நல்லவனாய் இருந்தால் மட்டும் போதாது…





என்னால் வாழ்க்கையில் முன்னேற முடியவில்லை என்று சொன்னவனை நிமிர்ந்து பார்த்தார் குரு.
என்ன பிரச்சனை?
எல்லோரும் என்னை நல்லவன்னு சொல்றாங்க. ஆனா எனக்கு எந்த வாய்ப்பும் கிடைக்க மாட்டேங்குது. எதுவும் சம்பாதிக்க முடியல என்று வருத்ததோடு சொன்னவனின் பிரச்னை குருவுக்கு புரிந்தது.அவனுக்கு ஒரு சம்பவத்தை சொல்ல துவங்கினார்.
தாயும் மகனும் கடைக்கு போயிருந்தார்கள். பையன் ரொம்ப சுட்டி.
பார்த்தாலே எல்லோருக்கும் பிடித்து விடும் கடையில் அம்மா வீட்டுக்கு வேண்டிய பொருட்களை தேர்ந்தெடுத்து கொண்டிருந்தாள். பையன் கடைக்குள் சுற்றிக்கொண்டிருந்தான்.
கடை முதலாளி அவனிடம் பேச்சு கொடுத்தார். பையன் பேசிய விதம் அவருக்கு ரொம்ப பிடித்து விட்டது. உடனே ஒரு சாக்லெட் டப்பாவை எடுத்து சாக்லெட் எடுத்துக்கப்பா என்று நீட்டினார். ஆனால் பையன் எடுக்கவில்லை. வேணாம் அங்கிள் என்று சமர்த்தாக சொன்னான். அவர் அழுத்தி கேட்டும் அவன் எடுக்கவில்லை.
பொருட்களை எடுத்து கொண்டு பில்போடும் இடத்துக்கு வந்த தாயிடம் இந்த விஷயத்தை சொன்ன கடை முதலாளி மீண்டும் சாக்லெட் எடுத்துக்கப்பா என்று டப்பாவை நீட்டினார். அப்போதும் அவன் எடுக்கவில்லை. உடனே தாய் ஆசையா கொடுக்கறாங்கல எடுத்துக்க என்றாள் பையன் தயங்கினான்.
நல்ல பையன், கூச்சப்படுகிறான் போல என்று சொல்லி அவர் கையாலேயே நிழைய சாக்லெட்களை எடுத்து கொடுத்தார். பையன் பவ்யமாக தாங்க்ஸ் அங்கிள் என்று வாங்கி கொண்டான்.
வீடும் திரும்பும்போது அம்மா கேட்டாள்: ஏண்ட அவர் அவ்வளவு சொல்லியும் சாக்லெட் எடுக்கல?
அதற்கு மகன் சொன்ன பதில் ‘என் கையால எடுத்தா கொஞ்சம் சாக்லெட்தான் வரும். அவர் கை பெரிய கை அதுல எடுத்தா நிறைய சாக்லெட் கிடைக்கும்ல..
இந்த கதையை சொன்ன குரு கவலையோடு வந்தவனுக்கு சொன்ன WIN மொழி:
நல்லவனாய் இருந்தால் மட்டும்போதாது. புத்திசாலியாகவும் இருக்க வேண்டும்.
– வெளியான ஆண்டு: 2011 (நன்றி: http://ranjan360.blogspot.com)
மிகவும் உபயோகமான விஷயங்கள்
நல்லவன் எல்லாம் புத்திசாலி இல்லை என்கிறாரா ஆசிரியர்?