கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: January 28, 2025
பார்வையிட்டோர்: 7,943 
 
 

சாய்பாபா காலனி சென்றுபாங்க்கில் பண்மெடுத்துத் திரும்புகையில் பஸ்ஸில் வந்தான் வசந்த். எடுத்த பணத்தை பாண்ட் பாக்கெட்டில் போட்டு வலது கையால் அடிக்கடி தொட்டுப் பார்த்துக் கொண்டுதான் வந்தான் இருந்தது. சுளையாய் மூவாயிராம்.

இறங்க வேண்டிய இடத்தில் திரும்பிப் பார்க்கையில் பின்புற வழி கூட்டமிருக்க, முன்புற வழியாய் இறங்கினான். இரண்டே இரண்டு கல்லூரி வயதுப் பெண்கள். இவன் அவர்களோடு சேர்ந்து இறங்க, பின் புறமிருந்தும் இவனோடு சேர்ந்தே ஒருவன் இறங்கினான். பேண்டை இடித்துக் கொண்டு .அப்போதுதான் பஸ்ஸின் கைப்பிடியைப் பிடிக்க பேண்டிலிருந்து கையை எடுத்து கம்பியைப் பிடித்தான்.

‘அய்யோ போச்சே…! மொத்தமும் போச்சே! அலறவில்லை!’ மெதுவாய் இறங்கினவன் அந்த இரண்டு பெண்களிடமும் நெருங்கிப் பேச்சுக் கொடுத்தான், ‘உங்களுக்கு சினிமாவுல நடிக்க வாய்ப்புத்தந்தா நடிப்பீங்களா?!’

கண்கள் மிளிர அவர்கள் அவனைப் பார்க்க ‘அதோ போறானே.. அவன் என் பணத்தை உங்களோடு பள்ளிலிருந்து இறங்கையில் பாக்கெட் அடிச்சுட்டான். அதுவெறும் மூவாயிரம் பிஸ்கோத்துப்பணம். எங்க புரடியூசரைப் பார்க்கத்தான் போறேன். உங்க ரெண்டு பேருக்கும் சான்ஸ்கு ஏற்பாடு பண்ணட்டுமா அந்தா மூவாயிரம் திருடினவனைப் பிடிக்க உதவினா நான் உங்களுக்கு உதவுறேன்!’ என்றான்.

அவன் நினைப்பு வீணாகவில்லை.. அவர்கள் மூவருமே கூட்டு களவாணிகள். அவர்களில் ஒருபெண் அவனுக்குப் போன் பண்ணி அவனை வரச்சொல்லி மூவாயிரம் வாங்கித் தந்தாள். இவன் ஒரு நம்பரைக் கொடுத்து மூவரும் சேர்ந்து முடிவெடுத்து ‘புரொடியூசருக்கு இங்க நடந்த விஷயம் சொல்லி, போன் பண்ணுங்க நானும் அப்படியே சொல்றேன்! அப்ப அவருக்கு குழப்பம் வராது! எப்பவரச் சொல்றாரோ வாங்க!’ இதுதான் அவர் நம்பர் என்று தந்து மூவாயிரம் திரும்பப் பெற்றுக் கொண்டு நகர்ந்தான்.

மனசுக்குள் நினைத்துக் கொண்டான். நிச்சயமாய் போன் பண்ணுவார்கள். சினிமா ஆசைனா சும்மாவா? அந்த போன் நம்பர் ஒரு எஸ்ஸை நம்பர் ஒரு கம்ப்ளெய்ட் விஷயமாய் விசாரிக்கையில் அவர் கொடுத்தது. அவருக்கு போன் பண்ணி விஷயம் சொல்வார்கள். மற்றதை அவர் பார்த்துக்கொள்வார். பணத்தோடு அபீட்டானான்.

1 thought on “திருட்டு..!

  1. நல்லா கதை சொல்லி வாசகர்களை வசீகரம் செய்றீங்க brother, congratulations. சாய்பாபா காலனி நான் அடிக்கடி காரில் கடந்து செல்லும் பகுதி. சிறப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *