நாலு பேருக்கு நன்றி!

0
கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 25, 2025
பார்வையிட்டோர்: 7,395 
 
 

ரொம்ப நாளைக்கப்புறம் காரை எடுத்தான். தூர தொலைவு போக வேண்டும் கால் டாக்ஸி என்றால் காசு அதிகமாகுமேன்னும்., சொந்த வண்டி வீட்டில் சும்மா இருக்கையில் எதுக்குக் கால்டாக்ஸி? என்றும் எடுப்போனான் காரை!. போன காரியம் முடிந்து திரும்ப, வீடருகில் வந்து விட்டான்.

காரின் கியர் ‘சாப்ட்’ (ராடு) கொழ கொழ வென சுத்தியது. எமர்ஜென்சி லைட்டை ஆன் பண்ணி, வண்டியை ஓரங்கட்டி நிறுத்தினான்.

‘நல்ல வேளை, நடு ரோட்டில் வண்டி நின்று மக்கர் பண்ணிவிடவில்லை! வண்டியை நிறுத்த, ரோட்டில் எதோ கால் டாக்ஸி டிரைவர் யாரையோ ஏற்றுக் கொண்டு எங்கோ போனவர், இவன் காரருகே நிறுத்தி ‘என்ன சார் பிரச்சனை? எனி ஹெல்ப்?’ என்றான் கனிவாக… ஒன்று!.

எதிர்த் திசையில் போன டீக்கடை ஓனர் தன் டூவீலரை நிறுத்தி ‘என்ன சார் பிராப்ளம்?விசாரித்தார். அவர் முன்பின் தெரியாதவர்.. இரண்டு!

அடிக்கடி இப்போல்லாம்… லோன் வேனுமா? வீடு வேனுமான்னு நச்சரிப்பு…! நம்ம ஆத்திர அவசரம் புரியாம..சே!!!

ரெண்டு, மூனு பேர்.. தங்கள் செல்லில் இப்படித் தொந்தரவு செய்பவர்களை ‘ஸ்கேம்’ என்று பதிவு செய்து வைக்க, நமது செல்லில் காலர் ஐடியில் கால் வருகையில் ‘ஸ்கேம்’ என்று வர அதை நிராகரிக்க உதவுகிறது.

எதுக்கு கால் டாக்ஸி!? சொந்த வண்டி இருக்கையில், என சுய நலமாய் யோசித்தவனுக்கு ‘சூடு வச்சா மாதிரி, சொரணை வரா மாதிரி ‘என்னனு கேட்டும், ‘ஸ்கேம்னு’ ‘சேவ்’ செய்தும் உதவும் மக்களின் பொதுநலம் பார்க்கையில், ‘நாலு பேருக்கு நன்றி அந்த நாலு பேருக்கு நன்றி என்று பாடிப் பாராட்டாமலிருக்க முடியவில்லை!. செத்துத் தூக்கீட்டுப் போற நாலுபேருக்குத்தான்னு இல்லே.. நல்லதை மறைமுகமாச் செய்யற நாலு பேருக்கும் நன்றி சொல்லலைனா நாம மனுஷனாப் பொறந்து என்ன பயன் சொல்லுங்க?!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *