பக்த நர்ஸி





(1981ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
எத்தனை கோயில்களுக்குப்போயிருக்கிறாள் அந்த வயதான ஜெயகௌரி பாய்!

எத்தனை மகான்களைத் தரிசித்திருக்கிறாள்! இருந்தும் அவளது ஆசை மட்டும் இது வரை நிறைவேறவில்லை,
கடைசியில் ஹடகேசுவர் கோவிலுக்குச் சென்று அந்த மகான் காலடியில் தனது பேரன் நர்ஸி மேத்தாவை நிறுத்தி,
”முனிபுங்கவரே! எனது நேரன் பிறவியிலிருந்து ஊமையாக இருக்கிறானே! அவனுக்கு வாக்கு அருளக் கூடாதா?” என்று மனம் உகுகப் பிரார்த்தனை செய்தாள்.
மகான் சாதாரண மகான் அல்ல! புன்னகை புரிந்து, சிறுவனைப் பார்த்தார். “ஏன் இந்த மௌனம்! ராதே ஸ்யாம் சொல்லு!” என்று கூறினார் அன்பு ததும்ப.
சிறுவனின் வாய் மலர்ந்தது. “ராதே ஸ்யாம்!” என்ற வார்த்தை அவன் வாயிலிருந்து கணீரென்று வந்தது.
ஜெய் கௌரிக்கு ஆனந்தம், அளவிட வில்லை. போன உயிர் வந்தது போல் துள்ளினாள். மகானின் காலடியில் மீண்டும் மீண்டும் நமஸ்கரித்தாள். அவளுக்கு நன்றி செலுத்த வார்த்தை இல்லாமல் தவித்தாள்.
மகான் மேலும் அருளினார் “இந்தப் பாலகன் மகா பக்தனாவான்.”
கௌரிக்கு இதயம் தாளவில்லை. சிறுவளை அணைத்துக்கொண்டு புறப்பட்டாள்.
சிறுவன் நர்ஸி தனது தாய் தந்தையரை இழந்தவன். பாட்டியான ஜெயகௌரியும் அண்ணன் ‘வச்சிதரும்’தான் அவளைப் பராமரித்தார்கள்.
பாட்டியும் சிறிது காலத்தில் மேல் உலகம் செல்ல, நர்ஸியின் முழுப் பராமரிப்பும் அவனது அண்ணன் கையில் வந்தது.
அண்ணன் அவனைப் படிக்க வைத்துப் பார்த்தான். படிப்பு ஏறவில்லை. விளையாட்டுப் புத்திதான் அதிகமாக இருந்தது.
‘இவன் ஒரு உதவாக்கரை’ என்று எண்ணிய அண்ணி துரிதகௌரி நர்ஸியைத் தன் வீட்டு மாடுகளையும் குதிரைகளையும் மேய்த்து வரும்படி உத்தரவு இட்டாள்.
அண்ணன் வம்சிதர், ஹுமாயூன் அரசாங்கத்தில் ஒரு குட்டி அதிகாரி! ஆகையால் அவனிடம் குதிரைகள் இருந்தன.
மாடு குதிரைகளை மேய்க்கலானான் நர்ஸி.
அவனுக்குள் ஒரு பொறியாக இருந்த கடவுள் பக்தி இப்போது வளர ஆரம்பித்தது.
இதற்கிடையில் தனது தம்பிக்குத் திருமணம் செய்து வைத்தால் ஒழுங்காக இருப்பான் என்று நினைத்து மனேக் பாய் என்பவளை நர்ஸிக்குத் திருமணம் செய்து வைத்தார் அண்ணன்.
காலப் போக்கில் நர்ஸிக்கு ஒரு ஆணும் ஒரு பெண்ணும் பிறந்தார்கள்.
குடும்பம் பெருகியும் நாளி தனது மேய்க் தொழிலிலேயே ஈடுபட்டு அடிக்கடி தியானத்தில் ஆழ்ந்து கொண்டிருந்தான்.
அண்ணிக்கு அவளைக் கண்டாலே பிடிக்காது. குடும்பம் வேறு பெருத்து விட்டதா? பொறுமையை இழந்தாள்.
நர்ஸியை மட்டுமல்லாமல் அவன் மனைவி குழந்தைகளையும் மட்டமாக நடத்தி நிறையவேலை ஏவ ஆரம்பித்தாள். ஒரு தப்பு செய்தாலும் மனம் நோகத் திட்டினான். ஒருநாள் நர்ஸி மேய்ச்சலிலிருந்து வரும்போது மிகவும் களைத்துப் போய் வந்தான். பசி வயிற்றைக் கிள்ளியது. “அண்ணி! சாப்பிடுவதற்கு ஏதாவது தாருங்கள்!” என்று முறையிட்டான்,

அண்ணி எரிச்சலுடன் ஒரு காய்ந்துபோன சப்பாத்தியைக் கொணர்ந்து அவன் மேல் எறிந்தாள்.
நர்ஸி சப்பாத்தியைப் பார்த்தான். அது மட்டமாக இருந்தது. பெருமூச்சு விட்டு “அண்ணி! தயவு செய்து ஒரு துண்டு ஊறுகாய் கொடுங்கள்” என்று முறையிட்டான்.
“பஜன் மேம் ஸாது
போஜம் மேம் பீம்'”
என்று கோபமாகச் சொன்னாள் அண்ணி. (பஜனை செய்வதில் சாது, சாப்பாட்டிலோ பீமன்) “உனக்கு ஒன்றும் கிடையாது. இங்கே நிற்காதே போ!” என்று கத்தினாள்.
நர்ஸியின் முகம் சுருங்கி விட்டது. அங்கிருந்து அகன்று காட்டுக்குச் சென்றான். கடவுள் பெயரையே உச்சரித்து கால் போன வழிகளில் போக ஆரம்பித்தான்.
அவனது அளவிறந்த பக்தி காரணமாக அவனுக்கு இப்போது தெய்வ அனுபவம் ஏற்பட்டது. அவனது ‘ராதாகிருஷ்ணன்’ அவனுக்கு தமது ராசலீலைக் காட்சிகளைக் காட்டி அனுக்கிரகித்தார். நர்ளி அந்தக் காட்சியைக் கண்டு பேரானந்தம் அடைந்து தனக்குக் கடவுள் அருள் கிடைத்துவிட்டது என்று கூவி, கடவுள் பெயரை நாமாவளியாகப் பாடிக் கொண்டு ஊருக்குத் திரும்பினான்.
அரையில் மஞ்சள் ஆடையும் தலையில் மயில் கண்ணும் வைத்து கண்ணன் போல் வரும் அவளைப்பார்த்து அண்ணிக்குக்கோபம் வந்தது.
“இங்கே வந்து பாருங்கள்” என்று அண்ணனை அழைத்துக் காட்டினாள்.
அண்ணனுக்கு மகா கோபம் வந்தது. ”டேய்! பொறுப்பில்லாத ஜடமே! இதென்ன வேஷம்? இதென்ன நாமாவளி!’ இந்த வேட்டி உனக்கு ஏது? எங்கிருந்தாவது திருடினாயா?” என்று கூப்பாடு போட்டான்.
”அண்ணா! என்னை அனாவசியமாகத் திட்டாதீர்களே! அந்த வஸ்திரம் ஆண்டவன் கொடுத்தது. நான் கண்ண பரமாத்மாவை நேரில் கண்டேன்” என்றான் நர்ஸி.
அதற்கு மேல் அண்ணனும் அண்ணியும் பொறுக்கவில்லை. நர்ஸியையும் அவன் குடும்பத்தையும் உடனே வெளியேற்றினார்கள்.
நர்ஸி போவதற்கு இடமில்லை. ஊருக்கு வெளியே காட்டின் ஓரமாக ஒரு குடிசை போட்டுக் கொண்டான்.
எளிய வாழ்க்கை வாழ்ந்து கிடைத்ததை மனைவி மக்களோடு அருந்தினான். எப்போதும் கடவுள் நினைவில் மூழ்கினான்.
இந்த பக்தியின் விளைவாக, படிப்பு அறிவு இல்லாத அவனுக்குப் பாடல் இயற்றும் திறன் தானாகக் கைவந்தது.
எனிய இனிய சொற்களில் மிக மதுரமான பாடல்களை இயற்ற, அந்தப் பாடல் ஊரில் மெள்ள மெள்ளப் பரவலாயிற்று.
சீக்கிரத்தில் அந்த எளிய பாடல்கள் மக்கள் எல்லோர் நாவிலும் தவழ ஆரம்பித்தது:
நர்ஸி மேத்தாவை பக்த நர்ஸி என்று போற்ற ஆரம்பித்தார்கள்.
நர்ஸியின் பெண் குவர் பாய்! அவள் பிறந்தவுடனேயே அவளுக்கு வசந்த்ராவ் என்பவருக்கு முடிப்பதாகப் பேசியிருந்தார்கள். இப்போது குவரி பாய்க்கு வயது வந்ததும் அவளைக் கணவன் வீடு அனுப்ப வேண்டி வந்தது.
அதற்கான நகைகளுக்கும் ஆடைகளுக்கும் எங்கே போவார்?
நர்ஸிக்குச் சோதனையாக இருந்தது. கடவுளை நோக்கித் தியானிப்பது அன்றி வேறு வழியில்லை.
கண்ணனையே நினைத்து உருக, அவர் வீட்டில் ஒரு மாயம் நிகழ்ந்தது.
குவரி பாய்க்கு வேண்டிய நகைகளும் ஆடைகளும் திடீரென்று உற்பத்தியாக இருந்தன.
அளவற்ற மகிழ்ச்சியோடு மகளைக் கணவன் வீட்டுக்கு அனுப்பி வைத்தார் நர்ஸி,
அடுத்தது மகன் சியாமளா,
நர்ஸி மேத்தாவுக்குப் புகழ் ஏற்பட்டால் எதிரிகளும் தோன்றமல் இருப்பார்களா?
ஒரு விஷமக்காரன் பணக்காரரான மதன் மேத்தா என்பவரை அணுகி, “நர்ஸி தாஸ் பெரும் பொருள் படைத்தவன், அவன் மகன் சியாமளா தாஸுக்கு உங்கள் பெண்னை மணம் செய்து வையுங்கள்!” என்று கூற, அவரும் உடனே பெண்ணைக் கொடுக்க நிச்சயதார்த்தம் செய்துவிட்டார்.
திருமண நாள் நெருங்கியது.
அப்போதுதான் மதன் மேத்தாவுக்கு நர்ஸியின் தரித்திர நிலை தெரிய வந்தது.
உடனே கோபத்தில் நர்ஸிக்கு ஒரு விகிதம் எழுதினார். “ஒரு பணக்காரக் குடும்பத்துக்குத் தகுதியாக உம்மால் திருமணம் செய்து கொடுக்க முடியாது என்றால் நிச்சய தார்த்தத்தை முறித்துக் கொள்வோம்” என்று அதில் குறிப்பிட்டிருந்தார்.
நர்ஸிக்குக் கண்ணீர் வந்தது.
திருமணத்தை நிறுத்தி விடுவதென்றால் அவமானம்.
கடவுள் ஒருவர்தான் அவருக்கு ஒரே சரண்? கண்ணனை நினைத்துக் குடும்பத்தோடு மனம் உருகப் பிரார்த்தனை செய்ய ஆரம்பித்தார்.
கடவுள் மீதே பாரத்தைப் போட்டு கையில் தம்பூரும் சிப்ளாக் கட்டையும் ஏத்தி குடும்பத்தோடு திருமணத்துக்குப் போகப் தொடங்கினர்.
கண்ணனின் நாமாவளியையும் அவளது புகழையும் பாடிக் கொண்டு அவர் போகப் போக,
ஆச்சரியம்! அவரைத் தொடர்ந்து ஒரு மக்கள் கூட்டமே பின்னால் சென்றது. எங்கிருந்துதான் இவ்வளவு பேர்கள் வந்தார்கள் தெரியவில்லை. ஒவ்வொருவர் கையிலும் திருமணத்துக்கான வரிசைகள் இருந்தன.
திருமணக் கூடத்தை நெருங்கும்போது மதன் மேத்தா வாயிலில் நின்று வரும் கூட்டத்தைப் பார்த்தார். எண்ணற்ற தலைகள்! எண்ணற்ற வரிசைகள்! இதுவரை எந்தத் திருமணத்துக்கும் அத்தனை ஆட்களோ, பொருள்களோ வந்ததில்லை.
நர்ஸி ஒரு பெரிய மகான் என்று மதனுக்குத் தோன்றியது.
நர்ஸி யின் காலில் விழுந்து தன் செய்கைக்கு மன்னிப்புக் கேட்டார்.
திருமணம் இனிது நடந்தது. நர்ஸிக்கோ! எல்லாம் தெய்வத்தின் செயல் என்று தெரியும். தனக்காகக் கடவுள் எத்தனை உதவிகள் செய்கிறார் என்பதை அறிந்து, மேலும் பகவான் மீது பிரேமையை வளர்த்துக்கொண்டார் அவர்.
நர்ஸியின் பிற்கால வாழ்க்கையில் பல சோதனைகள் ஏற்பட்டன.
அவரது குமாரன் ஸ்யாமள தாஸ் திடீரென்று இறந்தான், அதைத் தொடர்ந்து அவர் மனைவி மனேக் பாயும் பரலோகம் சென்றாள்.
ஆனால் நர்ஸி தனக்கு நேர்ந்த எல்லாச் சோதனைகளையும் கடவுளின் அனுக்கிரகமாக எடுத்துக்கொண்டார்.
“பலுன் தியோன் படு’ ஜஞ்றவ்!
ஸுகே பஜ்ஸுன் ஸ்ரீ கோபால்”
“என் பந்தங்கள் எல்லாம் மறைந்துவிட்டன. இனி கோபாலனைத் தடையில்லாமல் சுகமாகப் பூஜிப்பேன்” என்று பாடினார்.
நர்ஸி 1414ல் பிறந்தவர். படிப்பில்லாதவர். கடவுள் கிருபையால் அருமையான கவியாக மாறினார். அவர் புனைந்த பக்திப் பாடல்கள் இன்னும் எல்லோரையும் வசிகரப் படுத்தக்கூடியவை. இன்னும் அவைகளைப் பாடி வருகிறார்கள்.
பிரசித்தி பெற்ற ‘வைஷ்ணவ ஜனதோ'” என்ற பாடலும் அவர் இயற்றியதுதான்.
‘வைஷ்ணவ ஜன் தோ தேனே கவியே!
ஜே பீட் பராயீ ஜானே ரே!
பரதுக்கே உப்கார் கரே தோயே
மன் அபிமான் ந ஆமே ரே!”
“வைஷ்ணவன் என்பவர் யார்?
மற்றவரின் துக்கம் கண்டு பரிதவிப்பவன்.
மற்றவர்க்குத் தான் செய்யும் உபகாரங்களை கூடனே மறப்பவன்.
அதில் எந்தவிதப் பெருமையும் கொள்ளாதவன்.
யாருடைய புகழையும் நிந்தனையையும் பற்றிக் கவலைப்படாதவன்.
மகாத்மா காந்திஜிக்குப் பிடித்தமான பாட்டு, “கீதையை மறந்தாலும் மறப்பேன்; இந்தப் பாட்டை மறக்க மாட்டேன்” என்று கூறினார் மகாத்மா.
இன்னொரு விஷயம்.
நர்ஸி மேத்தா ஹரிஜனங்களோடு உறவாடி அவர்கள் சுகதுக்கங்களிலும் பங்கு கொண்டவர். அவர்களுக்கு அடியாராகத் தம்மை நினைத்துக் கொண்டவர்.
நர்ஸி மேத்தா 180ல் சுவர்க்கம் எய்தினார்.
– மங்கையர் மலர், ஜூலை 1981.