தொலைதூர தேடல் வினவல்
கதையாசிரியர்: நஞ்சப்பன் ஈரோடு
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: அறிவியல் புனைவு
கதைப்பதிவு: June 16, 2024
பார்வையிட்டோர்: 4,032
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: அறிவியல் புனைவு
கதைப்பதிவு: June 16, 2024
பார்வையிட்டோர்: 4,032
இரண்டு கூகுள் இன்ஜினியர்கள் ஒரு கணிப்பொறி பிரச்சனையை தீர்ப்பதில் மும்முரமாக வேலை செய்து கொண்டிருக்கிறார்கள்.
“நம்முடைய server log பதிவுகளில் வினோதமான ஒன்றைப் பார்க்கிறேன். இதற்கு முன் அப்படி ஒன்றை நான் பார்த்ததே இல்லை!”
“அப்படி என்ன பார்த்தாய்?”
“தொலைதூர விண்மீன் மண்டலத்திலிருந்து ஒரு தேடல் வினவல் வந்துள்ளது.”
இரண்டு நொடி மௌனத்திற்குப் பின்-
“அந்த தேடல் வினவல் என்ன?”
“பிரபஞ்சத்தில் உள்ள மற்ற அறிவார்ந்த உயிரினங்கள்”