நெஞ்சுக்குள்ளே இன்னாதின்னு சொன்னாத் தெரியுமா?
![](https://www.sirukathaigal.com/wp-content/uploads/2023/03/author.png)
![](https://www.sirukathaigal.com/wp-content/uploads/2023/03/tags.png)
![](https://www.sirukathaigal.com/wp-content/uploads/2023/03/category.png)
![](https://www.sirukathaigal.com/wp-content/uploads/2023/03/date.png)
![](https://www.sirukathaigal.com/wp-content/uploads/2023/03/eye.png)
அந்த துக்க வீட்டுக்கு வந்திருந்தார் குப்பண்ணன். எப்பவுமே பளீர் வெள்ளை வேஷ்ட்டி, சட்டை சகிதம் சுத்தமாய் இருப்பார் குப்பண்ணன். இறந்து போனவரின் மச்சினன் பக்கத்தில் போய் அமர்ந்தார்.
![](https://www.sirukathaigal.com/wp-content/uploads/2016/07/-கொடுக்கும்-கால்-e1733595152364.jpg)
இறந்து போனவர் எப்படி இறந்தார்? என்ன செய்தது? எல்லாம் எல்லாரும் கேட்பது மாதிரியே கேட்டார். மைத்துனரும் சொன்னார். இறந்து போனவரும் அவர் மைத்துனரும் ஒரு புரொபஷன். இருவருமே பாங்க்கில் வேலை பார்த்து ரிட்டயர் ஆனவர்கள்தான்.
திடீர்னு இறந்து போனவரின் மைத்துனரிடம் இறந்து போனவருக்கு என்ன வயசு?’ என்றார். அவரும் சொன்னார்.
அடுத்து கேட்டார் பாருங்க ஒரு கேள்வி ‘உங்களுக்கு?! என்றார் குப்பண்ணன். ‘இருவருக்குமே ஒரே வயதுதான்!’ என்றார் இறந்தவரின் மைத்துனர்.
குப்பண்ணன் அதோடு நிக்காமல், ‘உங்கள்ல யார் சீனியர்?’என்றார்.
மைத்துனருக்கு மூஞ்சியே செத்துப் போச்சு!. இவர் எதுக்கு இப்படிக் கேட்கிறார்னு கிறுகிறுத்துப் போய்விட்டார் ஒரு நொடி.
வயசு ரெண்டு பேருக்கும் ஒண்ணுதான் ஆனால்,, வேலைக்குச் சேர்ந்ததுல அவர்தான் சீனியர் என்று இறந்து போனவரைப் பற்றிச் சொல்ல…,
‘இல்ல எதுக்குக் கேக்கறேன்னா…?’ என்று இழுத்தார் குப்பண்ணன்.
‘புரியது நெஞ்ச்சுக்குள்ள இன்னாதுன்னு சொன்னாத்தான் தெரியுமா? யார் யாருக்கு எப்போன்னு கடவுள்தான் முடிவு பண்ணுவார். நாம் வருத்தப்பட்டு என்ன பண்றது’ன்னார் மைத்துனர்.
குப்பண்ணன் முகத்தில் ஈயாடலை.. அதுதான் இறந்தவர் மேனியில் ஆடியதே!