நிசப்தம்…




யாரின் வாயிலும் வார்த்தைகள் இல்லை. எல்லோரும் கண்வெட்டாது படுத்திருந்த மாலாவின் விழிப்புக்காய் காத்திருந்தனர். மாலாவோ இயலாமையினால் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தாள். மாலாவை சூழ்ந்திருந்த அனைவரும் ஒருவரை ஒருவர் பார்த்து பார்வையினாலே மாலாவின் செயலுக்கான காரணத்தை ஆராய்ந்தனர்.

அம்மா…
அம்மா…
அம்மா…
சத்தம் கேட்டதும் அனைவரின் பார்வையும் ஏக காலத்தில் மாலா மீது விழுந்தது. மெது மெதுவாக கண் விழித்தாள் மாலா.
ஐயோ…., ஐயோ…., பாவி மகளே உன்ன இந்த கோலத்தில பார்க்கிறதுக்குத்தானா இவ்வளவும் செய்தேன் என அழுத சாந்தியை உறவினர்கள் சமாதானம் செய்தனர். அப்பவும் சாந்தியின் மனம் அடங்கவில்லை.
‘யார் அங்க கத்திரது மத்த பேசன்டுக்கு டிஸ்டபா’ என ஒலித்தது வைத்தியசாலை நேசின் குரல். சரி சரி வீட்ட கூட்டி கொண்டுபோய் மீதிய பேசிக்கலாம் எண்டான்; தம்பி அஜெய்.
ஏன் மாலா இப்படி செய்தனி உனக்கு எங்கள எல்லாம் விட்டுப்போரத்துக்கு எப்பிடி மனசு வந்திச்சி. நீ இப்படி செய்யலாமா? இவ்வளவு பெரிய படிப்ப படிச்சு எல்லாருக்கும் முன்மாதிரியான நீ இப்படி எல்லாம் செய்தா மத்தவங்க என்ன நினைப்பாங்க இப்பவே ஊருக்க அரசல் புரசலா கதைக்காங்க கெம்பஸ்ல யாரயோ லவ் பண்டிட்டா போல அதான் இப்படி யாருக்கும் சொல்லாம மருந்த குடிச்சிட்டா எண்டு.
அப்பாவால வெளில தல காட்ட முடில அஜெய்ட்ட ஸ்கூல்ல எல்லாரும் கேக்காங்கலாம் ஏண்டா உங்கட அக்கா மருந்து குடிச்சவ எண்டு. நாங்க எல்லாம் எண்ண பதில சொல்லுறது கொஞ்சம் சொல்லு பார்ப்பம் என்று மனம் உருக பேசினாள் மாலாவின் நண்பி ஜசோ.
அனைவரின் கதையையும் கேட்டும் ஏதும் சொல்லாது அமைதியாயே இருக்கிறாள் மாலா….
மாலா…, மாலா…., மாலா…. ஏதாவது சொல்லித் தொல. அடக்கிய ஆத்திரத்தையெல்லாம் கொட்டித்தீர்தாள் சாந்தி. மாலாவோ அமைதியாயே படுத்திருந்தாள். எல்லோரின் பார்வையும் அவள் மீது விழ, அவளோ பார்வையை கீழே பதித்திருந்தாள்.
‘நேரமாகிட்டு எல்லாரும் போங்க பேசன்டோட நிக்கிரவங்கள தவிர எல்லோரும் வெளியே போங்க’ என கொஸ்பிட்டல் வாச்மேன் கத்தினான்.
மாலா ஏதும் சொல்லிவிட மாட்டாளா என ஏங்கிய பார்வையுடனே அனைவரும் வெளியேறினர். ஆனால் மாலாவோ ஏதும் கூறாமல் அமைதியாய் தனக்குள்ளே யோசித்து படுத்திருந்தாள். கண்களில் அவளை அறியாமலே நீர் வடிகிறது.
அன்று வெள்ளிக்கிழமை வழமைக்கு மாறாக பிந்தி எழும்பியதால் அவசர அவசரமாய் வெளிக்கிட்டு கோவிலுக்கு சென்று பின் விரிவுரைக்கு போனாள் மாலா. விரிவுரைக்கு சென்றவள் தனது பேசை எடுக்க மறந்து விட்டாள் என்பதை பஸ் காரனுக்கு காசு கொடுக்க பேசை தேடியபோதே நினைவுக்கு வந்தது. என்ன செய்வது யாரிடம் கேட்பது ஒன்றும் புரியவில்லை.
என்னமா எங்க போகனும் காச எடு, என்ன பேசாம நிக்கிற காச எடு எண்டு அதிகார தொனியில் கத்தினான் கண்டெக்கடர். என்ன செய்வது என்று தெரியாது குழம்பிய மாலாக்கு காசு கொடுத்து உதவியவன் தான் பிரகாஸ்.
வெள்ளை நிறம், சிவந்த உதடு, அரும்பு மீசை பார்த்ததும் மற்றவர்களை கவரும் ஆண். அழகன். யாரென்டே தெரியாமல் தனக்கு உதவிய பிரகாஸை நன்றியோடு பார்த்தாள் மாலா. என்னடாப்பா உதவி செஞ்சிருக்கன் ஒரு தைங்ஸ் கூட சொல்ல மாட்டிங்கலா என்ற பிரகாசின் கேள்வி மாலாவை பழய நிலைக்கு கொண்டு வந்தது. சொறி… தைங் ஊ. நீங்க இல்லண்டா இந்த மிருகம் என்ன செஞ்சிருக்குமோ தெரியல.
ஓகே., ஓகே., நீங்க…? நான் மாலா எண்ட சொந்த இடம் திருகோணமலை ஆகா.. ஆகா.. என்ற பிரகாஸின் சிரிப்பு மாலாவை மேலும் கதைக்கத் தூண்டியது. இங்க கெம்பஸ்லதான் தமிழ் பெசல் செய்யிரன். நீங்க?
பிரகாஸ் ….
ஓகே… என்ன செய்யிரீங்க.
நான் ஜென்ரல் படிக்கிறன். ஆகா எங்கட கெம்பஸ்லதானா??
ம்;ம்ம்….
பரவாயில்லை தெரியாதங்ககிட்ட யார்ட்டயோ காசு வாங்கிட்டன் எண்டு நினச்சன். இப்ப பரவாயில்லை பயமில்லை. ஓகே நான் கெண்டீன்ல கொண்டு வந்து தாரன் 12.30 போல மறக்கமாம வாங்க.
‘கெம்பஸ் எல்லாம் முன்னுக்கு வாங்க…..’
கென்டக்டரின் சத்தத்தை கேட்ட இருவரும் முன்னோக்கி நகர்ந்தனர். ஓகே…. வாய்….. மறக்காம 12.30 வாங்க சாச தாரன். ம்ம்…
இருவரும் வெவ்வேறு திசையில் நடக்க ஆரம்பித்தனர். மாலாவை கடந்தும் அவளின் முகத்தையும் கதைத்த நொடியையும் அவனால் மறக்க முடியவில்லை. அவனை அறியாமலே அவனது உள்ளம் அவளிடம் சென்றது.
“நாளை காலை நேரில் வருவாளா? வந்தவுடன் காதல் நெஞ்சை தந்து விடுவாளா…” யார்ரா மச்சி? அந்த பொண்ணு. நக்கலாய் கேட்ட நிக்சனின் கேள்விக்கு சொல்லுரண்டா உனக்கு சொல்லாமலா?
காலைல ஒரு பிள்ளைய பாத்தண்டா தேவத மச்சி அவ இன்னும் என் கண்ணை விட்டு போகலடா… ஆஆஆஆஆ பரவாலயே எங்கடா பாத்தனி அந்த பிள்ளைய. பொறுடா நிக்சன் எல்லாம் உனக்கு அவசரம் தான் சேர் லவ் ஃப்ள்ள இருக்காரு சொல்லுவார் என்ட மயூரனின் வார்த்தை பிரகாசுக்கு மேலும் மகிழ்ச்சியை கொடுத்தது.
சரி சரி முதல்ல எல்லோரும் பாடத்துக்கு போங்க இத ரூம்ல கதைப்பம்.. ம்ம்…. மச்சி எனக்கும் டைம் ஆகிடிச்சி நானும் போயிட்டு வாரன்டா என்டு தனது புவியல் துறையை தேடி போனான் நிக்சன்.
நீ எங்கடா போப்போர? நானும் வாரன் என்டான் மையூ. ம்ம்ம் வா போவம் என்று இருவரும் தமது வரலாற்று துறை திசை நோக்கி நகர்ந்தனர். நேரம் போக போக மாலாவின் எண்ணம் அவனுக்குள் அதிகரித்துக் கொண்டே சென்றது.
மாலாவோ பாடம் அனைத்தும் முடிவடைய காசு கொடுப்பதற்காக தனது நண்பியுடன் கென்டின் வந்திருந்தாள். வேக வேகமாஸ் பிரகாசும் வந்து சேர்ந்தான். பரலாயில்லையே சொன்ன மாதிரி வந்திட்டிங்க. ஆகா.. ஆகா.. ஏன் வரமாட்டன் என்டு நினச்சிங்களோ? இல்ல, இல்ல சும்மா கேட்டன்டாப்பா. ஏன் கேட்க கூடாதா?
இல்ல…, கேக்கலாமே.
சரி இந்தாங்க 50 ரூபா. ஏன்க நான் வெறும் 35 ரூபா தானே கொடுத்தன். எனக்கு 50 ரூபா தாரீங்க. ஐயோ என்னட்ட மாத்த இல்லையே என்ன செய்ய மீதி 15 ரூபா வாங்க நாளைக்கு வாங்க என்டான் பிரகாஸ்.
ஆஆஆ…
நல்லாயிருக்கும். ம்ம்… சரி ஏன் வெளில ரூம் எடுத்து இருக்கீங்க. இங்கயே இருக்கலாமே?. இங்கதாங்க இருக்கன். இன்;டைக்கு ஃப்ரண்ட வீட்ட இருந்து வந்ததாலதான் பஸ்ல வந்தன். ஓகே ஓகே. என இருவரும் நண்பர்கள் ஆயினர்.
மாலாக்கோ தன்கு ஒரு புது நண்பன் கிடைத்து விட்டான் என்ற மகிழ்ச்சி. பிரகாசுக்கோ டைம் பாஸ் பண்ண ஒருத்தி கிடச்சிட்டா என்ற எண்ணம்.
ஆரம்பத்தில் ஒரு நாளைக்கு ஒரு தரம் என்று கதைத்தவர்கள் காலப்போக்கில் தொலைபேசியிலே மூழ்கினர். இருவரும் ஒன்றாக போவது, வருவது என தமது நாட்களை கழித்தனர். மாலாக்கோ இவன் மீது எல்லையற்ற காதல் வளர்ந்தது.
காதல் வயப்பட்ட மாலா அவனுக்காக எதையும் செய்யத் துணிந்தாள். வீட்டுக்குத் தெரியாமல் காசை இவனுக்குச் சிலவழித்தாள். சிறிது காலம் போக பிரகாசுக்கு மாலா மீது இருந்த மோகம் குறைந்து வேறொரு பெண்மீது ஆசை பிறந்தது.
மாலாக்கோ காதல் எல்லையற்றதாக மாறியது. இவனுக்காக வீட்டாக்களையும் வெறுக்கும் நிலைக்கு வந்தாள். திடீர் என பிரகாசை பார்க்க வந்த மாலா அவன் வேறு பிள்ளையின் கை பிடித்து புகைப்படம் எடுப்பதை பார்த்தாள்.
யார்? அது. ஏன் அந்த பிள்ளையோட கை பிடிச்சி போட்டோ எடுக்கனும் என்டு சண்டை பிடித்தாள். பிரகாசோ விடு இத பத்தி இனி கதைக்க தேவையில்லை என்றான். அப்பவும் மாலா விடல்ல. இவன் தன்னை ஏமாத்துகிறானோ என தனக்குள்ளே குழம்பினாள்.
அவன் எவ்வித குழப்பமும் இன்றி இருந்தான். மாலாக்கோ தெடர்ச்சியான பசியின்மை அழுது, அழுது படிப்பிலும் கவனம் இன்றி பைத்தியமாய் அழைந்து திரிந்தாள். பிரகாசுக்கோ எது பற்றியும் கவலை இன்றி சந்தோசமாய் தன் நண்பர்களுடன் விளையாடித் திரிந்தான்.
மாலா மீண்டும் மீண்டும் அது யார்? ஏன் அப்படி போட்டோ எடுக்கணும் என்டு கேட்டு சண்டை பிடிக்க, பிரிய காரணம் தேடியவனுக்கு இது ஒரு காரணமாய் ஆனது.
உன்னோடு கதைக்கவே பிடிக்கல. நீ போ உன்னால எப்பவும் தலை இடி தான் எனக்கு என்று கத்தி கூச்சலிட்டான். மாலாவும் அழுதவளாய் அங்கிருந்து புறப்பட்டு தனது ரூமுக்கு சென்றாள். பிரகாசை மறக்க முடியாத மாலா அழுது, சாப்பிடாமல் உடல் மெலிந்து இருந்தாள். அவனோ தனது புது காதலியுடன் மகிழ்ந்து திரிந்தான்.
இதை ஒன்றும் அறியாத மாலா ஓர்நாள் இதை அறிந்து கொள்கிறாள். என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பி வீட்டே சென்றாள். தான் ஒருவனை நம்பி ஏமாந்தததை எண்ணி வெட்கப்பட்டு வயலுக்கு அடிக்கும் பூச்சி கொள்ளியை யாருக்கும் தெரியாமல் எடுத்து குடித்து விடுகிறாள்.
அவள் இப்போது மருத்துவ மனையில் இருப்பதற்கு இதுவே காரணமாகும். இதை எப்படி சொல்வது என்று தெரியாத மாலா. பொய் காரணம் ஒன்றை கூறி வீட்டாரை சமாதானம் செய்ய முடிவெடுத்தாள். மாலை நேரம் பார்க்க வந்த பெற்றோரிடம் தான் ஆங்கில பாட பரீட்சையில் சித்தியடைய தவறியமையினாலே மருந்து குடித்ததாக கூறி நம்ப வைத்தாள். வைத்தியரும் இவளது கதையை நம்பி மறு நாளே வீட்டிற்கு அனுப்பி விட்டார்.
வீட்டிற்கு வந்த மாலா தனக்கு நடந்தததை எண்ணி தனக்குள்ளே அழுதும், வெளிப்பார்வைக்கு சிரித்து மற்றவர்களுடன் உரையாடினாள். இதை அனைத்தையும் அறிந்தாவது மனம் திருந்துவான் என எண்ணிய காதலன் அங்கு இன்னும் மூன்று பெண்களுடன் மகிழ்ந்திருந்தான்.
தனக்கு நடந்தவைகளை அனைத்தையும் தனக்குள்ளே புதைத்து விட்டு இப்போது அனைத்து நபர்களையும் சமாளிக்கும் திறனுடன் தனது புதிய வாழ்வுக்கான பல்கலை பாதையை நோக்கி நகர்கிறாள். மாணவியாக அல்ல விரிவுரையாளராக.
“முடியாதது என்று ஏதும் இல்லை முயன்றால் அனைத்துமே முடியுமே”
– தியாகு முகிலன், தமிழ் சிறப்புக் கற்கை மாணவன், தமிழ் கற்கைகள் துறை, கிழக்குப் பல்கலைக்கழகம்.