கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: அறிவியல் புனைவு
கதைப்பதிவு: June 26, 2024
பார்வையிட்டோர்: 4,540 
 
 

நான் Chrome browser ஐத் திறந்து, www.createashortfilm.com என்ற வலைக்குள் நுழைந்தேன். திரையில் தொடர்ச்சியாக ஏழு கேள்விகள் தோன்றின.

இன்றிரவு நான் எந்த வகையான குறும்படத்தைப் பார்க்க விரும்புகிறேன்? ஆக்க்ஷன் வகையைத் தேர்ந்தெடுத்தேன்.

குறும்படத்தின் கதை எங்கே நடக்கிறது? ஒரு பட்டியலிலிருந்து பார்க்கிங் கேரேஜைத் தேர்ந்தெடுத்தேன். அங்கே தான் என் கதை நடக்கப் போகிறது.

இப்போது, எனது குறும்படத்தில் வரும் கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். கதாநாயகன்? அது என் அண்ணன் ராம்ஜி. 6’5″ உயரமும் வலிமையான கைகளும் கொண்டவன். அவனுக்கு நண்பனாக? சில வினாடிகள் யோசித்துவிட்டு, என்னையேத் தேர்ந்தெடுத்தேன் அவன் நண்பனாக. வில்லன் யார்? என் அலுவலகத்தில் என்னை சதா சீண்டிக் கொண்டிருக்கும் சக ஊழியன் ஜேம்ஸ் தான் வில்லன். ராம்ஜி ஜேம்ஸை அடித்து நொறுக்குவதை பார்ப்பதை விட வேறு சந்தோஷம் உண்டா?

சரி, ராம்ஜிக்கு ஏதேனும் காதல் ஜோடி தேவையா? நான் இல்லை என்றேன். படத்தின் முடிவு என்ன? அது ஒரு மகிழ்ச்சியான முடிவாக இருக்கட்டும்.

என்னுடைய ஏழு விருப்பங்களையும் சேமித்து விட்டு, createashortfilm வலையிலிருந்து வெளியேறினேன்.

CAS (Create A Shortfilm) நிறுவனம் வழங்கிய தலைக்கவசத்தை கவனமாக என் தலையில் பொருத்தி விட்டு என்னுடைய படுக்கையில் படுத்துக் கண்களை மூடிக் கொண்டேன்.

இதற்கு நான் CAS நிறுவனத்திற்கு கொடுத்த பணம் மிக அதிகம் தான். ஆனாலும் என் கனவில் வரும் குறும்படத்தின் கதையை நான் முன்பாகவே முடிவு செய்யலாம் என்றால் அது சும்மாவா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *