நுணுக்கம்…! – ஒரு பக்க கதை

0
கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 30, 2019
பார்வையிட்டோர்: 22,538 
 
 

பாலுவிற்குக் குழப்பமாக இருந்தது. எப்படி யோசித்தும் விடை கிடைக்கவில்லை.

இதற்கு மேலும் சிந்தித்தால் மூளை சிதறிவிடும். சம்பந்தப்பட்ட ஆளையேக் கேட்டுத் தெளிவு படுத்திக்கொள்ள வேண்டியதுதான்.! தீர்மானித்து நண்பன் வீட்டுப் படியேறினான்.

”வாடா.” வரவேற்றான். ”என்ன ?” விசாரித்தான்.

”கையில உள்ள பணத்தை வைச்சி ஏழை மக்களுக்கு வட்டிக்கு விட்டு நீயே போய் வசூலிச்சு சம்பாதிக்கிறே…சரி. ஆனா…அதுல குதர்க்கமாய் வீட்டுல வயசுக்கு வந்த ஆம்பளைப் பசங்க இருக்கிற இடமாய்ப் பார்த்து எதுக்குக் குடுக்கிறே ?”

அவன் மௌனமாய் இருந்தான். இவனை ஆழமாகப் பார்த்தான்.

”அப்புறம் ?” கேட்டான்.

”வயசு பொண்ணுங்க இருக்கிற இடமாய்ப் பார்த்துக் கொடுத்தாலும் பணம் வரலைன்னா அதை வேற ஒரு கணக்காய் முடிக்கலாம். ஆனா….பையன்…..?” இழுத்தான்.

”…………………”

”உனக்கு வீட்டு வேலைக்கும் ஆள் வேணாம். வசூலுக்கும் தேவை இல்லே. அப்படியே தொழில் விரிவு ஆள் தேவைன்னாலும் கொடுக்காதவனையெல்லாம் வைச்சி கூட்டம் போட முடியாது.” நிறுத்தினான்.

”உன் மனசுல உள்ளதையெல்லாம் கொட்டிட்டியா இன்னும் இருக்கா ?”

”இல்லே சொல்லு ?”

”எந்த தொழிலையும் பொண்ணுங்களைக் குறிவைச்சு கொடுத்தா பல பிரச்சனைகள் அடுத்து குடும்பம், தொழில் குட்டிச்சுவர். அது தப்பு.”

”சரி”

”ஆம்பளைப் புள்ளைங்க விவகாரம்… பணம் வரலைன்னு வீட்டு வாசல்ல நாலு தடவை கடுமையாய்ப் பேசினால் அம்மா அப்பா கஷ்டத்தைப் பார்த்து உழைச்சு சம்பாதிச்சு கொடுப்பான். இல்லே ரோசப்பட்டாதுவது திருப்புவான். அதிகமாய் நின்னாலும், கொடுத்தாலும் வரதட்சணையில திருப்பு சொல்லலாம் திருப்பிக்கலாம். தாமதமானால் நாமே ஒரு பொண்ணைப் பார்த்து முடிச்சு கலியாணத்துல வசூல் செய்துக்கலாம். புதுப் பொண்டாட்டிக்காரன் ரோசப்பட்டு பொண்டாட்டி நகைகளை வித்தாவது கொடுப்பான். இப்புடி அதுல நிறைய நுணுக்கம் இருக்கு. சொல்லனுமா ?” சொன்னான்.

”தேவை இல்லே !” பாலு திருப்தியாய்த் தலையாட்டினான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *