பாணனே கேள்!
கதையாசிரியர்: முல்லை பி.எல்.முத்தையா
கதைத்தொகுப்பு:
சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: March 15, 2020
பார்வையிட்டோர்: 3,330
பாணனே, ஏனப்பா, கவலைப் படுகிறாய். யாழை அணைத்துக் கொண்டு நிற்கிறாயே. யாழிசை கேட்க ஆள் இல்லை என்று நினைக்கிறாயா? இந்த யாழ் நமக்குச் சோறு போடவில்லை என்று எண்ணுகிறாயா வருந்தாதே. என் சொல்லைக் கேள்.
உடனே செல். கொண்கானங் கிழானிடம் போ. பாணனே, நெருஞ்சிப் பூவைப் பார்த்திருப்பாய். கதிரவன் கதிர் ஒளியை எதிர்கொண்டு மலர்ந்து நிற்கும் காட்சியை மறந்திருக்க மாட்டாய். அவ்வாறே அவனும் எதிரே வந்து மகிழ்வான். வறுமையால் வாடும் பாணரின் உண்கலத்தை நிரப்புபவன் அவனே. அவனைச் சென்று காண்க.
– மாணவர்களுக்குப் புறநானூற்றுச் சிறுகதைகள் – முதற்பதிப்பு : ஆகஸ்ட் 2002 – முல்லை பதிப்பகம்