நீயே!





(1975ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
‘என்னிடம் மனம் வைத்தவனாய், என்னிடம் பக்தி வைத்தவனாய், என்னை ஆராதிப்பவனாய் ஆவாய்…. எனக்கு இனியன் நீ!’

அவனுக்கு ஆட்டுக் குட்டியினுடைய குரல் கேட்டது. ‘மே.. மே… மே’ என மீண்டும் அது கத்தியது.
‘இந்த ஆட்டிலே குடிகொண்டிருக்கும் ஆணவந்தான் என்ன? ‘நான்….நான்…. நான்….’ எனக் கத்தி எப்படி எப்படியெல்லாம் அட்டகாசம் செய்கின்றது?’ என அவன் நினைத்தான்.
‘அச்சுதா! இரண்டு சேனைகளுக்கும் மத்தியில் என்னுடைய ரதத்தை நிறுத்து. இப்போரில் யான் யாரோடு யுத்தம் செய்ய வேண்டுமென்பதையும், போர் விரும்பி முன்னிற்பார் யார் என்பதையும் கவனிக்கிறேன். புல்லறிவாளனாகிய துரியோதனுக்குப் பிரீதி செய்யும் வண்ணம் போர் புரிய இங்கு திரண்டிருப்போரை யான் காண வேண்டும்….’ என்றான் அர்ஜுனன்.
‘இந்த அர்ஜுனன் யான் என எவ்வளவு அழுத்தி உச்சரிக்கிறான்….’ என அவன் நினைத்தபோதிலும், குமிண் நகையின் ஓசங் குலையாமல் ரதத்தை ஆணைப்படியே ஓட்டுகிறான்.
‘யான்’ என வெகுண்டு, பின்னர் மாயையிலே மருண்ட அர்ஜுனனில் இரங்கி, அவன் பல மேலான கருத்துக்களை எல்லாம் போதித்தான்.
இறுதியாக,….’மோகத்தால் எதைச் செய்ய இச்சிக் கிறாயில்லையோ, உன் இயல்பிற் பிறந்த வினைகளினால் கட்டுண்டு, உன் வசமிழந்தவனாய், அதையே நீ செவ்வாய்…. மறை பொருள்களுக்கெல்லாம் மறைபொருளாகிய ஞானம் இங்ஙனம் உனக்கு இயம்பப்பட்டது. இதை மிச்சிலின்றி விமர்சித்து, எப்படி இச்சிக்கின்றாயோ அப்படிச் செய்….’ என்றான்.
எல்லாவற்றையும் பொறுமையாகவும். விளக்கமாகவும் எடுத்தியம்பிய அவன், மிகத் தாரானமாக, “எப்படி இச்சிக்கிறாயோ அப்படியே செய்’ எனச் சுதந்திரமளித்து விட்டான். இச்சுதந்திரப் பிரதிக்ணையை அளித்தவனுக்கும் அளிக்கப்பட்டவனுக்குமிடையில் மின்னல் சொடுக்கி மறையும் நோம் இவ்வாறு தொங்கிக் கொண்டு நின்றது. மறுகணம் சாதகன் மீது அவனுக்குத் தயைச் சுரப்பு மீறிப் பாய்கின்றது.
“எல்லாவற்றிலும் ஆழ்ந்ததும், மேலானதுமான ான னுடைய மொழியைத் திரும்பவும் கேள். நீ என்னுடைய திடமான இஷ்டனாயிருக்கிறாய். ஆகையால், உன் நலத்தையே நவில்கின்றேன். என்னிடம் மனம் வைத்த வனாய், என்னிடம் பக்தி வைத்தவனாய், என்னை ஆராதிப் பவனாய் ஆவாய். என்னை வணங்கு. என்னையே அடைவாய். உனக்கு உண்மையாய்ப் பிரதிக்ஞை செய்கின்றேன். எனக்கு இனியன் நீ!’ என அளிக்கப்பட்ட சுதந்திரத்தை நயமாகப் பெற்றுக் கொள்ளுகின்றான். வழங்கப்பட்ட சுதந்திரத்தை மீண்டும் ஒப்படைப்பதா என்ற சங்கடம் அர்ஜுனனுக்கு. தடுமாற்றத்திற்கு இம்மியும் இடம் வைக்காது, ‘எல்லாத் தர்மங்களையும் பரித்தியாகஞ் செய்துவிட்டு என் ஒருவனையே சரணடைவாயாக. நான் உன்னை எல்லாப் பாவங்களிலிருந்தும் விடுவிப்பேன்’ என்கிறான்.
‘யானே… யானே….! என்றவனின் மனத்திலேற்பட்ட மாற்றம்! எல்லாவற்றையும் பரித்தியாகஞ் செய்து, ‘எல்லாம் நீயே!’ என்ற போதம் அர்ஜுனனின் உள்ளத்திலிருந்து வழிகின்றது.
‘மே….மே…மே….’ எனக் கத்திக்கொண்டே ஆடு இறந்தது. அதன் நரம்பு நாணாகப் பதமடைந்து வில்லிலே ஏறியது.
‘துஹீ….துஹீ…. துஹீ’ என்ற ஒலி. சகல திக்குகளிலும், ‘நீயே…. நீயே… நீயே…’ என்ற ஒலியின் ஓங்கல்!
ஆடு – காண்டீபம்-அர்ஜுனன் ஆகிய சகலவும், சகலமும் ‘நான்’ என்பதை மறந்து, ‘நீயே!’ என சரணடைந்துவிட்ட திருக்கோலம்….
– கீதை நிழலில், முதற் பதிப்பு: அக்டோபர் 1975, கலைஞன் பதிப்பகம், சென்னை.