திருடனும் ஓட்டைக் கிண்ணமும்!

0
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: May 12, 2013
பார்வையிட்டோர்: 11,176 
 
 

புத்தபகவான் ஒருமுறை தன் சீடர்களுடன் காட்டில் தங்கினார்.
அவர்கள் எல்லோரும் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த நேரத்தில், திருடன் ஒருவன் அவர்களிடமிருந்த கிண்ணம் ஒன்றைத் திருடிக்கொண்டு ஓடிவிட்டான்.

தற்செயலாக விழித்துக் கொண்ட சீடன் ஒருவன், கிண்ணத்துடன் திருடன் ஓடுவதைக் கண்டு, புத்தரை எழுப்பி விஷயத்தைக் கூறினான்.
கிண்ணம் இருந்த இடத்தைப் பார்த்தார் புத்தர்.

பிறகு, “”அடடா, அவன் ஓட்டைக் கிண்ணத்தை அல்லவா தூக்கிக் கொண்டு ஓடுகிறான்! நீ ஓடிச் சென்று அவனிடம் இந்த நல்ல கிண்ணத்தைக் கொடுத்துவிட்டு வா…” என்றார்.

சீடனும் கிண்ணத்துடன் ஓடிச்சென்று திருடனை நெருங்கிப் பிடித்தான்.
பின்னர், புத்தரின் விருப்பத்தைச் சொல்லி, நல்ல கிண்ணத்தை அவனிடம் கொடுத்தான்.

புத்தரின் அன்பு மொழிகள் திருடனின் மனத்தை மாற்றிவிட்டன. அவன் உடனே திரும்பி வந்து, புத்தரின் சீடனாகி விட்டான்.

– தேனி முருகேசன் (ஜனவரி 2013)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *