பண்ணன் வாழ்க!




கிள்ளி வளவன் பண்ணன் வீட்டை நோக்கி நடந்தான். அவன் கொடையின் பெருமையைத் தெரிந்தான். உள்ளம் மகிழ்ந்தான். வாழ்த்தினான்.
“நான் வாழும் நாள் வரை பண்ணன் வாழ்க! பழுத்த மரத்தில் பறவை கட்டி ஒலிப்பது போல் உண்பவர் ஆரவாரம் கேட்கிறது. அதோ செல்கின்ற அந்தக் கூட்டத்தை பார்ப்போம். முட்டை எடுத்துத் திக்கை நோக்கி ஏறும் எறும்புக் கூட்டம் போல், சிறுவர்கள் சோற்றுத் திரள்களை ஏந்தி வரிசையாய்ச் செல்கின்றனர். பண்ணன் கொடுத்தான் என்று அவர்கள் வாய் பாடுகின்றது.
பசிப் பிணி மருத்துவன் என்று பெரியவர்கள் அவனைப் புகழ்கின்றனர்.
அவன் இல்லம் அருகிலோ? தூரத்திலோ?”
– மாணவர்களுக்குப் புறநானூற்றுச் சிறுகதைகள் – முதற்பதிப்பு : ஆகஸ்ட் 2002 – முல்லை பதிப்பகம்