பதவிப் பரிதாபங்கள்…
கதையாசிரியர்: காரை ஆடலரசன்
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு:
கிரைம்
கதைப்பதிவு: November 4, 2026
பார்வையிட்டோர்: 134
அத்தியாயம் – 7 | அத்தியாயம் – 8 | அத்தியாயம் – 9

“அதுதான்… இவளுக்குக் காதலன், கள்ளஉறவு இருக்கலாம். அவர்கள் செய்திருக்கலாம். என்கிற யோசனை..” என்றார் தன்ராஜ்.
“….”
“இப்படி யோசிக்கும்போதுதான்… இது பிடிக்காத கணவனே மனைவியைக் கொலை செய்துவிட்டு நல்லவனாய் ஏன் நாடமாடக்கூடாது..? இப்படித்தானே பெரும்பாலான கொலைகள் நடந்திருக்கு! – யோசனையில் திரும்பவும் ஆனந்தவள்ளி கணவன் அம்பிகாபதியைத் தொட்டேன் மாப்ளெ.
“சும்மா சுத்திவிடாமல் நீயே சொல்லு..? கொலை செய்துவிட்டு தப்பிக்கலாம் என்று மட்டும் கனவு காணாதே…” மிரட்டலாய் எச்சரித்தேன்.
“சாமி சத்தியமாய் நான் இல்லே சார்…” அவன் அவன் கதறும் அளவிற்கு வந்து கறாராய்ச் சொன்னான்.
“உன் மனைவிக்குக் காதலன், கள்ளத்தொடர்பு.. ஏதாவது…?” இழுத்தேன்.
“இப்படி பேசுறதே தப்பு. நினைத்துப் பார்க்கிறது களங்கம். என் மனைவி உத்தமி, பத்தினி!” சொன்னான்.
“நல்லாத் தெரியுமா..?”
“நல்லாத் தெரியும்!”
“தங்கி படித்த இடத்தில் பழக்கம்…?”
“ஊட்டி போய் விசாரித்து வாங்க சார்..! என் மனைவி உத்தமி, பத்தினி என்கிற உண்மை புரியும்” சொன்னான்.
அனுப்பிவிட்டு…
திரும்பவும் வேலைக்காரி, சமையல்காரி, துணைக் கிழவி, தோட்டக்காரர்களைக் குடைந்தேன்….
மறுபடியும் அவர்களின் ‘இல்லை’ பதில்.
ஊட்டி பயணம்.
அங்கே தங்கி படித்த பள்ளி, கல்லூரி விடுதிகளை விசாரித்ததால்…
“தங்கமான பொண்ணு. எல்லோரிடமும் அன்பு, பண்பாய் பழகும் அருமையான குணம். 28 வயதில் இளம்பெண் அமைச்சர் என்கிற செய்தியைத் தொலைக்காட்சியில் பார்த்தபோது… எங்களுக்கெல்லாம் பெருமை. இறந்த செய்தியைப் பார்த்ததும் ‘ஐயோ! கொடுமை!’ ன்னு நாங்க எல்லோருமே கதறி அழுதோம்!” சொன்னார்களேத் தவிர யாரும் தவறாய் ஒரு வார்த்தை சொல்லவில்லை.
வேற… தப்பு… உறவினர்கள் பக்கம் இருக்குமா..? – உள்ளுக்குள் சிந்தனை உதித்தது.
எவன், எவனை விசாரிக்கிறது…? எத்தனைப் பேர்களை விசாரிக்கிறது…? – மலைப்பு வந்து என்னை மல்லாத்தியது.
“அப்புறம் எப்படி மாமா கண்டுபிடிச்சீங்க…?” விகாஷ் பொறுமை இழந்து கேட்டான்.
“அவன் இவனை விசாரித்ததை எல்லாம் சொன்னால் உனக்குப் போரடிக்கும். விசயத்திற்கு வர்றேன்.
மறுபடியும் என் விசாரணைப் புராணத்தை முதலிலிருந்து புரட்டினேன்.
கணவன் – இல்லே.
கண்காணிப்பு கேமரா – இல்லே
வேலைக்காரர்கள் – இல்லே.
எதிரிகள் – இல்லே
கைபேசி – இல்லே
காதலன் – கிடையாது.
கள்ளத்தொடர்பு – கிடையாது.
தடையங்கள் – இல்லே.
நாய் – வீண்.
ஆனால் கொலை..? எப்படி..?
இன்னும் அந்த வீட்டை இன்னும் கவனமாய் அலசனும். இந்த கொலைக்குத் தொடர்பான ஏதோ ஒன்று நம் கண்களுக்குத் தட்டுப் படாமல் இருக்கு..! அது என்ன..? தேடனும்! – நினைத்து… மறுபடியும் அந்த வீடு, மேல்கீழ் எல்லாத்தையும் அலசினேன்.
சமையற்கட்டைத் தாண்டி வீட்டின் கடைசி கொல்லைக் கதவு தாழ்ப்பாள் திறந்து, இருபது மீட்டர் நடைபாதையில் நடந்து…கடைசி சுற்றுச் சுவர் கதவைத் தொட்டேன்.
வீட்டு வாசலைத் தவிர…கொல்லையில் கண்காணிப்புக் கேமரா இல்லை. ஆள் மாடியில் கொலை செய்துவிட்டு, முன் வாசலைத் தொடாமல் பின் புறக் கதவு திறந்து, இந்த வழியே ஏன் தப்பி போயிருக்கக்கூடாது…? இதுதான் என் மூளையில் உதித்த முதல் உருப்படியான யோசனை.
மீண்டும் வேலைக்காரர்களை அழைத்து….
“கொல்லைக் கடைசியில் இருக்கும் சுற்றுச் சுவர் கடைசி கதவு புழக்கத்தில் இருக்கா..?” கேட்டேன்.
“இருக்கு சார்..?” எல்லாருமே சேர்ந்து பதில் சொன்னார்கள்.
“எப்படி..?”
“காலை, மாலை முன் வாசலில் பெரும்பாலும் கட்சித் தொண்டர்கள், முக்கியஸ்தர்கள் கூட்டம் இருக்கும் சார். அப்போது நாங்கள் உள்ளே செல்ல, வெளியேற சங்கடம், கஷ்டம். அப்போது நாங்கள் இந்த வழியை உபயோகிப்போம் சார்.” சொன்னார்கள்.
“எப்படி..?”
“இந்த பூட்டின் சாவி பங்களா கொல்லை கடைசி கதவோரம் மாட்டி இருக்கும் சார். எங்க மூணு பேர்களில் ஒருத்தர் வாசல் பக்கமாய் உள்ளே போய் இந்த சாவியை எடுத்து கதவைத் திறந்து வந்து இந்தக் கதவைத் திறப்போம். மீதி உள்ள இருவரும் இந்த வழியே வீட்டிற்குள் செல்வோம் சார்.”
“அப்படியே மாலை வெளியேறும்போது.. எங்கள் மூன்று பேர்களை வெளியேற்றிவிட்டு துணைக்கிருக்கும் கிழவி இதைப் பூட்டி, கொல்லைக் கதவை அடைத்து தாழ்போட்டு இந்த சாவியை கதவோரமாய் இருக்கும் சுவர் ஆணியில் மாட்டி விட்டு வேலை முடித்துத் தன் இருப்பிடத்திற்குப் போகும் சார்.” விலாவாரியாகச் சொன்னார்கள்.
உடனிருந்த துணைக் கிழவியும்…
“ஆமாம் சார்..!” என்றாள்.
“அப்படின்னா… உங்களில் ஒருத்தர் ஏன் இந்தக் கொலையைச் செய்திருக்கக் கூடாது..?” கேட்டு நால்வரையும் உற்றுப் பார்த்தேன்.
“சார்ர்ர்ர்ர்…” அலறினார்கள்.
“நீங்க இல்லேன்னா…உங்களில் ஒருத்தர் ஏன் கொலைகாரனுக்கு உதவி இருக்கக் கூடாது..?” அடுத்தக் கேள்வியையும் தொடுத்தேன்.
அவ்வளவுதான்!
“சுத்தி சுத்தி எங்களையே சந்தேகப்படுறீங்க. எங்க மேலே பழி போடுறீங்க. சத்தியமா இந்தக் கொலைக்கும் எங்களுக்கும் சம்பம்தமில்லே!” சொல்லி கதறி அழுதார்கள்.
‘இது இயலாத மக்கள் அழுகை, அரற்றல்!’ எனக்கு விளங்கி விட்டது.
அடுத்து… துணைக் கிழவி மீது என் பார்வை திரும்பியது.
“கிழவி! உன் உதவி இல்லாமல் ஒருத்தனும் இந்தக் கொலையைச் செய்திருக்க முடியாது. உன் கண்ணில் படாமல் எவனும் தப்பிப் போயிருக்க முடியாது. உண்மையைச் சொல். யாரவன்…?” கேட்டேன்.
“ஐயா சாமி! அந்த அம்மா ராத்திரி பத்து மணிக்குள் வீட்டுக்குள் வந்துவிடும். நான் அதுக்கு சாப்பாடு போட்டு முடித்துவிட்டு வெளியேறி… என் குடிசையில் முடங்கிடுவேன். அதுக்கு மேல இந்த வீட்டுக்கும் எனக்கும் சம்பந்தம் கிடையாது. ஒன்னுக்கு இருக்கக்கூட வெளியே வரமாட்டேன். என் இடத்தில் வசதி இருக்கு.” சொன்னாள்.
இவளிடமும் சரக்கு இல்லை! புரிந்தது.
அவர்களை அனுப்பிவிட்டு மறுபடியும் அந்த வீட்டை ஆராய்ந்தேன், கிடைத்தது!
– தொடரும்…
![]() |
என்னைப் பற்றி... இயற்பெயர் : இராம. நடராஜன்தந்தை : கோ. இராமசாமிதாய் : அண்ணத்தம்மாள்.பிறப்பு : 03 - 1955படிப்பு : பி.எஸ்.சி ( கணிதம் )வேலை : புத்தகம் கட்டுநர், அரசு கிளை அச்சகம் காரைக்கால்.( ஓய்வு )மனைவி : செந்தமிழ்ச்செல்விமகன்கள் : நிர்மல், விமல்முகவரி : 7, பிடாரி கோயில் வீதி,கோட்டுச்சேரி 609 609காரைக்கால்.கைபேசி : 9786591245 இலக்கிய மற்றும் எழுத்துப்பணி 1983ல் தொடங்கி 2017.....இன்றுவரை தொடர்கிறது...…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
உந்தன் நிழலாய் நானடி தோழி…
காஞ்சி.தங்கமணி சுவாமிநாதன்
November 4, 2026
தெய்வசிகாமணி
மு.வீ.சங்கமுத்துப்பிள்ளை
November 4, 2026
உந்தன் நிழலாய் நானடி தோழி…
காஞ்சி.தங்கமணி சுவாமிநாதன்
November 1, 2026
