றினையும், நல்ல நினைப்பி னையும்கூட நாசமாக்கிக் கொண்டுவிட்டவன், வேலப்பன். எனவே, இனி அவனை எதிர்பார்ப்பதும் வீண் – அவனுக்காக ஏங்கித் தவிப்பதும் அவசியமற்ற செயல்: உள்ளத்தில் புகுந்து எதிர்காலம் பற்றி ஏதேதோ இன்பக் கனவுகளைக் கூறி நம்பிக்கை தந்துவந்த வேலப்பன், திரும்பி வரவே போவ தில்லை. ஏமாற்றம், திகைப்பு, துடிப்பு, வறுமை, ஏக்கம், பேராசை, சூது, மோசடி, காமக் களியாட்டம் எனும் பல காட்டுமிருகங்கள் அவனைத் தாக்கித் தாக்கி, பிய்த்துக் கடித்து மென்று தின்று, கீழே துப்பிவிட்டன. இனி அவன் யாருக்கும் பலன் இல்லை-அவன் இனி அவனாகவே இருக்க முடியாது!! 

செல்லி, இனி எதற்காகவும் எதிர்பார்த்தும் காத்துக் கொண்டுமிருக்கவும் வேண்டியதில்லை. எது கிடைத்தாலும் சரி,மூன்றாம் தாரம், நாலாம் தாரமாக இருந்தாலும் சரி– மூட்டை சுமக்கும் கூலிக்காரனுக்கு மனைவியாக வேண்டிய தானாலும் சரி தயாராகிவிட்டாள். சமூகம், ஆண் பெண் கூட்டுறவு ஒரு குறிப்பிட்ட ஏற்பாட்டிலே இருக்க வேண்டும் என்று கட்டளையிடுகிறது. அதை மீறுவானேன் என்ற எண்ணத்தால், திருமணம் செய்து கொள்ள வேண்டியதுதான் என்ற முடிவுக்கு வந்தாள் செல்லி. 

‘கண்ணைத் திறக்கிறாள்,கலம் தண்ணி விடுகிறாள். அவன் வானத்தைப் பார்க்கிறான், வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொள்ளுகிறான். அந்தக் குடும்பம் படுகிறபாடு, கல் நெஞ் கிரா சக்காரனையும் கதறவைத்து விடுமப்பா’-என்று மத்தார் பேசிக் கொண்டனர். 

ஓவிய நிபுணர் வடிவேலன் வழக்கப்படி பல கிராமியக் காட்சிகளைத் தீட்டி வந்தது போலவே, அங்கும் வந்தான்— ஒரு மரத்தடியில் உட்கார்ந்து கொண்டு, சற்றுத் தொலை விலே ஆடுகள் மேய்ந்துக் கொண்டு இருப்பதை ஒப்புக்கு அவ்வப்போது கவனித்துக் கொண்டிருந்த செல்லியைக் கண் டான்.அவனுடைய கருத்து மலர்ந்தது.கவர்ச்சிகர மான கிரா மியச் சூழ்நிலையில், கட்டழகு வாய்ந்த அந்தக் குமாரி, கவலை தோய்ந்த முகத்துடன் உட்கார்ந்து கொண்டிருந்த காட்சி, முதல்தரமாக அமைந்திருந்தது.உடனே எடுத்தான், திரையையும் தீட்டுக்கோலையும்! ஓவியம் உருவெடுத்தது. ஓவியக்காரனுக்காகவே உட்கார்ந்திருப்பது போல செல்லியின் நிலைமை இருந்தது! அதைச் சாதகமாக்கிக் கொண்டு வேகமாக மேல்வாரியான படம் தீட்டிவிட்டான்.இனி அதற்கு உயிரூட்டும் வகையில் வேலை செய்ய வேண்டும். 

இரவு பகலென்று பாராமல் வேலை செய்தான்– ஓவி யம் மிக அருமையாக அமைந்துவிட்டது. நண்பர்கள் திற மையைப் பாராட்டினர். அவனோ உண்மை உருவத்தை எண்ணிப் பூரித்துக் கொண்டிருந்தான். 

‘மேகங்கள் அலைவதுகூட அப்படியே தெரிகிறது பார்!’ என்று ஓவியத்தைச் சுட்டிக் காட்டிப் பேசுவர் நிபுணர்கள். அவனோ, அந்தக் கண்களிலே கப்பிக் கொண்டிருக்கும் துக்கத்துக்குக் காரணம் என்ன என்று ஆராய்ந்து கொண்டி ருந்தான் – கவலையுடன். 

அட, இந்த ஆட்டுக்குட்டி, கிராமத்திலே நல்ல மேய்ச் சல் கிடைப்பதால் எவ்வளவு கொழுகொழு என்றிருக்கிறது பார்’ என்று பாராட்டிவிட்டு, ‘இதோ’ இந்தக் குட்டிக்கு மட்டுமென்ன, வெய்யில் என்றும் மழை என்றும் பாராமல், கால் கடுக்குமே கை வலிக்குமே என்று கவலைப்படாமல், ஓடி ஆடி பாடு பல படுவதாலே உடற்கட்டு வளமாக இருக் கிறது – இளமையும் எழிலும் சேர்ந்தவுடன், சிற்பி செதுக் கிய செப்புச்சிலைபோலத் தெரிகிறது’ என்று மற்றவர்கள் புகழும்போது, ஓவியனுக்கு, ஓவியத்தின் பிடியிலும் அகப் படாதிருந்த கவர்ச்சி கண்முன் தோன்றிற்று. எல்லோரும் ஓவியத்தைப் பார்த்து இவன் திறமையைப் பாராட்டிக் கொண்டிருந்தனர். அவனோ அவளையே எண்ணிக் கொண்டிருந்தான். 

கிராமங்கள் பலவற்றுக்குச் சென்று அவன் தன் கருத் திலே மகிழ்வூட்டிய எத்தனையோ காட்சிகளைக் கொண்டு வந்திருக்கிறான்-பச்சைக் கிளிகள் பறந்து செல்லும் காட்சி, பால் சுவைக்கும் கன்றினை அன்புடன் தாய்ப்பசு நாவினால் தடவிக் கொடுக்கும் காட்சி, உழவுத் தொழிலிலே உள்ள பல் வேறு வகையான காட்சிகள், கிராமியப் பெண்களின் குறும் புப் பார்வை, உழவனின் உடற்கட்டு, வெள்ளை உள்ளம் கொண்டவன், புதுமைப் பொருளை விறைத்து விறைத்துப் பார்ப்பது ஆகிய பல காட்சிகள் அவனிடம் சிக்கி, ஓவிய மாயின – ஆனால் இந்தக் கட்டழகி-திரையில் மட்டும் தங்கிவிட வேண்டியவள் என்று வடிவேலன் தீர்மானித்தான். 

வடிவேலன் வசதியான குடும்பத்தினன் – வயதான தாயாருடன், தன் பூர்வீகச் சொத்தைப் பாழாக்கிக் கொள் ளாமல் ஆடம்பரமின்றி வாழ்ந்து வந்தான். ஓவியத்திலே அவனுக்கு நிரம்ப ஆர்வம். அதற்காக அவன் கிராமியக் காட்சிகளில் மனம் செலுத்தத் தொடங்கி கிராமத்தினி டமே கவர்ச்சி பெற்று, இப்போது கிராமக் கட்டழகியிடம் மனதைப் பறிகொடுத்தான். 

வடிவேலனுடைய தாயாருக்கு, தன் மகன் ஒரு நாகரிக நாரிமணியை மணம் செய்துகொண்டு, பார்ப்பவர்கள் பாராட் டத்தக்க விதமாக வாழ வேண்டும் என்றுதான் விரும்பினார் கள். அதற்கான முயற்சிகள் பலதடவை செய்தார்கள்– எல்லாம் ஏமாற்றத்திலேதான் முடிந்தது-காரணம், அந்த அம்மையார்மீது நெடுங்காலத்துக்கு முன்னாலே ஏற்றி வைக் கப்பட்ட கறைதான்.எனவே வடிவேலன்,கிராமத்துக் கட்டழ கியைப் பெற விரும்புகிறான் என்று தெரிந்து, முதலிலே, இதுதானா என் மகனுக்கு என்று வருத்தப்பட்டபோதிலும், ஏதோ, இதுவாவது மங்களகரமாக முடியட்டும் என்று எண் ணிக் கொண்டார்கள். பெண் பார்த்து வரவும், ஏற்பாடுகள் செய்யவும் தானே கிளம்பினார்கள். 

இவ்வளவு வேதனையை அனுபவிக்கிறாள், ‘பாவம்’ இந்த இடம் பச்சென்று இருக்கிறது. பளபளப்பாகவும் இருக் கிறது; பணம் படைத்தவனாகவும் இருக்கிறான்;கிழவனல்ல, அழகாகவும் இருக்கிறான். என்றாலும் பட்டணத்துப் படா டோபம் இல்லை; இந்த இடத்தில் வாழ்க்கைப்பட்டு சீமாட்டி போல வாழ்ந்தாலாவது, செல்லி இழந்துவிட்ட சந்தோஷம் ஓரளவுக்குத் திரும்பிவரக்கூடும் என்ற எண்ணத்திலே, சடையாண்டி, திருமணத்துக்குச் சம்மதமளித்தான். 

ஊரார் பார்த்துப் பரிதாபப்பட வேண்டிய நிலைமை யில் அப்பா நம்மாலே ஆக்சப்பட்டுவிட்டார். என் கதி என்ன ஆகுமோ என்ற ஏக்கம் அவரை வாட்டி வதைக்கிறது. பெரிய இடத்திலே நான் வாழ்க்கைப்படுவதைக் கண்ட பிறகாவது மனதுக்கு ஒரு சந்தோஷமும், அவருடைய சந்தோஷமும், பெருமையும் கிடைக்கட்டும். என் மருமகன் சாமான்யமானவனல்ல. இந் தக் கிராமத்தையே விலைக்கு வாங்கிவிடக்கூடிய அளவு பணம் இருக்கு. படித்திருக்கிறான். நல்ல மனம். பட்டணத்திலே அவனுக்குக் கோட்டைபோல வீடு இருக்கு. மோட்டார் கார் இருக்கு. இப்படிப்பட்ட இடம் கிடைச்சிருக்கு என் மகளுக்கு! அவளோட அழகுக்கும்,குணத்துக்கும் இப்படிப்பட்ட அருமை யான இடம்தான் வந்து வாய்க்கும். பாடுபட்டு, வாயைக் கட்டி, வயிற்றைக் கட்டி, என் மகளை நல்லபடியாக வளர்த் தேன்–அவ தங்கக் கட்டி குணத்திலே! அவளுக்கு இப்படிப் பட்ட இடம்தான் கிடைக்கும் என்று பேசிப்பேசி ஆனந்தப் படுவார். பலகாலமாக மனதை அரித்துக் கொண்டிருந்த துக்கம் தொலையும். கடைசி காலத்திலே கண்களிலே களிப்பு இருக்கும் என்று எண்ணித்தான் செல்லி திருமணத்துக்கு, ஆர்வத்துடன் சம்மதமளித்தாள். 

‘செல்லி! செல்லி! செல்லி!’ என்று பலவகையான் – ஆனால் அன்புச் சுருதி குறையாமல், ஓயாமல் கூப்பிடுவான் வடிவேலன். திருமணத்துக்குப் பிறகு, முன்னாலே அவன் கண்டதைவிட அதிகக் கவர்ச்சி அவளிடம் இருப்பதைக் கண்டான்; களிப்புற்றான். 

அவன் எத்தனையோ முறை, தன் நண்பர்களிடம் வாதாடி இருக்கிறான்; கிராமத்திலே இருக்கிற கவர்ச்சி இங்கே, நகரத்திலே கிடையாது. செடி கொடியிலே இருந்து, மாடு கன்றும் சரி, மக்களும் சரி, அங்கேதான் ஒருவிதமான இயற்கை எழிலுடனும், வளத்துடனும் இருக்க முடிகிறது; ‘டவுனில்’ எல்லாம் பூச்சுதான். எதிலும் இயற்கை எழில் தங்கி இருப்பதில்லை. பாரேன், வேடிக்கையை! தோட்டத் தில் மலர்ச்செடி வைத்து அழகைக் காண வேண்டும் என்று இல்லாமல், வீட்டின் கூடத்தில், மேடையின் பேரில் கண்ணா புப் பாத்திரத்தில், காகிதப் பூங்கொத்தைச் செருகி வைத்து அழகு பார்க்கிற ரகசிகர்கள் தானே நாமெல்லாம், நகரத்தில் அங்கே போய்ப் பாரடா, மலர்க் குவியலை! பச்சைப்பட்டில் மீது நவரத்தினங்களைத் தூவி இருப்பது போலிருக்கும்! மலர் தூவுவார்கள், ராஜகுமாரிகள் நடந்து செல்லும் பாதை யில் என்று கதை படிக்கிறோம். கிராமத்துப் பெண்களுக்கு, மலர்ப்பாதை தானாகவே அமைந்திருக்கிறது. அழகுக்கேற்ற ஆற்றல் கிராமத்துப் பெண்களிடம் இருக்கிறது. இங்கே, ஏழெட்டுக் கடைக்காரர் தயவு கிடைத்தால்தானே, ஒரு எழில் மங்கையைக் காண முடியும். தையற்காரர்களின் தயவு இல்லாமல், பாதிப் பெண்கள், உருவாகவே தெரிய முடி யாதே! பவுடர்காரன், எவ்வளவு அகோரங்களை ‘அனுமதிக் கத்தக்கதுகள்’ஆக்கிவிடுகிறான்! இப்படித்தான் இங்கே அழகி கள் தயாரிக்கப்படுகிறார்கள். அங்கு அப்பழுக்கற்ற அழகு தானாக மலர்ந்துவிடுகிறது–காலையிலே, நீராகாரம், நடுப் பகல் உணவு, இரவு, காலையிலே இருந்ததில் கொஞ்சம்- இடையிடையே மாம்பிஞ்சோ, புளியம்பழமோ, பச்சரிசி மாங்காயோ, பழுக்காத கொய்யாவோ, எதுவும் இல்லை யானால் கதிரைக் கசக்கிப் புடைத்தெடுத்த, பால் ததும் பும் மணியோ, எதையோ ஒன்று வாயில் போட்டுக் குதப் பிக் கொண்டு, குதூகலமாகத்தான் இருக்கிறார்கள். அவர் களின் குதூகலப் பேச்சும் குறும்பான ஆடல் பாடலும், கண் டால்தானே தெரியும். இங்கே நாட்டிய ராணிகள் தங்க ளுக்குத் தெரிந்த தளுக்கு, குலுக்கு, மினுக்கு, வெட்டு எல் லாவற்றையும் காட்டிப் பார்க்கிறார்கள்; பாம்பாக நெளி கிறார்கள். பச்சை மயில் போல ஆடுகிறார்கள். என்ன செய் தாலும், கவர்ச்சி கனியாது என்பதைத் தெரிந்து கொண்டு, இப்போது கிராமிய நடனம் ஆடுகிறார்கள், பார்த்தாயா! நாடோடிப் பாடல் கிராமீய நடனம் என்பதன்மீது இன்று அக்கரை சென்றதற்குக் காரணம், நகரத்து நாட்டியத்தை யும், பட்டணத்து பாணியுள்ள பாட்டையும் மட்டும் கொண்டு நகரமக்களே திருப்தி கொள்ளவில்லை என்பது புரிந்து விட்டது. ஆகவேதான், கிராமீய மகிமையைக் காட்டுகிறார் கள்! எந்தக் கிராமத்திலாவது, நகரத்து நாட்டியம் பட்டணத் துப் பகட்டு நடைபெறுகிறதா? இல்லையல்லவா என்று ஆர்வம் பொங்கப் பொங்கப் பேசுவான். 

“ஏண்டா வடிவேல்! பொதி பொதியாகக் கொட்டிக் காட்டணும்-சுருக்கமாகச் சொல்ல வேணும்னா கிராமத் துக் கட்டழகியைக் கலியாணம் செய்து கொள்ளவும் நான்’ தயார்னு சொல்லேன்’ அவனது நண்பர்கள் கேலி பேசுவர்.

“தயார்…! என்று தயாவிஷயமாசப் பேசுவானேன். கிராமத்துப் பெண்ணைத்தான் கலியாணம் செய்து கொள் ளப் போகிறேன். இது உறுதி!” என்று திட்டவட்டமாகக் கூறிவந்தான். 

“சொன்னபடியே செய்தே காட்டிவிட்டானே! செல்லி அழகான பெண்தான். ஆனா அசல் பட்டிக்காடு! முகத்தி லேயே அந்த முத்திரை விழுந்திருக்கு” என்று கலியாணத் துக்குப் பிறகு கூறினர். பெருமையுடன் தன் நண்பர்களிடம், “டேய், பார்த்தாயா! சொன்னபடி நடத்திக் காட்டினேன்’ என்று பேசுவான். ‘என்னமோடாப்பா, நீ சந்தோஷமாக இருந்தாப் போதும்” என்று கூறினர். 

செல்லியைப் பொறுத்தமட்டில், பணிவிடை செய்வ தன் மூலம் வடிவேலனை மகிழ்விக்க வேண்டும் என்பதிலே அக்கரையே இருந்தது. வேலப்பனிடம் கொண்டிருந்த ‘பிரேமை’ இனி மீண்டும் எழாது வேறோர் திசையில் செல்லாது- ஆனால் வடிவேலனிடம் நல்ல மதிப்பு இருந்தது. சில வேளைகளிலே பரிதாபமாகக்கூட நாமோ பட்டிக்காடு-இவரோ படித்தவர், பட்டணத்துக் காரர்–பணக்காரர். இவர் ஏன், இந்தப் பட்டணத்திலே எத்தனையோ பேர் ராணிபோல் இருந்தும், என்னைத் தேடிக் கண்டுபிடித்தார்? என் தரித்திரத்தைக் கண்டு பாசம் பிறக் குமா? வேடிக்கையாக அல்லவா இருக்கிறது! இங்கே உள்ள வர்களின் நடை உடை பாவனைகளிலே உள்ள நாகரிகத்துக் கும், என் போக்குக்கும் ஏணி வைத்தாலும் எட்டாதே! எதைத் தொட்டாலும், சோப்புப் போட்டுக் கை கழுவி, உடனே ஈரம் போகத் துணியால் துடைத்துக் கொள்கிறார் கள். எத்தனையோ தடவை, கீழே எண்ணெய் கொட்டி விட்டால் எடுத்துத் தலையில் தடவிக்கொள்ளுவேன் — பிறகு முந்தானையில் துடைத்துக் கொள்ளுவேன்-நான் இங்கே, இவருக்கு வந்து வாய்ப்பது என்றால், எனக்கு என்ன சொல் வது என்றே புரியவில்லை. களத்துமேட்டுக்கு ஓடுவதும்,முழங் காலளவு சேற்றில் இறங்கி நடப்பதும், மரத்தில் ஏறிக் காய் பறிப்பதும், மடுவில் நீந்திக் குளிப்பதுமாக இருந்து வந்த என்னை, இங்கே, காலிலே ஜான் உயரத்தில் பூட்சும், கையிலே ஒரு அலங்காரப் பையும், கண்ணுக்குத் தங்கக் கம்பி போட்ட கண்ணாடியும் போட்டுக் கொண்டு, முக்கால் சிரிப் பும், கால் பேச்சும் கலந்தளித்துவரும் நாகரிகப் பெண்களின் நடுவில் கொண்டு வந்து ஏன் நிறுத்தினார் என்றே தெரிய வில்லை. அவர் மேஜை மீது அடுக்கடுக்காகப் புத்தகங்கள்— ஒரு வரியும் எனக்குப் புரியாது… ஆனால் என்னிடம் அவர் காட்டும் அன்பைக் கண்டாலோ, அவருடைய காலைத் தொட்டுக் கும்பிட வேண்டும் போலத் தோன்றுகிறது. கதை ஒன்று கேட்டிருக்கிறேன், சின்ன வயசில். வேண்டு மென்றே ஒரு ராஜா, தன் நாட்டிலே இருந்த பிச்சைக்கார னுக்கு, ஒருநாள் ராஜா வேலை கொடுத்து, அதை அவன் எப்படி எப்படி உபயோகப்படுத்துகிறான் என்று வேடிக்கை பார்த்தானாம்-அதுபோல இது ஒரு வேடிக்கையோ, என் னவோ என்று எண்ணிக் கொண்டு, அதற்கு ஏற்றபடியே நடந்து கொண்டு வந்தாள். 


கிராமத்துக் கட்டழகியின் கவர்ச்சி, நகரத்துச் சூழ் நிலையில் மெள்ள மெள்ளத் தானாகவே மாறிக்கொண்டு வர லாயிற்று. ஒருவரும் கவனிக்கக்கூட முடியவில்லை. பசுமைக்குப் பக்கத்திலே இந்த ‘இளமை’ உலாவிக் கொண்டி ருந்த காட்சிக்கும், பங்களாவில் ஆள் நடமாட்டம் இல்லாமல், அந்தஸ்தைக் காட்டும் பொருள்களுக்கும் மத்தியில் செல்லி இருந்த காட்சிக்கும் வித்தியாசம் காணப்பட்டது. அதைக் கவனித்தறிய வடிவேலனால் முதலிலே முடியாமற் போனதற்குக் காரணம், அவன் அவளிடம் செ க்கிக் கிடந்தது தான்! மடுவிலே இறங்கி, மகிழ்ச்சியுடன் நீந்தி விளையாடு வாள், கிராமத்தில்; வேறு பெண்களும் குளிக்க வருவார்கள்- விளையாட்டு பலமாகிவிடும்; தண்ணீரை வாரி வாரி இறைத் துக் கொள்வார்கள். யார் முதலிலே வெளியே தலையைத் தூக்குகிறார்களோ அவர்களுக்கு மூணு குட்டு தலையிலே என்று பந்தயம் கட்டிக்கொண்டு, தண்ணீருக்குள் மூழ்கிக் கிட பார்கள் – உலர்ந்ததும் உலராததுமாகவே கூந்தலைக் கோதி முடிந்து கொள்வார்கள் – இவைகளாலே அவர்களின் உள்ளத். திலே ஒருவித சுறுசுறுப்பும், உடலிலே ஒருவித மினுமினுப்பும் ஏற்பட்டது- எழிலூட்டிற்று. இங்கே, வெந்நீர்!விதவிதமான சோப்புக் கட்டிகள்! பேசாமல், சிரிக்காமல், குளித்துவிட்டு வரவேண்டும். குளிப்பது கிராமத்திலே, விளையாட்டிலே ஒன்று. இங்கு கடமைகளில் ஒன்று! கிராமத்திலே, கண் களுக்கு விருந்தளிக்கப் பல காட்சிகள்–கிளி பழத்தைக் கொத்தித் தின்னும்; காடை கௌதாரி கீழே சிதறிக்கிடக்கும் மணிகளைப் பொறுக்கித் தின்னும்; வயலோரத்து நீரோ டையில் வாத்துக்கள்; பல இடங்களில் மரம் குத்திப் பறவை கள்; மடுவிலே விதவிதமான மீன்கள், பட்டுப் பூச்சிகள்; எங்கு பார்த்தாலும் வர்ணத்தை அள்ளித் தெளித்ததுபோல, ஆட்டுக் குட்டிகள் துள்ளுவதும், கயிறு அறுத்துக் கொண்டு ஓடிவரும் காளையைப் பிடிக்க உழவர்கள் கூச்சலிடுவதும், பெண்கள் பயந்து ஒதுங்குவதும், இப்படிப் பல காட்சிகள் கண்டு, அதனாலே உள்ளத்துக்கு உற்சாகம் கிடைத்தபடி இருந்தது. முயற்சி – வெற்றி-இந்த இரு கட்டங்கள்தானே மனித உள்ளத்துக்கு எழிலும், உரமும் தருவன; அந்த நிலை, கிராமத்திலே விநாடிக்கு விநாடி ஏற்பட்டு வந்தது. ஒவ் வொரு காரியமும் வெற்றி அளிக்கும்போது களிப்பூட்டும். இங்கு, கடிகாரத்தின் முட்கள், பிறருக்காக, ஒழுங்காக வேலை செய்து கொண்டிருப்பதுபோல, வாழ்க்கை அமைந் திருந்தது. கடிகாரம் மணி அடிப்பது போல, இங்கு சில நேரம் பேச்சு- சிரிப்பு மற்ற நேரத்தில், ஒழுங்கான நிதான மான, அளவிடப்பட்ட ஓட்டம்!! செல்லியின் வாழ்க்கை இது போல இருந்ததில்லையே. அவளுக்கு ஆச்சரியமாகவே இருந் தது எண்ணிப் பார்க்கும்போது. அவள் காதிலே அவள் குதூ கலமான குரலொலிபட்டு,நாட்கள் பலவாகிவிட்டன. கிராமத் திலே ஒரு நாளைக்கு நூறு தடவை அவள் கூவுவாள். பெரி யப்பா! அண்ணேன்! பாட்டி! அப்போய்! அட, உன்னைத் தான்! கூனுக்கிழவா! கொண்டைக்காரி! சண்டைக்காரி – இப்படி ஒவ்வொருவருக்கு ஒரு பெயரிட்டு, உரத்த குரலில் கூப்பிடுவாள்; ஓடிச்சென்று சிலரைத் தடுத்து நிறுத்துவாள்; சிலர் கரத்தைப் பிடித்திழுத்து விளையாடுவாள் – எல்லாம் பழங்கதையாகிவிட்டது. உரத்த குரலில் பேச வேண்டிய அவசியமே ஏற்படவில்லை. எப்போதும் சண்பார்வையில் பட்டபடி இருக்கிறாள் வேலைக்காரி! மாமி, எதிரிலேயே சோபாவில் உட்கார்ந்து கொண்டு ‘பாரதம்’ படிக்கிறார். அவரோ, வந்ததும் ஓவியம் எழுதுகிறார்–அது முடிந்ததும், ‘எப்படி கண்ணழகு? உன்னோடு போட்டி போடுதா? உனக் கும் இவளுக்கும் போட்டி. யார் ஜெயிப்பீர்கள்?’ என்று கொஞ்சுவார்! வேறே பேச வேண்டிய நிலைமையே வருவ தில்லை; வாயடைத்துக் கொண்டல்லவா இருந்திருக்கிறோம் இவ்வளவு நாட்களாக என்று எண்ணி, தனக்குத்தானே ஆச்சரியப்பட்டாள். 

பெரிய இடத்துக்கு வாழ்க்கைப்பட வந்தவள் என்ப தாலே, செல்லியிடம் உபசாரம் பேச, நாகரிகப் பெண்கள் வருவதுண்டு. 

“வாங்க…” என்று மரியாதையாகத்தான் அழைப் பாள். ஆனால் மறுகணமே, அவர்களுக்கும் நமக்கும் ஒட்டி வராது என்று பயம் தோன்றும் — மாமியுடன் பேசிவிட்டுப் போகட்டும் என்று இருந்துவிடுவாள். இவளுக்கென்ன இவ் வளவு கர்வம் என்று எண்ணிக் கொள்வார்களோ என்ற பயத்தால் சில நாட்களில் வந்த பெண்களுடன் பேசுவாள்; அவர்கள் கேலி செய்யும் விதமாக இருக்கும், அவளுடைய கேள்வி பதில் இரண்டுமே! 

“பட்டிக்கஈடுன்னாலும், சுத்தமாகச் சுட்டெடுத்தது’ என்றாள், ஒருவள்-வேகமாக நடந்தால், காற்று அடித் துக் கொண்டு போய்விடத்தக்க ஒத்தை நாடிக்காரி! அவளு டைய மனதில், தானோர் பூங்கொடி என்ற எண்ணம் கொடிடோல் உடல் இருந்தது!பூப்போல எதுவும் கிடையாது. 

“நம்மோடு பேசுவதற்கே இவள் இவ்வளவு திண்டாடு கிறாளே, வடிவேலன் ஒரே கலை விஷயமாசப் பேசுவானே, என்ன பேசுவாள், இவள்” என்று கேட்பாள் ஒரு குறும்புக்காரி. மற்றொருத்தி, “போடி, பேசுவது மட்டும்தானா, புருஷன் பெண்ஜாதிகளுக்குள் இருக்கும் வேலை. பேசத் தெரியாவிட்டால் என்னவாம்!’ என்று வேறோர் வம்புக்காரி பேசுவாள். 

“நாட்டுக் கட்டை என்று கேலியாகச் சொல்லுவாள். எனக்கு அதனுடைய பொருள் முன்னாலே தெரியறதில்லே; இப்ப, இவளைப் பார்த்தபிறகு, புரிஞ்சுது…” என்பாள், அவலட்சணத்தை மறைக்க நாளெல்லாம் பல வகையால்பாடுபட்டுக் கொண்டு வந்த ஒரு நோஞ்சான். 

கண் இருக்கு காது வரையிலே! ஆனா, மிரள மிரள அல்லவா விழிக்கிறாள்! 

“புருவத்திலே பார்த்தாயடி, எவ்வளவு கத்தை கத் தையா இருக்கு மயிர்–ஆனா, அதை ஒழுங்காக மை தடவி, வைத்திருக்கத் தெரியலையே…” 

‘அதிக உயரமில்லே; ஒட்டகைச் சிவிங்கை மாதிரி! குள்ள வாத்து மாதிரியுமில்லே, சரியான அமைப்புத்தான் இருக்கு. ஆனா, அந்த உடற்கட்டுக்குத் தகுந்த உடை உடுத் தத் தெரியறதா! காளி சிலைக்கு போர்த்தி வைத்திருக்கிறது போல, சேலையைச் சுத்திண்டு கிடக்கறா பார்க்கச் சகிக்கல்லே…’ 

‘கூல்டிரிங்க் கேட்டுட்டு, நான் படாதபாடுபட்டனே, ஒரு நாள்-பத்துத் தடவை, புரியறது மாதிரியா– பிறகு கொண்டு வந்து கொடுத்தா.ஒரு இழவும் புரியல்லே…’ 

‘கிளப்புக்குப் போவமா’ன்னு நான் ஒரு நாள் கேட்டேன். ”ஏன், ஏன்! இன்னக்கி வீட்டிலே என்ன? சமையல் கிடையா தா”ன்னு கேட்டாளே, முண்டம்! கிளப்புண்ணா ஓட்டல்னு எண்ணிக் கொண்டா. பிறகு அவளிடம் கிளிப்பிள்ளைக்குப் பாடம் சொல்றது போலச் சொல்லி, வெகு பாடுபட்டு மெம்ப ராக்கினேன்… 

‘வடிவேலன், வெசுவயஸ் படம் எழுதியிருக்காண்டி! ரொம்ப நன்னா இருக்கு. பார்க்கும்போது, நெருப்பு நம்ம மேலேயே வந்து விழுந்துடுமோன்னு தோணும். அவ்வளவு தத்ரூபமா எழுதியிருக்கான்…இவ சொல்றா, து என்ன படம், நெருப்பைப் போயி படமா எழுதவேணுமா’ன்னுகேட் கிறா? இப்படி என்னைக் கேட்ட மாதிரி, அவனைக் கேட் டிருந்தா, தலை தலைன்னு அடித்துக் கொண்டு சன்யாசம் வாங்கிக்கொண்டு விடமாட்டானோ வடிவேலன்.’ 

இப்படி எல்லாம் பேசுவார்கள் நாகரிக நங்கைகள்- சில வேளைகளில், செல்லத்தின் செவியில் படும்படிகூடப் பேசுவார்கள். கோபமாக இருந்தது. இருந்து? பொறுத்துக் கொண்டாள். நாம் இங்கு வந்திருப்பது, இதுகளிடம் நல்ல பெயர் வாங்க அல்ல; அவருக்கு அன்புதர–அதை நாம் வஞ்சனையின்றிச் செய்து வருகிறோம்- அவர் நம்மிடம் ஒரு குறையும் காணவில்லை; எப்போதும் போலத்தான பிரியமா கப் பேசுகிறார்; அதுபோதும் நமக்கு என்று திருப்தி அடைந்தாள். 


பிரியமாசப் பேசுகிறார் என்று அவள் எண்ணிக் கொண் டதிலே தவறு இல்லை. ஆனால் எப்போதும் போல அல்ல! அதை அவளாலே அவ்வளவு எளிதாகத் தெரிந்து கொள்ள முடியவில்லை. 

“ஏன் செல்லா! பீச்சுக்கு வருவதிலே உனக்கு என்ன சங் கடம்? அந்த இடம் என்ன, புலி கரடி உலவுகிற இடமா என்ன?” என்று ஆரம்பமாயிற்று. அதிருப்திப் படலம் எது வரையில் சென்றது என்றால் “நான் போயிட்டு வருகிறேன் பீச்சுக்கு; ஊர்மிளா வந்தா ல் சொல்லு, நான் பீச்சிலே இருப்பேன்” என்று சொல்லி விட்டுத் தனியாகக் கடற்கரை செல்லும் அளவுக்குச் சென்றது. 


ஊர்மிளா, வடிவேலனைப் பெற வேண்டுமென்பதற் காகவே, வெளியே கிளம்பும் போதெல்லாம், குறைந்தது ஒரு மணி நேரம் கண்ணாடியும் கையுமாக ஒரு வருடம் இருந் தவள். கல்லூரியில் ‘ஆங்கில டான்சு’க்கு அவளுக்குத்தான் மெடல் கிடைத்தது. அவளிடம் வடிவேலனுக்குக் கா தலோ என்று சந்தேகம் பிறந்தது, செல்லிக்கு; கோபமாகக்கூட இருந்தது. பிறகோ அவர் எது செய்தாலும் பொறுத்துக் கொள்வேன்; தெரியாமல் என்னைக் கலியாணம் செய்து கொண்டார். அவருடைய மனைவியாக இருக்கும் வகையில், என் நடை நொடி பாவனை இல்லை; என்னால் மாறவும் சுலபத்திலே முடியவில்லை அவர் தன்னைத்தானே ஏமாற் றிக் கொண்டார், பாவம். ஊர்மிளா உல்லாசமாகப் பேசு கிறாள். அதிலே அவருக்கு ஒரு விதத்தில் மகிழ்ச்சி. அதை யாவது அவர் பெறட்டும் என்று நினைத்துக் கொள்வாள். கோபம்கூட மறையும். 

அடுத்த கட்டம் ஆரம்பமாயிற்று! மாமி அதைத் துவக்கி வைத்தாள். “செல்லி! ஒரு படித்த புருஷன், நாலு பேருடன் மதிப்பாகப் பழகி வருகிறவன், நாகரிகமானவன், அவனோட மனசு சந்தோஷப்படுகிற மாதிரியாக இருக்க வேண்டும் என்கிற அறிவு இருக்க வேணாமாம்மா! கழுத்திலே தாலியைக் கட்டிவிட்ட பிறகு, மனைவியுடன் புருஷன் ஆசையா இருந்துதானே தீரணும்னு எண்ணிக் கொண்டா போதுமா? அவனுக்கு மனம் குளிரும்படியா, நாகரிகமாக உடுத்திக் கொண்டு, நல்ல இன்பமாகப் பேசிக்கொண்டு, பொழுது போக்காக இருந்தால்தானே, அவன் உன்னை எப் போதும் அன்பாக நடத்துவான். எண்ணெய் வடிந்து நெற்றி யிலே வழியுது- அதைக்கூடத் தெரிந்து கொள்ளாமலிருக்கறே! அதே கோலத்திலே,பல பெண்கள் உன்னைப் பார்க்கிறாங்க! பின்னாலே போயி எவ்வளவு கேலியாகப் பேசறாங்க தெரி யுமா? செச்சே! இப்படியா இடிச்சுவைச்ச புளியாட்டம் இருக் கிறது” என்று புத்தி சொல்லி வந்தார்கள்; புதிய கோலம் பெறுவதற்கான வழிகளை, வேலைக்காரி மூலம் சொல்லிக் கொடுத்தார்கள். செல்லியும், நாகரிகக் கோலத்தை – உதட் டுச் சாயம் உட்பட மேற்கொள்ள ஆரம்பித்தாள்.சகிக்க முடி யாத கோரம் அவளிடம் குடிபுக வந்தது. 

கூந்தலை அள்ளிச் செருகிவிட்டு, சிறுமலர்ச் செண்டு வைத்திருந்தபோது இருந்த எழில், முன்பக்கம் கொம்பு போலக் கூந்தலைச் சுருட்டிவிட்டு, பின்பக்கம் இரண்டு சாட்டைகளைத் தொங்கவிட்டு, தலையிலே ஒரு பூக்கூடை யைச் சுமந்துகொண்டு செல்லி காட்சி தந்தபோது வடி வேலன், வெட்கப்படும் வடிவம் காட்டிற்று! 

ஊர்மிளாவை இதே கோலத்தில் பார்த்தவர்கள் கிளியோபாட்ரா என்பார்கள்! செல்லிக்கு அதே அலங்காரம், ஆபாசமாக இருந்தது. இவ்விதமே, நாகரிக நங்கையாக வேண்டும் என்பதற்காக, செல்லி எடுத்துக் கொண்ட ஒவ்’ வொரு முயற்சியும் அவளுடைய இயற்கை எழிலைப்பாழாக்கி விட்டது. செல்லிக்கும் வடிவேலனுக்கும் இடையிலே இருந்த தொலைவு அதிகரித்தது; ஊர்மிளாதான் வடிவேலனுச்கு ஓவியக்கலைக்கே ஆதாரமானாள்.புன்னகையுடன் ஊர்மிளா புல்லை வாயில் தடவியபடி படுத்த நிலையில் ஊர்மிளா! பந்தாடும் ஊர்மிளா ! என்று இப்படியே ஓவியங்கள் கூட டத்தை அலங்கரித்தன. செல்லியின் ஓவியத்தை அகற்றிவிடவில்லை; அந்த இடம் ஊர்மிளாவின் ஓவியக் காட்சிக் கூடமாகவே மாறிவிட்டது. 

எழும்பி எழும்பித் தானாக அடங்கிடும் கோபம், ஏமாற்றம், வெட்கம், துக்கம் எல்லாம்கூடிச் செல்லியின்மீது படை எடுத்தன. ‘இளமை’ ஓரளவுக்குக் கவசமாக நின்று தடுத்தது. என்றாலும் நீண்ட நாளைக்கு இந்தக் கவசம் பயன்படாது என்பதும் புரியும் நிலை வந்தது. செல்லியின் முகம், சோக பிம்பமாகிவிட்டது. 

“ஏனம்மா! உலகத்தையே பறிகொடுத்தவ போல உம் முனு இருக்காளே, செல்லி! என்னவாம்? உடம்புக்கு ஏதா ஏதாவது தொல்லையா? சொல்லித் தொலைச்சாத்தானே, வது செய்யலாம்…” 

“அவளுக்கு உடம்புக்கு என்னடா? வேளா வேளைக்குச் சாப்பிடறா, விடியிற வரையிலே தூங்கறா, விசனம் என்ன இருக்கு, உடம்பு கெட? சிலதுகளோட முகம் அப்படி. பதி னெட்டிலே பால் வடியறது போல இருக்கும். இருவதிலே அழுதுவடியும். அதுக்கு என்ன மருந்து இருக்கு டாக்டரிடம்” 

“ஊர் ஞாபகம் வந்திருக்கோ, என்னமோ? போகிறதா இருந்தா, அனுப்பி வையேன்…” 

“நானே, அவ அப்பனுக்குக் கடிதம் போட்டுக் கூப்பிட ணுமா? ஏண்டா, அதுவா நியாயம்? அவளப்பாவா வந்து அழைச்சி இருக்கணும்…” 

“நடவு வேலையோ, நாத்து வேலையோ, யார் கண்டா?” 

“இல்லையானா தாசில் வேலையா இருக்கு! எந்த வேலையையும் இரண்டு நாளைக்கு ஒதுக்கி வைத்துவிட்டு, வந்து மகரா ஜனா அழைச்சிக்கிட்டுப் போகட்டும். நானா தடுக்கறேன். 


செல்லிக்கு விஷயம் புரிய ஆரம்பித்தது! அன்பு குறைந்தே போய்விட்டது. அவசரப்பட்டு இந்தச் கலியாணத் தைச் செய்து கொண்டோம் என்கிற எண்ணமே வடிவேல னுக்கு வந்துவிட்டது என்பது தெரிந்துவிட்டது. 

தெரிந்து? உரிமைக்காகப் போராடுவேன் என்று நினைத் தாளா? அல்லது, அவனுடைய மனதைத் தன்வசம் மீண்டும் கொண்டு வரத்தக்க வழி என்ன என்று ஆராய்ந்தாளா? இல்லை. அவள் வடிவேலனாகத் தேடிக் கொண்ட மனைவி அவள் அவனைக் கழனியோரத்தில் கண்டு சிரித்ததில்லை. களத்துமேட்டில் கை கோர்த்து விளையாடியதில்லை, கை அடித்து சத்தியம் செய்து கொடுத்ததில்லை, பொரி விளங் காய் உருண்டை கொடுத்துவிட்டு, நகக்குறியைப் பரிசாகப் பெற்றதில்லை! அவள் அவனைக் கணவனாகப் பெற்றாள்– அதுகூட இல்லை; அவன் அவளை மனைவியாகக் கொண்டி ருக்கிறான். அதுதானே தொடர்பின் பொருள்? அது மாறும்; மறையும். அதற்காக என்ன செய்ய முடியும்? வந்ததை அனு பவிக்க வேண்டியதுதான் என்று கருதிக் கொண்டாள். 

கிராமச் சூழ்நிலை இல்லாமற் போனதாலேயே குலைந்து வந்த அவளுடைய கவர்ச்சி, கணவனின் மனம் மாறிவிட்ட தால் ஏற்பட்ட வேதனையால், மேலும் கெட்டு விட்டது. காய்ச்சல் அதிகமானவனுக்கு, அம்மையும் வந்தால் என்ன ஆகும், அதுபோல!! 


“அவசரப்பட்டு மாட்டிக் கொள்வானேன் – இப்போது அவதிப்படுவானேன்” என்று ஊர்மிளா கேட்கிறாள். 

“என்னைச் சித்திரவதை செய்யாதே! எனக்கு ஒரு மாதிரி மனமயக்கம்; கிராமத்து மீது மோகம். அந்த நிலை யில், செல்லி என் கண்ணுக்குத் தங்கப்பதுமை போலத் தெரிந்தாள்…” 

“இப்ப மட்டும் என்னவாம்? நல்ல உடற்கட்டு? உழைப் புக்கு ஏற்றவள்.” 

‘போதும், ஊர்மிளா! நான்தான் பெருந்தவறு செய்து விட்டேன் என்பதை ஒப்புக்கொள்கிறேன். இனி என்னசெய்ய முடியும்? சனியனை விரட்ட முடியுமா. ஊருக்குப் பொய்த் தொலை என்று சொன்னாலும், நகர மறுக்கிறது.” 

“எப்படிப் போவாள்? அவள் என்ன இலேசுப்பட்டவளா? அங்கே போனால், வெல்வெட்டு மெத்தையா போட்டு வைத் திருக்கு? வைக்கோற்போர்தானே!” 

அதற்குமேல் பேச்சு கேட்கவில்லை. வளையல்கள் ஒலித்தன! நாற்காலிகள் மோதின! ஊர்மிளா சிரித்தாள்! செல்லி கண்களைத் துடைத்துக் கொண்டு, சமையற்கட்டு பக்கம் சென்றுவிட்டாள். ஒரு மணி நேரம் கழித்து வடி வேலன் குளிக்கச் சென்றான், புதிதாக வந்த சினிமாவில் காதலர்கள் பாடும் பாட்டை மெல்லிய குரலில் பாடியபடி. 

பெரிய இடத்திலே பெண்ணைக் கொடுத்துவிட்டோம். அடிக்கடி அங்கு போனால், பெண்ணின் மீதுள்ள ஆசையால் வருவதாக ஊரார் எண்ணிக் கொள்ள மாட்டார்கள். பசை யும் ருசியும் உள்ள இடத்துக்குப் போய், கிழவன் ஒட்டிக் கொண்டான் என்றுதான் ஏசுவார்கள் என்ற எண்ணத்தால் சடையாண்டி மகளைப் பார்க்க வருவதில்லை. ஏதாவது ‘விசேஷம்’ நடக்கும்போது போய்ப் பார்க்கலாம் என்று இருந்துவிட்டான். 

கிராமத்தின் கவர்ச்சியை அடிக்கடி சென்று ரசித்து வந்த வடிவேலன், கலியாணமான புதிதில் வந்து கொண்டி ருந்தான் – பிறகு அந்தப் பழக்கம் நின்றுவிட்டது. 

ஊர்மிளா, கிராமத்தைப் பற்றி அருவருப்புக் கொள்ளும் படிகூடச் சொல்லிவிட்டாள். 

“என்ன இருக்குது கிராமத்திலே! ஒரே பொட்டல் காடு! பெந்துகளில் நரிகள் இருக்கும்! புதர்களிலும், புற்று களிலும் பாம்பு இருக்கும். வயலிலே நண்டு இருக்கும். குளத் திலே முதலை இருக்கும், காளி கோயில் இருக்கும், கூளி கோயில் இருக்கும், இதன் நடுவே தலை ஒரு வேஷமும் துணி ஒரு மோசமுமாக ஜனங்கள் இருப்பார்கள்,மாடு ஆடு ஒட்டிக் கொண்டு அல்லது சேறு சகதியிலே புரண்டு கொண்டு! ஓவிய மாசப் பார்க்கும்போது, கண்ணுக்கு அழகு தான்! ஆனா, கிராமத்திலே வாழ்ந்துகொண்டு, கிராமத்து வேலையைச் செய்துகொண்டு, கிராமத்தார் போலவே இருந்துவிட முடி யுமா? சொல்லுங்க பார்ப்போம்? பொழுது போக்குக்கு என்ன இருக்கு? கிளி கொஞ்சும், சோலையிலே என்று சொல் வீர் – சரி–இராத்திரி வேளையிலே நரி ஊளையிடும், ஆந்தை கத்தும், வெறிநாய் குலைக்கும், பயமற்றுத் தெருவிலே நடக்க முடியுமா? கிராமம், உலகம் தெரியா தவர்கள், படிப்பு அறியாதவர்கள, உழைத்து பிழைக்கறதுக்காக உள்ள இடமே தவிர, நமக்கு ஏற்ற இடமா? செச்சே! என்னாலே ஒரு நாளைக்கு மேலே தங்கி இருக்க முடியாது. பத்துப் பதி னைந்து சினேகிதாளோட ‘வன போஜனம்’ செய்யப் போக லாம்; டார்ச் லைட் மட்டும் இருந்தால்கூடப் போதாது; பெட்ரமாக்ஸ் இருக்க வேணும், கிராமபோன் அவசியம் வேணும், சீட்டுக்கட்டு இருக்கணும். இவ்வளவு பக்கமேளம் இருந்தாத்தான் ஒரு பொழுதை ஓட்டமுடியும், கிராமத்திலே…” என்றாள். ஆமாம் என்று ஆமோதித்தது மட்டு மல்ல, வனபோஜனத்துக்கு ஏற்பாடு செய்தான் வடிவேலன், ஊர்மிளா சொன்ன முறைப்படி! ஒரே ஒரு மாறுதலுடன் பத்துப் பதினைந்து நண்பர்களை அழைத்துக் கொண்டு போகவில்லை – இருவர் மட்டும் சென்றனர். 

கிராமத்துத் தோப்பில் மருமகப்பிள்ளை ‘கூடாரம்’ அடித்திருக்கிறார் என்று கேள்விப்பட்டு, சடையாண்டி ஒடோடிச் சென்றான். 

“மருமவப் பிள்ளே! இது நல்லா இருக்குதுங்களா? கல்லுப் போல நானொருத்தன் இருக்கறப்போ, தோப்புலே வந்து தங்கிகிட்டிங்களே. வாங்க, நம்ம வீட்டுக்கு. இப்ப, புதுசா, முன்பக்கம் ஒரு கூடம்கூட போட்டு இருக்கு… வசதி யாகத்தான் இருக்கு” என்று அழைத்தார். வடிவேலன் வரு வதற்கில்லை என்றுகூறி அனுப்பிவிட்டான். வருத்தம், வெட் கம், சடையாண்டிக்கு. அதிலும், தன் மகளை அழைத்து வராமல், ஏதோ ஒரு ‘புடலங்காயை’ அழைத்துக் கொண்டு வந்திருப்பதைப் பார்த்தபோது வயிறு எரிந்தது. 

இந்த வயிற்றெரிச்சலோடு வீடு சென்றால், வாசலில் வேலப்பன் நின்று கொண்டிருந்தான் உருமாறிப்போய்! அவனைப்பார்க்கவே கஷ்டமாக இருந்தது,சடையாண்டிக்கு. துக்கம் கப்பிக் கொண்டது! எவ்வளவு அருமையாக வளர வேண்டியவன், அவனை மருமகனாக்கிக் கொள்ள மனம் எவ்வளவு துடித்தது, படுபாவி ஆடி அழிந்து, நமது ஆசையை அழித்துவிட்டு, இப்போது பட்டுப் போன மரம்போல வந்து நிற்கிறானே என்று ஆத்திரமாகக்கூட இருந்தது. அடக்கிக் கொண்டு, ஒப்புக்கு ‘சேதி’ விசாரித்தான். வேலப்பனுக்கு சுருக்கமாகவே பதில் சொல்லிவிட்டு, சிலோனுக்குப் போக ஏற்பாடாகிவிட்டதாகவும், செலவுக்கு ஒரு ஐம்பது ரூபாய் வேண்டும் என்றும் கேட்டான். 

மனத் துணிச்சலைப் பாரு! என் மகளோட மனக்கோட் டையைத் தூளாக்கிவிட்டு, எனக்கும் மானம் போகிறவிதமா நடந்துவிட்டு, குடித்துக் கூத்தாடி, ஜெயிலுக்குப் போய் வந்து என்னையே பணமல்லவா கேட்கறான், பாவிப்பய- என்று கோபம்தான்.ஆனால்,வேலப்பனை ஏறிட்டுப்பார்த்த போது, அவன் கண்களிலே இருந்த வேதனையைத் தெரிந்து கொண்டு சடையாண்டியால் அழுகையை வெகு சிரமப்பட் டுத்தான் நிறுத்திக் கொள்ள முடிந்தது. 

“நாளை மறுநாள் பார்ப்போம். தோப்பிலே, மருமகப்பிள்ளை வந்திருக்காரு! வாழைத் தாரு இரண்டு, பத்து ளநீர் பறிச்சிக் கொண்டுவா ; கொண்டு போய்க் கொடுத்து விட்டு வரலாம்.” 

“நான் வரமாட்டேன். அங்கே செல்லி வந்திருக்குமே.. எப்படி அதோட முகத்திலே முழிக்கிறது? வேண்டாம்.. 

“செல்லி வரலே…அவரு வேறே ஒரு சிநேகிதர்கூட வந்திருக்காரு.” 

”அப்படியா? வாரேன். அவரைப் பார்த்ததே இல்லை” 

இருவரும் கிளம்பினர்; தோப்பிலே கிராமபோன் இசை யில் இலயித்தபடி சாய்ந்து கொண்டிருந்தாள் ஊர்மிளா! வடிவேலன் ‘ஸ்டவ்’ பற்றவைத்து, ‘காபி’ போட்டுக் கொண்டிருந்தான். 

வடிவேலனை பார்த்ததும் வேலப்பனுக்கு அடையாளம் தெரிந்துவிட்டது. 

மோட்டார் கழுவ பொடிப்பயலுக்கு எட்டணா கொடுத்தவர்.! 

“இவர்தானா.? தங்கமானவர்; தெரியுமே!” என்றான் வேலப்பன் 

“யார் இவன்?’ என்று சடையாண்டியைக் கேட்டான் வடிவேலன். 

“நமக்கு வேண்டியவன் … பந்துதான்” என்றான் சடையாண்டி. 

“செல்லியை நான்தானுங்க கட்டிக்கொள்ள இருந் தேன் முன்னே.. என்று கபடமற்றுச் சொன்னான் வேலப் பன். வடிவேலன், இடியட்’ ப்ரூட்! ராஸ்கல்! எவ்வளவு வாய்க்கொழுப்பு இப்படிப் பேச” என்று கூறிக் கோபித்துக் கொண்டான். ஊர்மிளா, குறும்புச் சிரிப்புச் சிரித்துக் கொண்டே, பலமான சிந்தனையில் ஈடுபட்டாள். 


“எப்படி ஊர்மிளா, அவ்விதம் சொல்வது? எனக்கே அவமானமாக இருக்குமே…”

“இதிலென்ன அவமானம்? வேறு எந்த வழியிலேயும் அந்தப் பட்டி இந்த இடத்தைவிட்டுப் போகமாட்டாள். சோரம் போனாள் என்று வழக்குப் போடுவதுதான் அவளை ஒழித்துக் கட்டும் வழி; எனக்குத் தெரிந்தவழி. இதற்கு உங் கள் மனம் இடங்கொடுக்கவில்லை என்றால், வெளிப்படை யாகச் சொல்லிவிடுங்கள், நான் கல்கத்தா போய்விடுகிறேன்.” 

“வேலப்பனுடன் செல்லி சோரத்தனமாக நடந்து கொண்டாள் என்று புகார் கூறினால், கோர்ட் நம்பவேண்டுமே எப்படி முடியும்?” 

“அது என் பொறுப்பு.நான் வேலப்பனை இங்கு வரச் செய்கிறேன். இருவரும் சந்திப்பார்கள். பழைய காதலர்களா யிற்றே! பார்த்துப் பல நாள் ஆகிவிட்டது. பதைப்பு எவ் வளவு இருக்கும்! பகலே இரவாகத் தெரியும். பக்கத்தில் எதிரில் உள்ளவர்கள்கூடக் கண்ணுக்குத் தெரியாது.” 

“போதும், ஊர்மிளா! என் மனம் சரியாக இல்லை. எனக்கு வேதனையாகவே இருக்கிறது.” 

“அப்படியானால், ஏன் வீணாக இரண்டும் கெட்டு அலைகிறீர்கள்? என்னை மறந்துவிட்டு அந்த அழகியோடு சல்லாபமாக வாழ்க்கையை நடத்துவதுதானே” 

“உன்னைவிட்டுப் பிரியவே முடியாது, ஊர்மிளா! அவளை விரட்ட வேறு என்ன வழி வேண்டுமானாலும் சொல்லு. அவள் சோரம் போனவள் என்று சொல்லி வழக் குப் போடும் ஈனத்தனத்தை மட்டும் செய்யும்படி என்னைத் தூண்டாதே.” 

“வழக்கு போடும்படி சொன்னது தவறு…அப்படித் தானே சரி..அவர்கள் இருவரும் கலியாணம் செய்து கொள்ள வேண்டுமென்று நெடுநாளாக ஆவலாக இருந்தார்கள்; பழகி வந்தார்கள் என்று அந்தச் சடையாண்டியே சொன்னானே. அந்தக் காலத்திலே உத்தமியாகவா இருந்திருப்பாள், உங்களோட தர்மபத்தினி?” 

‘பளார்! பளார்!’என்று அறை விழும் சத்தமும், ‘ஐயோ! ஐயோ!’ என்ற அலறலும் கேட்டு, அதுவரை அந்த உரையா டலை ஒட்டுக் கேட்டுக் கொண்டிருந்த செல்லி, என்ன செய்வ தென்று தெரியாமல், உள்ளே புயல்போல நுழைந்தாள். ஊர்மிளா, வேகமாக வெளியே நடந்தாள்! அடியற்ற நெடும் பனைபோலக் கீழே விழுந்தாள்; வடிவேலனுடைய கால்க ளைப் பிடித்துக் கொண்டு கதறினாள். 

“கலியாணத்தின்போது நான் இந்தக் களிப்பு அடைய வில்லை. என்னை இவ்வளவு செல்வத்திலே வைத்தபோதும் சந்தோஷப்படவில்லை. எவ்வளவுதான், என்மீது வெறுப்பு இருந்தாலும், என்மீது அபாண்டம் சுமத்த, என் பெயரைக் கெடுக்க முடியாது. அது ஈனத்தனமான காரியம் என்று சொன்னீர்களே, அதுபோதும் எனக்கு. அந்த ஆனந்தம் எனக்கு வேறு எதிலும் கிடையாது. என்னை நீங்க, அவசரப் பட்டு ஆய்ந்து பார்க்காமத்தான் கலியாணம் செய்து கொண் டிங்க..ஆனா..மேலே எரிகிறவன் சாட்சியாகச்சொல்கிறேன். நான் மாசு மருவற்றவள்- பழிபாவத்துக்கு பயந்து நடக் கறது, கிராமத்தாருக்கு பரம்பரை பரம்பரை யாகப் பழக்கம். வேலப்பனை நான் கலியாணம் செய்து கொள்ள ஆசைப்பட் டது நிஜம் – தவம் கிடந்தேன்னுகூடச்சொல்லலாம்-ஆனா அவரு, தவறான பாதையிலே போயிட்டாரு. தன்னைத் தானே கெடுத்துக்கிட்டாரு.. அப்போதே என் மனத்திலே இருந்து போயிட்டாரு…ஒரு தப்பும் ஒரு நாளும் நடந்த தில்லிங்க. ஊர்மிளா இல்லிங்க நானு; ஊர் உலகத்துக்கு மட்டும் இல்லிங்க; உள்ளத்துக்கும் பயந்து நடக்கிறவ. பட்டிக்காட்டா, பட்டினத்திலே வந்ததாலே, உங்களுக்கு மனைவியாக வந்ததாலே, பலமாதிரியான அவமானம் உங் களுக்கு வந்தது; எனக்குத் தெரியும்… என்மேலே தப்பு இல் லிங்க, என்மேலே தப்பு இல்லே. இப்பவும் நான் உங்க வாழ்க்கைக்குத் தடையா இருக்கவே மாட்டேன்-ஆனா, ஊர் மிளா வேண்டாமுங்க, உத்தமர்களோட அறிவை எல்லாம் படிச்ச கெடுத்துவிடுகிற காதலி வேண்டாமுங்க, நல்ல பொண்ணா பார்த்து, உங்களோட நாகரிகத்துக்கு ஏத்தவ ளாகப் பார்த்துக் கலியாணம் செய்து கொண்டு வாழ்ந்து கிட்டு இருங்க — ஒரு நாலு மாதம் தவணை கொடுத்தா போதுமுங்க… கருவிலே சிசுவோடு தற்கொலை செய்து கொள்ள மனம் வரவில்லைங்க, இல்லையானா நான் சின்னப் புள்ளையிலேயிருந்து விளையாடிக் கொண்டிருந்த மடுவிலே இப்பவும் தண்ணி இருக்குதுங்க. என்னாலே முடியும், உயிரை மாய்த்துக் கொள்ள…”

கோவெனக் கதறித் தலைதலை’ என்று அடித்துக் கொண்டு, அப்படியே வாரி எடுத்து செல்லியை மார்புற அணைத்துக் கொண்டு, 

‘‘செல்லி! செல்லி” என்று மட்டுமே கூறிக்கொண்டு நின்றான், வடிவேலன். 

அவன் தீட்டிய ஓவியம் புதிய பொலிவு பெற்றதுபோலக் காட்சி அளித்தது.

– வண்டிக்காரன் மகன், முதல் பதிப்பு: 1980, பூம்புகார் பிரசுரம் பிரஸ், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *