தேவதை…





இரண்டு மூன்று முறைக்கும் மேலாக வாந்தி எடுத்து விட்டாள் பூர்த்தி.
எதாவது வாயில எடுத்து போட்டுகிட்டாளா பாருடி. மனைவி கீர்த்தியை அதட்டினான் ராகுல்.
இல்லீங்க. நான் அவ பக்கத்திலேயேதான இருக்கேன் என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே கொட கொடவென்று மீண்டும் வாந்தி எடுத்தாள் சில மாதங்களே நிரம்பிய குழந்தை பூர்த்தி. இம்முறை மிகவும் சோர்ந்து வெல வெலத்து துவண்டு போனாள்.

அம்மாடி கீர்த்தி..கொழந்தைய கொண்டா இப்பிடி. தாய் காமாட்சி தொண்டையை ஆராய்ந்து பார்த்தாள். ஒண்ணும் இல்லையே. வயிற்றை தடவி பார்த்தாள். அழுத்திப் பார்த்தாள். ஒன்றும் புரியவில்லை அவளுக்கு.
எங்கிட்ட இருக்கும் போதே அவளுக்கு கொமட்டிகிட்டு வந்தது என்ற ராகுல், சீக்கிரம் ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போங்க. அதுக்குத்தான் எங்க வீட்லேயே பிரசவம் பாத்துக்கலாம்னு சொன்னேன். நான் லீவு போட முடியாது. நாளைக்கு ஆபீஸ் போயாகணும். என்ன பண்றதுன்னே தெரியல. சீக்கிரம் ஒரு ஆட்டோ கூப்பிடுங்க. மூவரும் ஆட்டோ ஏறினர்.
இவர்கள் அறைக்குள் நுழைந்த உடனேயே.. மாஸ்க் எடுத்து அணிந்து கொண்டார் டாக்டர். முழுவதுமாக செக்கப் செய்து விட்டு..ஒண்ணும் பயப்படறா மாதிரி இல்ல. வயிறெல்லாம் க்ளீயராத்தான் இருக்கு. By the bye இரண்டு வாரத்துக்கு முன்னால கூட இந்த குழந்தைய வாந்தி எடுக்கறான்னு கூட்டிட்டு வந்தீங்க இல்ல நீங்களும் உங்க ஹஸ்பன்டும்.
ஆமாம் டாக்டர். இரண்டு வாரம் நல்லாத் தான் இருந்தா. நல்ல வேளை இவளுக்கு உடம்பு சரியில்லாத போதெல்லாம் எங்க வீட்டுக்காரு கூட இருக்கார். இல்லேன்னா நான் என்ன பண்ணுவேன்.
Excuse me.. நீங்க கொஞ்சம் வெளியில இருக்கீங்களா என்று டாக்டர் கேட்டுக்கொள்ள, ராகுல் சந்தேகக் கண்ணோட்டத்துடன் வெளியே சென்றான்..
டாக்டர்..என்ன ஆச்சி என் குழந்தைக்கு. ஏன் அவர வெளியே போச்சொல்ரீங்க. In fact அவர விட எனக்கு தைரியம் கம்மி. சீக்கிரம் சொல்லுங்க.
மேடம்..கொஞ்சம் அமைதியா இருங்க. She’s alright. நான் கேக்கறதுக்கு மட்டும் பதில் சொல்லுங்க. கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி என்ன சொன்னீங்க?
நல்ல வேளை, இவளுக்கு உடம்பு சரியில்லாத போதெல்லாம் எங்க வீட்டுகார் கூட இருக்காரு. இல்லேன்னே நான் என்ன பண்ணுவேன்னு தான சொன்னீங்க. அவரு வரும்போது மட்டும் தான் குழந்தைக்கு இந்த மாதிரி வாந்தி எல்லாம் வருது. அவர் வராத இரண்டு வாரம் நல்லாத்தானே இருந்தா.
ஆமாம் டாக்டர். But அவர் வருவதற்கும் குழந்தை வாந்தி எடுக்கிறதுக்கும் என்ன சம்மந்தம் டாக்டர். புரியலையே.
மேடம்.. Please listen. உங்க வீட்டுக்காரர் எப்படி? Any bad habits? ஓப்பனா சொல்லுங்க.
தயங்கி..தயங்கி.. டாக்டர் அவருக்கு இல்லாத கெட்ட பழக்கமே இல்லேன்னு சொல்லலாம். பான் பராக் போட்டுகிட்டே இருப்பாரு. வீடெல்லாம் ஒரே கறையா தான் இருக்கும். Chain smoker. இப்பெல்லாம் வீட்லேயே குடிக்க ஆரம்பிச்சிட்டாரு. கேட்டா office tension, target அது இதுன்னு என்னென்னவோ சொல்ராரு. மத்தபடி ரொம்ப நல்லவரு.
இவ்வளவு கெட்ட பழக்கம் இருந்தும் நல்லவர்னு certificate குடுக்குற பொப்பளைங்க இருக்குறவரைக்கும் இந்த மாதிரி ஆம்பளைங்க திருந்தவே மாட்டாங்க. இவரு கொழந்தைய தூக்கி கொஞ்சாம பாத்துக்கோங்க. அவர் கிட்டே இருந்து வர நெடி என்னாலேயே தாங்க முடியல. ரூமே நாருது. சின்ன குழந்தை வாந்தி எடுக்காம என்ன பண்ணும். போங்க நான் சொன்னதுல கவனமா இலங்க. இல்லேன்னா வாரா வாரம் வருவீங்க.
ஆட்டோவில் வீட்டுக்கு வந்தனர். கீர்த்தி எதுவும் சொல்லாமல் அமைதியாக வந்தாள். அன்றிரவு ராகுல் ஊருக்கு திரும்பினான்.
ஒரு வாரம் ஓடியது.
ஆரத்தி சுற்றி வீட்டுக்குள் அழைத்தாள் ராகுலின் அம்மா. வலது கால எடுத்து வெச்சி வாம்மா கீர்த்தி. பேத்திய என்கிட்ட கொடு என்று பூர்த்தியை கையில் வாங்கிக் கொண்டாள்.
ராகுல் புன்முறுவலுடன்.. வா கீர்த்தி என்று பக்கத்தில் வந்தான். என்ன ஆச்சர்யம் அவனிடத்தில் இருந்து எப்போதும் வரும் வாடை போயே போச்சி. குழந்தையை தூக்கி உச்சி முகர்ந்தான்.
என்ன கீர்த்தி ஆச்சர்யமா இருக்கா.. நீயும் நானும் எவ்வளவோ சொல்லிருப்போம் வாயே வலிக்கிற அளவுக்கு. கொஞ்சமாவது கேட்டானா. பேசாமலேயே ஒரு தேவதை திருத்திட்டா பாரு அவன.
என்னங்க ஆச்சி?
டாக்டர் அன்னிக்கி உன்கிட்ட சொன்னத கேட்டேன்டி. பாவம் பூர்த்தி எவ்வளோ கஷ்டப்பட்டிருப்பா இல்ல..
Oh my god..என்னால நம்பவே முடியல. எத்தனை வருஷ பழக்கத்த just like that விட்டுட்டீங்க.
ஆசையோடு hugகினாள் ராகுலை..