நூறுரூபாய் நோட்டு




சுந்தரேசன் வீட்டிற்குள் நுழைந்தான் நிலா படித்து கொண்டிருந்தாள் நதி பாதி பாடம் மட்டுமே எழுதிவிட்டு அடம் பிடித்தாள். அப்பாவை பார்த்த நதி நிலவின் ஒளியை பூசிக் கொண்ட மலர்ச்சியுடன் அப்பா என்று மோது மோதி மடியில் ஏறினாள். பள்ளியில் நடந்ததை ஒரே மூச்சில் ஒப்பித்தாள் பூக்களை வீசுவது போன்று. நிலாவிற்கு கிராப்ட் பிராஜக்ட்டில் ஆர்வம். படிப்பில் படு சுட்டி. மீனாட்சிக்கு ஆயிரம் வேலைகள் உண்டு அவள் கடையும் தேநீர்க்கு அதிக அடிமைகள் உண்டு சுந்தரேசன் உள்பட மீனாட்சிக்கு தேநீருடன் சொல்ல வேண்டியது நிறைய உண்டு.

நாளை கோயிலுக்கு செல்ல வேண்டும் வண்டி என்று ஆரம்பித்தான். விடுப்பு ஸ்நாக்ஸ் பூ பழங்கள் பூசை பொருட்கள் என்று அடுக்கினாள். தேநீரில் முழ்கி இருந்தான். இப்போது எல்லாம் சண்டை இடுவது இல்லை. நிலா வளர்ந்து விட்டாள். சண்டை அவள் படிப்பை கெடுக்கும் பட்டு பயந்து படுவாள். அவள் முகம் பிறை போல் மாறிவிடும். பீட்டரை கூப்பிட்டான்
நாளை கோயிலுக்கு போகணும் வண்டி வேண்டும
இரு பேசிட்டு கூப்பிடரேன். உடனே அழைத்தான். வண்டி ரெடி. எல்லாமே சொல்லியாச்சு.
நன்றி பா
மீனாட்சி காலையிலே கிளம்பணும் என்று கத்தினாள். பட்டு அப்பா உங்க மடியிலா தான் உக்காருவேன் என்றாள். சரி என்றான். மீனாட்சி விரட்டினாள். குழந்தைகள் பூனை பதுங்குவது போல் பதுங்கினர்.
காலை தென்றல் குருவிகளுடன் வானொலி விசும் இசையைகேட்டது போல் கேட்டு கொண்டு இருந்தன. சுந்தரேசன குருவிகளை பார்க்க தவறுதில்லை. தேநீரின் மணம் வீசியது. மீனாட்சி பட்டில் மின்னினாள். அவன் பார்த்துக் கொண்டே இருந்தான். சிரித்து கொண்டே நகர்ந்தாள். பட்டுவை விளையாட்டு காட்டி எழுப்பினான் புன்சிரிப்புடன் எழுந்தாள். பட்டு சீண்டி கொண்டு விளையாடுவாள். மேட்சிங் கான பட்டு பாவடையை அப்பாவிடம் போட்டு கொண்டாள். மீனாட்சி அம்மனை போல் ஒளி விசினாள். போட்டோ எடுத்து கொண்டாள். வண்டி வந்து விட்டது சத்தத்துடன். அனைவரும் எரிக் கொண்டனர். பட்டு மறந்து விட்டு அவள் அம்மாவிடம் கதைகள் பேச அமர்ந்தாள். டிரைவர் தெரிந்தவர் தான் ஏற்கனவே ஒரிரு முறை வந்து இருக்கிறார். நல்ல லாவகமாக ஓட்டுப்பவர்.
ஏரியவுடன் நிலா பாட்டு போசொன்னாள். புது பாடல்களை போட சொன்னாள். பாட்டும் வண்டியின் ஒசையை மறைத்து பாட துவங்கியது. பட்டு கதைகள் பேசியபடியே தூங்கி விட்டாள். மினாட்சி அவள் ஊர் வருவதற்கு முன் சுந்தரேசனிடம் அம்மா தம்பி ஏறும் இடம் பற்றி கூறினாள். அவர்கள் ஏறியவுடம் மினாட்சி கூடுதல் உற்சகம் பெற்றாள். அவள் அம்மாவிடம் ஊர் கதைகள் பேச தொடங்கினாள். பட்டு அவள் அப்பாவிடம் மடியில் அமர்ந்து கொண்டு கேள்விகள் கேட்க தொடங்கினாள். பட்டு மேகங்களை பார்த்து கொண்டு அப்பாவிற்கு காட்டினாள். அனைத்தையும் பார்த்து கேள்விகள் கேட்க தொடங்கினாள். மரங்களின் பெயர்களை சொல்லி கொண்டு வந்தான். துளையில் ஏதோ மில்லின் புகைபோக்கியிலிருந்து கருமையும் மஞ்சளும் கலந்த புகை மேகங்களுடன் சென்று கொண்டு இருந்தது. பட்டு மரம் காணவில்லை எங்கே சென்றன என்றாள். பக்கதிலிருக்கும் அதன் வீடுகளுக்கு சென்று விட்டது என்றான். சாலை ஓரங்களில் நட பட்ட மரங்கள் ஒழிந்து கொண்டு ரகசியம் சொல்ல காத்திருக்கிறது. மாத கடைசி செலவு என்று எண்ணி கொண்டான். கால சாப்பாடு வீட்லெ சாப்பிடலாம் என்றான். மீனாட்சி அதுவும் சரி என்றால். நிலா வேண்டாம் சிரிக்க ரம் சாப்பிட முடியாது என்றாள். அது ஒரு செலவு. வண்டி எவ்வளவு என்று தெரியவில்லை. இக்கட்டியில் மாட்டி கொண்டான். அவள் சம்பாரிக்க தொடங்கிய நாளில் இருந்து பாதி நாட்கள் நன்றாக செலவு செய்வான். கையிருப்பு குறைந்தவுடன் எண்ண தொடங்கி விடுவான். மீனாட்சி கூட சொல்லவாள் மாத கடைசியில் புது அளாக மாறி விடுவீர்கள். அப்பா கோயில் வந்து விட்டது என்றாள் பட்டு. ஒரு வாடை வந்தது அருகில் கடற்கரை. வண்டியில் இருந்து இறங்கியவுடன். கருப்பு பெடி மணல் கால்களை ஒட்டி கொள்வதற்கு வேகமாக பறந்தது. நிலா கோபுரத்தை பார்த்து ஆச்சரிய பட்டாள். பட்டு பெரிய கோபுரம் என்று கத்தினாள். உயர்ந்த பெரிய கோபுரம் புது பொலிவுடன் இருந்தது. சமிபத்தில் திரு பணி நடந்தது. கோயில் வலது புரத்தில் பெரிய மண்டபம் இநூறுக்கும் மேற்பட்ட தூண்கள் பழமை மாற மல் சரி செய்துள்ளர். கோயில் முன் வாசலுக்கு முன் கான்கிரிட் மண்டம் ஒரு புறம் பிச்சைகார்கள் மறுபுறம் கடைகள். நல்ல வேளை பட்டு பார்க்க வில்லை பார்த்தால் வரும் போது வாங்கி கொள்வோம் என்பாள். வெள்ளையும் நீலமும் கலந்து வெளுத்து போன கிழிந்த சேலையில் வெய்யிலில் பாட்டி உக்கார்ந்து இருந்தாள். எழுந்து எழுந்து பிச்சை எடுத்தாள். பிச்சை போடும் போது சுந்தரேசன். அவன் சில நேரங்களில் போடுவான். பல சமயங்களில் ஒரு காரணத்தை அவனுக்கு கூறி கொண்டு போடமல வந்து விடுவான். பின்பு அதை பற்றி ஒரு சில நெடிகள் எண்ணுவான். மீனாட்சி ஒரு பத்து ரூபா போடுங்க என்று அலுத்த மாக கூறுவாள். அதான் வேலை இருக்கு சொத்து இருக்கு. மாறாத சென்மம் என்று திட்டுவாள். ஆனாலும் போட மாட்டேன். அவன் பல முறை எண்ணி இருக்கிறான். அவனால் மாற முடியவில்லை.
பட்டு பார்த்தவுடன் அப்பா காசு குடு என்று அடம் பிடித்து பத்து ரூபா வாங்கி போட்டாள் பூக்கடையில் செருப்பை விட்டு விட்டு நின்றேம். மீனாட்சி ஒரு மலை வாங்குக என்றாள். செருப்ப போட்டு எதுவும் வாங்காம போக கூடாது என்றாள். மாலை வாங்கி கொண்டு சென்றார்கள். கூட்டம் இல்லை.
சிங்காரவேலன் மேனி வெள்ளியிலும் தலையில் கிரிடமும் கையில் வேலுடன் நெஞ்சியில் பதக்க முடம் தன் தேவிகளுடன் ஒளி வீசி கொண்டு இருந்தான் அழகன் முருகன்.
அனைவரும் மனம் உருகி வேண்டி கொண்டார்கள். எதிரில் இருந்தவர் தன் பிள்ளைகளுக்கு காசு கொடுத்து உண்டியில் போட சொன்னார்.
பட்டு அப்பாவை பார்த்தாள். எப்போதும் பத்து ரூபா அல்லது இருபது ரூபா மட்டுமே தான் போடுவேன். பட்டு விடம் கொடுத்தான். அழுக்கா இருக்க வேறு கொடு என்றாள் இல்லை என்றாள். அவளை வெல்ல முடியாது. மீனாட்சி இவை யாவையும் கண்டு சிறு புன்னகையுடன் அவள் அம்மா தம்பியுடன் விவரம் கூறி கொண்டே பார்த்து ரசித்தாள். அவன் மீண்டும் ATM செல்ல வேண்டியதை பற்றி எண்ணினேன். அவனிடம் நூறு ரூபாய் நோட்டுகள் மட்டுமே இருந்தது வேறு வழி இல்லை கொடுத்தான். அவள் போட்டு விட்டு கை தட்டினாள். கோயிலை சுற்றி விட்டு அமர்ந்து பிரசாதம் வாங்கி சாப்பிட்டோம். மதிய உணவு பற்றிய விவாதத்துடன் வெளியே வந்தேன் அந்த பழமையான மண்டபத்தை பார்த்து கொண்டே வந்தான். மீண்டும் அதே பாட்டி பிச்சை கேட்டாள். ஏற்கனவே போட்டாாச்ச என்று கடந்து வந்தான். அவளுக்கு ஆல் அடையாளம் தெரியவில்லை. நிலா பாவம் என்றாள். நடுவில் பத்து ரூபா ஒழிந்து கொண்டு இருந்தது அதை கொடுத்தான். அவள் வாங்கி போட்டாள். பட்டு பொம்மை வாங்கி கொண்டு இருநதவள் நிலா காசு போட்டதை பார்த்து விட்டு தானும் போடணும் என்று அடம்பிடிக்க ஆரம்பித்தாள். மீனாட்சி ஒரு பழைய பத்து ரூபா கொடுத்தாள். எப்படி சப்பிடுவாங்க என்று கத்தினாள். அப்பாவை பார்த்தாள் என செய்வது என்றே தெரியவில்லை அப்பா தாங்க என்று அலுதாள். மீனாட்சியின் தம்பி காசு கொடுத்தான் போ என்றாள்.
சுந்தரேசன் சலவை நூறு ரூபாய் நோட்டு கொடுத்தான் கொடுக்க மணம் இல்லாமல். பிடுங்கி கொண்டு ஓடி போய் கொடுத்து வீட்டு வந்தாள் அன்னபூரணி சிரித்து கொண்டாள். வண்டிக்கு வந்து விட்டோம் பட்டு அப்பவை பார்த்து எண்ண அழ வச்சியில
சாரி கேளு என்றாள்
சாரி என்றான்
மீனாட்சி இரண்டாயிரம் ரூபாய் சலவை நோட்டை கொடுத்தாள். பீட்டர் அண்ணா கொடுத்தது மறந்துட்டேன். உங்க பணம் என்றாள்.