நீ கேட்டால் நான் மாட்டேனென்றா சொல்வேன் கண்ணா?!

0
கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 3, 2025
பார்வையிட்டோர்: 3,101 
 
 

ஐந்தாவது டி20 கிரிக்கெட் மாட்ச்… இங்கிலாந்து இந்தியா போட்டியில் அபிஷேக்கின் அதிரடி ஆட்டம் ஆடுகளத்தை மட்டுமல்ல தொலைகாட்சி ரசிகர்களையும் துவம்சம் செய்து கொண்டிருந்தது.

என்றோ பார்த்த இளமை ஊஞ்சலாடுகிறது பட ஸ்ரீபிரியா பாட்டு செவிகளில் சில்லிட்டது. ‘நீ கேட்டால் நான் மாட்டேன் என்றா சொல்வேன் கண்ணா?!’

ஒவ்வொரு போருக்கும், சிக்சருக்கும் சிலிர்த்தது இதயம். ஸ்டேடியத்தில் ஐஸ்கிரீம் விற்பவர் முதல் பிள்ளைகளைக் கூட்டிவந்து அம்ர்ந்திருந்த அப்பா அம்மா வரை அனைவர் முகத்திலும் ஆனந்தம் தாண்டவமாடியது. அன்று விற்பனை விறுவிறுப்புகூடி வருவாய் கூடியது.

தின்பண்டம் விற்பவர் குழந்தைகளுக்காக விலையில் ஒரு ரூபாய் குறைத்தார்! அப்பா அம்மா பிள்ளைகள் கேட்டபோதெல்லாம் கேட்டதை வாங்கித் தந்து கிறுகிறுத்தனர். ‘நீ கேட்டால் நான் மாட்டேன் என்றா சொல்வேன் கண்னா என்று!!

காரணம்… முன்னூறு ஆண்டுகளாக நாட்டை ஆண்டு துவம்சம் செய்த நாட்டை, தங்கள் நேர்த்தியான ஆட்டத்தில் இந்தியா துவம்சம் செய்தது பரிகார பூஜை செய்வது போல் இருந்தது பார்ப்பதற்கு!

என்னால் என் தேச பக்தியை எப்படி வெளிக்காட்ட முடியும் இதை விடுத்து வேறு வழியில்?! ஒவொரு இந்தியனும் பெருமைப்பட, வாடகை வாங்க வந்த வீட்டுக்காரர்கூட அப்புறம் வரேன்னு சொல்லி வெளியேறி இங்கிதம் காத்தது இன்னொரு சிக்ஸர் போல இருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *