பிறர்பொருளை விரும்பாமை




(1951ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
மக்கள் தத்தமக் குதவும்படி சொத்துக்கள் வைத்துக் கொண்டிருக்கின்றார்கள். அவை அவரவர்கட்கு உரிய உடை மைகள். ஒரு பையன் தான் படிக்கப் புத்தகம் முதலியன வைத்துக் கொண்டிருப்பான் ; ஒருவன் பணம் வைத்துக் கொண்டிருப்பான். ஒருவன் வீடும் வீட்டுத் தட்டுமுட்டுக் களும் வைத்துக் கொண்டிருப்பான். ஒருவன் நிலம் வைத் துக்கொண்டிருப்பான். ஒருவன் சேர்த்து வைத்துக் கொண்டிருக்கின்ற எப்பொருளும் அவனுடைய சொத்தா கும். அஃது அவனுக்கே உரியது;

அதனை எடுக்கவோ, பயன்படுத்தவோ பிறன் எவனுக்கும் உரிமை இல்லை. இதனை மீறுவது உடையவனுக்குக் குற்றஞ் செய்வதே யாகும்; மேலும் அவன் அப்பொருளை யீட்டப்பட்ட உழைப்பைப் பாழாக்குவதுமாகும். உழைத்தவன் துன்ப மடைய உழைக்காதவன் இன்பமடைவதா? ஒருவன் தன்ன தல்லாத ஒரு பொருளைத் தொடவுங்கூடாது என் பது முதன்மையான நீதிமுறை. ஒருவன் உழைத் துழைத்துப் பெற்ற பொருள்களை யிழந்து கொண்டே யிருந்தால், அவனுக்கு மேலும் மேலும் உழைக்க மனம் வருமா? உழைப்பாளிகள் எல்லோரும் இவ்வா று ஏமாற்றமடைந்துபோனால், உலகத்தில் இன்பால மென்ப தேது? பிறன்பொருள் தன்னுடையதன்று என்பதை ஒவ்வொருவனும் மனத்திற் கொள்ளவேண்டும். ஒருவ னுடைய வீட்டுத் துரும்பையும் பிறன் எவனும் விரும் பப்படாது. தன்னுடைய தொன்றைப் பிறனொருவன் எடுத்துக்கொண்டு போய்விட்டால், அது தனக்கு எவ் வளவு மனத்துன்ப முண்டாக்குமென்பதை ஒவ்வொருவனும் எண்ணிப்பார்க்கவேண்டும். பிறன் பொரு வௌவுபவன் அவனுக்குத் துன்பஞ் செய்பவ னாகுவதுந் தவிரத் தானுந் திருடனென்று யாவராலும் பழிக்கப்பட்டு வெறுக்கவும் படுவான்.
பலநாள் திருடன் ஒருநாளில் அகப்பட்டுக் கொள்வா னல்லவா? அகப்பட்டுக் கொண்டால் திட்டுந் தட்டும் பெற்றுத் திண்டாடுவதுந் தவிர, அரசியலாரால் தண்டிக்கவும் படுவான். திருட்டுத்தனஞ் செய்பவன் தன் திருட்டுப்பிறராற் காணப்படாதென்று மனப்பால் குடிக்கின்றான். ஆனாலும் அவனறியாத வழியிலே அது கண்டுபிடித்துக் கொள்ளப் படுகின்றது. ஆகையினாலே பிறர் சொத்துக்கு ஆசைப்படக் கூடாதென்பது எவனும் அறியவேண்டிய தொன்று.
1. மிலன்நகர்க் காவலாளி
மிலன் நகரில் ஒரு குலமகன் மாளிகையில் காவலாளி யொருவ னிருந்தான். அவன் ஒருநாள், தெருவில் விழுந்துகிடந்த ஒரு பணப்பையைக் கண்டெடுத்தான். அதனில் ஒரு நூறு ரூபா இருந் தது. அவன் உடனே, “இன்ன தெருவில் இன்ன நேரத்தில் நூறு ரூபாகொண்ட ஒரு பணப்பையைத் தான் கண்டெடுத்து வைத்திருப்பதாகப் பறையறைவித்தான். இதனைக் கேட்டவுடனே பை யிழந்தவன் ஒய்யென ஓடிவந்து காவலாளியைக் கண்டான். கண்டு, அவன் அப்பை தன்னுடையதென்று மெய்ப்பிக்கவே, காவலாளி அதனை அவனிடங் கொடுத்துவிட்டான். வாங்கிக் கொண்டவன் காவலாளிக்கு நன்றி கூறி, இருபது ரூபா எடுத்து அவனிடங் கொடுத்தான்; அவன் அதனை வாங்க மறுத்துத் தான், தன்னுடைய கடமையைச் செய்தபடியினால் யாதொருகைம்மாறும் வேண்டா மென்றான்.
பிறகு பணப்பைக்காரன் மனநிறைவடையாமல் பத்து ரூபா எடுத்து அவனுக்குக் கொடுக்கப்போனான். அவன் அதனையும் மறுத்தான். பிறகு பைக்காரன் வேண்டுகோளுடன் ஐந்து ரூபா கொடுக்கப்போனான். அதன்பிறகு காவலாளி சினக்குறிப்புடன், “கடமைக்குக் கைம்மாறில்லை, போம் போம்!” என்றான். பிறகு பொருட்காரன் பெருஞ் சினங்கொண்டு, “நீர் கைம்மாறு சிறிதும் வேண்டாமென் று பிடிவாதஞ் செய்கிறீர்; ஆகையால் பணப்பை எனக்கும் வேண்டாம்,” என்று அதனைத் தரையில் போட்டுவிட்டுப் போசப் புறப்பட்டான் உடனே காவலாளி அவன் கையைப்பிடித்துத் தடுத்து,பணப்பையை யெடுத்து அவனிடங் கொடுத்து, ரூபா ஐந்துமாத்திரம் பெற்றுக்கொண்டு, அவனிடத்து இன்சொற் பேசி அனுப்பிவிட்டான். பிறகு காவலாளி அச்சிறு தொகையையும் ஓர் அறச்சாலைக்குக் கொடுத்துவிட்டான்.
2. இலவநாதன்
இலவநாதன் என்பவன் ஒருவன் சிறுவயதிலேயே தந்தை யைப்பறிகொடுத்துவிட்டான். பெற்றோளோ உழைப்புக் குதவாத கிழத்தன மடைந்துவிட்டாள். தன்னைக் கை தூக்கிக் காப்பாற்றும் நண்பர் ஒருவரும் அவனுக்கில்லை. ஒருநாள் அவன் தனக்குள்ளே “நாம் ஏன் எவனையும் நத்திப் பிழைக்கவேண்டும், நமக்குத்தான் எழுதப் படிக்கத் தெரியுமே, கணக்குப் போடவுஞ் சிறிதறிவோமே + நம்மிடம் உழைப்பும் உண்மையுமிருந்தால், நமக்கு ஏன் பிழைப்பு நடக்காது!” என்று எண்ணித் தாயினிடம் விடை பெற்றுக் கொண்டு அடுத்த நகரை அடைந்தான். உழைப்பு விரும்பு வோனுக்கு ஊதியம் கிடைக்காமற் போகுமா? இரண்டொரு நாட்களிலேயே அந்நகரின் ஆவணத்தில் ஒரு பெருவணிகர் இலவ நாதனைத் தன்னிடம் கை வேலைக்கு வைத்துக்கொண்டார். இவன் வணிகர் இடும் வேலைகளை உண்மையோடும் ஊக்கத்தோடும். செய்துகொண்டு வந்தான். வணிகரும் இலவன்மீ து அன்பு கொண்டு ஆதரவு காட்டிவந்தார். இலவன் தான் ஏதாவது தப்புத் தவறுகள் செய்துவிட்டால், அவைகளை ஒப்புக்கொண்டு இனி மேலும் அத்தகைய குறை குற்றங்கள் நேராதபடி கவலையுடன் பார்த்துக்கொள்வான் இவ்வாறாகவே வணிகர் இலவனுடைய வேலைத் திறமையையும், நற்குண நற்செய்கைகளையுங் கண்டு, அவனிடம் முழுநம்பிக்கை கொண்டிருந்தார்.
வணிகர்வீட்டு இல்லாண்மைக்காரி சிறிது திருட்டுப்புத்தி யுடையவள். ஆகையால், அவள் இலவநாதனை ஓர் உளவாளி யென் ே எண்ணிவந்தாள். அவனை வீட்டைவிட்டுத் துரத்தி விடவேண்டுமென்னும் எண்ணத்தினால் எந்நேரமும் அவன்பேரில் வணிகரிடம் ஏதாவதொரு கோள் சொல்லிக்கொண்டே யிருப்பாள். ஆனாலும், அவள் பேச்சை வணிகர் நம்புவதில்லை.. நாளேற நாளேற வணிகர் மனமும் சிறிது மாறிப்போய் இலவ நாதனை அவர் இன்னுந் தேர்வு செய்ய எண்ணங்கொண்டார். விலைப்பொருள்களை வாங்குவதற்கு அவனையே அனுப்பிவைப்பார்; விலைக்கு இரட்டிப்புத் தொகை அவன் கையில் கொடுத்தனுப்பு. வார். அவன் மிச்சப் பணத்தில் ஒரு செப்புக்காசும் குறையாமல்- திருப்பிக் கொடுத்துவிடுவான்.
ஒருநாள் வணிகர் பணப்பெட்டியண்டை ஒரு பவுனைப். போட்டுவிட்டு வெளியே போய்விட்டார். அதனை இலவன் கண் டெடுத்தான். அப்போது இல்லாண்மைக்காரியும் பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் அதனைத் தமக்குள் பங்கிட்டுக் கொள்ளலாமென்று அவனிடம் மறை பொருளாகச் சொன்னாள். அவன், “வணிகர் பணம் வணிகரிடம் சேரவேண்டும்; அது நமது பொருளன்று,’ என்று சொல்லிவிட்டு அதனை அவரிடமே சேர்ப்பித்துவிட்டான். வணிகர் செய்தி முழுது மறிந்து மிக மகிழ்ச்சி கொண்டார்.
வணிகருக்கு மக்கட்பேறில்லை. அன்றுமுதல் வணிகர் இலவநாதனை எடுப்புப் பிள்ளையாக வைத்துக்கொண்டார். சிலநாட்களில் வணிகர் விண்ணுலகடைய அவர் தம் உடைமைகளு கெல்லாம் இலவநாதனே உடையவனானான். பின் இல்லாண்மைக் காரி இல்லாமலே போனவழி தெரியாமற் போய்விட்டாள்.
3. இரதசைலன்
ஒரு காலத்தில் பிரான்சியர் ஜெர்மனியின் மீது படையெடுத்து வந்தனர். அப்போது அங்குப் பணவாணிப யூதன் ஒருவன் இருந் தான். அவன் பெருஞ் செல்வன் அல்லன் ; ஆனாலும், அவன் உண்மைமிக்கவனென்று பேரெடுத்தான். அப்போது ஜெர்மனி அரசன் ஒருவன் வலசை வாங்கிப்போக நேர்ந்தது. அச்செவ்வியில் அவன் பன்னூற்றுக் கணக்கான தன் பணத்தை அவ்யூதனிடம் யாதொரு செல்லுச் சீட்டுமில்லாமலே ஒப்படைத்துவைத்துப் போய் விட்டான்.
யூதன் ஒப்படைத்த பணத்தைமாத்திரம் தன்னுடைய புறக் கடையில் புதைத்து வைத்துவிட்டுத் தன் பணத்தைத் தன் வீட்டி லேயே வைத்திருந்தான். பிரான்சியர் வீட்டில் இருந்த பணத்தை யெடுத்துக்கொண்டு, அவன்மீது ஐயுறவொன்றும் படாமற் போய் விட்டார்கள். யூதன் தன் பணத்தையும் உடன் புதைத்து வைத் திருந்தால், இரண்டையும் ஒருசேர இழந்திருப்பான். இஃது அவ னுடைய தன்னய மறுப்பை நன்கு காட்டுகின்றதல்லவா ?
அமர் நின்றது, நாட்டில் அமைதி யுண்டாயிற்று. சிலநாட்கள் சென்று அரசமகன் யூதனை வந்து கண்டான். யூதன் தான் பணத் தைக் காப்பாற்றிய வகையைச் சொல்லிப் பின்னுஞ் சொல்லுகின் றா ன் “யான் என் பணத்தை யிழந்துவிட்டேனாகையால் உமது பணத்திற் சிறிதுதொகை யெடுத்து, வாணிபத்துறையில் வைத்து யானிழந்த தொகையை மீண்டும் பெற்றேன். ஆகையால் உம்முடைய முழுத்தொகையுடன் எனக்குக் கிடைத்த மேல் தொகையில் நாலில் ஒரு பங்கும் உமக்குக் கொடுக்கின்றேன்,” என்று சொல்லி அப்படியே மொத்தத் தொகையையும் அரசமகன் கையில் அளித்து விட்டான் இரதசைலன்.
அரசன் மட்டற்ற மகிழ்ச்சியுடன் யூதனை நோக்கி, “என் பணத்தைப் பாதுகாக்க உம்முடைய பணத்தை யிழந்து விட்டீர் ! உம்முடைய நன்றிக்குக் கைம்மாறு இன்னது செய்வதென்று எனக்கு ஒன்றுந் தோன்றவில்லை. யான் எது செய்யினும் அஃது உமது நன்றிக்கு ஈடாகாது. ஆயினும் யான் ஒன்று செய்யத் ணிகின்றேன்: இந்தத் தொகையைத் தாங்களே உங்கள் வாணிபத்துறையிற் போட்டு வைத்துக்கொள்ளுங்கள். வட்டி வாசியில் உங்கள் மனமொப்புந் தொகையை எனக்கு அவ்வப் போது கொடுத்துக்கொண்டு வாருங்கள், என்று சொல்லிப் பெற்ற தொகையை அவனிடமே திருப்பிக் கொடுத்துவிட்டு அவனிடம் விடை பெற்றுக்கொண்டு அரண்மனை சென்றான்.
சில நாட்களில் இரதசைலயூதன் மன்னன் பெருந்தொகை யைக் கொண்டு, நாலாபக்க நாடுகளிலும் நல் வாணிபஞ் செய்து, அரசியலாருக்கும் அவ்வப்போது வேண்டிய தொகை கொடுத்துக் கொண்டு, உலகறிந்த ஒப்பற்ற வணிகச் செல்வனானான்.
க. திருட்டுத்தனஞ் செய்யா திருப்பாயாக. -மோசே கட்டளைகள்.
உ. திருட்டுத்தனம் செய்திருந்தவன் இனிமேலாவது அதனைச் செய்யாதிருக்கட்டும்; அவன் கையால் நல்வழியில் உழைத்துப் பொருள் பெற்றுத் தானும் பிழைத்து, வேண்டியவர்க்குங் கொடுக்கட்டும். -உபதேசி பவுல்.
ங. நம்முடைய கைகள் படைக்கப்பட்டது உண்மை உழைப்புக்கேயன்றித், திருட்டுக்கும் கொள்ளைக்கும் அன்று; திருடன் தன்னைத்தானே வஞ்சித்துக்கொள் கின்றான்; மேலும் திருட்டுப்பொருள் துன்பத்தையும், துயரத்தையும், அவமானத்தையும் கொடுக்கும். -வாட்ஸ்.
ச. அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமை வேண்டும் பிறன்கைப் பொருள்.
ரு. அறனறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேரும் திறனறிந்து ஆங்கே திரு. -திருவள்ளுவர்.
– நல்லொழுக்கப் பாடம், முதற் பதிப்பு: ஏப்ரல் 1951, திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிட், திருநெல்வேலி.
![]() |
சேலை சகதேவ முதலியார் (1874 - ஜூலை 28, 1953) தமிழ்ப் பாடநூல்களை எழுதிய முன்னோடிகளில் ஒருவராக அறியப்படுகிறார். திருநெல்வேலி சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் பதிப்பாசிரியராகவும், செந்தமிழ்ச்செல்வி இதழின் ஆசிரியராகவும் இருந்த மணி திருநாவுக்கரசு கோரியதற்கு இணங்க பள்ளி மாணவர்களுக்கு எளிதாக புரியும் வண்ணம் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் வெளியீடுகளான கழகத் தமிழ்ப்பாட வரிசையில் ஆறு நூல்களை சேலை சகதேவ முதலியார் செம்மை படுத்திக் கொடுத்தார். அந்நிறுவனம் வெளியிட்ட…மேலும் படிக்க... |